News Update :
Powered by Blogger.

4500 அரசு டாக்டர்கள் திடீர் ராஜினாமா

Penulis : karthik on Sunday, 5 August 2012 | 00:59

Sunday, 5 August 2012





கர்நாடக மாநிலத்தில் சம்பள திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அரசு டாக்டர்கள் இன்று அதிரடியாக ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதம ் கொடுத்துள்ளனர். இதனால் அரசு மருத்துவமனை பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
இதுபற்றி மாநில மருத்துவ அலுவலர்கள் சங்க செயலாளர் சீனிவாசன் கூறுகையில், 'மாநிலம் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 4500 டாக்டர்க� ��் தங்கள் ராஜினாமா கடிதங்களை அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்களிடம் கொடுத்துள்ளனர். மாவட்ட மருத்துவமனைகளை மாவட்ட நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்' என்றார்.
 
டாக்டர்களின் கோர ிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என்றும் மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் அரவிந்த் லிமாபாலி வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் 9-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில், முதல்வர் முன்னிலையில் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும்படி மருத்துவ பிரதிநிதிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.







comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger