News Update :
Powered by Blogger.

சிக்கலில் தீபிகா படுகோன் – ரஜினி படத்தில் தொடர்வாரா?

Penulis : karthik on Sunday, 12 February 2012 | 23:46

Sunday, 12 February 2012

 

ரேஸ்- 2 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு, பின்னர் அதை பாதியில் விட்டுவிட்டு வந்துவிட்டதால் தீபிகா படுகோன் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்.அவர் மீது ரேஸ் 2 பட தயாரிப்பாளர் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். தமிழில் ரஜினியுடன் ராணா படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானார் தீபிகா. பட தொடக்க விழாவிலும் பங்கேற்றார். ரஜினிக்கு உடல் நலம் குன்றியதால் அந்தப் படம் தள்ளிப்போனது.ரஜினி உடல் நலம் தேறியதும் ராணாவுக்குப் பதில் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த நிலையில் ரேஸ்-2 இந்தி பட தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி மும்பையில் உள்ள சினிமா கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீபிகா படுகோனே மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், "நான் டிப்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரேஸ் 2 இந்திப் படத்தை தயாரித்து வருகிறேன். இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் ஒரு வாரம் படப்படிப்பில் பங்கேற்று நடித்துக் கொடுத்தார். இப்போது திடீர் என்று ரேஸ் 2 படத்தில் இருந்து விலகிக் கொள்வதாகக் கூறுகிறார்.

வேறு பட வாய்ப்பு வந்ததை தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். இதனால் ரேஸ் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற முடியாமல் தடைபட்டு எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் பற்றி தயாரிப்பாளர்கள் சங்கம் தீபிகா படுகோனேக்கு தகவல் தெரிவித்து விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளது. இந்திப்பட உலகில் சினிமா சம்பந்தப்பட்ட புகார்களை முதலில் சினிமா கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரிக்கும் அது தனது அறிக்கையை மேற்கு பிராந்திய (மும்பை) சினிமா தொழிலாளர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைக்கும். புகார் கூறப்பட்டவர்கள் விசாரணை குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இதில் சங்கம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். இல்லையெனில் அவருக்கு ரெட் கார்டு போட்டுவிடுவார்கள். என்ன செய்யப் போகிறார் தீபிகா?

comments | | Read More...

16 Feb குமுதம் ரிப்போர்ட்டர் டவுன்லோட் செய்ய

 
 

இந்த வார குமுதம் ரிப்போர்ட்டர் தரவிறக்க


16-2-2012 குமுதம் ரிப்போர்ட்டர்


comments | | Read More...

கொலைவெறி பாட்டு காப்பியா? போட்டு உடைக்கிறார் சிம்பு!

 
 
 
தனுஷ் சிம்பு இடையே மோதல் இருந்து வருகிறது. இருவர் படங்களிலும் ஒருவரையொருவர் தாக்கி வசனங்கள் இடம் பெற்றன. இவர்கள் தகராறு சில மாதங்களுக்கு முன் உச்சநிலையில் இருந்தது. பின்னர் சில நாட்களாக அடங்கி இருந்தன. ஆனால் தற்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது. டுவிட்டரில் ஒருவரையொருவர் விமர்சித்து கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர். பாடல்கள் மூலம் இந்த தகராறு உருவாகியுள்ளது. தனுஷ் தமிழ், ஆங்கிலத்தில் எழுதிய கொலைவெறி பாடல் உலகமெங்கும் பிரபலமானது.
இதற்கு போட்டியாக சிம்பு லவ் ஆன்ந்தம் என்ற பெயரில் நிறைய மொழிகளில் உள்ள வார்த்தைகளால் புதிய பாடல் ஒன்றை உருவாக்கினார். அமெரிக்காவில் அங்குள்ள இசை நிபுணர்களை வைத்து இப்பாடலை மெருகேற்றி வருகிறார். இதற்கிடையில் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்காக விளம்பர பாடல் ஒன்றை தனுஷ் பாடினார். இப்பாடல் இன்டர் நெட் யூ டியூப்பில் வெளியிடப்பட்டது.
 
திடீரென்று அதில் இருந்து அப்பாடல் எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தனுஷ் தயாரானார். உடனே மீண்டும் யூ டியூப்பில் மீண்டும் அப்பாடல் வந்தது. இதையடுத்து தனுசும் சிம்புவும் டுவிட்டரில் மோதினர். தனுஷ் டுவிட்டரில், சிலர் மற்றவர்களுக்கு கஷ்டம் வரும்போது சிரிக்கிறார்கள் என்று யூ டியூப்பில் இருந்து பாடலை தூக்கியதும் மறைமுகமாக சிம்புவை தாக்கி கருத்து வெளியிட்டார்.
 
இதற்கு பதிலடியாக சிம்பு காப்பி அடிக்கிறதுல சீனாவை விட பயங்கரமாக இருக்காங்களே என்று டுவிட்டரில் தனுசை தாக்கி கருத்து சொன்னார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சச்சின் பாடலை காசு வாங்காமல் இலவசமாக பாடி கொடுத்தேன் என்று தனுஷ் குறிப்பிட்டார்.
 
பின்னர் சிம்பு இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்த உலகத்தில் எதிரிகள் என்று இல்லை. வெற்றி உன்னை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறது. தோல்வி உலகத்தை உனக்கு அறிமுகப்படுத்துகிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.




comments | | Read More...

காதலனை தாக்கி காதலியை கற்பழிக்க முயற்சி!!

 


கோவில்பட்டி அருகே நள்ளிரவில் காதலனை தாக்கி, காதலியை கடத்தி கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி, புதுரோடு ராஜேந்திரன் மகள் சுபாஸ்ரீ,26. எம்.சி.ஏ., முடித்துள்ளார்.
இவரும், இதேபகுதி நாராயணசாமி மகன் பி.இ.,பட்டதாரி காளிராஜூம், 27, சில ஆண்டாக காதலித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணியளவில் இவர்கள் பைக்கில் வீட்டிலிருந்து புறப்பட்டனர்.

நள்ளிரவு 11 மணியளவில், கோவில்பட்டி - தூத்துக்குடி ரோட்டில், திட்டங்குளம் அடுத்த கருங்காலிப்பட்டி ஓடை அருகே சென்றபோது, மர்ம நபர்கள் இருவர், இவர்களை வழிமறித்தனர். காளிராஜை தாக்கிய அவர்கள், சுபாஸ்ரீயை கடத்தினர். உடனடியாக மெயின்ரோட்டிற்கு ஓடிவந்த காளிராஜ், அங்கு வந்த பஸ்சை வழிமறித்து நடந்த சம்பவத்தை கூறினார்.
இதையடுத்து, பஸ் பயணிகள் காட்டுப்பகுதியில் விரட்டிச்சென்று ஒரு வாலிபரை பிடித்து, சுபாஸ்ரீயை மீட்டனர். விசாரணையில், பிடிபட்டவர் கோவில்பட்டி, சிதம்பராபுரம் சங்கரமூர்த்தி மகன் கண்ணன், 21, எனத்தெரியவந்தது. அவரை நாலாட்டின்புத்தூர் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய இவரது நண்பர் செல்வக்குமாரை, தேடி வருகின்றனர்.
comments | | Read More...

இணையத்தில் கலக்கிவரும் ஸ்ருதி ஹாசனின் கவர்ச்சி குளியல் (அதிர்ச்சி வீடியோ இணைப்பு)

 


நவநாகரிக உலகில் எல்லாமே இப்படித்தான்.
சினிமா என்று சொல்லி உலகத்தையே சீரழிப்பவர்கள் இருக்கும் வரைக்கும், பணத்துக்காக உடம்பைக் காட்டுபவர்கள் இருக்கும் வரைக்கும் இவ்வாறான கண் குளிர் காட்சிகள் அடிக்கடி இணையத்தில் உலா வரும்.


comments | | Read More...

நடேசன் மனைவியை தலையில் சுட்டு, பின்னர் கொன்ற இராணுவம் !( படங்கள் இணைப்பு)

 

இலங்கை இராணுவத்திடம் சரணடையச் சென்ற புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்களின் மனைவியை சிங்கள இராணுவத்தினர் தலையில் சுட்டுள்ளனர். நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரை படுகொலை செய்யமுன்னரே நடேசன் அவர்களின் மனைவியை இலங்கை இராணுவம் படுகொலைசெய்துள்ளது. சம்பவதினத்தன்று நடேசன், புலித்தேவன், நடேசன் மனைவி மற்றும் சிலர் இராணுவத்திடம் சரணடைந்துள்ளனர். நடேசன் அவர்களின் மகன் லண்டனில் இருக்கிறார். அவரை சட்டலைட் போன் மூலம் தொடர்புகொண்ட ப.நடேசன் அவர்கள், தாமும் மனைவியும் இராணுவத்திடம் இன்னும் 30 நிமிடங்களில் சரணடைய இருப்பதாவும், இன்னும் 30 நிமிடங்களுக்குப் பின்னர் தாம் தொலைபேசியூடாக உன்னுடன் பேசவில்லை என்றால் என்னை அவர்கள் கொன்றுவிட்டார் என்பது தான் அர்த்தம் எனக் கூறியுள்ளார்.

சரணடைந்த இவர்களை இராணுவம் முதலில் அருகில் உள்ள ஒரு தற்காலிக இராணுவ முகாமுக்கு கூட்டிச்சென்றுள்ளது. அங்கே அவர்கள் தொலைபேசியூடாக ஒரு உயர் அதிகாரியோடு பேசியுள்ளனர். அவர்கள் சிங்கள மொழியில் பேசியது என்ன என்பதனை நடேசனின் மனைவி அறிந்துள்ளார். ஏன் எனில் அவர் ஒரு சிங்களவர். தம்மை அவர்கள் சுடப்போகிறார்கள் என்று அறிந்த நடேசனின் மனைவி, சரணடைந்தவர்களைச் சுடவேண்டாம் எனக் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். ஆனால் அவர் தலை முடியை பிடித்து இழுத்த சிங்கள இராணுவம் அவரை தகாத மற்றும் தரம்கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளனர். சிங்கள தாசி எனவும், திட்டி அவர் தலையில் சுட்டுள்ளனர் என, அச் சம்பவம் நடந்தபோது அங்கே நின்றிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் தெரிவித்துள்ளார். இச் செய்தியை ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ளது. வேண்டும் என்றால் தாம் அச் சிப்பாயை இனங்காட்டவும் தயார் என அது மேலும் தெரிவித்துள்ளது.

புலித்தேவன் தன்னுடன் கொண்டுசென்ற லாப்-டொப்பை இராணுவத்தினர் எடுத்துள்ளனர். புலித்தேவன் கொலைசெய்யப்பட்ட பின்னர் அவரது லாப்-டொப் இரகசிய கடவுச் சொல்லைப் பாவித்து அவர்கள் லாட்-டொப்பை இயக்கியுள்ளனர். அவர்கள் எதேட்சையாக இன்டர்நெட் செல்லும்போது, அது உடனடியாக ஸ்கைப்பில் சைன் – ஆன் ஆகியுள்ளது. இதன் காரணமாக புலித்தேவன் இறந்து பல மாதங்கள் ஆனபோதும், அவர் ஸ்கைப்பில் ஆன் லைனுக்கு வந்ததாக அவரோடு தொடர்பில் இருந்த அனைவருக்கும் காட்டியுள்ளது (ஸ்கைப்). இதனை அடுத்து பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் சுதாரித்துக்கொண்ட பலர், புலித்தேவனின் லாப்-டொப் இலங்கைப் புலனாய்வுப் பிரிவில் இருப்பதும் அவர்களே அதனை இயக்குகின்றனர் என்பதனைக் கண்டுபிடித்து, புலித்தேவனின் ஸ்கைப் ஐ.டியை தமது கணக்கில் இருந்து நீக்கியுள்ளனர் (ரிமூவ்).

