Monday, 14 May 2012
தல அஜீத் குமார் கையால பிரியாணி சாப்பிடும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று பில்லா 2 படத்தில் நடிக்கும் இந்தி � ��டிகர் சுதான்ஷு பாண்டே தெரிவி்த்துள்ளார்.
சக்ரி டோலாட்டியின் பில்லா 2 படம் மூலம் தமிழிழுக்கு வரும் இந்தி வில்லன் சுதான்ஷு பாண்டே. அவர் தனது பில்லா 2 அனுபவங்களைப் பற்றி கூறுகையில்,
பில்லா 2 படத்தில் அப்பாஸி கேரக்டருக்கு சரியான ஆளைத் தேடிக் கொண்டிருந்தார் சக்ரி டோலாட்டி. இணையதளத்தில் எனது புகைப்படத்தை பார்த்த அவர் உடனே என்னை போனில் தொடர்பு கொண்டார். நாங்கள் சந்தித்தபோது நீதான்ய்யா அப்பாஸி என்றார்.
பில்லா 2ல் மது, மாதுவுடன் சொகுசு வாழ்க்கை வாழும் டான் நான். இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய சாக்லேட், மில்க் ஷேக், காரமான உணவு வகைகள் சாப்பிட்டு எடையைக் கூட்டினேன். அஜீத் குமார் தான் ஒரு பெரிய ஸ்டார் போன்றே நடந்துகொள்ளமாட்டார். அவ்வளவு எளிமையானவர். அனைவருக்கும் உதவக்கூடியவர்.
தல கையால செய்யும் சுவையான பிரியாணி பற்றி பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் சாப்பிட கொடுத்து வைக்கவில்லை. எனக்கும், சென்னைக்கும் உள்ள ஒரே தொடர்பு பில� ��லா 2 தான். மேலும் பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
பில்லா 2 குழுவினருக்கு அஜீத் குமார் தன் கையாலேயே சமைத்து சுவையான பிரியாணி விருந்து வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.