News Update :
Powered by Blogger.

வளர்ப்பு மகன் திருமண செலவு ரூ.6 கோடி நான் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை

Penulis : karthik on Wednesday, 23 November 2011 | 08:04

Wednesday, 23 November 2011

 
 
 
சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆஜரானார். வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண செலவு ரூ.6 கோடி பற்றி அவரிடம் சரமாரி கேள்விகள் கேட்கப்பட்டன. 'நான் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை' என்று அவர் பதில் அளித்தார். ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. 14 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு 6 ஆண்டுகளாக பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. முக்கிய கட்டமாக குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 313ன் கீழ் கேள்வி பதில் விசாரணை இப்போது நடக்கிறது.
 
மொத்தமுள்ள 252 சாட்சிகளின் அடிப்படையில் 1384 கேள்விகள் தயார் செய்யப்பட்டது. இதில் ஜெயலலிதா 1339 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். கடந்த மாதம் 20, 21 தேதிகளில் அவரிடம் 567 கேள்விகள் கேட்கப்பட்டது. மீதமுள்ள கேள்விகள் நவம்பர் 8ம் தேதி கேட்கப்படும் என நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இதையடுத்து, பெங்களூர் பரப்பன அக்ரஹகார சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத் தில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் ஆஜராயினர். இளவரசி ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. காலை 11 மணிக்கு விசாரணை தொடங்கியது. மாலை 5.20 மணிவரை 580 கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளித்தார். ஜெயலலிதாவின் வங்கி கணக்குகள், பங்கு பரிவர்த்தனை, சுதாகரன் திருமணம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் குறித்து நீதிபதி கேட்டார்.
 
அனைத்து கேள்விகளுக்கும் ஜெயலலிதா பதிலளித்தார். மொத்த கேள்வி களும் முடியாததால் விசாரணை புதன்கிழமையும் தொடரும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மீதமுள்ள 192 கேள்விகளுக்கு ஜெயலலிதா இன்று பதில் அளிக்கிறார்.

விசாரணை முடிந்து வெளியே வந்த அரசு வக்கீல் ஆச்சார்யா கூறியதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவு பேரில் 3ம் நாளாக ஜெயலலிதா இன்று ஆஜரானார். காலை 11 மணி தொடங்கி மாலை 5.20 மணிவரை நீதிபதி கேள்விகளை கேட்டார். இன்று 580 கேள்விகளுக்கு பதிலளித்தார். இதுவரை அவரிடம் 1147 கேள் விகள் கேட்கப்பட்டுள்ளது. இன்னும் 192 கேள்விகள் பாக்கி உள்ளது. நாளை அந்த கேள்விகளும் கேட்கப்படும்.
 
இன்று அவர் தனது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்கு ரூ.6 கோடி செலவு செய்தது தொடர்பான கேள்விக்கு, 'நான் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை. முழு செலவையும் பெண் வீட்டாரே ஏற்றுக் கொண்டனர்' என்று பதிலளித்தார். மேலும், வங்கி கணக்கு, தொழிற்சாலைகளில் பங்கு தொடர்பான கேள்விகளுக்கு 'நான் எதிலும் முதலீடு செய்யவில்லை. என் மீது பற்று கொண்டவர்கள் என் பெயரை சேர்த்திருக்கலாம். எனக்கு தெரியாது' என்று பதிலளித்தார்.
 
தொண்ணூறு சதவீத கேள்விகளுக்கு 'எனக்கு தெரியாது' அல்லது 'நினைவில்லை' என்று பதிலளித்தார். இவ்வாறு ஆச்சார்யா தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் வக்கீல் பி.குமார் கூறும்போது, நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் தெளிவாகவும் நிதானமாகவும் பதிலளித்தார். நாளை மீதியுள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்றார்.
 
பரப்பன அஹ்ரகார சிறைச்சாலை வளாகம் மற்றும் வளாகத்துக்குள் செல்லும் நுழைவு வாயில் ஆகிய பகுதிகளில் நேற்று கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த முறை ஜெயலலிதா வந்தபோது அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டதால் இந்த முறை குடியிருப்புவாசிகளுக்கு அடையாள பாஸ் வழங்கப்பட்டது.
 
நீதிமன்றத்துக்குள் எப்படியும் நுழைந்துவிட வேண்டும் என்று பல வக்கீல்கள் காலை 8 மணிக்கே வந்திருந்தனர். ஆனால் அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து ஆஜராகி வரும் மூத்த வக்கீல் பி.குமார், ராஜன், கந்தசாமி, சரவணகுமார், பால்கனகராஜ், விவேகவாணன், விஜயராஜ் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை மேயர் சைதை துரைசாமி மதியம் 1 மணிக்கு வந்தார். அவர் யார் என்று போலீசாருக்கு தெரியாததால் முதலில் அனுமதிக்கவில்லை. மேயர் என்று தெரிந்தபின் உள்ளே நடந்து செல்ல அனுமதித்தனர். சாலையிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் மேயர் நடந்து சென்றார்.
 
25 கார்கள் புடைசூழ
 
நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக ஜெயலலிதா நேற்று காலை விமானம் மூலம் பெங்களூர் வந்தார். அவருடன் சசிகலா மட்டும் வந்தார். விமான நிலையத்திலிருந்து 25 கார்கள் புடைசூழ ஜெயலலிதா கார் சிறப்பு நீதிமன்றத்துக்கு வந்தது. 10.35 மணிக்கு அவர் சிறப்பு நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்தார்.
 
சென்னை சாப்பாடு
 
மதியம் 1.45 மணியளவில் நீதிமன்றம் மதிய இடைவேளை அறிவித்தது. உணவு கொண்டு வரப்பட்டது. அதை இருவரும் கேரவனில் இருந்தவாறு சாப்பிட்டனர். அந்த சாப்பாடு சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்டது என கட்சிக்காரர்கள் கூறினர்.
 
15 நிமிடம் காத்திருந்தார்
 
சிறப்பு நீதிமன்றத்துக்கு 10.40 மணிக்கு வந்த ஜெயலலிதா உடனடியாக நீதிமன்றத்துக்குள் செல்லவில்லை. விசாரணை 11 மணிக்கு என்பதால் நீதிமன்றத்துக்கு நீதிபதி வரும்வரை காரில் அமர்ந்திருந்தார்.



comments | | Read More...

கூகுள் மற்றும் ஃபேஸ் புக்கில் அசத்தும் தனுஷின் 'கொலவெறி'

 
 
 
தனுஷ் எழுதி பாடியுள்ள ' WHY THIS KOLAVERI DI ' பாடல் தற்போது தமிழக இளைஞர்களிடையே பெரும் பேச்சாக இருக்கிறது.
 
' WHY THIS KOLAVERI DI ' பாடல் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் டிவிட்டர் இணையத்தின் TRENDINGல் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கிறது.
 
YOUTUBE இணையத்தின் TRENDING-லும் இப்பாடல் முன்னிலையில் இருந்து வருகிறது. புதுமுக இசையமைப்பாளரான அனுருத், அப்பாடலை எழுதிய தனுஷ் உள்ளிட்ட அனைவருமே டிவிட்டர் TRENDING-ல் வலம் வருகிறார்கள்.
 
இப்பாடலின் வரவேற்பால் இந்தி சேனல்களும் இதுகுறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். முதன் முறையாக மும்பையில் உள்ள எஃப்.எம் களில் இப்பாடலை ஒளிபரப்பி வருகிறார்கள்.
 
ஒரே ஒரு பாடலுக்கு கிடைத்த இந்த வரவேற்பால், பெரும் சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு.



comments | | Read More...

நமீதா, ஸ்ரேயா குட்டை பாவாடை அணிவதை எதிர்ப்பதா? குஷ்பு கண்டனம்

 
 


 
நடிகைகள் சினிமா விழாக்களில் குட்டை பாவாடை அணிந்து பங்கேற்பது வழக்கம். கவர்ச்சி நடிகைகள் மட்டுமின்றி முன்னணி கதாநாயகிகளும் இதுபோல் கவர்ச்சி ஆடை அணிந்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்புகளும் காட்டப்பட்டு வருகிறது.
 
நடிகை ஸ்ரேயா, சிவாஜி பட விழாவில் குட்டை பாவாடை அணிந்து பங்கேற்றார். இதனை இந்து மக்கள் கட்சி கண்டித்தது. போலீசிலும் புகார் அளித்தது. இதையடுத்து ஸ்ரேயா மன்னிப்பு கேட்டார். இதுபோல் நமீதாவும் கவர்ச்சி ஆடை அணிந்து விழாக்களுக்கு வருகிறார். இருக்கையில் அமர்ந்து இருக்கும்போது போட்டோ கிராபர்கள் படம் எடுப்பதை தவிர்க்க கால்கள் மேல் துண்டை போட்டு மறைத்துக்கொள்கிறார்.
 
 
நடிகைகள் கவர்ச்சி ஆடை அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை நடிகை குஷ்பு கண்டித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது,
 
 
நமீதாவை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அவர் குட்டை பாவாடை அணிவதை எப்போதும் விரும்புவார். அதோடு கூடவே ஒரு துண்டையும் எடுத்துச்செல்வார்.
 
 
ஒருத்தர் அணியும் ஆடை என்பது அவரது தனிப்பட்ட வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது. மற்றவர்கள் உத்தரவு போட முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. வெளியில் உள்ள சில சுயநல சக்திகள் இரண்டு நிமிட புகழுக்காக எதிர்ப்பு காட்டுகின்றன. இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.



comments | | Read More...

விவேக்கின் சாதனை


இதுவரை பத்து லட்சம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டு விட்டார் விவேக். இந்த வருடம் டிசம்பருக்குள் பத்து லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று விவேக்கிடம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்திருந்தது வாசர்களுக்கு நினைவிருக்கலாம். அவர் கூறிய இந்த பத்து லட்சத்தைதான் கடந்த மாதமே நிறைவேற்றிவிட்டார் விவேக். ஆனால் இன்னும் பல்வேறு ஊர்களில் இந்த திட்டத்திற்காக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார் அவர். டிசம்பர் மாதத்தில் கடலு�ரில் இந்த பணியை நிறைவு செய்கிறாராம் விவேக். இந்த விழாவில் அப்துல் கலாமும் கலந்து கொள்ளவிருக்கிறார். இதுவரை எல்லா ஊர்களிலும் மரங்களை நட்டு வந்தவர், சிலரது அன்பு கட்டளையால் சில கோவில்களுக்குள்ளும் மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். ஒவ்வொரு கோவிலிலும் ஒரு மரம் இருக்கும். அதை தல விருட்சம் என்பார்கள். விவேக்கும் இப்போது மரங்களை நட்டிருப்பதால் அதை என்ன பெயர் சொல்லி அழைப்பார்களோ?
comments | | Read More...

தன்னை காத்துக்கொள்ள சிவாஜி குடும்பத்தை மாட்டிவிடும் ஜெயலலிதா

 
 
 
முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் கல்யாணச் செலவை நான் செய்யவில்லை. மொத்தச் செலவையும் பெண் வீட்டார்தான் கவனித்துக் கொண்டனர் (0என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதால், சிவாஜி கணேசன் குடும்பத்தாரும் இந்த வழக்கில் விசாரிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் அவரால் வளர்ப்பு மகன் என்று அறிவிக்கப்பட்டார் சுதாகரன். இதையடுத்து அவருக்கும் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகள் வயிற்றுப் பேத்தியான சத்தியா என்கிற சத்தியவதிக்கும் திருமணம் கோலாகலமாக நடந்தது. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த பிரமாண்டத் திருமணமும் ஒன்றாக மாறியுள்ளது.
 
இந்தியாவே வியந்து விழி பிதுங்கி நின்றது சுதாகரன் கல்யாணத்தைப் பார்த்து. அந்த அளவுக்கு பணத்தை வாரியிறைத்து படு பிரமாண்டமாக திருமணத்தை நடத்தினர். சிவாஜி கணேசன், ஜெயலலிதா முன்னிலையி்ல படு கோலாகலமாக நடந்த இந்தத் திருமணத்திற்காக ரூ. 6 கோடி செலவிடப்பட்டதாக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
நேற்று பெங்களூர் தனி கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது, திருமணத்திற்கான செலவை நான் செய்யவில்லை. மாறாக பெண் வீட்டார்தான் செய்தனர் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா. இதன் மூலம் 6 கோடி ரூபாய் செலவையும் சிவாஜி கணேசன் வீட்டார்தான் செய்ததாக சுட்டிக் காட்டியுள்ளார் ஜெயலலிதா. இதனால் இதுகுறித்து சிவாஜி கணேசன் வீட்டாரிடம் விசாரணை நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக கருத்து எழுந்துள்ளது.




அந்த செய்தியை படிக்க ...


comments | | Read More...

சீதை வேடம்: கணவனை பிரிந்த மனைவியின் வலியை உணர்ந்தேன்: மனைவியிடமிருந்து கணவனை பிரித்த நயன்தாரா பேட்டி

 
 
நயன்தாரா, தெலுங்கில் கடைசியாக நடித்த "ஸ்ரீராம ராஜ்ஜியம்" படம் சமீபத்தில் ரிலீசானது. தமிழிலும் இப்படம் "டப்பிங்" செய்து வெளியிடப்படுகிறது. இப்படத்தில் நயன்தாரா சீதை வேடத்தில் நடித்துள்ளார். பாலகிருஷ்ணா ராமராக நடித்துள்ளார்.
 
இப்படம் குறித்து நயன்தாரா கூறியதாவது:-
 
"ஸ்ரீராம ராஜ்ஜியம்" படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். எனது பிறந்த நாளான கடந்த 18-ந்தேதி இந்த படத்தை நான் பார்த்தேன். ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த படம் எனது பிறந்தநாள் பரிசாகும். சீதை வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, என்னால் நடிக்க முடியுமா? என்று பயந்தேன். அஞ்சலி தேவி போன்ற நடிகைகள் செய்யவேண்டிய கேரக்டர்.
 
அதில் இயக்குனர் எனது ஸ்டைலில் சுதந்திரமாக நடிக்க வைத்தார். சில நாட்களிலேயே கேரக்டரில் ஒன்றினேன். விரதம் இருந்தேன். சீதையாகவே வாழ்ந்தேன். கணவனை இழந்த மனைவியின் வலியை என்னால் உணர முடிந்தது. படத்தில் முதலாவது ஆசிரமம் சீன்களை படமாக்கினார்கள். நான் முழுமையாக சைவத்துக்கு மாறினேன். தினமும் கோவிலுக்கு சென்றேன். பூஜைகள் செய்தேன். இந்த படத்தில் நடிப்பதற்கு பாலகிருஷ்ணாதான் முக்கிய காரணம்.
 
அவருடன் ஏற்கனவே "சிம்ஹா" என்ற படத்தில் நடித்துள்ளேன். கேரக்டர் சிறப்பாக அமைய அவரும் உதவினார். பாராட்டுக்கள் கிடைக்க காரணமான எல்லோருக்கும் நன்றி.

இப்படி பேசியுள இந்த நயன்தாராவுக்கு ராமலத்திடம் இருந்து பிரபுதேவாவை பிரித்து கொண்டு வரும் போது ராமலத்தோட வலி தெரியல்லையா...! நயன்தாராவுக்கு இதையெல்லாம் பேசுற தகுதி இருக்கா...?
இப்ப கூட ஒன்றும் ஆகல்ல கணவனை பிரிந்த மனைவியின் வலி தெரிந்ததால் பிரபுதேவாவை ராமலத்துடன் சேர்த்து வச்சிட்டு இப்படி தத்துவம் பேசினால் உங்கள் புகழ் எங்கும் ஒலிக்கும்....



comments | | Read More...

2 நடிகர்கள், பெண்ணுடன் கைது

 
 
 
மும்பை விமான நிலையத்தில் அதிக பணத்துடன் வந்த நடிகர்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டனர்.
 
இந்தி டிவி நடிகர்கள் விஜய் பவார் மற்றும் ஸ்வப்நில் ஜோஷி. இவர் மராத்தி சினிமாக்களிலும் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஜோதி பாண்டே என்ற பெண்ணுடன் பாங்காங் செல்வதற்காக (22/11/2011) மும்பை விமான நிலையம் வந்தனர்.
 
 
அவர்கள் கொண்டு வந்த பைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஜோஷி மற்றும் பவார் வைத்திருந்த பைகளில் தலா ரூ. 75 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஜோதி பாண்டேயின் பையில் ரூ. 40 ஆயிரம் இருந்தது. வெளிநாடு செல்லும் பயணிகள் இந்திய பணம் ரூ. 7 ஆயிரத்து 500 மட்டுமே வைத்திருக்க அனுமதி உண்டு. இதையடுத்து அதிகாரிகள் 3 பேரையும் கைது செய்தனர்.
 
 
அது தங்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் என விசாரணையில் நடிகர்கள் தெரிவித்தனர். எனினும் விதிமீறி ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததற்காக அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்த பணத்திற்கான ஆதாரங்களை காட்டியதையடுத்து 2 மணி நேரத்திற்குப் பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.



comments | | Read More...

வாழ்கையில் ஜெய்யுடன் நடிக்க மாட்டேன் - அஞ்சலி அதிரடி

 
 
எந்த நடிகரையும் நான் காதலிக்கவில்லை. என்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் ஜெய்யுடன் இனி நடிக்கப் போவதும் இல்லை, என்று அறிவித்துள்ளார் நடிகை அஞ்சலி.

நடிகை ஜெய்யும் அஞ்சலியும் எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்தனர். பொது இடங்களில் இருவரும் அடிக்கடி காணப்பட்டனர். ஏழாம் அறிவு பட இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கினர்.



இதைத் தொடர்ந்து இருவருக்கும் காதல் என கிசுகிசு வெளியானது. இந்த நிலையில், ஜெய்யும் அஞ்சலியும் மீண்டும் ஏஜிஎஸ் படத்தில் இணைந்து நடிக்கப் போவதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில், அனைத்து கிசுக்கள் மற்றும் செய்திகளை மறுத்து ஒரு அறிக்கை வெியிட்டுள்ளார் அஞ்சலி.

அதில், "அங்காடித் தெரு மூலம் எனக்கொரு அங்கீகாரத்தைக் கொடுத்த ரசிகர் ரசிகைகளுக்கு எங்கேயும் எப்போதும் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்.

வாழ்க்கையில் ஜெயிக்க போராடித்தான் ஆக வேண்டும். ஐந்து ஆண்டுகள் போராடிய பிறகுதான் நல்ல நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்று கொஞ்சம் வளர்ந்திருக்கிறேன்.

இப்போதுதான் நல்ல நல்ல படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன். ஆனால் அந்த மகிழ்ச்சியைக் கெடுப்பதுபோல், ஒரு நடிகருடன் காதல் (ஜெய்), திருமணம் என்றெல்லாம் பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

என்னுடன் கிசுகிசுக்கப்படும் அந்த நடிகருடன் இணைந்து ஒரு படம்தான் நடித்துள்ளேன். அதன் பிறகு வந்த கிசுகிசுக்களால், இனி அவருடன் இணைந்து நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளேன். அப்படி வந்த வாய்ப்புகளையும் தவிர்த்துவிட்டேன்.

நான் இன்னும் வளரவேண்டும். நல்ல நடிகை என பெயரெடுத்து விருதுகளை வாங்க வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு உங்களின் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறேன்.

எனக்கு யாருடனும் காதல் இல்லை. இதனை பகிரங்கமாக இப்போது அறிவிக்கிறேன்.

தயவு செய்து இனி அந்த நடிகருடன் இணைத்து வரும் கிசுகிசுக்களை நம்பாதீர்கள். நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார் அஞ்சலி.
comments | | Read More...

கோவணம் அணிந்து குஷ்பு வீடு முன் போராட்டம் - இ.ம.க. சவால்

 
நமீதாவை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அவர் குட்டை பாவாடை அணிவதை எப்போதும் விரும்புவார். அதோடு கூடவே ஒரு துண்டையும் எடுத்துச்செல்வார்.

ஒருத்தர் அணியும் ஆடை என்பது அவரது தனிப்பட்ட வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது. மற்றவர்கள் உத்தரவு போட முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. வெளியில் உள்ள சில சுயநல சக்திகள் இரண்டு நிமிட புகழுக்காக எதிர்ப்பு காட்டுகின்றன என்று குஷ்பு கூறியிருந்தார்.


குஷ்பு கருத்துக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக கலாசாரம் பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலம், அதனால் தான் கற்புக் கரசியான கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம். குஷ்பு சொல்வது போல் இரண்டு நிமிட புகழுக்காக குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் அதுபோல் அணியலாம். பொதுவிழாக்களுக்கு அதுபோல் வரக்கூடாது என்கிறோம்.

கிராமத்தில் விவசாய வலி தொழிலாளர்கள் பலர் கோவணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கின்றனர். அதுபோல் கோவணம் அணிந்து கொண்டு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் அவர்களை குஷ்பு சந்திப்பாரா? அல்லது பேசத்தான் செய்வாரா? அதுபோலத்தான் நடிகைகள் கவர்ச்சி ஆடையில் பொது விழாக்களில் பங்கேற்பதை நாங்கள் பார்க்கிறோம். அதை எதிர்க்கிறோம். அத்தகு நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கி எங்களை எதிர்ப்பதை குஷ்பு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
comments | | Read More...

குட்டை பாவாடையும் கோவணமும்


நடிகைகள் சினிமா விழாக்களில் குட்டை பாவாடை அணிந்து பங்கேற்பது மரபு. இதனால் பிரிண்ட் மீடியாக்களும், வலைப்பதிவுகளும் காலத்தை ஓட்டுகிறது. ஸ்ரேயா சிவாஜி விழாவிற்கு வந்து சென்ற பிறகு மன்னிப்பு கேட்டார். நமிதா கையோடு ஒரு துண்டு எடுத்து வருகிறார். ஆனால் இந்து மக்கள் கட்சி போன்றவை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

இந்த மாதிரி தமிழ்நாட்டின் முக்கியமாக பிரச்சனைகளுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பும், குஷ்பு கருத்தும் நமக்கு பழக்கப்பட்டது தான்...

குஷ்பு கருத்து:

நமீதாவை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அவர் குட்டை பாவாடை அணிவதை எப்போதும் விரும்புவார். அதோடு கூடவே ஒரு துண்டையும் எடுத்துச்செல்வார். ஒருத்தர் அணியும் ஆடை என்பது அவரது தனிப்பட்ட வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது. மற்றவர்கள் உத்தரவு போட முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. வெளியில் உள்ள சில சுயநல சக்திகள் இரண்டு நிமிட புகழுக்காக எதிர்ப்பு காட்டுகின்றன.

இந்து மக்கள் கட்சி கருத்து:

தமிழக கலாசாரம் பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலம், அதனால் தான் கற்புக் கரசியான கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம். குஷ்பு சொல்வது போல் இரண்டு நிமிட புகழுக்காக குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் அதுபோல் அணியலாம். பொதுவிழாக்களுக்கு அதுபோல் வரக்கூடாது என்கிறோம்.
கிராமத்தில் விவசாய வலி தொழிலாளர்கள் பலர் கோவணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கின்றனர். அதுபோல் கோவணம் அணிந்து கொண்டு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் அவர்களை குஷ்பு சந்திப்பாரா? அல்லது பேசத்தான் செய்வாரா? அதுபோலத்தான் நடிகைகள் கவர்ச்சி ஆடையில் பொது விழாக்களில் பங்கேற்பதை நாங்கள் பார்க்கிறோம். அதை எதிர்க்கிறோம். அதற்கு நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கி எங்களை எதிர்ப்பதை குஷ்பு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆக மொத்தம் இவர்களை போட்டு எனக்கு நான்கு நிமிட புகழ் வந்துவிட்டது

நல்ல படங்கள் கிடைக்கவில்லை, மன்னிக்கவும் :-)
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger