Tuesday, 1 October 2013
இந்தியாவுல முடியலேன்னா அமெரிக்காவுல ரிலீஸ் பண்ணுவேன் – மீண்டும் ஆரம்பிக்கிறார் கமலஹாசன் !!
by admin
Tamil culture, செய்திகள் ...Today, 18m
தியேட்டரில் ரிலீஸாகும் ஒருநாளைக்கு முன்பாகவே டி.டி.ஹெச்சுகளில் ரிலீஸ் செய்யப்போனதால் கமலின் 'விஸ்வரூபம்' படத்துக்கு வந்த சிக்கல் எல்லோரும் அறிந்தது தான்.
டி.டி.ஹெச்சுகளில் ரிலீஸ் செய்தால் 'விஸ்வரூபம்' படத்துக்கு தியேட்டர்கள் தர மாட்டோம் என்று கமலுக்கு எதிராக கொடி பிடித்தனர் தியேட்டர் உரிமையாளர்கள். இதனால் வேறு வழியின்றி தனது டி.டி.ஹெச் பிஸினசையே கிடப்பில் போட்டு விஸ்வரூபத்தை தியேட்டர்களில் மட்டும் ரிலீஸ் செய்தார் கமல்.
தற்போது 'விஸ்வரூபம் – 2 படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் கமல் மீண்டும் இந்தப் படத்தில் தனது டி.டி.ஹெச் பிஸினசை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்.
இந்தியாவில் உள்ள டி.டி.ஹெச்சுகளில் எனது படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றால் அமெரிக்காவில் உள்ள டி.டி.ஹெச்சுகளில் ரிலீஸ் செய்வேன் என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் கமல்.
வீட்டில் உட்கார்ந்து கொண்டே டிவிகளில் புதிய படங்களைப் பார்ப்பது தான் எதிர்காலத்தில் டெக்னாலஜியாக இருக்கப் போகிறது. ஆனால் எல்லா ரசிகர்களும் வீட்டில் உட்கார்ந்து படம் பார்ப்பதில்லை. சில படங்களை விருப்பப்பட்டால் தியேட்டர்களில் வந்துதான் பார்க்கிறார்கள். அப்படி இருக்கும் போது இங்கு டி.டி.ஹெச்சில் படம் ரிலீஸாவதையே எல்லோரும் எதிர்க்கிறார்கள்.
ஆனால் நான் மீண்டும் எனது விஸ்வரூபம் -2 படத்தை தியேட்டர்களில் ரிலீஸாகும் முன்பே இந்தியாவில் உள்ள டி.டி.ஹெச்சுகளில் ரிலீஸ் செய்ய முயற்சிப்பேன். அதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அமெரிக்காவில் உள்ள டி.டி.ஹெச்சுகளில் தான் என் படத்தை ரிலீஸ் செய்வேன்" என்கிறார் கமல்.
The post இந்தியாவுல முடியலேன்னா அமெரிக்காவுல ரிலீஸ் பண்ணுவேன் – மீண்டும் ஆரம்பிக்கிறார் கமலஹாசன் !! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.
Show commentsOpen link