Tuesday, 27 December 2011
இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக வலம் வரும் தோனி, விளம்பர உலகின் விருப்ப நாயகனாகவும் திகழ்கிறார்.
சமீபத்தில் பாலிவுட் கவர்ச்சி நாயகி பிபாஷா பாசுவுடன் இணைந்து "ஷூ' விளம்பரத்தில் தோன்றி பரபரப்பு ஏற்படுத்தினார். தற்போது நடிகை அசினுடன் ஜோடி சேர்ந்து இன்னொரு விளம் பரத்தில் கலக்கியுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த மிக குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டவர் தோனி. "டுவென்டி-20' உலக கோப்பை வென்ற பின், இவரது புகழ் பன்மடங்கு உயர்ந்தது. விளம்பரநிறுவனங்கள் இவரை தேடி வந்தன. ஒரு நிறுவனத்துக்கு "மாடலாக' தோன்ற பல கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார்.
முதலில் சக கிரிக்கெட் வீரர்களுடன் விளம்பர படங்களில் தலை காட்டிய இவர், சமீப காலமாக பிரபல நடிகைகளுடன் இணைந்து அசத்துகிறார். பிபாஷா பாசுவுடன் நடித்த "ஷூ' விளம்பரம்"கிளிக்' ஆக, தற்போது அசினுடன் இணைந்து "பிக் பஜார்' நிறுவனத்துக்கு"மாடலாக' தோன்றியுள்ளார். தமிழில் இருந்து இந்தி உலகிற்கு தாவியுள்ளஅசினுக்கு இந்த விளம்பரம் இன்னொரு திருப்புமுனை ஏற்படுத்தலாம். இவ்விளம்பர படப்பிடிப்பின் ஓய்வு நேரங்களில்கேப்டன் தோனியும், நடிகை அசினும் ஜாலியாக பழகியுள்ளனர். இருவரும் ஒருசில மணி நேரத்தில் விதவிதமான உடைகளில் தோன்றியுள்ளனர்.
அசின் குறித்து தோனி கூறுகையில்,""அவர் குழந்தை குணம் படைத்தவர். அனைவரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர்,'' என்றார்.தோனிக்கு நடிகைகளின் அன்புத் தொல்லை அதிகம். பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, பிபாஷா பாசு,பிரித்தி ஜிந்தா மற்றும் கோலிவுட்டில் லட்சுமி ராயுடன் இவருக்கு உள்ள தொடர்பு பற்றி நிறையகிசுகிசுக்கள் வெளியாயின. இவர்கள் வரிசையில் அசினும் சேருவாரா?