இலங்கை இராணுவமானது சரணடைந்த நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரைக் கொலைசெய்யமுன்னர், தொலைபேசியில் உரையாடியது கோத்தபாயவுடன் தான் என்று சில ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதனை மட்டும் சுயாதீனமாக உறுதிசெய்யமுடியவில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்து இவர்களைச் சுடும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்பதனை மட்டும் உறுதிசெய்ய முடிகிறது.

comments | | Read More...

12 Feb ஜூவி, மோட்டார் விகடன் டவுன்லோட் செய்ய

 
 

இந்த வார ஜூனியர் விகடன், மோட்டார் விகடன் ஆகியவற்றை விளம்பர பிரச்சனை இல்லாமல் வேகமாக டவுன்லோட் செய்ய கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.
12-2-2012 ஜூனியர் விகடன்


1-2-2012 மோட்டர் விகடன்

எனது தளத்தில் வெளியிடப்படும் இதழ்கள் அனைத்தும் என்னால் நேரடியாக பதிவேற்ற பட்டவை கிடையாது. நீங்கள் தேடினாலும் கிடைக்கக்கூடியது தான். இதன் மூலமாக எந்தவிதமான வருவாயும் நான் பெறவில்லை. வெளிநாட்டில் வாழும் நண்பர்களுக்காக இணையத்தில் கிடைப்பவற்றை எனது தளத்தில் பதிவிடுகிறேன். சம்பந்தபட்ட இதழ்கள் எதிர்ப்பு தெரிவித்தால் எந்த நேரமும் நீக்கியும் விடுவேன். மறக்காமல் கருத்துக்களை பதிவு செய்யவும். அன்புடன் தாரிக்
 


comments | | Read More...

விஸ்வரூபம் கமல் ஹாசனை புகழ்ந்த ஆண்ட்ரியா

 

விஸ்வரூபத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

கொலிவுட்டில் உலக நாயகன் கமல் ஹாசன் விஸ்வரூபம் திரைப்படதை இயக்கி நடிக்கிறார்.

சுமார் 120 கோடி செலவில் உருவாகும் விஸ்வரூபத்தில் கமல்ஹாசனுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதுகுறித்து நாயகி ஆண்ட்ரியா கூறியதாவது, அதிக பொருட் செலவில் உருவாகும் இப்படத்தில் பணியாற்றுவதை நினைத்து பெருமை அடைகிறேன்.

கமல் ஹாசன் அவர்கள் சிறந்த நடிகராக மட்டுமின்றி எழுத்தாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றுகின்றார்.

படப்பிடிப்பில் படைப்பாற்றல் உள்ள மேதையாக இயங்கினாலும் அவருக்கே உரிய நகைச்சுவையால் என்னை ஈர்த்துள்ளார். படப்பிடிப்பில் உள்ளவர்களிடம் சுவாரஸ்யமான பல விடயங்களை பகிர்ந்து கொள்வார்.

அவருக்கே உரிய பாணியில் படக்குழுவினரோடு இணைந்து பணியாற்றுவதை கண்டு பிரமித்து போனேன் என்று விஸ்வரூபம் நாயகி ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

comments | | Read More...

நாயை காதலிக்கும் தமிழ் நடிகை

 


தமிழில் சீஸனுக்கேற்ப வந்து போகும் நடிகைகளில் ஒருவர் செரீன். துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் அறிமுகமானவர், தொடர்ந்து பரபரப்பாக சில படங்களில் நடித்தார்.



