Friday, 1 June 2012
இந்திய ரயில்வே துறையை உடைக்க ஒரு நல்ல, விரிவான யோசனையை பத்ரி சேஷாத்ரி அளித்திருக்கிறார் – படிப்படியான தனியார்மயமாக்கல். ரயில்வேயில் உள்ள ஊழலை ஒழிக்கவும், லாபம் கொழிக்கும் நிறுவனமான அதை மாற்றியமைக்கவும் ‘உலகத் தரம் வாய்ந்த ரயில்வே சேவை நமக்குக் கிடைக்கவும்’ இந்தத் திட்டம் பயன்படும் என்பது பத்ரியின் நம்பிக்கை. அவர் பாணியிலேயே சிந்தித்தபோது, மேலும் சில திட் டங்கள் உதயமாயின. ரயில்வே துறையை உடைத்த கையோடு இவற்றையும் அமல்படுத்தினால், கூடிய விரைவில் இந்தியா வல்லரசாகிவிடும். 1. இந்திய ராணுவத்தை உடைக்கவேண்டும் [...]http://kallaool.blogspot.in