Thursday, 12 July 2012
ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தனது 42-வது வயதிலும் தொடர்ந்து செஸ் போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வமாக உள்ளார். இந்நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அடுத்த சாம்பியன் யார் என ஆனந்திடம் கேட்டதற்கு, 'நான் மீண்டும் உலக சாம்பிய� �் ஆவேன். மீண்டும் சாம்பியன் ஆவதில் நான் ஆர்வமாக உள்ளேன்' என அவர் பதிலளித்தார்.
ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை துருக்கியில் நடக்க உள்ள செஸ் சாம்பியன்ஷிப்பில் தான் பங்கேற்க போவதில்லை எனவும் ஆனந்த் த� �ரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய ஆனந்த், 'இதுபோன்ற வடிவிலான தொடர்களில் நான் பலமுறை விளையாடியுள்ளேன். எனவே வேறு தொடர்களில் கவனம் செலுத்த நான் விரும்புகிறேன். நீங்கள் ஒரு விளையாட்டை நேசித்து, கடினமாக உழைத்தால் அந்த விளையாட்டில் சிறப்பாக செயல்பட முடியும். அப்போது வயது ஒரு தடையாக இருக்காது. அதனால்தான் 42 வயதிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது' எனக் கூறியுள்ளார்.&nb sp;