பின்னர் திடீரென காதல், பெற்றோருடன் தகராறு, தனிக்குடித்தனம் என்று போனவர், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். உற்சாகம் போன்ற சில படங்களுக்குப் பின் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. மீண்டும் இப்போது அபாயம் படத்தின் இரு நாயகிகளுள் ஒருவராக நடித்துள்ளார்.
இந்தப் படம் தெலுங்கில் கிருஷ்ணவம்சி இயக்கத்தில் வெளியான டேஞ்சர் என்ற படத்தின் தமிழ்ப் பதிப்பாகும்.
தான் மீண்டும் நடிக்க வந்தது குறித்து செரீன் இன்று நிருபர்களிடம் பேசுகையில், "படிப்பதற்காக இத்தனை நாள் வெளிநாட்டுக்குப் போயிருந்தேன். ஆஸ்திரேலியாவில் ஓவியம் மற்றும் கலை சம்பந்தப்பட்ட கோர்ஸ் படித்தேன் (குறிப்பாக எந்த படிப்பு என்று அவர் சொல்லவில்லை!).
இனி நடிப்பில் கவனம் செலுத்துவேன்," என்றார்.
அவரிடம், உங்களுக்கு ஏகப்பட்ட காதலர்கள் இருக்கிறார்களாமே… இப்போது யாருடன் காதல் என்று கேட்டதற்கு, "எனக்கு நிறைய பாய் ப்ரெண்ட்ஸ் உள்ளனர். அது கணக்கே இல்லை. ஆனால் யாருடனும் காதல் இல்லை. இப்போதைக்கு என் காதல் வீட்டில் நான் வளர்க்கும் நாயுடன்தான். அந்த நாய்க்குப் பெயர் வெண்ணிலா," என்றார்.
comments | | Read More...

சென்னையில் சாதனை படைத்த 7 ஆம் அறிவு

 


இதுவரை சென்னையில் இரண்டு படங்கள் மட்டுமே ஒன்பது கோடியை‌த் தாண்டி வசூலித்துள்ளன.மூன்றாவதாக அதில் இடம் பிடித்துள்ளது முருகதாஸின் 7ஆம் அறிவு.

தசாவதாரம், எந்திரன் ஆகிய படங்கள் மட்டுமே ஒன்பது கோடியைத் தாண்டி சென்னையில் வசூல் செய்துள்ளன. தற்போது 7 ஆம் அறிவு ஒன்பது கோடியை‌த் தாண்டியிருக்கிறது. மிகப் பெ‌ரிய வெற்றி என்று சொல்லப்பட்டாலும் வேலாயுதம் எட்டு கோடியைக்கூட எட்டவில்லை என்பது முக்கியமானது.
comments | | Read More...

பதிரிகையாளராகிறார் காதல் சந்தியா

 


மலையாளப் படத்தில் பத்திரிகை நிருபராக நடிக்கிறார் சந்தியா.இதுகுறித்து அவர் கூறும்போது, ''தற்போது 'வீண்டும் கண்ணனூர்' என்ற படத்தில் அனுப் மேனம் ஜோடியாக நடித்து வருகிறேன். அரசியலை மையமாக கொண்டு தயாரிக்கப்படும் இதில் பத்திரிகையாளராக நடிக்கிறேன். எனக்கு நிறைய பத்திரிகை நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மேனரிசம் எனக்கு தெரியும். அதை மனதில் வைத்து நடிக்கிறேன். தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்'' என்றார்.
comments | | Read More...

தமிழில் நடிக்க விருப்பமில்லை - இலியானா பரபரப்பு தகவல்

 


இலியானா தமிழில் இரண்டு படங்கள் (கேடி, நண்பன்) செய்திருக்கிறார் இதுவரை. ஆனால் அவருக்கோ, அவரை வைத்து படமெடுத்தவர்களுக்கோ, அட குறைந்தபட்சம் ரசிகர்களுக்கோ… அந்தப் படங்கள் நல்ல அனுபவமாக அமையவில்லை!அதனால்தானோ என்னமோ… அம்மணிக்கு கோலிவுட் என்றால் வேப்பங்காயாக கசக்கிறதாம். தமிழில் மேற்கொண்டு நடிக்கவும் அவர் விரும்பவில்லையாம்.

தேடி வந்து தேதி கேட்ட இரண்டு முன்னணி தயாரிப்பாளர்களிடம் சாக்குப் போக்கு சொல்லி அனுப்பிவிட்டு, இரண்டு இந்திப் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டாராம்.

இதற்கிடையே, தமிழ் சினிமா பிடிக்காது… தமிழ் சினிமா தயாரிப்பாளர் கொடுத்த அட்வான்ஸ் மட்டும் பிடிச்சிருக்கோ என கோபக் குரல் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் மோகன் நடராஜன்.

விக்ரமும் இலியானாவும் நடிப்பதாக முன்பு அறிவிக்கப்பட்ட ஒரு படத்துக்காக கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் இது. அந்தப் படம் ட்ராப் ஆகிவிட்டது. கொடுத்த அட்வான்ஸ் பணம் ரூ 50 லட்சத்தை அப்படியே மறந்துவிட்டாராம் இலியானா.

படத்தில் நடிக்கவில்லை என்றாகிவிட்டது. நான் கொடுத்த அட்வான்ஸ் என்னாச்சு… உடனடியாக எண்ணி வைக்கணும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் மோகன் நடராஜன்.

படத்தில் நடிக்க கோடம்பாக்கம் வரப் பிடிக்கலன்னாலும், இந்த பஞ்சாயத்துக்கு இலியானா கண்டிப்பா வந்தாகணுமில்ல!
comments | | Read More...

சுப்பர் ஸ்டாருடன் இணையும் சுப்பிறீம் ஸ்டார்

 


பத்திரிகையாளராக இருந்து தன் கடின உழைப்பால் இன்று ஒரு நடிகராக , தயாரிப்பாளராக, தலைமை தாங்குபவராக, சினிமா, அரசியல் ,நட்சத்திர கிரிக்கெட் என்று தினம் தினம் ஓடி ஓடி உழைக்கும் சரத்குமாரின் வளர்ச்சி எல்லாரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது. நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சரத்குமார் சில பத்திரிகை குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவி தொகையும் வழங்கினார். அவர் பேசுகையில்,
கடந்த சில வருடங்கள் ரொம்ப ப்ரீயா இருந்தேன். என் படங்களை வாங்க வணிக ரீதியாக சில பிரச்னைகள் இருந்தது. அதை எல்லாம் கடந்து, இப்போது நான் ரொம்ப பிசியா இருக்கேன்; மலையாளத்தில் நான் நடித்த பழசி ராஜா படம் என்னை பேச வைத்தது; தளபதியாக சரித்திர ரோலில் மம்முட்டியுடன் நடித்தது மறக்க முடியாது. தொடர்ந்து பல படங்கள் நடித்து கொண்டிருக்கேன். தற்போது கூட அச்சண்ட ஆண்மக்கள் என்ற படத்தில் கோவை போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதை அடுத்து கன்னடத்தில் தர்ஷன் ஹீரோவா நடித்த படத்தில் கெஸ்ட் ரோல் பண்றேன். சூப்பர் ஹிட் படம்; தொடர்ந்து நடிக்க கதை கேட்டு வரேன்,

தெலுங்கில் சில படங்களில் நான் நடித்திருந்தாலும் சமீபத்தில் வெளிவந்த காஞ்சனா படம் மிக பெரிய பேரை தந்தது. அந்த படத்தில் அரவாணி ரோலில் நடிக்க வேண்டும் என்று லாரன்ஸ் கேட்ட போது உடனே எஸ் சொன்னேன். ஏன்னா படத்தில் ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் ரோல் அது. எங்க போனாலும் எனக்கு ஒரு பெரும் பேர் கொடுத்த படம் காஞ்சனா. தமிழ்ல சினேகாவுடன் நான் நடித்த விடியல் படம் பாதியில் உள்ளது. அந்த படம் கூட சுதந்திரம் முன், சுதந்திரம் பின் என்று எடுக்கப்படும் படம். மே ரிலீஸ் செய்ய பிளான் இருக்கு. இதை அடுத்து நம்ம ஊரில் நடந்த உண்மை சம்பவம்; மூளை சாவில் இறந்த ஒருவரின் இதயத்தை வேறு ஒருவருக்கு பொருத்தி உயிர் பிழைக்க வைத்த கதை. இதை மலையாளத்தில் டிராபிக் என்று படமாக்கி இருந்தனர். படம் பெரும் வெற்றி பெற்றது. அந்த படம் இப்போது தமிழில் எடுக்க போகிறோம். அதில் நான் உயிர் காப்பாற்றிய டிரைவராக நடிக்க போறேன்,

மேலும் ராதிகா, பிரகாஷ் ராஜ், ரம்யா நபீசன் போன்றோர் நடிக்க உள்ளனர். மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்போது எல்லாரும் கேட்டு கொண்டிருக்கும் செய்தி நான் ரஜினியுடன் நடிக்க போவது; சௌந்தர்யா இயக்கும் படத்தில் நான் ரஜினியுடன் நடிக்க போறேன்; இப்பதான் போட்டோ சூட் முடிந்தது; ரொம்ப ஆர்வத்தோட இருக்கேன் ரஜினியுடன் நடிக்க, என் அரசியல் வாழ்க்கையும் ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு; தென்காசியில மாதம் சில நாட்கள் தங்கி இருந்து அந்த பணியையும் சிறப்பாக செய்கிறேன். அங்கு எனக்கு சில ஆட்கள் உதவி செய்கின்றனர். நடிகர் சங்கத்திலும் என் பணியை திட்டமிட்டு செய்கிறேன். இப்போது பெப்சி பிரச்சனை குறித்து இரு தரப்பிலும், நாங்களும் பேசி வருகிறோம்,. விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். என் மகள் வரலெட்சுமி பத்தி சொல்லனும்னா அவங்களோட மியூசிக் டான்ஸ் ஆர்வம் பார்த்தேன். சினிமான்னு அவங்க முடிவு பண்ணி அனுபம் கேர் நடிப்பு கல்லூரியில் சேர்த்துவிட சொன்னாங்க. சேர்த்து விட்டேன். நல்லா முடிச்சிட்டு வந்திட்டாங்க. இப்ப சிம்புவுடன் போடா போடி படத்தில் நடிச்சிட்டு இருக்காங்க. அப்புறம் நாகார்ஜுன் மகனுடன் தமிழ் தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க போறாங்க, இனி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நல்ல படங்கள் பண்ணுவேன், என்றார்.

எந்த மொழியில் படம் பண்ணாலும் ரசிகர்கள் ரொம்ப எதிர் பார்ப்பது சூப்பர் ஸ்டாரும் சுப்ரீம் ஸ்டாரும் இணையும் கோச்சடையான் பார்க்க தான் , வாழ்த்துக்கள் சரத் சார்,
comments | | Read More...

ஜீவாவுடன் இணையும் த்ரிஷா

 


இந்த வருடம் அதிக படங்களில் நடிக்க இலக்கு வைத்திருப்பதாக சொன்னார், த்ரிஷா.இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு இந்தியில் நடிக்கச் சென்றதால், தமிழில் சிறிது இடைவெளி ஏற்பட்டது. இந்த ஆண்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறேன். தமிழில் 3 படங்கள், தெலுங்கில் 3 படங்களில் நடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருக்கிறேன்.
கமர்ஷியல் படங்கள் மட்டுமின்றி, நல்ல கதையம்சமுள்ள படங்களையும் தேர்வு செய்து நடிப்பேன். 'வாமனன்' இயக்குனர் அகமது சொன்ன கதை என்னைப் பெரிதும் கவர்ந்தது. என் நடிப்புத்திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்புள்ள கதை. ஜீவா ஹீரோ. முதல்முறையாக அவருடன் ஜோடி சேர்கிறேன்.
comments | | Read More...

நாள் ஒன்றுக்கு 20 சிகரட் ஊதி தள்ளும் தமிழ் நடிகை - அதிர்ச்சி தகவல்

 


நாள் ஒன்றுக்கு 20 சிகரெட் பிடிக்கிறேன் என்றார் நடிகை மது ஷாலினி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

அவன் இவன் படத்தையடுத்து ராம் கோபால் வர்மா இயக்கும் 'டிபார்ட்மென்ட்' இந்தி படத்தில் ரவுடி கூட்டத்தின் தலைவியாக நடிக்கிறார் மது ஷாலினி.

இதற்காக தினமும் 20 சிகரெட் புகைக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில் சிகரெட் வாடையே எனக்கு பிடிக்காது.

அதை பிடிப்பவர்களையும் அடியோடு வெறுக்கிறேன். ஆனால் இப்படத்தில் சிகரெட் பிடித்து நடிக்கிறேன்.

நடிப்பு எனது தொழில் என்பதால் இதற்கு சம்மதித்தேன். எப்போது படம் முடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்ததும் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிடுவேன்.

வேடத்துக்காக சிகரெட் பிடிக்க கற்றுக்கொண்டதே கஷ்டமான அனுபவம். காட்சியில் நடிக்கும்போது ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 சிகரெட்டாவது பிடிக்கிறேன்.

பலமுறை மறுத்த பிறகும் என்னையும் இயக்குனர் ராம்கோபால் வர்மாவையும் இணைத்து நிறைய கிசுகிசு வருகிறது. அதெல்லாம் வெறும் வதந்திதான். தொழில் ரீதியாகத்தான் நாங்கள் பழகுகிறோம். இவ்வாறு மது ஷாலினி கூறினார்.
comments | | Read More...

கூச்ச சுபாவத்தையே மறந்து விட்டேன் - நடிகை வித்யா பாலன்

 


சில்க் வேடத்தில் நடித்ததால் என் கூச்ச சுபாவத்தையே மறந்து விட்டேன், என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவிய தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில், சில்க் வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருப்பவர் நடிகை வித்யா பாலன். அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து வித்யா பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.

அதில், டைரக்டர் மிலன் லூதிரா, சில்க் சுமிதாவாக நடிக்க என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் தென்னிந்திய பெண் என்பதால், எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கலாம். அவரிடமே, `என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? என்று கேட்டேன். `காரணம் படம் வெளிவந்த பிறகு தெரியும். உன்னைத் தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரத்திற்கு நடிக்க முடியாது என்றார். இவை அனைத்தையும் விட இந்தியாவிற்கும், உலகத்துக்கும் என் உடல் கவர்ச்சியை காட்டும் ஓர் வாய்ப்பை இந்த சினிமா எனக்கு அளித்துள்ளது, என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு நான் என்னுடைய கூச்ச சுபாவத்தையே மறந்து விட்டேன். சில்க் போன்ற உடல் அழகும், போதுமான எடையும் என்னிடம் இருப்பதாக உணர்கிறேன். மேலும் ரசிகர்கள் விரும்பும் அளவு
பெண்மைக்கு தேவையான நெளிவு சுழிவுகள் என் உடலில் இருக்கிறது, என்று கூறியிருக்கிறார்.

டர்ட்டி பிக்சர் படத்தை உங்கள் தந்தையுடன் அமர்ந்து கூச்சமின்றி பார்ப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் வித்யா, கண்டிப்பாக பார்ப்பேன். ஏனென்றால் நான் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் அவ்வளவுதான். நடிப்பிற்குரிய மரியாதையை நான் கொடுத்துள்ளேன். எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் உறுதியாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று என் பெற்றோர் என்னிடம் கூறியிருக்கிறார்கள். எனினும் ஒரு சில காட்சிகள் அவர்களுக்கு கூச்சமாக இருக்கலாம். ஆயினும் அவர்கள் மகள் ஒரு நடிகை என்பதால் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டியதிருக்கும் என்ற தொலைநோக்கு பார்வையில் எடுத்துக் கொள்வார்கள், என்று கூறியிருக்கிறார்.
comments | | Read More...

சென்னை Vs தெலுங்கு கிரிக்கெட்டின் கவர்ச்சி நாயகிகளின் படங்கள்

 

சென்னை Vs தெலுங்கு கிரிக்கெட்டின் கவர்ச்சி நாயகிகளின் படங்கள்

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger