Sunday, 6 May 2012
ஆதீனமாக உள்ள நித்தியானந்தா இனிமேல் கோர்ட், போலீஸ் நிலையங்களுக்கு செல்லக்கூடாது. செல்லவும் மாட்டார். அவர்மீது உள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாது என்று பேசியுள்ளார் மதுரை ஆதீனம்.
திருவண்ணாமலையில் நேற்று ராத்திரி நித்தியானந்தாவுக்கு பட்டாபிஷேகம் நடத்தினார் மதுரை ஆதீனம். அதன் பின்னர் அவர் பேசுகையில், வாழ்நாளில் இந்த நாள் புதிய நாள். மன மகிழ்ச்� �ி, மன நிம்மதி தரும் நாள்.
சிவன்-பார்வதி நிறைந்த திருவண்ணாமலையில் ஆதீன தலைவராக நித்தியானந்தாவை அறிவித்து பட்டாபிஷேகம் செய்வது சிறப்பான ஒன்று. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட தலம், அருணகிரிநாத� �் அருளிய தலம், ரமணர் சேஷாத்திரி, விசிறி சாமியார் வாழ்ந்த தலம் திருவண்ணாமலை.
ஆதீனமாக பதவி வகிக்க மேதை, ஞானி, பக்குவம், போர்க்குணம் ஆகியவை இருக்க வேண்டும். அது திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தாவுக்கு இருக்கிறது.
சிவன்-பார்வதி எனது மனதில் தோன்றி மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசாக நித்யானந்தாவை அறிவிக்க வேண்டும் என்று கூறினர். அதன்படி நித்தியானந்தா அறிவிக்கப்பட்டு உள்ளார். நாங்கள் செய்த புண்ணியத்தால் நித்தியானந்தா கிடைத்துள்ளார்.
முதலில் அவர் ஆதீனமாக பதவி ஏற்க மறுத்தார். பல பிரச்சனைகள் வரும் என்று கூறினார். ஆனால் நான்தான் அவரை வற்புறுத்தி ஆதீனமாக பதவியேற்க வைத்துள்ளேன்.
இளைய ஆதீனமாக யாரை அறிவிக்க வேண்டும் என்ற அதிகாரம் எனக்கு மட்டும்தான் உள்ளது. நித்தியானந்தா பரம்பரை தென்மண்டல சைவ வேளாளர் பிரிவில் இருந்து வந்தவர். அவர் ஆதீனமாவதற்கு முழு தகுதியும் உள்ளது.
ஆதீனங்கள் கோர்ட், போலீஸ் நிலையத்துக்கு செல்லக்கூடாது. ஆதீனமாக உள்ள நித்தியானந்தா இனிமேல் கோர்ட், போலீஸ் நிலையங்களுக்கு செல்லக்கூடாது. செல்லவும் மாட்டார். அவர்மீது உள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாது.
மதுரை ஆதீனத்துக்கு சிறந்த நிர்வாகியை உருவாக்கி செல்வதால் என் உயிர் மூச்சு மகிழ்ச்சியுடன் பிரியும் என்று பேசினார் மதுரை ஆதீனம். அவரது பேச்சை நித்தியானந்தா ஆதரவாளர்கள், சீடர்கள் கைகள் தட்டி வரவேற்றனர்.