News Update :
Powered by Blogger.

இணையத்தில் இருந்து இலவசமாக உங்கள் வீட்டிற்கு பணம்

Penulis : karthik on Friday, 20 January 2012 | 09:55

Friday, 20 January 2012

<a href="http://www.points2shop.com/?ref=uin1329719205"><img
src="http://points2shop.com/images/promotionbanners/120x60-Banner.gif"
border="0"/></a>
http://www.points2shop.com/?ref=uin1329719205
இணையதிதில் பணம் சம்பாதிக்க ஒருஇலகு வழி கீழே தரப்பட்டுள்ள தளத்தில்
தரப்பட்டுள்ள offers complete செய்தவுடன் உங்கள் கண்கில் பணம் சேரும்
உங்கள் கணக்கில் 1$சேர்ந்தவுடன் உங்கள் paypal கணக்கிற்கு பணத்தை
பெற்றுக்கொள்ளலாம் அல்லது 5$ சேர்ந்தவுடன் check உங்கள்
வீட்டுமுகவரிக்கு பெற்றுக்கொள்ளலாம் அல்லது அந்தபணத்தை அந்த தளத்தில்
உள்ள பொருட்கள் கொள்வனவு செய்யும் வசதியின் ஊடாக பொருட்களாக
பெற்றுக்கொள்ளலாம்
1)பணம் சம்பாதிப்பது எப்படி
இந்த பகுதிக்கு சென்று அங்கு காணப்படும் டாஸ்க் கம்ப்லேடே செய்தல் வேண்டும்
2)பணத்தை மீள் எடுத்தல்
பின் நீங்கள் மீள் எடுக்கும் முறையை தெரிவு செய்தல் வேண்டும்
3 )பொருட்களை கொள்வனவு செய்தல்
முதலில் உங்கள் கணக்கில் உள்ள பணத்தை points ஆக மாற்ற வேண்டும்
2)இந்த பகுதிக்கு சென்று நீங்கள் தேவை ஆனா அளவு பணத்தை points ஆக மாற்றி கொள்ளலாம்
1 $ இக்கு ௧௦௦ points உங்களுக்கு கிடைக்கும் பின் பொருட்கள் வாங்கும்
இடத்திற்கும் செல்ல வேண்டும்
பின் அங்கு உங்களுக்கு தேவையான பொருட்களை தேடி பெற்றுக்கொள்ளலாம்
முக்கியம் : ஒரு கணனிக்கு ஒரு கணக்கை மட்டுமே வைத்திருக்க வேண்டும்
மற்றும் உங்கள் முகவரியிலும் உங்கள் பெயரிலும் ஒரு கணக்கை மட்டுமே
வைத்திருக்கவேண்டும் நீங்கள் பல கணக்குகளை உருவாக்கினால் உங்கள்
கணக்குகள் அனைத்தும் block செய்ய பட்டுவிடும்
தளத்திற்கு செல்ல கீழுள்ள படத்தை கிளிக் செய்யவும்
<a href="http://www.points2shop.com/?ref=uin1329719205"><img
src="http://points2shop.com/images/promotionbanners/468x60-Banner.gif"
border="0"/></a>
[url=http://www.points2shop.com/?ref=uin1329719205]Points2shop[url]
<a href="http://www.points2shop.com/?ref=uin1329719205"><img
src="http://points2shop.com/images/promotionbanners/120x60-Banner.gif"
border="0"/></a>
comments | | Read More...

