Saturday, 14 July 2012
ஹாலிவுட் திரைப்பட உலகில் ஏராளமான ஆக்ஷன் படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் சில்வெஸ்டெர் ஸ்டாலோன். இவருடைய இளைய மகன் சாகே ஸ்டாலோன் (வயது 36). இவரும் ஹாலிவுட் நடிகர் ஆவார். அத்துடன் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். இவர் தனது தந்தை ச� �ல்வெஸ்டெர் ஸ்டாலோனுடன் இணைந்து 1990-ல் வெளிவந்த `ராம்போ-5', 1996-ல் வெளிவந்த `டே லைட்' ஆகிய 2 படங்களில் நடித்து இருக்கிறார். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஆலிவுட் பகுதியில் உள்ள வீட்டில் சாகே ஸ்டாலோன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சாகே ஸ்டாலோன் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசாரும், அவருடைய வக்கீல்களும் வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். சாகே ஸ்டாலோன் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.
இச்சம்பவம் பற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் நகர போலீஸ் அதிகாரி ஆன்டி நைமேன் கூறுகையில், `சம்பவம் நடந்த வீட்டிற்குள் வேறு நபர்கள் சென்றதற்கான அடையாளம் இல்லை. சாகே ஸ்டாலோன் இறந்து கிடப்பதை வேலைக்காரர் தான் பார்த்து தகவல் கொடுத்தார். எனவே மரணம் எப்படி? ஏற்பட்டது என்பது முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும்' என்றார்.
சாகேயின் வக்கீல் ஜார்ஜ் புரான்ஸ்டீன் கூறுகையில், `இது ஒரு துரதிர்ஷ்ட சம்பவம். சாகே திறமையான சிறந்த சினிமா தயாரிப்பாளர். பழகுவதற்கு இனிமையானவர்' என்று குறிப்பிட்டார். சாகே இறந்து கிடந்த இடத்தில் கிடந்த சில பாட்டில்களை போலீசார் கைப� ��பற்றியதாக கூறப்படுகிறது. அதில் என்ன இருந்தது என்பது பற்றியோ, சம்பவத்துக்கும் அதற்கும் சம்பந்தம் உண்டா? என்பது பற்றியோ போலீசார் தகவல் எதுவும் வெளியிடவில்லை. போலீஸ் விசாரணை முடிந்த பிறகே சாவுக்கான பின்னணி என்ன? என்ற விவரம் முழுமையாக தெரியவரும்.
நடிகர் சில்வெஸ்டெர் ஸ்டாலோன் சான்டியாகோ நகரில் தங்கி இருந்தார். அவருக்கு மகனின் மர்ம மரணம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விரைகிறார்.