Friday, 9 March 2012
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகாமையில் உள்ள மட்டப்பாறை கிராமத்தில் ஐம்பது ஆண்டு பழமை வாய்ந்த தேவர் சிலை கடப்பாரையால் தாக்கப்பட்டு சேதமாகி உள்ளது.
இதை கண்டித்தும் விசமிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் தேவர் பேரவை இளைஞர் அணியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இது தொடர்பாக நமது செய்தியாளர் அளித்த செய்தி " ஒரே கல்லிலான பழமையான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை சில விசமிகளால் கடப்பாரை கொண்டு தாக்கப்பட்டுள்ளது. கால்பகுதியில் இடிக்கப்பட்டுள்ளதால் சிலையை சீரமைப்பது சாத்தியம் இல்லாமல் இருக்கின்றது . தேவர் பேரவை இளைஞர் அணியினரும் பொதுமக்களும் சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு அதே இடத்தில் உடனே சிலை வைக்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. கோசங்கள் எழுப்பப் படுகின்றது" இது தொடர்பாக தேவர் பேரவை இளைஞர் அணியின் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளரை தொடர்பு கொண்டபோது " தேவர் சமூக மக்களுக்கு பலதரப்பட்ட சாதகமான உதவிகளை செய்துவரும் அ தி மு க அரசுக்கு கேடு விளைவிக்கும் விசமிகளை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டுமென்றும் , அரசு உடனே தலையிட்டு சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.