ஜல்லிக்கட்டுக்கு பாலிவுட் நடிகர் ஜான்ஆபிரகாம் எதிர்ப்பு!!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பிரபல பாலிவுட்
நடிகர் ஜான்ஆபிரகாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின்
பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
தமிழர்களின் வீர விளையாட்டான இந்த போட்டிக்கு விலங்குகள் நல வாரியம் தடை
விதித்துள்ள நிலையில், மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் கடும்
நிபந்தனைகளுடன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போட்டியில் பங்கேற்க காளைகளும்,
காளையர்களும் தயாராகி வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இந்தி
நடிகர் ஜான் ஆபிரகாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகமத்திய
சுற்றுச்சூழல் மற்றும் வன இலாகா அமைச்சர் ஜெயந்தி நடராஜனுக்கு அவர்
அனுப்பியுள்ளகடிதத்தில், ஒரு நடிகன் என்ற முறையில் ஜல்லிக்கட்டு
பிடிக்கும். ஆனால் விலங்குகளை அதில் பயன்படுத்துவதில் உடன்பாடு இல்லை.
ஜல்லிக்கட்டில் காளையை அடக்குதல், மாட்டு வண்டி போட்டிகள்
நடத்தப்படுகின்றன. அப்போது காளைகள் சித்ரவதை செய்யப்படுகின்றன. ஆணி
பதித்த கம்பால் காளை மாட்டை குத்துகின்றனர். பொழுது போக்குக்காக அவற்றை
துன்புறுத்துகின்றனர். கூட்டத்துக்குள் செல்லும் மாடுகளை அடிக்கின்றனர்.
எனவே மிருகவதை தடுப்பு சட்டத்தை தமிழகத்தில் அமுல்படுத்த நடவடிக்கை
எடுக்கவேண்டும், என்று கூறியுள்ளார்.
comments | | Read More...

தீராத கலைத்தாகம்: நடிகை அசின்

திரைப்படத் துறையில் நடிகை அசினின் கலைத்தாகம் இன்னமும் தீர வில்லையாம்.
"எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி" படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக
ஓடிக்கொண்டிருந்த சமயத்தில், வெளியான செய்தியில் அசின் கேரளாவில்
மிகப்பெரிய தொழிலதிபரின் மகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. .
தொழிலதிபர் மகளாக இருந்து கொண்டு ஏன் நடிக்க வர வேண்டும் என்று பலரும்
எழுப்பிய கேள்விக்கு ஒரே பதிலாக வந்தது கலை தாகம்தான்.
தனது சொந்த தொழிற்சாலைகளை நிர்வகிப்பதில் பலே கில்லாடியாக விளங்கும்
அசினுக்கு, சினிமா மீது இருந்த ஆசைதான் அவரை நடிகை ஆக்கியிருக்கிறது.
சரி கலைத்தாகத்தால் நடிக்க வந்த அசினுக்கு அந்த தாகம் தீர்ந்ததா என்றால்
இல்லை என்ற பதில் வருகிறது. கொலிவுட்டில் கோலோச்சி விட்டு பாலிவுட்டில்
நுழைந்திருக்கும் அசினுக்கு அங்கு எதிர்பார்த்த அளவு வெற்றி
கிடைக்கவில்லை.
வாய்ப்புகளும் ஒன்றிரண்டுதான் வருகின்றன. இதனால் தாகம் தீராத அசினாக
பாலிவுட்டை வலம் வந்து கொண்டிருக்கிறாராம் அம்மணி.
comments | | Read More...

இலங்கை கடலில் பாரம்பரிய மீன்பிடி உரிமையை கைவிடுகிறது இந்தியா-

இலங்கை கடற்பரப்பில் பாரம்பரியமாக மீன்பிடிப்பதற்கான உரிமை இருப்பதாக
உரிமை கோரி வந்த இந்தியா அந்தக் கோரிக்கையை வாபஸ் பெறுவதற்கு
இணங்கியிருப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜிதசேனாரட்ண
தெரிவித்திருக்கிறார்.
கொழும்பில் வார இறுதியில் இடம்பெற்ற இரு நாள் இரு தரப்பு
பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு ஏற்பட்டதாக அமைச்சரை மேற்கோள்
காட்டி பி.பி.சி. தெரிவித்துள்ளது. முன்னைய கூட்டு அறிக்கைகளின் போது
இலங்கையின் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான பாரம்பரியமான மீன்பிடி
உரிமையைஇந்தியா கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 60 களில்
இணங்கிக் கொள்ளப்பட்ட விடயத்தை பாராம்பரிய உரிமையெனக் கருத முடியாது
என்பது எமது வாதமாக இருந்தது. ஏனெனில், 1976 இலேயே சர்வதேச கடல் எல்லைகள்
வகுக்கப்பட்டன என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன பி.பி.சி. தமிழ் சேவையின்
ஜெயப் பிரகாஷ் நல்லு சாமிக்கு கூறியுள்ளார். இந்த இணக்கப்பாடானது
இலங்கையின் மீன்பிடித்துறைக்கு கிடைத்த வெற்றியென அமைச்சர்
தெரிவித்திருக்கிறார்.
தமிழ் நாட்டில் எந்தவொரு இலங்கை மீனவரையும் கைது செய்வதில்லை என்பதற்கு
இந்தியாஇணங்கியுள்ளது. அதே சமயம், எந்தவொரு மீனவரும் எல்லை தாண்டினால்
அவர்கள் இலங்கை கடற் படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இலங்கைஇந்திய
மீனவர்களின் பரஸ்பர ஊடுருவல்களை தடுப்பதை நோக்கமாகக் கொண்டே இந்தச்
சந்திப்பு இடம்பெற்றதாக அமைச்சர் ராஜித கூறியுள்ளார்.
இதேவேளை, இந்தியக் கடற்பரப்பில் நிராதரவான நிலைமையில் காணப்படும் இலங்கை
மீனவர்களை துரிதமாக திருப்பி அனுப்புவது தொடர்பாக செயற்பட இந்தியா
சனிக்கிழமை இணங்கியுள்ளதாக இந்து பத்திரிகை நேற்று தெரிவித்தது.
தனியாக இந்திய மத்திய அரசு இந்தஉறுதி மொழிகளை வழங்க முடியாததால்
பெரும்பான்மையான மீனவர்கள் கைது செய்யப்படும் மாநிலங்களையும் இந்த
விடயத்தில் டில்லி சம்பந்தப்படுத்தியுள்ளது. உண்மையான மீனவர்களை திருப்பி
அனுப்புவதற்கான பொறிமுறையை தமிழ் நாடு தலைமையிலான மாநிலங்கள்
முன்னெடுக்கவுள்ளன.தமிழ்நாடு ஏற்கனவே இந்த பொறிமுறையை கொண்டுள்ளது. இந்
நிலையில் ஆந்திரா , ஒரிசா, அந்தமான், நிக்கோபார் தீவுகள் ஆகியவையும் இந்த
நடைமுறையை பின்பற்றவுள்ளன. இந்திய இலங்கை கூட்டு செயற்குழுவின் நான்காவது
மாநாட்டின் போது தீர்வு காணப்படாமலிருக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய
6 மாதங்களுக்கு ஒரு தடவை சந்திப்பதென இணக்கம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் 2012 முற்பகுதியில் இலங்கை மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தூதுக்
குழுவினர்இந்தியாவுக்கு விஜயம் செய்வதெனவும் இணக்கம்
காணப்பட்டிருக்கிறது.
இருநாள் மாநாட்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ரேனுகா
செனவிரட்ண இலங்கைத் தூதுக்குழுவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சின்
இணைச் செயலாளர் ஹர்ஷ் வர்த்தன் ஸ்ரீல்லால் இந்தியத் தூதுக் குழுவுக்கும்
தலைமை தாங்கினார்.
comments | | Read More...

கொலைக்குக் காரணமான மலையாளிகளைக் கைது செய்ய வேண்டும் : பெ.மணியரசன்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள
அறிக்கையில், சென்னையை அடுத்த திருவேற்காடு திருவேங்கட நகரைச் சேர்ந்த
சாந்தவேல் என்ற ஐயப்ப பக்தர் சபரி மலைக்குச் சென்றபோது, பம்பையில்
கேரளக்காரரின் தேநீர்க் கடையில் இவருக்கும் கடைக்காரருக்கும் ஏதோ
வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதில் ஆத்திரமடைந்த மலையாளியானகடைக்காரர் தேநீர் போடுவதற்காகக்
கொதிநிலையில் வைத்திருந்த பாய்லர் தண்ணீரை சாந்தவேல் மீது ஊற்றியுள்ளார்.
இதனால் கடுமையாக அவரின் முதுகுப் பக்கம் வெந்துள்ளது. கோட்டையம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை அவருடைய மனைவியும்
உறவினர்களும் ஆம்புலன்சு வண்டியில் கொண்டுவந்து சென்னை கீழ்ப்பாக்கம்
மருத்துவமனையில் 11.1.2012 அன்று சேர்த்துள்ளனர்.
அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 15.1.2012 விடியற்காலை
இறந்துவிட்டார். விபத்து என்ற அடிப்படையில் இவருக்குக் கோட்டையத்திலும்
சென்னையிலும் சிகிச்சை அளித்துள்ளனர். இனி இதைக் கொலை வழக்காக (302)
மாற்றி, வெந்நீர் ஊற்றிய மலையாள நபரையும், அதில் இன்னும் தொடர்புள்ள
மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும்.
சென்னை முகப்பேரைச் சேர்ந்த சந்திரன் என்ற மலையாளி குருசாமியாக இருந்து
மேற்படி சாந்தவேல் உள்ளிட்ட 80 பேரை சபரி மலைக்கு அழைத்துப் போயுள்ளார்.
மேற்படி சந்திரன் உண்மை விவரங்களை முழுமையாகச் சொல்ல மறுத்து வருகிறார்.
சந்திரனை காவல்துறை விசாரித்துநடந்த உண்மைகளைப் பெற வேண்டும்.மேலும்
சாந்தவேலுடன் தமிழகத்திலிருந்து சென்ற இதர ஐயப்ப பக்தர்களையும்
விசாரிக்கவேண்டும்.
இரு மாநிலங்களைச் சேர்ந்ததாக இவ்வழக்கு இருப்பதால் தமிழக முதல்வர்
செயலலிதா அவர்கள் இதில் தலையிட்டு, தீவிர நடவடிக்கை எடுத்து, சாந்தவேல்
மீது வெந்நீர் ஊற்றி சாவுக்குக் காரணமான காயங்களை உண்டாக்கிய மலையாளத்
தேநீர்க் கடைக்காரர் உள்ளிட்ட நபர்களை இந்தியத் தண்டனைச் சட்டம் 302ன்
கீழ் கைது செய்து வழக்கு நடத்த கேரள அரசை வலியுறுத்தி உரிய ஏற்பாடுகளைச்
செய்ய வேண்டும்.
கேரளாவில் அண்மைக் காலமாக ஐயப்ப பக்தர்கள் உள்பட அப்பாவித் தமிழர்கள்
பலர் மலையாளிகளால் தாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழர்கள் மீது வன்முறைத்
தாக்குதல் நடத்திய மலையாளிகள் மீது கேரள அரசு சட்டப்படி சரியான நடவடிக்கை
எடுப்பதில்லை.
கேரள அரசின் இவ்வாறான மலையாள இனச் சார்பு நிலை, மலையாளிகள் மேலும் மேலும்
தமிழர்களைத் தாக்கத் தூண்டுகோலாக அமைந்துள்ளது என்பதைத் தமிழக முதல்வர்
கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, சாந்தவேல் கொலைக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு
தீவிரமான நடவடிக்கைகளைத் தமிழக முதல்வர்எடுக்க வேண்டும் என்று தமிழ்த்
தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இது குறித்து தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
comments | | Read More...

நெல்லை அருகே வாலிபர் வெட்டிக் கொலை: பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் 4 பேர் கைது

நெல்லை அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக
பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாழையுத்து அருகேயுள்ள ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன்
ஸ்டீபன். பைனான்ஸ் தொழி்ல் செய்து வந்தார். நேற்று காணும்
பொங்கலையொட்டி ஸ்டீபனை அவரது உறவினர் ஐசக் மது விருந்துக்கு அழைத்துச்
சென்றார். ஊர் விலக்கில் உள்ள சுடலைமாடன் கோயில் வளாகத்தில் மது விருந்து
நடந்தது. இதில் ஐசக்,ஸ்டீபன் மற்றும் 10 பேர் மது அருந்தி விட்டு
கோழிக்கறி சாப்பிட்டனர். அப்போது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமைடந்தவர்கள் ஸ்டீபனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை
செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர். இது
குறித்து தகவல் அறிந்த நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரி விசாரணை
நடத்தினார். விசாரணையில் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த முருகன், ரூபன்,
ராகுலன், பாலாமடை விஜயராகவன், கணேசன், குட்டி, மணிமாறன், கீழபாட்டம்
சுப்பையா, காட்டாம்புளி நிர்மல், சண்முகராஜ், ஐசக் ஆகிய 11 பேர் கொலை
செய்தது தெரிய வந்தது.
இதில் சுப்பையா உள்ளிட்ட 4 பேர் போலீசில் அளித்துள்ள வாக்குமுலத்தில்
பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட அன்று ஸ்டீபன் திண்டுக்கல்
சென்றிருந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. பசுபதி பாண்டியன் கொலை
சம்பவத்தில் இவரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நினைத்த நாங்கள் அவரை
தீர்த்து கட்ட முடிவு செய்தோம்.இதற்காக அவரது உறவினர் ஐசக்கை அணுகி
ஸ்டீபனை பொங்கல் விருந்துக்கு அழைத்து வருமாறு கூறினோம்.
அதன்படி ஐசக் ஸ்டீபனை அழைத்து வந்தார். நாங்கள் அனைவரும் அமர்ந்து மது
அருந்தினோம். பின்னர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாங்கள் ஸ்டீபனை
அரிவாளால் வெட்டிக் கொன்றோம். இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார்
தெரிவித்தனர்.
comments | | Read More...

டைரக்டர் விஜய்க்கும் எனக்குமான உறவு குறித்து நான் நிறைய சொல்லி விட்டேன்--அமலாபால்

அதர்வாவுடன் "முப்பொழுதும் உன்கற்பனைகள்' படத்துக்காக டூயட் பாடிக்
கொண்டிருக்கிறார் அமலாபால். ஒரே படத்தில் ரசிகர்களின் மனம் கொத்திய மைனா.
முரளி மகன் அதர்வா எப்படி?
ரொம்ப சின்சியர் கேரக்டர். எப்போதும் எதாவது யோசித்துக் கொண்டே
இருப்பார். நடிப்பில் பின்னி எடுக்கிறார். நல்லா டான்ஸ் ஆடுகிறார். முரளி
ஸôருக்குக் கேரளத்தில் ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. அவருடைய மலையாளப்
படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன்.
தமிழிலும் சில படங்கள் பார்த்திருக்கிறேன். முரளி ஸôரைப் பிடிக்கும்
என்பதால் அதர்வாவை எனக்குப் பிடித்துவிடவில்லை. அதர்வா இதுவரை என்னிடம்
நிறைய பேசியிருக்கிறார். அப்பா ஞாபகம் வந்தால் மட்டும் அவர் கண்கள்
கலங்குவதைப் பார்த்திருக்கிறேன். எங்க அம்மா முரளியின் தீவிர ரசிகை
என்பதால், அதர்வா எப்போதும் அவருக்குச் செல்லம். அதர்வா குட் கேரக்டர்.
மை குட் ஃப்ரெண்ட்.
மறுபடியும் விஜய் இயக்க, விக்ரம் நடிக்க நீங்களும் நடிக்கிறீங்களாமே?
இந்தக் கேள்வியை ஏன் இப்படி கேட்குறீங்க? டைரக்டர் விஜய்க்கும் எனக்குமான
உறவு குறித்து நான் நிறைய சொல்லி விட்டேன். மறுபடியும் அதை மையமாக வைத்தே
கேள்விகள் கேட்கப்படுவதன் அர்ததம் எனக்குத் தெரியவில்லை. விஜய் ஸார் ஒரு
கதை சொல்லியிருக்கிறார். அதில் விக்ரம் நடிக்கிறாரா? என்பது எனக்குத்
தெரியவில்லை. கமர்ஷியல் கதை.
இப்போதைக்கு "முப்பொழுதும் உன்கற்பனைகள்' படத்தில் அதிக கவனம்செலுத்தி
வருகிறேன். அது முடிந்த பின்னர்தான் புதுப்படம் பற்றிப் பேசுவேன். விஜய்
இயக்கத்தில் நடிப்பேனா என்பது குறித்து முடிவெடுக்கவில்லை.
comments | | Read More...

விலைமாதுவா நடிக்க ஆசை! - பிரபல நடிகை

அது என்னமோ தெரியவில்லை... எந்த நடிகையைக் கேட்டாலும் ஒரு படத்திலாவது
விலை மாதுவா நடிக்கணும்னு ரொம்ப ஆசயாயிருக்கு என்பதை ஒரு ஸ்லோலன் மாதிரி
தவறாமல் சொல்லிவிடுகிறார்கள்.
இந்த நடிகைகள் லிஸ்டில் புதிதாக சேர்ந்திருப்பவர் ஸ்ரேயா. பெரிதாக
வாய்ப்புகள் இல்லாத சூழலில், கடைத் திறப்பு, விளம்பரங்கள் என பிஸியாக
இருக்கும் இவர், இப்போது ஆங்கிலப் படத்தில் நடிக்க
ஒப்பந்தமாகியுள்ளாராம்.
சமீபத்தில் சென்னை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,"நடிகைகள்
எல்லோருக்கும் விலைமாது வேடத்தில் நடிக்க ஆர்வம் உண்டு (அதான் ஏன்?!).
எனக்கும் அப்படி நடிக்க ஆசை இருக்கிறது.
வேதம் படத்தில் அனுஷ்கா அந்த வேடத்தில் கலக்கியிருந்தார். என்னுடைய
ஆசையும் நிறைவேறிவிட்டது. இப்போது வங்காள மொழி படமொன்றில் நான் விலை
மாதுவாக நடிக்கிறேன்.
மிக சிறந்த இடத்தை பிடித்த நடிகைகள் எல்லோருமே இந்த கேரக்டரில் நடித்து
உள்ளனர். இந்தியை விட தென் இந்திய மொழி பட வாய்ப்புகளே எனக்கு அதிகம்
வருகின்றன. இந்தி திரையுலகம் ஆணாதிக்கம் மிகுந்ததாக உள்ளது. நடிகைகளுக்கு
அங்கு முக்கியத்துவம் இல்லை. கவர்ச்சிக்கும் டூயட் பாட்டுக்கும் மட்டுமே
பயன்படுத்துகிறார்கள்.
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகின்றனர். அவர்
யார் என்றே எனக்கு தெரியாது. ஒரு பேஷன் ஷோவில் மட்டும் அவரைப் பார்த்தோடு
சரி.சல்மான்கானுடன் நான் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கின்றனர்.
அவர் நல்ல மனிதர். எனக்கு மரியாதை அளிப்பவர். எல்லா பெண்களையுமே அவருடன்
இணைத்து பேசுவது சகஜம்.அதை சம்பந்தப்பட்ட நடிகைகள் விளம்பரமாக எடுத்துக்
கொள்வதுண்டு. ஆனால் நான் அது போல் மலிவான விளம்பரம் தேட மாட்டேன்.
ரஜினிகாந்த், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, ரவிதேஜா என்று எனனைவிட
வயதானவர்களுடன் ஜோடியாக நான் நடிக்கிறேன் என்கின்றனர். ஷம்மி கபூர்,
அமிதாப்பச்சன் காலத்தில் இருந்து இன்று வரை வயதான ஹீரோக்கள் இளம்
நடிகைகளுடன்தான் ஜோடியாக நடிக்கின்றனர்.சினிமாவில் இதெல்லாம் சகஜம்,
தவறில்லை," என்றார்.
comments | | Read More...

அடிடா அவள, உதடா அவள, வெட்றா அவள:பெண்களை இழிவுபடுத்தும் தனுஷ் பாடல்- போலீசில் புகார்

'மயக்கம் என்ன' படத்தில் தனுஷ் எழுதிய பாடலுக்கு எதிர்ப்பு
கிளம்பியுள்ளது. இப்படத்தில் காதல் என் காதல் என கண்ணீருல.. என்று
தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ளது. அதில் அடிடா அவள, உதடா அவள, வெட்றா
அவள, தேவையே இல்ல என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் பொண்ணுங்க
எல்லாம் வாழ்வின் சாபம் என்ற வரியும் இடம் பெற்றுள்ளது.
இவை பெண்களை இழிவுபடுத்துபவை என்றும் அவர்களுக்கு எதிராக வன்முறையை
தூண்டுபவை என்றும் ராமசுப்பிரமணியம் என்பவர் புகார் மனுவில் குறிப்பிட்டு
உள்ளார். பெண்களை சக்தி என்று கூறுகிறோம். ஆனால் இந்த பாடல் பெண்களை
கொண்டாடும் நாம் கலாசாரத்துக்கு முற்றிலும் எதிரானது என்று கூறினார்.
இந்த பாட்டை தனுசும் படத்தின் இயக்குனர் செல்வராகவனும் இணைந்து
எழுதியுள்ளனர். மயக்கம் என்ன படம் ரிலீசாகி பல நாட்களுக்கு பிறகு
பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதற்கு தனுஷ் தரப்பில் வியப்பு
தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பாடல்
எழுதப்படவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.
comments | | Read More...

கொள்ளைக்காரன் – திரை விமர்சனம்

தெப்பக்குளத்துல திமிங்கலத்தை இறக்கிவிட்ட மாதிரி படம் முழுக்க
குலுங்கி¢க் கொண்டேயிருக்கிறது தியேட்டர். பேரரசு கதைக்கு பாக்யராஜ்
வசனம் எழுதினால் எப்படியிருக்குமோ, அப்படி நகைச்சுவை நகாசு வேலைகளிலேயே
நம்மை வசீகரித்து விடுகிறார் அறிமுக இயக்குனர் தமிழ்ச்செல்வன். ஆனாலும்
சுவர் பழசென்பதால் சித்திரத்திலும் கொஞ்சம் சிக்கல் வாத்யாரே!
ஆடு, தோடு என்று கிடைத்ததையெல்லாம் திருடும் கொள்ளைக்காரன்தான் விதார்த்.
(தம்மாத்துண்டு திருடனுக்கு கொள்ளைக்காரன்னு பெயர் வைக்கறதெல்லாம்
சரிங்களா தமிழ்?) பொறுப்பில்லாமல் திரியும் இவரையும் காதலிக்கிறார்
சஞ்சிதா. யாருக்கும் அடங்காமல் திரியும்விதார்த், அந்த ஊர்
தர்மகர்த்தாவுக்கும் அதே முகத்தை காட்ட, நேரம் பார்த்து கழுத்தறுக்கிறார்
வில்லன். திருட்டு தொழிலுக்கு 'பூட்டு' போட்ட பின்பு சோதனை வருகிறது
விதார்த்துக்கு. கோவில் நகையை தானே திருடிவிட்டு பழியை இவர் மீது
போடுகிறார் வில்லன். அதில்நடக்கும் சண்டையில் மனவளர்ச்சிகுன்றிய தங்கையை
பறி கொடுக்கிறார் விதார்த். அப்புறமென்ன? ரத்தகளறியாகிறது ஏரியா. வில்லனை
கொன்றுவிட்டு சிறைக்கு போகும் விதார்த், அப்புறம் வந்து காதலியை கரம்
பிடிப்பதே முடிவு.
'மைனா' ஹிட் என்பதாலேயே விதார்த்துக்கு குருவி என்று பெயர்
வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. திருட்டு ஆட்டை விற்ற பணத்தில்
கூலிங்கிளாஸ், குளுகுளு சட்டை சகிதம் வரும் விதார்த், தனது அழகை வர்ணிக்க
ஆள் பிடிப்பதே செம காமெடி. ஜியாமென்ட்ரி பாக்சில் பணம் இருப்பது
தெரியாமல் சஞ்சிதாவிடம் அதை நேர்மையாக திருப்பிக் கொடுப்பதும்,
அவருக்காகவே டுட்டோரியல் காலேஜில் சேர்ந்து படிக்க முனைவதுமாக
ரகளையடிக்கிறார். சஞ்சிதாவை அடிக்கும் வாத்தியாருக்கு, அடுத்த கணமே
விழுகிற பிரம்படிக்கு தியேட்டரே 'கொல்'லென்கிறது. இமேஜ் பார்க்காமல்
அக்காவிடம் விளக்குமாறு அடி வாங்குகிற காட்சி ஒன்றுக்காகவே ஸ்பெஷலாக
பாராட்டலாம் விதார்த்தை.
தெருமுனையில்… பஸ் ஸ்டாண்டில்… இப்படி எங்கு பார்த்தாலும் தென்படுகிற
முகம்தான் சஞ்சிதாவுக்கு. அதுவே அவர் மீது தனி
அட்டென்ஷனைஏற்படுத்துகிறது. இதே அடக்க ஒடுக்கத்தை பின்பற்றினால் இன்னொரு
தேவயானியாகலாம். யோசிங்க தங்கச்சி.
ஆட்டை திருட்டுக் கொடுக்கிற ஆயா முதல், அநியாயமாக செத்துப் போகிற சிறுமி
வரைக்கும் ஃபுல் மார்க் கொடுக்கலாம் எல்லா கேரக்டர்களுக்கும். அந்த
மாமிதான் பாவம். இவரது எந்த அங்குலத்தில் சறுக்கி விழுந்தாரோ அந்த
வில்லன் பாவி!
ஜோகன் இசையமைத்திருக்கிறார். நடன அமைப்பில் துவங்கி ராகம் வரைக்கும்
எல்லாமே அரைத்த மாவு!
டைரக்டர் தமிழ்ச்செல்வனின் பேனாவில் துள்ளிவிளையாடும் நகைச்சுவை, மனசை
கொள்ளையடிக்கிறது. ஆனால் கொள்ளைக்காரனை வளைத்துப் பிடிக்க அது மட்டும்
போதுமா என்பதுதான் ஒரே கேள்வி!
comments | | Read More...

புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்க இடைக்கால தடை

புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்க சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை
விதித்தது. கடந்த தி.மு.க. ஆட்சியில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட
வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் கட்டப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த கட்டிடம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி
மருத்துவமனையாக மாற்றப்படும் என அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை எம்.கே.பி. நகரைச் சேர்ந்த வக்கீல்
வீரமணி ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார். அதில் , மத்திய
சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்று பெறாமல் மருத்துவமனையாக
மாற்ற முடியாது. ஆனால் இதற்கான கட்டிடப்பணிகளை அரசு மேற் கொண்டுள்ளது.
மருத்துவ மனையாக மற்றும் பணிக்கான டெண்டர் அறிவிப்புகள்
வெளியிடப்பட்டுள்ளன. எனவே மருத்துவமனையாக மாற்ற தடை விதிக்கவேண்டும்
என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முருகேசன் , ஜனார்த்தன ராஜா ஆகியோர்
முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது , மருத்துவமனையாக மாற்ற
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா ?
கட்டிடத்தை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதா ? டெண்டர் அறிவிப்பு
தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா ? என கேள்விகள் எழுப்பினர். இதற்கு
இன்று பதில் அளிக்கும்படி அட்வகேட் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்
ஆஜராகி கூறியதாவது:-
இந்த கட்டிடம் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையில்லா
சான்று பெறப்பட்டுள்ளது. கட்டிடத்தை மாற்ற தடையில்லா சான்றிதழ் பெற அவசிய
மில்லை. மருத்துவமனையாக மாற்றும் பணிக்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளது.
அதற்கான கடைசி நாள் வருகிற 24-ந்தேதி ஆகும். கட்டிடத்தை இடிக்கும் பணிகள்
நடை பெறவில்லை. இது அரசின் கொள்கை முடிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் , புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்க இடைக்
கால தடை விதித்தனர். நீதிபதிகள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-
அரசின் கொள்கை முடிவில் நாங்கள் (கோர்ட்டு) தலையிடவில்லை. டெண்டர்
அறிவிப்புகளையும் தடை செய்யவில்லை. கட்டிடத்தை மாற்றி அமைக்கும்போது
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழ் தேவையா ? வேண்டாமா ?
என்பது பற்றி முடிவு செய்து கொள்ளலாம். கட்டிடத்தை மாற்றுவதற்கு
தடையில்லா சான்றுவாங்கும் வரை புதிய தலைமை செயலககட்டிடத்தை மாற்றம்
செய்யவோ , இடிக்கவோ கூடாது. இதற்கு இடைக்கால தடை விதிக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 13-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
comments | | Read More...

விஷாலுடன் நடிக்க சம்மதித்தது எப்படி த்ரிஷா பேட்டி!

விஷாலின் நெடுநாள் கனவான த்ரிஷாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற
அவரது ஆசை இப்போது சமரன் படம் மூலம் நிறைவேறியிருக்கிறது. திரு இயக்கும்
இப்படத்தில் விஷால் , த்ரிஷா ஆகியோருடன் சுனேனாவும் நடித்து வருகிறார்.
ஆக்ஷ்ன் மற்றும் த்ரில்லர் நிறைந்த படமாக சமரன் படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் விஷாலுடன் நடிக்க சம்மதித்தது எப்படி என்று த்ரிஷா
கூறியிருக்கிறார். அதாவது , விஷாலும் , நானும் நீண்டநாள் ‌நண்பர்கள்.
நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று சில
வருடத்திற்கு முன்பே தீர்மானித்தோம். ஆனால் இருவரும் வேறு சில படங்களில்
பிஸியாக இருந்ததால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை.
சமரன் படத்தில் நடிக்க என்னை அழைத்தபோது என்னால் மறுக்கமுடியவில்லை.
காரணம் சத்யம் படத்திலேயே என்னை நடிக்க விஷால் அழைத்தார்.
ஆனால்முடியவில்லை. அதனால் இந்தபடத்தை மறுக்க முடியவில்லை. மேலும் சமரன்
படத்தின் கதையும் எனக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது. அதனால் உடன் நடிக்க
ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger