News Update :
Powered by Blogger.

விஜயின் ஸ்பெஷல் நேர்க்காணல்

Penulis : karthik on Friday, 21 October 2011 | 06:37

Friday, 21 October 2011

 
 
நம்ம படத்தைப் பத்தி நாமளே ரொம்பப் பேசக் கூடாதுங்ணா. இந்தப் படத்துக்கு அப்புறம் பெரிய ஹீரோக்கள் பட வாய்ப்பு இயக்குநர் ராஜாவுக்கு வரும். பெரிய இயக்குநர்கள் இன்னும் நம்பி என்னை ஃபிக்ஸ் பண்ணுவாங்க!'' - கண்களில் தொக்கி நிற்கும் டிரேட் மார்க் புன்னகையுடன் பேட்டியை ஆரம்பிக்கிறார் விஜய்.

''ஷங்கர் - விஜய் காம்பினேஷன் சந்தோஷம்... எப்படி வந்திருக்கு 'நண்பன்'?''

''ஷங்கர் சார் என் அப்பாகிட்ட அசிஸ்டென்டா இருந்தப்பவே பழக்கம்தான். அப்பப்போ அவர்கிட்ட பேசி இருக்கேன். ஆனா, இன்னைக்கு இருக்குற ஷங்கர் வேற. படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் அவர் பிளான் பண்ற மெத்தட் சிம்ப்ளி சூப்பர்ப்!

ஷங்கர் சார் படத்தில் ஈஸியா நடிச்சிடலாம். ஏன்னா, அவரே நடிச்சுக் காட்டிருவார். அவர் இன்னைக்கு இந்திய அளவில் பிரபலமான டைரக்டர். அந்தப் பேர் சும்மா வந்தது இல்லை. என்னைக் கேட்டா, அவரை 'இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்'னு சொல்வேன். நான் எப்பவோ அவரோட இயக்கத்தில் நடிச்சிருக்க வேண்டியது. ஆனா, வேற வேற காரணங்களால் தள்ளிப்போச்சு. இப்போ கச்சிதமா செட் ஆகி இருக்கு. 'த்ரீ இடியட்ஸ்' இந்திப் படம் மொழி எல்லை எல்லாம் தாண்டி இந்தியாவையே வசீகரிச்சது. அதை இன்னும் அழகேத்தி உருவாக்கி இருக்கிறார் ஷங்கர் சார்!''

''ஜீவா, ஸ்ரீகாந்த்கூட ஃப்ரெண்ட் ஆகிட்டீங்களா?''

''ஜீவா ரொம்ப ஜாலி. டேக்குக்குப் போற அந்த விநாடி வரை கமென்ட் அடிச்சுட்டே இருப்பார். அவர் ஸ்பாட்ல இருந்தா யூனிட்டே சந்தோஷமா இருக்கும். ஸ்ரீகாந்த் முன்னாடியே எனக்கு ஃப்ரெண்ட்தான். இப்ப இன்னும் க்ளோஸ் ஆயிட்டார். சத்யராஜ் சார்கிட்ட நிறையப் பேசிக்கிட்டே இருந்தோம். நாங்க ஷூட்டிங் ஸ்பாட்டில் நட்பாகப் பழகினது ஃப்ரே மில் நல்லாவே தெரியும். நல்ல கதையில் இப்படி ஒரு டீமோட நடிச்சது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இப்போ ஷூட்டிங் முடிஞ்ச தும் எங்க டீமை நான் ரொம்ப மிஸ் பண்றேன்!''

''கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க எப்படித் தயார் ஆகிட்டு இருக்கீங்க..?''

''பொது நண்பர் ஒருத்தர் மூலம் தான் கௌதம் மேனன் என்னை இயக்க ஆசைப்படுவதுபத்தித் தெரிஞ்சுக் கிட்டேன். சந்திச்சோம். அவர் சொன்ன கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. இங்கேயும் அமெரிக்கா விலும் நடக்கும் கதை. கௌதம் படம் எப்பவும் ஸ்டைலிஷா இருக்கும். 'யோஹன்' படத்துக்காக என் லுக், பாடி லாங்குவேஜ்னு எல்லாத்தையும் டியூன் பண்ணிட்டு இருக்கேன். அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போறேன். இப்படி ஷங்கர், முருகதாஸ், கௌதம்னு காம்பினேஷன் அமையுறது நல்ல விஷயம்!''

''உங்க படமும் உங்க நண்பர் சூர்யா நடிச்ச படமும் ஒண்ணா தீபாவளிக்கு வருதே?''

''ஆமா. ரெண்டு படங்களும் ஜெயிக்கணும்னு ரெண்டு பேரும் நினைப்போம். ரெண்டு யூனிட்டும் ஜெயிக்கிறதுக்கு என்னோட வாழ்த்துகள்ண்ணா!''
நன்றி :- ஆனந்த விகடன்
comments | | Read More...

பெரும்பாலான இடங்களில் டெபாசிட் இழக்கும் அபாயத்தில் காங்.- 3வது இடமும் பறிபோகிறது!

 
 
 
காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட்ட இடங்களில் பெரும்பாலானவற்றில் டெபாசிட்டைப் பறி கொடுக்கும் நிலையில் உள்ளது. 'கை' விட்டு எண்ணும் அளவுக்கு அதன் வெற்றி மிக மிக சொற்ப அளவில் உள்ளது. திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன குழந்தை நிலையில் காங்கிரஸ் பரிதாபமாக காட்சி தருகிறது.
 
இந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை அத்தனை பேரும் கைவிட்டு விட்டனர். ஏன் அக்கட்சியின் மேலிடமே கைவிட்டு விட்டது. இதனால் தவித்துப் போன காங்கிரஸ் தேமுதிகவை கூட்டணிக்குச் சேர்க்கலாமா என்று முயற்சித்தது. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை அவர்கள் எடுத்தனர்.
 
ஆனால் தேர்தல் முடிவுகள் மகா கேவலமாக உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு காங்கிரஸின் செயல்பாடுகள் உள்ளன. பெரிய அளவில் எதையுமே கைப்பற்றவில்லை காங்கிரஸ்.
 
இதுவரை மொத்தமே 10 கவுன்சிலர்கள் வரைதான் தமிழகம் முழுவதும் பெற்றுள்ளது காங்கிரஸ். ஒரு நகராட்சித் தலைவர் பதவியும் கிடைக்கவில்லை. வார்டு உறுப்பினர்கள் பதவிகள் ஓரளவுக்குக் கிடைத்துள்ளன.
 
இதுவரை தமிழகத்தின் 3வது பெரிய கட்சியாக இருந்து வந்த காங்கிரஸ் தற்போது அந்த இடத்தை தேமுதிகவுக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளது. தேமுதிகவுக்கு அடுத்த நிலையி்ல்தான் தற்போது காங்கிரஸ் வந்து கொண்டுள்ளது.



comments | | Read More...

முதல் மேயர் முடிவு-தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சசிகலா புஷ்பா வெற்றி

 
 
 
தூத்துக்குடி மேயர் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. அதிமுக வேட்பாளர் சசிகலா புஷ்பா வெற்றி பெற்று மேயராகியுள்ளார்.
 
இங்கு நடந்த மேயர் தேர்தலில் சசிகலா புஷ்பாவுக்கு 65,050 வாக்குகள் கிடைத்தன. திமுக வேட்பாளர் பொன். இனிதாவுக்கு 41,294 வாக்குகள் கிடைத்தன.
 
மதிமுக வேட்பாளர் பாத்திமா 29,336 வாக்குககளை அள்ளி 3வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். 4வது இடத்தைப் பிடித்த தேமுதிகவுக்கு 7407 ஓட்டுக்களே கிடைத்தன.
 
தூத்துக்குடி நகராட்சி 2008ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது நகராட்சித் தலைவராக இருந்த கஸ்தூரி தங்கம் மேயராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் மாநகராட்சியான பின்னர் நடந்துள்ள முதல் தேர்தல் இது. இதன் மூலம் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சசிகலா புஷ்பா.
 
 


comments | | Read More...

மதிமுகவுக்குப் புதிய 'மறுமலர்ச்சி'!

 
 
 
மதிமுகவினர் நிச்சயம் இந்தத் தேர்தலை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். காரணம் 3 மாநகரட்சிகளில் அக்கட்சிக்கு எதிர்பாராத அளவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. மேலும் பல இடங்களில் ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன.
 
அனைவராலும் சீந்தப்படாத கட்சியாகவே இந்த தேர்தலை சந்தித்தது மதிமுக. இருந்தாலும் கூட்டணிக்காக யாரிடமும் போய் கெஞ்சாமல், அடிபணியாமல் துணிச்சலுடன் தனியாகவே தேர்தல் களத்திற்கு அனுப்பினார் வைகோ. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. தன்னந்தனியாக, எந்தவித பின்பலமும் இல்லாமல், தமிழ் ஆர்வலர்களையும், மதிமுக கொள்கைப் பிடிப்பாளர்களை மட்டுமே நம்பி நின்ற வைகோவுக்கு சந்தோஷச் செய்தியாக கணிசமான வாக்குகள் இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளன.
 
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலி்ல அக்கட்சியின் வேட்பாளர் மிகப் பெரிய அளவில் 23,000க்கும் மேலான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
 
கோவையில் 11,000க்கும் மேலாகன வாக்குகளையும், திருச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகளையும், அக்கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.
 
மேலும் ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் தேர்தலில் மதிமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தது. கடைசி நேரத்தில் அது சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
 
இதுதவிர பல இடங்களில் மதிமுகவுக்கு அவர்களுக்கென்றே இருக்கும் 4000, 5000 வாக்குகள் அப்படியே கிடைத்துள்ளன. இந்த தேர்தலில் மதிமுகதான் தனது வாக்கு நிலை கரையாமல் நிலையாக உள்ளதை நிரூபித்துள்ள ஒரே கட்சி என்று சொல்ல முடியும் அளவுக்கு அதற்கான வாக்குகளை தொடர்ந்து பெற்று வருகிறது.
 
நிச்சயம் இந்த தேர்தல் மதிமுகவுக்கு நிச்சயம் மறுமலர்ச்சியைக் கொடுத்துள்ள தேர்தல் என்று கூறலாம். நிச்சயம், லோக்சபா தேர்தலில் மதிமுகவை கூட்டணியில் சேர்க்க ஜெயலலிதா முன்வருவார் என்பதில் சந்தேகமில்லை.



comments | | Read More...

லோக்சபா சீட் 'பேரத்தில்' யாருடைய கை ஓங்கும்?

 
 
 
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எதிர் வரும் லோக்சபா தேர்தலின்போது சீட் பெறுவதில் யாருடைய கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
 
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளுமே தனியாகவே போட்டியிட்டன. முக்கியக் கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக, மதிமுக, பாஜக உள்ளிட்டவை தனியாகவே போட்டியிட்டன.
 
இதில் கடைசி நேரத்தில் தேமுதிகவுடன் சிபிஎம் வந்து சேர்ந்தது. சிபிஐ அணியில் இணைந்தாலும் கூட அது ஒரு கணக்காகவே தெரியவில்லை. கடைசி வரை அதிமுக மீதான பாசத்தை சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கைவிடவில்லை.
 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகளை இணைத்து ஒரு புதுக் கூட்டணி அமைத்தது. அதேசமயம் கடைசி நேரத்தில் தாங்கள் போட்டியிடாத இடத்தில் பாமகவுக்கு ஆதரவு என்று அறிவித்தது.
 
பாமகவும் தனித்தே போட்டியிட்டது. அதேசமயம், தாங்கள் போட்டியிடாத இடங்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆதரவு என்று அறிவித்தது.
 
மதிமுக தனியாகவே நின்றது, காங்கிரஸும் யாருடனும் சேரவில்லை. இப்படி அத்தனைக் கட்சிகளும் தனியாகவே நின்றது வித்தியாசமான காட்சியாகவே இருந்தாலும், இவர்களின் மனக் கணக்கு மக்களுக்குத் தெரியாமல் போகவில்லை.
 
இந்தத் தேர்தலில் தங்களது வாக்கு வங்கி என்ன என்பதை பரீட்சித்துப் பார்ப்பதே அத்தனைக் கட்சிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. இதை வைத்து எதிர் வரும் (2012) லோக்சபா தேர்தலில் கூட்டணி சேரவும், அதை வைத்து பேரம் பேசவும் பயன்படுத்திக் கொள்வது என்பதே சிறிய கட்சிகள், ஜாதிக் கட்சிகளின் முக்கிய எண்ணம்.
 
ஆனால் தற்போதுள்ள நிலவரத்தைப் பார்த்தால் பல சிறிய கட்சிகள் மற்றும் ஜாதிக் கட்சிகளுக்கு நிலைமை கலவரமாகியுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றுக்கு பெரிய அளவில் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இவர்களால் முன்பு போல வலுவான பேரத்தில் ஈடுபட முடியுமா என்பது சந்தேகமாகியுள்ளது.
 
தான் ஒரு வலுவான வாக்குப் பிரிக்கும் கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை தேமுதிக நிரூபித்துள்ளது. ஆனால் முன்பு போல பெரிய அளவில் அது வாக்குகளை பிரிக்கவில்லை. மாறாக மிகச் சிறிய அளவிலான பாதிப்பையே அது பெரிய கட்சிகளான அதிமுக, திமுகவுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அதிமுகவை சற்றும் பாதிக்கவில்லை தேமுதிக வேட்பாளர்கள். மாறாக திமுகவுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர் சில இடங்களில்.
 
ஜாதிக் கட்சிகளும் கூட இந்த முறை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் தலைமையில் அமைந்த இஸ்லாமியக் கூட்டணி திருப்பூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் மட்டுமே கணிசமான வாக்குகளைப் பெற்று 3வது இடத்தைப் பிடித்துள்ளன. மற்ற இடங்களில் இவர்களைக் காணவில்லை.
 
தற்போதைய நிலையில், அதிமுகவின் கையே மிகப் பெரிதாக ஓங்கியுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளாக இருந்த தேமுதிக தனது நிலையை ஆணித்தரமாக இந்த தேர்தலில் நிரூபிக்க முடியவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதேபோல அதிமுக கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் பிரிந்து போன கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
 
அதேபோல திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து போன பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டவையும் கூட தங்களது வாக்கு வங்கி அப்படியே உள்ளது என்பதை நிரூபிக்கத் தவறியுள்ளன.
 
இருப்பினும் வாக்கு வங்கி கரைந்து போய் விட்டதாக கருதப்பட்ட மதிமுகவுக்கு ஆங்காங்கு சொல்லிக் கொள்ளும்படியாக வாக்குகள் கிடைத்திருப்பது கவனிக்கத்தக்தாகும். இது ஒரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படலாம்.
 
மொத்தத்தில் வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக, திமுகவிடம் அவற்றின் கூட்டணிக் கட்சிகளாக சேரக் கூடிய வாய்ப்புள்ள கட்சிகள் பெரிய அளவில் ஆணித்தரமாக பேரம் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger