Wednesday, 16 October 2013
நடுக்கடலில் 90 நாட்கள் ஷூட்டிங் !
by கதிர்
சிரிப்பு Archives | TamilswayYesterday,
ராவண தேசம் படத்தின் ஷூட்டிங் நடுக்கடலில் 90 நாட்கள் நடந்தது. இது பற்றி இயக்குனர் அஜெய் கூறியதாவது:இலங்கையிலிருந்து தப்பி வந்த அகதிகள் பல்வேறு நாடுகளுக்கு கடல் மார்க்கமாக புறப்பட்டனர்:
அவர்களின் பயண அனுபவம் திகிலானது. இந்த பயணத்தின்போது ஏராளமானவர்கள் அலைகடலில் சிக்கி இறந்தார்கள். புதிய வாழ்க்கையை நோக்கி அவர்கள் தொடங்கிய இக்கடல் பயணத்தில் சந்தித்த இன்னல்கள் எப்படி அவர்களை வாட்டியது என்பதை படம் சொல்லும்.
நான் இயக்கி நடித்திருக்கிறேன். ஹீரோயின் ஜெனிபர். மற்றும் சந்தோஷ், கவுடல்யா, பாரதிராவ், சிரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
வி.கே.ராம்ராஜ் ஒளிப்பதிவு. ஆர்.சிவன் இசை. லக்ஷ்மிகாந்த் தயாரிப்பு. தரை மீது ஷூட்டிங் நடந்துவதுபோல் கடல் மீது ஷூட்டிங் நடத்துவது எளிதான காரியமல்ல என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். 90 நாட்கள் நடுக்கடலில் இதன் ஷூட்டிங் நடந்தது.இவ்வாறு அஜெய் கூறினார்.
The post நடுக்கடலில் 90 நாட்கள் ஷூட்டிங் ! appeared first on Tamilsway.
Show commentsOpen link