News Update :
Powered by Blogger.

எதிர்க்கட்சித் தலைவர் கார்: அரசுக்கும், விஜயகாந்த்துக்கும் 'ஈகோ' பஞ்சாயத்து!

Penulis : karthik on Tuesday 17 April 2012 | 22:47

Tuesday 17 April 2012




எதிர்க்கட்சித் தலைவர் கார் தொடர்பாக தமிழக அரசுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும் இடையே ஈகோ மோதல் மூண்டுள்ளதாக கூறுகிறார்கள்.

தமிழக சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது தேமுதிக. அதன் தலைவர் விஜயகாந்த்தான் எதிர்க்கட்சி்த தலைவராகவும் உள்ளார். இடையில் விஜயகாந்த் சட்டசபையில் நடந்து கொண்ட விதத்தைத் தொடர்ந்து அவரை 10 நாள் சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர் ஜெயக்குமார். அவர் சஸ்பெண்ட் ஆன காலத்தில் எந்தவித சலுகைகளையும் அனுபவிக்க முடியாது என்றும் சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதையடுத்து தனக்கு அரசு வழங்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கான அரசு காரை தனது டிரைவரிடம் கொடுத்து அரசிடமே திருப்பிக் கொடுத்து விட்டார் விஜகாந்த். பத்து நாட்களும் அவர் தன்னை எதிர்க்கட்சித் தலைவர் என்று யாரும் அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், பத்து நாள் சஸ்பெண்ட் முடிந்து விட்டது. ஆனால் இதுவரை விஜயகாந்த் சட்டசபை பக்கமே வராமல் இருக்கிறார். அதேசமயம், அவருக்கான காரை திரும்பக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில்தான் பிரச்சினையாகியுள்ளதாம்.

சஸ்பெண்ட் காலம் முடிந்து விட்டதால் காரைதிரும்ப எடுத்துச் செல்லுமாறு சட்டசபை செயலகத்திலிருந்து விஜயகாந்த்துக்குத் தகவல் போயுள்ளது. ஆனால் அவரோ, அதெல்லாம் முடியாது. ந� ��ங்களே காரை அனுப்பி வையுங்கள். நான் வர முடியாது என்று கூறி விட்டாராம்.

இதுகுறித்து அரசுக்குத் தகவல் போனதாம். அதற்கு அரசுத் தரப்போ, காரை வந்துதான் எடுத்துச் செல்ல முடியும், அனுப்பி வைக்க முடியாது என்று கூறி விடுங்கள் என்று தகவல் வந்ததாம். ஆனால் இதை விஜயகாந்த் ஏற்க மறுத்து விட்டதாக கூறுகிறார்கள். முடிந்தால் அனுப்பி வையுங்கள், நான் வந்து எடுத்துச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்று விஜயகாந்த் தரப்பில் கூறப்பட்டு விட்டதா� �்.

இந்த கார்ப் பிரச்சினை இரு தரப்புக்கும் இடையே நிலவும் ஈகோவால் ஏற்பட்டது என்று கூறுகிறார்கள்.

இன்னும் இதுபோல எத்தனை பஞ்சாயத்துக்களை தமிழகம் சந்திக்கப் போகிறதோ. மக்கள் ஒருபக்கம் ஏகப்பட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவித்து செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளுக்கோ நீ பெருசா நான் பெருசா சண்டைதான் முக்கியமாகப் போய் விட்டது.



comments | | Read More...

தனி ஈழம்: இந்தியா ஆதரவு தர வேண்டும்- கருணாநிதி




இலங்கையில் தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஆதரவு தர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூ� ��ியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேள்வி: இதுவரை உங்களுடைய நிறைவேறாத ஆசை என்ன என்ற கேள்விக்கு "தனி ஈழம்'' என்று பதிலளித்திருந்தீர்கள். அந்தத் "தனி ஈழம்'' தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளதே?

பதில்: "தனி ஈழம்'' வழங்குவதற்கு தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கதே!. ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டின் பே� �ில் இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒரு சில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன. அதன் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் "தனி ஈழம்'' கிடைப்பதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நமது இந்திய அரசு தேவையான ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும்.

கேள்வி: டெல்லியில் 16-4-2012 அன்று நடைபெற்ற உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஜெயலலிதா - அவரது தலைமையின் கீழ் தமிழ்நாடு காவல் துறை, தி ட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவதில் தலைசிறந்த நிலையில் உள்ளது என்றும், அவரது ஆட்சிக் காலமான கடந்த 11 மாதங்களில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகின்ற எத்தகைய நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்றும் பேசியிருக்கிறாரே?

பதில்: பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகின்ற எத்தகைய நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்று ஜெயலலிதா குறிப்பிட்டபோதிலும், தமிழகத்தில் இந்த 11 மாதக் காலத்தில் 386 கொ� ��ைகள், 178 செயின் பறிப்புகள், 34 வழிப்பறிச் சம்பவங்கள், பத்துக்கு மேற்பட்ட லாக்-அப் மரணங்கள் நடைபெற்� ��ுள்ளன. பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்று, ஆறு பேர் உயிரிழந்துள்ளார்கள்.

சென்னை நெற்குன்றத்தில் அடகுக்கடை உரிமையாளர் குணாராமைக் கொன்று நகை கொள்ளை.

போச்சம்பள்ளி அருகில் இளம்பெண் படுகொலை. கோவையில் தம்பதியைக் கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை. தேன்கனிக்கோட்டையில் பெண் தர மறுத்தவர் கொலை. திருவல்லிக்கேணி லாட்ஜில் ஓட்ட� ��் ஊழியர் தங்கபாண்டியன் கொலை. சென்னை வாலிபரைத் தாக்கி இரண்டரை லட்சம் ரூபாய் பணம் பறிப்பு. என்றெல்லாம் வந்த சம்பவங்களை அவர் டெல்லியில் இருந்த காரணத்தால் படிக்க இயலவில்லை போலும்.

கேள்வி: தமிழ்நாட்டுக்கான மண்ணெண்ணெய் அளவினை மத்திய அரசு குறைக்க திமுக கூட்டுச் சதி செய்வதாக தமிழக அமைச்சர் பேரவையில் சொல்லியிருக்கிறாரே?

பதில்: தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது தமிழகத்தின் தேவைகளுக்காக மத்திய அரசிடம் பலமுறை கடிதம் மூலமாகவும், நேரிலும் சென்று கேட்டு, கோரிக்கை வைத்து அதிக மண்ணெண்ணெயைப் பெற்று மக்களுக்கு வழங்கினோம். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் திமுக கூட்டுச் சதி என்று கூறி, பொது மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

கேள்வி: கடந்த பத்து மாதங்களில் நிலப்பட்டா ஒரு லட்சம் பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஆனால் அதையும் தாண்டி ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 149 பேருக்கு பட்டாக்கள� � வழங்கப்பட்டுள்ளன என்றும் வருவாய்த் துறை அமைச்சர் பேரவையில் சொல்லியிருக்கிறாரே?

பதில்: தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் 2006-ஆம் ஆண்டு மே திங்கள் முதல் 15-2-2011 வரை மொத்தம் 8 லட்சத்து 29 ஆயிரத்து 236 இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் ஏழையெளிய மக்களுக்கு வழங்கப்பட்டன. இப்படி இலவச வீட்டு மனைப் பட்டா பெற்றவர்களில் ஆதி திராவிடர்கள் 2 லட்சத்து 16 ஆயிரத்து 649 பேர் - பழங� ��குடியினர் 16 ஆயிரத்து 323 பேர் - பிற்படுத்தப்பட்டோர் 3 லட்சத்து 9 ஆயிரத்து 927 பேர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 2 லட்சத்து 45 ஆயிரத்து 463 பேர். ஏனையோர் 34 ஆயிரத்து 568 பேர்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.



comments | | Read More...

”யோஹான் தொடரும்” கௌதம் மேனன் திடீர் முடிவு!




விஜய் நடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்தாலும், துப்பாக்கி முடிந்ததும் விஜய் யார் படத்தில் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த யோஹான்-அத்தியாயம் ஒன்று படம் காரணம் சொல்லப்படாமல் நிறுத்தப்பட்டது.


சீமான் இயக்கத்தில் பகலவன் என்ற படத்தில் விஜய் நடிக்கப் போவதாக கூறப்பட்டாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் பாடல்கள் வரை முடித்துவிட்ட கௌதம்மேனன் தனது அடுத்த படத்தி பற்றி கூறியுள்ளார்.

இதை பற்றி பேசிய கௌதம் மேனன் " யோஹான் கதை முழுமையாக தயாராகிவிட்டது. விஜய் இப்போது நடித்துக்க்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தை முடித்ததும் யோஹான் படம் துவங்கப்படும். � �ந்த படத்தில் நடிக்கும் ஒரே தமிழன் விஜய் தான். ஹீரோயின் ஒரு இந்தியப் பெண். மற்ற நடிகர்களும் நடிகைகளும் வெளிநாட்டவர்கள் என்றாலும் இது ஒரு தமிழ் படம் தான். இந்த படம் ஆங்கில சப்-டைட்டில்களுடன் உலகம் முழுவதும் வெளியிடப்படும்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். யோஹான் கதாபாத்திரத்தை நான் முழுமையாக வெளிக்கொண்டு வந்தாலோ, யோஹானை மக்கள் ஏற்றுக்கொண்டாலோ ஜேம்ஸ் பாண்ட் படம் போல யோஹான் � ��ாகம்-2,3,4 என தொடர்ச்சியாக வெளிவரும்" என்று கூறினார்.

மற்ற படங்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டாலும் விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மட்டும் தொடர்ந்து நடக்கிறது என்று விஜய்யின் தந்தையும், தயார்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகர� � மீது சில தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டியிருப்பதால் விஜய் நடிக்கும் அடுத்தடுத்த படங்களுக்கு இதனால் எதுவும் பாதிப்பு வருமா என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.



comments | | Read More...

கவுதம் படத்தில் பாடினேனா?




கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம், 'நீதானே என் பொன்வசந்தம்'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் தமிழில் ஜீவாவும் தெலுங்கில் நானியும் ஹீரோவாக நடிக்கின்றனர். ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். இளையரா ஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் சமந்தா ஒரு பாடலை பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதுபற்றி சமந்தாவிடம் கேட்டபோது, ''இளையராஜா இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை'' என்று கூறியுள்ளார். தற்போது, மணிரத்னம் இயக்கும் 'கட� ��்' மற்றும் சித்தார்த் நடிக்கும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.



comments | | Read More...

ஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி




ஐபிஎல் போட்டித் தொடரின் 20-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில்  ராகுல் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சங்ககாரா தலைம� ��யிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதின. 

ராஜஸ்தான் அணி இதுவரை தான் ஆடிய 5 ஆட்டங்களில் 3 வெற்றியும், 2 தோல்வியும் பெற்றுள்ளது. டெக்கான் அணி இதுவரை தான் ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியைடைந்து இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின. 

ராஜஸ்தான் அணியில் கடந்த போட்டியில் விளையாடிய கோஸ்வாமி நீக்கப்பட்டு, திஷாந்த் யாக்னிக் சேர்க்கப்பட்டுள்ளார். டெக்கான் அணியில் கடந்த போட்டியில் விளையாடிய பார்த்தீவ் படேல், ரவிதேஜா, கேமரூன் ஒயிட்  ஆகியோர் நீக்கப்பட்டு, ஜேபி டுமி� ��ி, தன்மயி மிஸ்ரா, அபிஷேக் ஜுன்ஜுன்வாலா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக குமார் சங்ககாராவும் ஷீகர் தவானும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய சங்ககாரா 44  ரன்களும், ஷீகர் தவான் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களையடுத்து ஜோடி சேர்ந்த டேனியல் கிறிஸ்டியனும் ஜே.பி.டுமினியும் அதிரடியைக் கைவிடவில்லை.

குறிப்பாக ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை ஜே.பி.டுமினி சிதறடித்தார். 26 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 58 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டேனியல் கிறிஸ்டியன் 19 ரன்களில் 29 ரன்கள் குவித்து இவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெக்கான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

துவக்க வீரர்களாக அஜின்கியா ரஹானேவும் ராகுல் டிராவிட்டும் களமிறங்கினர். அதிரடியில் கலக்கிய அவர் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உள்பட 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெனேரியா 22 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த  ஓவைஸ் ஷா ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தங்கள் பங்கிற்கு அதிரடி ஆட்டம் ஆடினர். ரஹானே 44 ரன்களிலும், ஓவைஸ் ஷா 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களையடுத்து வந்த ஜேகன் போத்தா 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் பிராட் ஹாட்ஜும்   யாக்னிக்கும் ஜோடி சேர்ந்தனர். பிராட் ஹாட்ஜ் கடைசி நேரத்தில் அணிக்கு கைகொடுத்தார். அவர் 21 பந்துகளில் 48 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பாடுபட்டார்.

கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசிய யாக்னிக் அணியை வெற்றி பெற வைத்தார்.

இறுதியில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்த ராஜஸ்தான் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெக்கான் அணியை வீழ்த்தியது.

இதனால் டெக்கான் அணி தொடர்ந்து ஆடிய 3 ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு இது 4 வது வெற்றியாகும். இதனால் 8 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.



comments | | Read More...

தனி ஈழம் : வாக்கெடுப்பு நடத்த அமெரிக்கா கோரிக்கை




அமெரிக்காவில் செயல்படும் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு ஒன்று, தனி ஈழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

தமிழ்ஸ் பார் ஒபாமா என்ற அந்த அமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க அமைச்சக துணை செயலாளர் ராபர்ட் ஓ பிளாக்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதோடு மட்டுமல்லாமல், வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.



comments | | Read More...

செப்டம்பர் மாதம் ரஜினியின் 'கோச்சடையான்' ரிலீஸ்




ரஜினி நடிக்கும் 'கோ� ��்சடையான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பை லண்டனில் முடித்து விட்டு திரும்பி உள்ளனர். அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. இதற்காக ரஜினி, படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே ஆகியோர் கேரளா செல்கிறார்கள்.

இந்த படத்தில் சரத்குமார், ஷோபனா, நாசர், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோரும் நடிக்கின்றனர். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். கே.எஸ். ரவிக்குமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார். கோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று ரஜினி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

ஆனால் முன்னதாக செப்டம்பர் மாதம் கோச்சடையான் ரிலீசாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோச்சடையான் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளிலும் ரிலீசாகிறது. ரஜினிக்கு ஜப்பானில் ரசிகர்கள் உள்ளதால் ஜப்பான் மொழியிலும் இதனை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.



comments | | Read More...

இலங்கையில் 30 வருடமாகவே தமிழர்கள் அகதிகளாகத்தான் உள்ளனர்-பசில்




இலங்கையில் தமிழர்கள் அகதிகளாக இருப்பது 30 வருடமாக இருக்கும் ஒன்றுதான். இருப்பினும் இடம் பெயர்ந்தவர்களில் 95 சதவீதம் பேரை மறுகுடியமர்த்தி விட்டோம் என்று இந்திய எம்.பிக்கள் குழுவ� ��டம் ராஜபக்சேவின் தம்பியான பசில் ராஜபக்சே கூறியுள்ளார்.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பிக்கள் இலங்கை போயுள்ளது. அங்கு இன்று தங்களது முதல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முதலில் பசில் ராஜபக்சேவை அவர்கள் சந்தித்துப் பேசினர். காபி, டீ, பிஸ்கட் உள்ளிட்டவற்றைக் கொடுத்து இந்திய எம்.பிக்களை உபசரித்தார் பசில். பின்னர் அவர் இந்தியக் குழுவினரிடம் பேசுகையில்,

இலங்கையில் அகதிகள் பிரச்சினை 30 வருடகாலமாக இருந்துவரும் ஒன்றாகும். இருந்தபோதிலும் இடம்பெயர்ந்தோரில் 95 வீதமானோரை அனைத்து வசதிகளுடனும் அரசாங்கம் மீள்குடியமர்த்தியுள்ளது.

அவர்களுக்குத் தேவையான உட்கட்டுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மிகக் குறுகிய காலத்தில் வழக்கமான நிலைக்குக் கொண்டுவந்துள்ளோம் என்றார்.

தொடர்ந்து 4 நாட்களுக்கு இந்தியக் குழுவினர் இலங்கையில் பல்வேறு இடங்களுக்குச் செல்லவுள்ளனர்.



comments | | Read More...

வடைக்குப் பதில் 5 பவுன் நகையைத் தூக்கிச் சென்ற காக்கா... விரட்டிப் பிடித்த மக்கள்!




குமரி மாவட்டத்தில் 5 � ��வுன் தங்க நகை பொட்டலத்தை தூக்கிச் சென்ற காகத்தை 200 மீட்டர் வரை துரத்திச் சென்று நகையை மீட்டனர்.

குமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ் ராணி. அவர் தனது உறவினர் ஒருவருக்கு கொடுக்க 1 நெக்லஸ், 1 பிரேஸ்லெட், 3 கம்மல் என 5 பவுன் தங்க நகைகளை ஒரு காகிதத்தில் வைத்து பொட்டலம் கட்டினார். அப்போது மாடியில் காயப்போட்ட துணிகளை எடுக்கச் சென்றார்.

கையோடு அந்த நகை பொட்டலத்தையும் எடுத்துச் சென்று மாடி சுவற்றி்ல் வைத்துவிட்டு துணிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காகம் ஒன்று நகை பொட்டலத்தை உணவு பொட்டலம் என்று நினைத்து தூக்கிச் சென்றது.

இதைப் பார்த்த அவர் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு வந்தவர்கள் காகத்தை துரத்தினர். சுமார் 200 மீட்டர் வரை பறந்த காகம் ஒரு ஓட்டு வீட்டுக் கூரையில் அமர்ந்தது. உடனே துரத்� ��ிச் சென்றவர்கள் கையில் கிடைத்தவற்றால் காகத்தை விரட்டினர். இதைப் பார்த்த அந்த காகம் பொட்டலத்தை போட்டுவிட்டு இடத்தை காலி செய்தது. அவர்கள் பொட்டலத்தை எடுத்து தமிழ் ராணியிடம் கொடுத்தனர்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger