Tuesday, 10 July 2012
நகராட்சி கமிஷனர், தலைமைச்செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முத� ��நிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி உதவி ஆய்வாளர், வருவாய்த்துறை உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளுக்காக குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் இந்த தேர்வை பட்டதாரி கள் எழுதலாம். குரூப்-2 பதவிகளில் இந்த ஆண்டுக்குரிய 3,631 காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
தற்போது ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதால், பட்டதாரிகள் முன்பு விண்ணப்பம் வாங்குவதற்காக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கும் தபால் அலுவலகங்களுக்கும், பின்னர் அதை பூர்த்திசெய்து அனுப்புவதற்கு தபால் அலுவலகங்களுக்கும் அலைய வேண்டியது இருந்தது.
ஆன்லைனில் விண்ணப்பமுறையால், இன்டர� �நெட் வசதியுடன் வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்கள் வீட்டில் இருந்தவாறும், கம்ப்யூட்டர் இல்லாதவர்கள் அருகே உள்ள நெட் கபேக்களுக்கும் சென்று விண்ணப்பித்து வருகிறார்கள்.
இதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட தபால் � �லுவலகங்களிலும், இந்தியன் வங்கி கிளைகளிலும் அமைக்கப்பட்டு இருக்கும் இலவச மையங்களிலும் விண்ணப்பிக்கிறார்கள்.
குரூப்-2 தேர்வுக்கு இதுவரை 3 1/2 லட்சம் பேர் ஆன்லைனில் மூலமாக விண்ணப்பித்து இருப்பதாகவும், தினசரி சராசர ியாக 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வருவதாகவும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் டி.உதயச்சந்திரன் மாலைமலர் நிருபரிடம் நேற்று தெரிவித்தார்.
குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும ். இதற்கிடையே, நேற்று முன்தினம் 1,870 காலி இடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்ட வி.ஏ.ஓ. தேர்வுக்கு ஆண்களும், பெண்களும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகிறார்கள். தேர்வு குறித்த அறிவிப்பு டி. என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்ட அடுத்த 2 மணிநேரத்தில் 2 ஆயிரம் பேர் விண்ணப்பித்து தள்ளிவிட்டனர்.
இந்த நிலையில், நேற்று மாலை 6.30 மணி நிலவரப்படி, விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டிவிட்டது. மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் வேகத்தைப் பார்த்தால் வி.ஏ.ஓ. தேர்வுக்கு 15 லட்சம் விண்ணப்பங்கள் வந்துவிடும்போல் தெரிகிறது என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர். வி.ஏ.ஓ. தேர்வுக்கு குறைந் தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி என்ற போதிலும், பட்டதாரிகளும், முதுநிலை பட்டதாரிகளும்தான் அதிகளவில் விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.