எனக்கு அழகான மார்பகங்கள் இல்லை, வளைவு,நெளிவுடன் அவை இல்லை. வெகு சாதாரண மார்பங்கள்தான் அவை என்று கூறியுள்ளார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட். டைட்டானிக் படம் மூலம் உலக திரை ரசிகர்களை குறிப்பாக ஆண்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் இங்கிலாந்து நடிகை கேட் வின்ஸ்லெட். அப்படத்தில் அவரது கம்பீரமான அழகில் மயங்காதவர்களே கிடையாது. ஆனால் தனது அழகு குறித்து கேட் ஒருபோதும் பீற்றிக் கொண்டதே கிடையாது.உலக அளவில் நடத்தப்படும் பல்வேறு கருத்துக் கணிப்புகளில் செக்ஸியான நடிகைகள் பட்டியலில் அவ்வப்போது முதலிடம் அல்லது முக� ��கிய இடத்தைப் பெற்றும் கூட தன்னை பெரிய அழகியாகவோ, செக்ஸியான பெண்ணாகவோ கூறிக் கொண்டதில்லை கேட். தற்போது 36 வயதில் ஓடிக் கொண்டிருக்கும் கேட், தனது வயது குறித்தும், அழகு குறித்தும் அடக்கமாக சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து படியுங்கள்... நான் ஒன்றும் அவ்வளவு செக்ஸியான பெண் கிடையாது. உண்மையில் எனக்கு அழகான மார்பகங்கள் கூட கிடையாது. அழகான வளைவுகளோ, நெளிவுகளோ கிடையாது. சாதாரணமானவைதான் அவை. அதற்காக நான் ஒருபோதும் கவலைப்பட்டதே கிடையாது. செக்ஸியான, ரொமான்டிக்கான காட்சிகளில் நடிக்க தயங்கியதும் கிடையாது. நான் நிர்வாணமாக நடிக்கும்போதும் சரி, செக்ஸியாக நடிக்கும்போதும் சரி, அது மற்ற பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட உதவும் என்பது எனது நம்பிக்கை. எனவேதான் எனது உடல் அழகு குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது. என்னால் பல பெண்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கிறது என்பதே திருப்தியாக உள்ளது. சாதாரணமாக தெருவில் நடந்து செல்லும் பெண்களைப் போலத்தான் நானும். உடல் அமைப்பும் சரி, எடையும் சரி, அழகும் சரி, எல்லாமே என்னிடம் சாதாரணமானதுதான் என்கிறார் கேட். 2008ல் வெளியான தி ரீடர் படத்தில் ஒரு நிர்வாணக் காட்சியில் நடித்திருந்தார் கேட். அப்படத்திற்காக அவருக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. டைட்டானிக் படம் இன்றளவும் உலக திரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அதில் அழகான கேட்டை கண்ட ரசிகர்கள் அதே பார்வையுடன்தான் இன்று வரை கேட்டை ரசித்து வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான டைட்டானிக் 3டி ரிலீஸுக்கும் � ��ூட பாக்ஸ் ஆபீஸில் சரியான வரவேற்பு கிடைத்தது.டைட்டானிக் படத்தில் நடித்தபோது அவருக்கு வயது 21 தான். தற்போது 15 வருடங்களைத் தாண்டி வந்து விட்டார் கேட். வயது குறித்தும் அவர் அதிகம் கவலைப்படவில்லை. எனக்கு தன்னம்பிக்கை அதிகம் உள்ளது. வயது ஆவது குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. அது இயற்கை. வயது ஆக ஆக எனக்குள் மன உறுதிதான் அதிகப்படுகிறதே தவிர குறைவதில்லை. இன்னும் ந� �றைய செய்ய வேண்டும் என்ற உற்சாகம் கூடுகிறது. 21 வயதில் இருந்த நான் இப்போது இல்லை. இன்னும் போகப் போக எனது உடல் சதைகள் தளர்வடைய ஆரம்பிக்கும், மார்பகங்கள் தொங்கிப் போகும், முடி கொட்டலாம், பற்கள் துருத்த ஆரம்பிக்கலாம். இதெல்லாம் சாதாரணமானதுதான். ஆனால் எனது நம்பிக்கை வலுவாகவே உள்ளது என்று கூறும் கேட் இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தும் செய்து கொண்டவர். அவரது முதல் கணவர் இயக்குநர் ஜிம் திரெப்லெடியான். பின்னர் � ��யக்குநர் சாம் மெண்டிஸை 2010ல் மணந்து அவரையும் விவாகரத்து செய்தார். தற்போது மூன்றாவதாக ஒரு காதலில் உள்ளார். தனது முந்தைய இரு திருமணங்கள் மூலம் அவருக்கு தலா ஒரு குழந்தை என இரண்டு பேர் உள்ளனர். அதில் 11 வயது மகள் மியா அடக்கம். இன்னொருவர் ஜோ என்ற பெயர் கொண்ட மகன் ஆவார்.கேட் தற்போது லேபர் டே என்ற படத்தில் மன அழுத்தம் மிக்க, தனித்து வாழும் தாயாரின் கேரக்டரில் நடித்து வருகிறார்.