News Update :
Powered by Blogger.

ரீமா கல்யாணத்தில் ஸ்ரேயா ஐட்டம் டான்ஸ்!

Penulis : karthik on Thursday, 15 March 2012 | 00:52

Thursday, 15 March 2012

 
 
 
ரீமா சென் கல்யாணத்தில் தமிழ் நடிகை ஸ்ரேயா நடனமாடினர். நடிகைகள் சோனியா அகர்வால் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
 
கடந்த மார்ச் 11-ம் தேதி ரீமா சென்னுக்கும் - ஹோட்டல் அதிபர் ஷிவ் கரன் சிங்குக்கும் திருமணம் நடந்தது.
 
இதில் பங்கேற்க ரீமா சென்னின் நெருங்கிய தோழிகள் ஸ்ரேயா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்றிருந்தனர்.
 
வட இந்திய திருமணங்களில் ஆட்டம் பாட்டு என பொழுதுபோக்கு அமர்க்களப்படும். அதிலும் இது ஒரு பிரபல நடிகையின் திருமணம் என்பதால் பல கலைஞர்களும் வந்திருந்தனர்.
 
திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடிகை ஸ்ரேயா சரணின் நடனம் இடம்பெற்றது. சிக்னி சமேலி எனும் இந்திப் பாட்டுக்கு அவர் நடனம் ஆடினார். வந்திருந்த நடிகைகள், நடிகர்கள் உள்ளிட்டோர் அனைவரும் தங்கள் இடத்திலிருந்தபடியே உற்சாகத்துடன் ஆடினர்.
 
நடிகை சோனியா அகர்வாலும் உற்சாகமாக ஆடினார். இதுகுறித்து ஸ்ரேயா கூறுகையில், "ரீமா எனது பெஸ்ட் பிரண்ட். 10 வருடங்களாக நாங்கள் பழகி வருகிறோம். அவரது திருமணத்தில் இதுபோல ஒரு நடனத்தை பரிசாகத் தர விரும்பினேன்," என்றார்.



comments | | Read More...

அதே அழகு, அதே இளமை : ஆனால் இனி நடிக்க மாட்டேன்: பாட்டியான நடிகை

 
 
அந்தரங்கம், மீண்டும் கோகிலா, ஜானி, முந்தானை முடிச்சு, மாந்தோப்பு கிளியே உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர், தீபா. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் கவர்ச்சி நாயகியாகவும், ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வலம் வந்தவர். இவர், இப்போது பாட்டியாகி விட்டார். தீபாவின் கணவர் ரெஜாய் கல்லூரி பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
 
தீபா-ரெஜாய் தம்பதிக்கு ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறார். அவர் கேரளாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மானேஜராக இருக்கிறார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி பெயர், ரஞ்சனி. இவர்களுக்கு ஒரு வயதில் ரீஹான் என்ற மகன் இருக்கிறான். ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்த தீபா, நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
எனக்கு இப்போது 50 வயது ஆகிவிட்டது. திருமணமாகி 30 வருடங்கள் ஆகிவிட்டன. நான் இன்னும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதாக எல்லோரும் பாராட்டுகிறார்கள். அது இறைவன் எனக்கு அளித்த வரம். `அந்தரங்கம்' படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானேன். கடைசியாக நான் நடித்த தமிழ் படம், `முந்தானை முடிச்சு.' அதன்பிறகு குடும்பத்தை கவனிக்க வேண்டியிருந்ததால், நடிப்பதை நிறுத்தி விட்டேன்.
 
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கல்லூர் என்ற இடத்தில், கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். இப்போதும் எனக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு குடும்பம் முக்கியம். அதனால் இனிமேல் நடிக்க மாட்டேன். ஜனங்கள் என்னை இன்னும் ஞாபகம் வைத்திருப்பதற்காக நன்றி. என் மகனுக்கு நடிப்பதில் ஆர்வம் இருக்கிறது.
 
அவனை சினிமாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்திருக்கிறேன். மகனைப்போல் பேரனையும் சினிமாவில் நடிக்க வைக்க நான் ஆசைப்படுகிறேன். நான் நடிகை ஆனதற்காக ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. பெருமைப்படுகிறேன். இப்போது நடிக்கவில்லை என்றாலும், தியேட்டர்களுக்குப்போய் நிறைய சினிமா பார்க்கிறேன்.
 
அங்காடித்தெரு, நாடோடிகள் ஆகிய இரண்டு தமிழ் படங்களையும் சமீபத்தில் பார்த்து ரசித்தேன். எனக்கு பிடித்த நடிகை, ஸ்ரீதேவி. என் சக கால கதாநாயகி அவர். பழைய நடிகைகள் ஷீலாவும், சாரதாவும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். தினமும் நான் `பைபிள்' படிக்கிறேன். தியானம் செய்கிறேன். கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வருகிறேன். மிக சிறந்த சமூக சேவகியாக வரவேண்டும் என்று எனக்கு ஆசை. ஏழைகளுக்கும், முதியோர்களுக்கும் சேவை செய்ய விரும்புகிறேன்.
 
இவ்வாறு தீபா கூறினார்.



comments | | Read More...

வாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4....

 
வயர் இணைப்பு எதுவுமின்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில் நுட்பம், எப்படி நம் வாழ்வையே மாற்றும்? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். அதுதான் உண்மை என அடித்துக் கூறுகிறார் புளுடூத் எஸ்.ஐ.ஜி. (Special Interest Group) குழுமத்தின் செயல் இயக்குநர் போலே. இந்த குழுமத்தில், புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் சாதனங்களைத் தயாரிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
 
புளுடூத் முதலில் நமக்கு அறிமுகமான போது, பைல் மற்றும் டிஜிட்டல் தகவல்கள் பரிமாற்றத்திற்கு மிக அருமையான வசதி என அனைவரும் பாராட்டினோம்; பயன் படுத்தினோம். பின்னர், இதில் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.
 
தகவல் பரிமாற்றத்திற்கான சாதனங்கள் இணையாக இருந்து இணைப்பதில் சிக்கல், பாஸ்வேர்ட் அமைத்து இயக்குவதில் பிரச்னை, திடீரென தகவல் இணைப்பு அறுந்து போதல்,மற்றும் பிற உடனடியாகத் தீர்க்க இயலாத சிக்கல்களும் இருந்தன. இவை அனைத்தும் புளுடூத் 4 தொழில் நுட்பம் தீர்த்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சரி, எப்படி தீர்க்கும்? என்ன என்ன வகையில் இது முந்தைய தொழில் நுட்பத்தைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டது? புளுடூத் தொழில் நுட்பம் இயங்கும் தொலைவு அதே 300 அடியாக உள்ளது. புளுடூத் 2ஐக் காட்டிலும் பதிப்பு 3, சற்றுக் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைக் கடத்தியது. பதிப்பு 2.1 ன் வேகம் 2Mbps ஆக இருந்தது. பதிப்பு 3ன் வேகம் 26Mbps ஆக உள்ளது. இது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற பணிகளுக்கு மிகவும் உதவியது.
 
புளுடூத் 4 இவற்றைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும். ஐந்திலிருந்து பத்து மடங்கு வேகக் கூடுதல் இருக்கும். அதிக நாட்கள் மின்திறன் தரும் பேட்டரியுடன் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால், ட்ரெட்மில் போன்ற, தனி நபர் உடல்நலன் கணக்கிடும் சாதனங்களில் இதன் செயல்பாடு நமக்கு மிக மிக உதவியாக இருக்கும்.
 
அடுத்ததாக, என்.எப்.சி. எனப்படும் அண்மைக் கள தகவல் பரிமாற்றம் (Near Field Communication) திறன் கொண்ட சிப்களின் செயல்பாட்டிற்கு இந்த புளுடூத் பதிப்பு 4 மிகவும் பயன்படும்.
 
புளுடூத் 4 இந்த தொழில் நுட்பம் கொண்ட போன்களுடன் எளிதில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். லேப்டாப், மொபைல் போன் மற்றும் ரௌட்டர் போன்ற சாதனங்களின் இணைப்பு, புளுடூத் பதிப்பு 4 மூலம் அதிகத் திறன் கொண்டதாக அமையும். இந்த தொழில் நுட்பத்திற்கேற்ப வடிவமைக்கப்படும் சாதனங்கள் அனைத்தும், புளுடூத் பதிப்பு 2 மற்றும் 3 ஆகியவற்றையும் கையாளும். புளுடூத் 4 ஏற்கனவே Motorola_Droid_ Razr_Maxx ஆகிய மொபைல் போன்களில் இணைக்கப்பட்டுள்ளது.
 
இந்த புதிய தொழில் நுட்பத்திற்கு Bluetooth Smart Ready எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு கீழ் உள்ள தளத்தை அணுகவும்.
comments | | Read More...

திருமணம் ஆகாமல் கரீனாகபூர் கர்ப்பமா? இயக்குனர் விளக்கம்

 
 
 
பிரபல இந்தி நடிகை கரீனாகபூர். இவர் நடிகர் சயீப் அலிகானை காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கரீனாகபூர் கர்ப்பமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
 
அந்த படங்களில் கரீனாகபூர் வயிறு கர்ப்பவாதிபோல் பெருத்து இருந்தது. திருமணத்துக்கு முன்பே கர்ப்பவாதியாகி விட்டார் என்று இந்தி திரையுலகம் கிசுகிசுத்தது.இதனை இந்திப்பட இயக்குனர் மதூர்பண்டார்கா மறுத்துள்ளனார்.
இவரது ஹீரோயின் படத்தில் கரீனா கபூர் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மதூர் பண்டார்கா கூறியதாவது:-
 
ஹீரோயின் படத்தில் கரீனாகபூர், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பல நாயகிகள் நடிக்கின்றனர். நடிகைகளின் சொந்த வாழ்க்கையை இந்த படத்தில் சொல்கிறேன். இதில் கரீனாகபூர் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார்.
 
படத்தை நான்தான் இன்டர்நெட்டில் வெளியிட்டேன். அதை பார்த்தவர்கள் கரீனாகபூர் நிஜமாகவே கர்ப்பமாக இருப்பதாக தவறாக புரிந்து கொண்டு விட்டனர். அவர் கர்ப்பமாக இல்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்.



comments | | Read More...

சுவிஸ் வலைஸ் மாநில குகை ஊடான பாதையில் பயணிகள் பஸ் விபத்து- 28பேர் பலி!

 

சுவிட்சர்லாந்து வலைஸ் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 28பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 22பேர் சிறுவர்களாவர். இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இரவு 9.30மணியளவில் வலைஸ் மாநிலத்தின் இத்தாலி நாட்டு எல்லைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஏ9 அதிவேக பாதையிலேயே இந்த விபத்து இடம்பெற்றிருக்கிறது.

குகை ஊடான பாதை ஒன்றிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பெல்ஜியத்திலிருந்து இத்தாலிக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கி உள்ளனர். 52பேர் பயணம் செய்த இந்த பஸ்ஸில் 28பேர் பலியானதுடன் ஏனைய அனைவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் இடம்பெற்று காயமடைந்தவர்கள் உலங்குவானூர்தி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.
குகைக்குள் இந்த விபத்து ஏற்பட்டதால் மீட்பு பணிகள் இன்று காலை வரை இடம்பெற்றது. தற்போது இப்பாதை போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் லவுசான், பேர்ன் பல்கலைக்கழக போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger