News Update :
Powered by Blogger.

ஸ்டாலின் ஆதரவாளர்கள் - அழகிரி ஆதரவாளர்கள் : மதுரையில் பரபரப்பு

Penulis : karthik on Saturday 14 April 2012 | 22:47

Saturday 14 April 2012




மதுரையில் நகர் மற்றும் புறநகர் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது.  திமுகவின் பொருளாளர் மு.க. ஸ்டா� ��ின் தலைமையில்  இன்று ( 14.4.2012)  மாலை மற்றும் நாளையும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.


மதுரையில் முதன்முறையாக அழகிரி இல்லாமல் திமுக நேர்காணல் நடப்பது இதுவே முதல் முறை என்கிறது மதுரை திமுக வட்டாரம்.



இன்று காலையில் அழகிரி ஆதரவாளர்கள் மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள  தமிழ்நாடு ஓட்டலில் ஒன்று கூடி, இன்று ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நேர்காணல் கூட்டத்தையும், நாளை நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு  செய்துள்ளனர்.  இதையறிந்த ஸ்டாலின் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

இதையடுத்து மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ. தளபதிமு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இளைஞரணி நேர்காணலுக்கு அழகிரி ஆதரவாளர்கள்  வரவில்லை என்றால் நான் பதவியை ராஜின� �மா செய்வேன் என்று அதிரடியாக கூறினார். 

இதன் பின்னர் அழகிரி ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் தளபதியை நேரிலும், தொலைபேசியிலும் தொடர்புகொண்டு,   ''அண்ணன்( அழகிரி ) இல்லாத இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம்.    அவர் அனுமதி இல்லாமல் நாங்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம்.   அவர் உத்தரவு போட்டால்தான் நாங்கள் பங்கேற்போம்'' என்று கூறியுள்ளனர்.


உடனே தளபதி,  '' நானும் அழகிரி ஆதரவாளர்தான்.   அப்படியிருந்தும் நான் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறேன் என்றால், அதுக்கு காரணம், இது கட்சி பொது நிகழ்ச்சி.    திமுக சார்பில் நடைபெறும் திமுக இளைஞரணி கூட்டத்தில் திமுகவினரின் கடமை.   கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு நாம் பங்கேற்க வேண்டும்'' என்று எவ்வளவோ கேட்டுப்பார்த்தும்ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தை புறக்கணிப்பது என்கிற முடிவில் உள்ளனர் அழகிரி ஆதரவாளர்கள்.


இதனால் மதுரை திமுகவில் பரபரப்பு நிலவுகிறது.



comments | | Read More...

திருப்பதி ஏழுமலையானை பாய்பிரண்ட் என்றது ஏன்?- நடிகை காம்னா விளக்கம்




இதய திருடன்  படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் காம்னா ஜெத்மலானி. மச்சக்காரன், ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். காம்னா சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டார்.

அப்போது நிருபர்களிடம் பேசிய அவர் திருப்பதி ஏழுமலையான் என்னுடைய பாய்பிரண்ட் என்று சொல்லிவிட்டு போனார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாய்பிரண்ட் என்று கடவுளை சொல்வதா என போனிலும், கடிதம் மூலமாகவும் காம்னாவுக்கு கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து காம்னா நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டர். நிருபர்க� ��ுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையானை பாய்பிரண்ட் என்று சொன்னதற்காக இவ்வளவு எதிர்ப்பு கிளம்பும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏழுமலையான் எனக்கு தந்தையாகவும், நண்பராகவும் இருக்கிறார். அந்த அர்த்தத்தில் தான் அப்படி பேசினேன். ஆங்கிலத்தில் பாய்பிரண்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் சர்ச்சையாகிவிட்டது.

ஏழுமலையான் எனக்கு இஷ்ட தெய்வம். அவருக்கு பிறகுதான் எனக்கு எல்லாமே. பாய்பிரண்ட் என்று நான் சொன்ன வார்த்தை பக்தர்கள் மனதை புண்படுத்தியதற்காக நான் வருந்துகிறேன். அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு காம்னா கூறினார்.



comments | | Read More...

ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினாலும் உயிர் போகும் !27 வயது பெண்ணின் அதிர்ச்சி வாழ்க்கை(படங்கள் இணைப்பு...




பிரிட்டனின் பிளின்ட் என்ற நகரத்தில் வசிப்பவர் கேட்டி டெல். 27 வயதான இந்த பெண், விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமாக கருதப்படும் தண்ணீர், இவருக்கு மட்டும் பரம விரோதி.

ஒரு சொட்டு தண்ணீர், இவரது உடலில் பட்டால் போதும், தண்ணீர் பட்ட இடத்தில், தோல் எரிச்சல் ஏற்படும். அடுத்த சில நிமிடங்களில், அந்த இடத்தில் தீயால் சுட்டது போன்ற கொப்புளங்கள் ஏற்படும். தாங்க முடியாத வலியும் ஏற்படும். இதுவே, அதிகமான தண்ணீர், அவர் மீது பட்டால், உயிரே போய் விடும். இப்படி ஒரு விசித்திரமான நோய், மிகவும் அரிதாகவே ஏற்படும். தற்போதைய சூழலில், இந்த நோயால், உலகில், 35 பே� ��் பாதிக்கப்பட்டுள்ளனர்.



அவர்களில் கேட்டி டெல்லும் ஒருவர். தனக்கு ஏற்பட்டுள்ள இந்த பரிதாப நிலையை நினைத்து, கண்ணீர் விட கூட, இவரால் முடியாது. கண்ணீர் வடிந்தாலும், தோலில் கொப்புளங்கள் ஏற்பட்டு விடுமே! இதனால், வீட்டை விட்டு வெளியே வராமல், ஒரு கைதி போல், வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார். தான் பார்த்து வந்த, நடன ஆசிரியை வேலையையும் விட்டு விட்டார்.

கேட்டி டெல் கூறுகையில், "எனக்கு ஏற்பட்டுள்ள இந்த கொடூர வியாதி, உலகில் வேறு யா� �ுக்கும் வரக் கூடாது. எத்தனை நாளைக்கு உயிரோடு இருக்கப் போகிறேன் என தெரியவில்லை. அதற்குள், என் வியாதிக்கு மருந்து கண்டுபிடித்து விட மாட்டார்களா என்ற ஏக்கமும் இருக்கிறது…' என வேதனையுடன் க ூறுகிறார்.




comments | | Read More...

அஜீத்துடன் போட்டியா?: விஜய்




ரஜினி, கமல் படங்களுக� �குள் போட்டி இருப்பதுபோல் விஜய், அஜீத் இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இருவர் படங்களும் ரிலீசாகும்போது அவரவர் ரசிகர்கள் போட்டி போட்டு கொடி தோரணங்கள், கட் அவுட்கள் என அமைத்து அமர்க ்களப்படுத்துகின்றனர்.

அஜீத் உங்களுக்கு போட்டியா? என்று விஜய்யிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

அஜீத்தும் நானும் தொடர்பில் இருக்கிறோம். நிறைய விஷயங்கள் பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறோம். அவர் என் வீட்டுக்கு வருவார். நான் அவரது வீட்டுக்கு செல்வது உண்டு. எங்கள் இருவரது குழந்தைகளும் ஒரே பள்ளிக்கு செல்கின்றனர்.

சினிமாவில் எங்களுக்குள் லேசாக நீயா நானா போட்டி இருக்கலாம். திரையுலகில் ஆரோக்கியமான போட்டி இருப்பது நல்லதுதானே. தூள் படத்தில் நடிக்க இயலாமல் போனதற்காக நான் வருத்தப்பட்டது உண்டு. அந்த படத்தின் கதையை இயக்குனர் தரணி என்னிடம் சொன்னார். அதில் நடிக்க வில்லை. படம ் பார்த்தபோது சிறப்பாக இருந்தது.

நான் நடிக்கும் துப்பாக்கி படம் சிறப்பாக வந்துள்ளது. அந்த படத்துக்கு பின் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' என்ற படத்தில் நடிக் கிறேன். கவுதம்மேனன் இயக்குகிறார்.



comments | | Read More...

கருணாநிதிக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..














கருணாநிதிக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...



புத்த� ��ண்டு அன்று மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள், சிறப்பு திரைப் � ��டங்கள் என தனது கலைஞர் டிவியில் ( சித்திரை திருநாள்!) வழங்கும் கலைஞர் கருணாநிதிக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.!



தமிழர்களுக்காக ,தமிழ் புத்தாண்டு அன்று துவங்கப்பட்ட சன் டிவியின் தமிழ் மாலை இன்று 20 < span id="49" class=" transl_class" title="Click to correct">ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கலைஞர் பேரன் கலாநிதி மாறனுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.!



கருணாநிதி பேரன் உதயநிதி ஸ்டாலின் , கதாநாயகனாக நடிக்கும் ''ஒரு கல் ஒரு கண்ணாடி '' திரைப்படம் , அவர் நடிக்கும் முதல் படம் என்பதால் ,நல்ல நாள் பார்த்து தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடுகிறார்கள். கருணாநிதி பேர� �் உதயநிதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.



எனவே தலைவர் கலைஞர் வழியில் , அனைத்து திமுக த ொண்டர்களும்,பொதுமக்களும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை கொண்டாடுங்கள். வாழ்த்துக்கள்...



http://sirappupaarvai.blogspot.com


comments | | Read More...

மோகன் விருதுகள் 2011




மோகன் அவார்ட்ஸ் 2011

சினிமா விருதுகள் பல்வேறு காரணங்கள் , தகுதிகள்,வியாபார ஒப்பந்தங்கள் என பல விசயங்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகின்றன. இருந்தாலும் நம்ம மனசுக்கு புடிச்சது � ��ப்படின்னு ஒன்னு இருக்கும்ல. அதன் அடிப்படையில் எனக்கு பிடித்தவைகளின் பட்டியல் , இரண்டாம் ஆண்டாக இதோ....

சிறந்த படம் - ஆடுகளம், தெய்வதிருமகள் , எங்கேயும் எப்போதும்.
கதை- பாஸ்கர் சக்தி - அழகர்சாமியின் குதிரை
திரைகதை- சரவணன் - எங்கேயும் எப்போதும்
வசனம்- சரவணன்- எங்கேயும் எப்போதும்
சமுத்திரகனி - போராளி
இயக்கம் - வெற்றிமாறன் - ஆடுகளம்
விஜய் - தெய்வ திருமகள்


� ��ளிபதிவு - வேல்ராஜ் - எங்கேயும் எப்போதும்
படத்தொகுப்பு - கிஷோர் - எங்கேயும் எப்போதும்,ஆடுகளம்
இசை - ஜி.வி . பிரகாஷ்குமார் - தெய்வ திருமகள்,ஆடுகளம்
பாடல் - பிறை தேடும் இரவிலே - செல்வராகவன்- மயக்கம் என்ன
சாரகாத்து வீசும்போது - வைரமுத்து- வாகை சூட வா
என்னமோ ஏதோ - மதன் கார்க்கி - கோ
பாடகர்- எஸ் .பி.பாலசுப்ரமணியம்- யம்மா யம்மா - ஏழாம் அ� ��ிவு
பாடகி - சைந்தவி - பிறை தேடும் - மயக்கம் என்ன
சுசானே - மழை வரும் - வெப்பம்


சிறந்த நடிகர்- விஷால் - அவன் இவன்
விக்ரம்- தெய்வ திருமகள்
தனுஷ் - ஆடுகளம்
சிறந்த நடிகை - அஞ்சலி - எங்கேயும் எப்போதும்
நகைச்சுவை நடிகர் - சந்தானம் - வானம், தெய்வத் திருமகள்
குணசித்திர நடிகர் - ஜெயபாலன்- ஆடுகளம்
குணச்சித்திர நடிகை - � ��ரண்யா - வானம்


கலை - தோட்டா தாரணி - 7 ஆம் அறிவு
குழந்தை நட்சத்திரம் - சாரா - தெய்வத் திருமகள்
பெயர் தெரியாத 2 சிறுவர்கள் - வாகை சூட வா
தமிழ் சினிமாவின் சிறந்த அப்பா ,அம்மா - சிறப்பு விருது - இளவரசு , சரண்யா


http://sirappupaarvai.blogspot.com


comments | | Read More...

'நான் பிரமாணன்...' -சாதி பேசும் சாக்கடை ராகுல்காந்தி!




உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் பின்னடவைச் சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி நிலையான வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக "சாதி" ஆயுதத்தை கையிலெடுத� �தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் தலித்துகளின் நண்பனாகஇஸ்லாமியர்களின் நண்பனாக வேஷம் போட்டு காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்து பார்த்தது. கட்சியின் "நம்பிக்கை நட்சத்திரம்" என அழைக்கப்படும் ராகுல்காந்தி தலித்துகளின் குடிசைகளுக்குள் ஓடிஉட்கார்ந்� �ு சாப்பிட்டு போட்டுக் காண்பித்த அத்தனை காட்சிகளுமே அட்டர் பிளாப்பில்தான் முடிந்தது!

பிற்படுத்தப்பட்ட மக்களும் இஸ்லாமியர்களும் சமாஜ்வாதி கட்சியை நம்புகின்றனர். தலித்துகள் மாயாவதி பக்கம் சாய்கின்றனர். இதனால் உத்தரப்பிரதேசத்தில் "பிராமணர்கள்" வாக்குகளைக் கவர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

நான் ஒரு பிராமணன்!

இதன் முன்னோட்டமாக டெல்லியில் அண்மையில் ராகுல்காந்தி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த சாதி ஆயுதம் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது ராகுல்காந்தி சட்டென " நான் ஒரு பிராமின்... அப்புறம்தான் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்" என்று கூறியது கட்சியினரின் பிற்படுத்தப்பட்டதலித் பிரிவினரிடையே அதிர்வலைகளை உருவாக்கிவிட்டது.

காங்கிரஸ் கட்சிக்கென பாரம்பரிய வாக்காளர்களாக இருந்தவர்கள் பிராமணர்களே என்பதால் பிராமின் லாபி இத்தகைய ஒரு சூழலை காங்கிரசுக்குள் உருவாக்கி உள்ளது.

ராகுல்காந்தியின் இத்தகைய வெளிப்படையான ஒப்புதலால் காங்கிரஸ் கட்சியால் பிராமணர்களின் வாக்குகளைத் தக்க வைத்து அப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட முடியாது என்ற கனவில் அம்மாநில காங்கிரஸ் பெருந்தலைகள் இலவுகாத்துக் கொண்டிருக்கின்றன.

இதேபோல் கடந்த ஆண்டும் ராகுல்காந்தி தம்மை இப்படி பிராமின் என்று கூறியபோதே பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேறுமா கால்குலேஷன்?

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தலித்துகள்பிராமணர்களை ஒன்றிணைத்து மாயாவதி ஆட்சியைப் பிடித்த பார்முலாவை காப்பியடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது.. தங்களுக்கு தலித்துகள்பிராமணர்கள் மற்றும் கணிசமான பிற்படுத்தப்பட்டோர் வ ாக்குகள் சேர்ந்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என எண்ணுகிறது காங்கிரஸ்.

ராகுல் தலைகீழாக நின்று போராடிப் பார்க்கிறார்.. எதைத் தின்றால் பித்தம் தெளியும் நிலையில்தான் காங்கிரஸ் கட்சி இருப்பதாகவே அதன் நடவடிக்கைகள் இருக்கின்றன.

இதனிடையே ராகுலின் இத்தகைய ஒரு கருத்து இணையதளங்களில் கடுமையாக அலசலையும் உருவாக்கியுள்ளது. ராஜீவ் ஒரு பார்சி குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர் தம்மை பிராமணர் என்று சொல்வது சரியா என்ற ரேஞ்சில் தொடங்கும் விமர்சனம் இத்தாலிய குடியுரிமை வரை நீண்டு கொண்டே போகிறது என்� ��து குறிப்பிடத்தக்கது.

அப்படியென்றால் தாழ்த்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட இனத்தின் காவலன் என்று தம்மை காங்கிரஸ் கூறிக் கொள்வது பொய்தானே என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உபி பிராமணர்களுக்காகநாடு முழுவதும் உள்ள தலித் - பிற்பட்ட மக்களின் விரோதியாகப் போகிறதா காங்கிரஸ்?

அட சீ .....இளைஞன் .....முற்போக்கு சிந்தனையாளன்.....எதையும் தொலைநோக்கு பார்வையில் கையாள்பவர்...இளைஞர்க ளின் வழிகாட்டி ...வருங்கால இந்தியாவை வழிநடத்துபவர் என்றெல்லாம் நினைத்தால் இப்படி மனித இனமே மறக்க நினைக்கும் ஏன் இன்றைய இளைஞர்களிடம் தெரியாமலே போய் கொண்டு இருக்கும் ஜாதியை இவர் பேசுகிறாரா.... மனுசனா நீ....!!!!



comments | | Read More...

விபசார அழகிகளுடன் தொடர்பு




தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் உள்ள துறைமுக நகரமான கார்டா ஜெனாவில் சர்வதேச மாநாடு நடக்கிறது. அதில், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட 30 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

அதற்காக, அதிபர் ஒபாமா கொலம்பியாவில் உள்ள கார்டா ஜெனாவுக்கு சென்றுள்ளார். அவருடன் பாதுகாப்பு படையினரும், மெய்க்காப்பாளர்களும் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அவரது 12 மெய்க்காப்பாளர்கள் கார்டாஜெனாவில் விபசார அழகிகளுடன் செக்ஸ் உறவு வைத்து இருந்ததாக செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அவர்கள் நீக்கப்பட்டனர்.மேலும� �� அவர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்பும்படி உத்தரவிடப் பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் நாடு திரும்பினார்கள்.

இந்த தகவலை அமெரிக்க உளவுத் துறை செய்தி தொடர்பாளர் எட்டொனாவன் உறுதிப் படுத்தவும் இல்லை. மறுக்கவும் இல்லை. மேலும் அவர் கூறும் போது, இந்த புகாரினால் எந்த பாதிப்பும் இல்ல� �.

திட்டமிட்டபடி அதிபர் ஒபாமா நேற்று இரவு கொலம்பியா சென்று விட்டார். அங்கு நடந்த விருந்தில் சர்வதேச தலைவர்களுடன் கலந்து கொண்டார். மெய்க்காப்பாளர்கள் அமெரிக்கா திரும்பியதால் அவரது பாதுகாப்பில் எந்த பிரச்சினையும் ஏற்பட வில்லை என்றார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger