News Update :
Powered by Blogger.

கைதாகிறார் சிசிகலாவின் தம்பி திவாகரன்

Penulis : karthik on Saturday 21 January 2012 | 23:03

Saturday 21 January 2012

சசிகலாவின் தம்பி திவாகரன் மீதும் , அவரது ஆதரவாளர்கள் மீதும் திருவாரூர்
எஸ்.பி.யிடம்பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார்
ரகசிய விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது ரிஷியூர் என்ற கிராமம்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் திருவாரூர் மாவட்ட காவல்
கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் , " எனக்கு கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள்
ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ஆர்வன் , அரசு தொகுப்பு வீடு கட்டிக்
கொடுத்திருந்தார். அந்த வீட்டை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சசிகலாவின்
தம்பி திவாகரனின் ஆட்களும் , அவருக்கு துணையாக அரசு அதிகாரிகளும் வந்து
கோயில் நிலத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது என்று கூறி , எனது வீட்டை
இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர்.
இது குறித்து அப்போதே முதல்வரிடம் தபால் மூலம் புகார் கொடுத்தேன். ஆனால்
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது புகார் மீது உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும் ," என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மீது போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் வட்டார
தகவல்கள் தெரிவிக்கின்றது. புகாரில் உண்மை இருப்பின் திவாரகன் கைது உறுதி
என்றும் , புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை எனில் இந்த புகார் வழக்கம்
போல் கிடப்பில் போடப்படும் என்றும் கூறப்படுகின்றது
comments | | Read More...

ரஜினி படத்துக்கு 'ஈக்குவலா'...!! - மறுபடியும் ஆரம்பித்தார் 'டாக்டர்' விஜய்!

கொஞ்ச நாட்களாக கேட்காமலிருந்து 'ரஜினி படத்துக்கு ஈக்குவலா...' என்ற
சுயபுராணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது விஜய் தரப்பு.
எல்லாம், நண்பன் படம் நன்றாகப் போகிறது என்று வரும்செய்திகள் மற்றும்
பேச்சுக்களின் விளைவு!
For free News videos
இதுவரை வந்த விஜய் படங்களிலேயே இதுதான் நல்லாருக்கு என்று பலரும் நண்பன்
படத்தைப் பாராட்டி வருகின்றனர். காரணம்,நிச்சயமாக விஜய் இல்லை!
இது ஷங்கர் என்ற திறமையான இயக்குநரின் கைவண்ணத்துக்கு கிடைத்த பெருமை.
அதுமட்டுமல்ல, இந்தக் கதை அப்படி. இதே படத்தை ஒஸ்தி மாதிரி கூட
பண்ணியிருக்க முடியும். ஆனால் இயக்குநரின் ஆளுமை மிக்க இயக்கமே இந்தப்
படத்தை தூக்கி நிறுத்தியது.விஜய் மட்டுமல்லாமல், சத்யராஜ், சத்யன், ஜீவா,
ஸ்ரீகாந்த் என பெரும் நட்சத்திரக் கூட்டம் இந்தப் படத்தில்
பணியாற்றியிருந்தது.
இந்த நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த, விஜய் மற்றும் அவரது
குழுவினர், நண்பன் படம் ஒரே வாரத்தில் ரஜினியின் எந்திரனை மிஞ்சிவிட்டதாக
தங்களுக்கு ரிப்போர்ட்ஸ் வந்துள்ளதாகவும், அதனை ஆதாரப்பூர்வமாக காட்ட
முடியும் என்றும் கூறினர் (பத்திரிகையில் செய்தியாக வெளியிடலாமே!).
குறிப்பாக விஜய் பேசுகையில், 'இந்தப் படம் ரஜினியின் எந்திரன் பட
வசூலுக்கு ஈக்குவலா வந்துள்ளதாகவும், சில இடங்களில் அதை மிஞ்சியதாகவும்
சொல்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் மண்டைக்குள் ஏற்றிக் கொள்வதா வேண்டாமா
என்று கூடத் தெரியவில்லை,' என்றார், ரொம்ப அடக்கமான பிள்ளை போல!
எந்திரன் படம் தமிழகத்தில் மட்டும் 1000 திரையரங்குகளுக்கு மேல்
வெளியானது. நண்பன் படம் 600 அரங்குகளில் வெளியாகியுள்ளது. உலகமெங்கும்
எந்திரனுக்கு 3000 அரங்குகளில் ரிலீசானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி
மொழி திரையரங்க வெளியீட்டின் மூலம் மட்டுமே எந்திரனுக்கு ரூ 375 கோடி
கிடைத்தது.ஆனால் நண்பன் தமிழில் மட்டுமே வெளியாகியுள்ளது.
முதல் மூன்று நாட்களில் எந்திரன் வசூலித்தது ரூ 62 கோடி. முதல் வாரத்தில்
அது 117 கோடியாக உயர்ந்தது. முதல் வார முடிவில் நண்பன் வசூலித்ததாகக்
கூறப்படுவது ரூ 20 கோடி மட்டும்தான். இந்தப் படம் தினசரி வசூலாக முதல்
மூன்றுநாட்கள் ரூ 4 கோடி வசூலித்தாக பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் கூறுகின்றன.
ச்சும்மா லுலுலாயி...
சில தினங்களுக்கு முன், பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜய்யின்
தந்தையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான எஸ் ஏ
சந்திரசேகரன்,"நாங்கள் அவ்வப்போதுமாபெரும் வசூல், இந்தப் படத்தின் சாதனை
முறியடிப்பு என்றெல்லாம் விளம்பரங்கள் தருவோம், பேட்டி கொடுப்போம்.
அதையெல்லாம் நம்பாதீர்கள். படம் ஓடவேண்டுமே என்பதற்காக நாங்களாகவே
செய்யும் தவறான வேலைஇது. இதை நம்பி அரசு எங்களை வரி கேட்கிறது," என்றார்.
நண்பன் வசூல் பற்றி 'டாக்டர்' விஜய் சொல்வதை எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது!!
Tags: nanban , enthiran , விஜய் , நண்பன்
comments | | Read More...

எம்.எல்.ஏ.,சரத்குமாருக்கு கொலை மிரட்டல் கடிதம்

தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமாருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது
குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி எம்.எல்.ஏ.,வும் ச.ம.க.தலைவருமான சரத்குமாருக்குகொலை மிரட்டல்
விடுக்கப்பட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இக்கடிதம் தென்காசி நகராட்சி
தலைவர் பானுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. கடித்தத்தில் பகவத்கீதை, 786ன்படி
1 லட்சத்து 38 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,ஆனது
வயிற்றெரிச்சலாகஇருக்கிறது. தொகுதி பக்கம் வராமல் கிரிக்கெட்
சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கு எதற்கு எம்.எல்.ஏ.,பதவி. தொகுதி
மேம்பாட்டு நிதி 2 கோடியை பயன்படுத்தாமல்.... கடந்த தி.மு.க.ஆட்சியில்
கட்டப்பட்ட தென்காசிநகராட்சி அலுவலக கட்டட திறப்பு விழாவிற்கு வராமல்
இருப்பதற்குபதவி வேண்டுமா.
சுரண்டையில் உள்ள வீட்டிற்கு பாம் வைக்கப்படும். தொகுதியில் எந்த அரசு
விழாவில் கலந்து கொண்டாலும் கொலை செய்யப்படுவாய். 2012ம் ஆண்டுதான்
இறுதியாண்டு... என்ற ரீதியில் கடுமையான அசிங்கமான, அவதூறான
வார்த்தைகளுடன் கடிதம்எழுதப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் இக்கடிதத்தை எம்.எல்.ஏ.,அலுவலகத்திற்கு அனுப்பி
வைத்தார். எம்.எல்.ஏ.,அலுவலக மேலாளர் கருப்பையா இக்கடிதம் மற்றும்
நடவடிக்கை எடுக்க கோரும் மனுவை எஸ்.பி., தென்காசி டி.எஸ்.பி.,க்குஅனுப்பி
வைத்தார். டி.எஸ்.பி.,தென்காசி போலீசாருக்கு மனுவை அனுப்பி நடவடிக்கை
எடுக்க பரிந்துரை செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன்
வழக்குப்பதிவு செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் விசாரணை நடத்தி
எம்.எல்.ஏ.,விற்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் எழுதிய நபரை தேடி
வருகிறார்.
[
comments | | Read More...

பாட்டியை பார்க்க ரயிலில் தனியாகச் சென்ற 5 வயது சிறுமி

மும்பை புறநகர் பகுதியில் வசிக்கும் தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஐந்து
வயது சிறுமி, தன் பாட்டியை பார்ப்பதற்காக, ரயிலில் தனியாகச் சென்ற
சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை புறநகர் பகுதியான
முலுந்த்தில்உள்ள இந்திரா நகரில் வசிப்பவர் முத்து. தமிழகத்தை பூர்வீகமாக
கொண்டவர். இவரின் ஐந்து வயது மகள் செல்வி. அருகில் உள்ள மழலையர்
பள்ளியில் படித்து வருகிறாள். செல்வியின் பாட்டி, மும்பையின் மற்றொரு
புறநகர் பகுதியான சியோனில் வசித்து வருகிறார். செல்விக்கு பாட்டி மீது
மிகவும் பிரியம். இதனால், தன் தாயாரிடம், பாட்டியை பார்க்க அழைத்துச்
செல்லும்படிவற்புறுத்தினாள். அவரோ காதில் வாங்கவில்லை.
சமீபத்தில், ஒருநாள் பள்ளியில் இருந்து வீடு
திரும்பிய செல்வி, வழக்கம்போல்பாட்டியை பார்க்க அழைத்துச் செல்லும்படி,
தாயாரிடம் வற்புறுத்தினாள். "ஒழுங்காக போய் படிக்கிற வேலையைப் பார்' என,
அவளின் தாயார் கூறி விட்டார். ஆத்திரம் அடைந்த செல்வி, அழுது
கொண்டே,முலுந்த் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றாள். ஏற்கனவே, பாட்டி
வீட்டுக்கு சென்ற அனுபவம் இருந்ததால், அங்கு நின்று கொண்டிருந்த ஒரு
ரயிலில் ஏறி அமர்ந்தாள். ரயில் புறப்பட்டதும், அந்த பெட்டியில் இருந்த
ஒரு பெண், குழந்தை தனியாக இருப்பதை பார்த்து விசாரித்தார். ஆனால், செல்வி
தமிழில் பேசியதால், அந்தபெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. இதைத்
தொடர்ந்து, ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதற்குள், ஐந்து ஸ்டேஷன்களை கடந்து,
ஆறாவதாக உள்ள வித்யவிகார் ரயில்வே ஸ்டேனுக்கு ரயில் வந்து விட்டது.
அங்கிருந்த ரயில்வே போலீசார், சிறுமியைமீண்டும் முலுந்த் ரயில்வே
ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து, அங்கிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதற்குள், செல்விகாணாமல் போன விஷயம் தெரிந்து, அவளின் பெற்றோர் அனைத்து
இடங்களிலும் தேடினர். அப்போது, முலுந்த் ரயில்வே போலீசாரிடம் இருந்து,
அவர்களுக்கு அழைப்பு வந்தது. அவர்கள் அங்கு விரைந்தனர். பெற்றோருக்கு
அறிவுரை கூறிய போலீசார், செல்வியை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
comments | | Read More...

ஆதரவு கொடுத்திட்டாரு கார்த்திக்... இனி அதிமுகவுக்கு அமோக வெற்றிதான்!!

தேர்தல் என்ற சீரியஸான நாடகத்தில் அவ்வப்போது சில சிரிப்பு கேரக்டர்கள்
எட்டிப் பார்த்து காணாமல் போகும்.
அந்தக் கேரக்டர்களில் ஒருவராகிவிட்டார் நடிகர் கார்த்திக். சும்மா
நடிகர்னா கோவிச்சுக்குவார்... நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர்!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்து,
அவர்கள்சீட் எதுவும் தராததால், 'கூட்டணியை' முறித்துக் கொண்டு வெளியில்
வந்தவர் கார்த்திக்.
பின்னர் சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். அவர்கள் என்ன
ஆனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. கார்த்திக்குக்காவது தெரியுமா
தெரியவில்லை.
இந்த நிலையில் வரும்சங்கரன் கோயில் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவுக்கு
ஆதரவு அளிக்கப் போவதாக கார்த்திக் கட்சி அறிவித்துள்ளது. இந்தத்
தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து கார்த்திக் பிரச்சாரம் செய்யப்
போகிறாராம்.
இதுகுறித்து கார்த்திக் கட்சியின் மாநிலத் தலைவர் பாலமுருகன்
கூறுகையில்,"சங்கரன்கோவில் தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சிக்கு கணிசமான
வாக்குகள் உள்ளன. இந்த தொகுதியில் தனித்து போட்டியிட்டபோதே நாங்கள்
10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றோம். கடந்த உள்ளாட்சி
தேர்தலின்போது அ.தி.மு.க.வை ஆதரித்தோம். அதேபோல்சங்கரன் கோவில்
இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் முத்துச்செல்வியை வெற்றிபெற
செய்யவேண்டும் என்று எங்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் கார்த்திக்
தெரிவித்துள்ளார்.
அதன்படி அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம்.
அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக கார்த்திக் பிரசாரம் செய்வார். அவரது
பிரசாரதேதி தேர்தல்தேதி அறிவித்தபிறகு தெரிவிக்கப்படும். அடுத்த
பொதுத்தேர்தலின்போது சங்கரன்கோவில் தொகுதியை பொதுத்தொகுதியாக
மாற்றவேண்டும் என்று வலியுறுத்துவோம்," என்றார்.
Tags: sankaran koil , அதிமுக , கார்த்திக் , சங்கரன் கோயில்
comments | | Read More...

திருமணம் ஆன பிறகும் செக்ஸ் கொடுமை: காதலன் தலையை துண்டித்து ஊர்வலம் சென்ற பெண்

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள அமோகா கிராமத்தைச் சேர்ந்தவர்
ஷியாம்லால் யாதவ். இவர் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார். இருவரும்
பல வருடங்கள் ஜாலியாக இருந்தனர். அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள்
உள்ளனர். கணவர் குழந்தைகளுடன் அமர்கார் கிராமத்தில் வசித்து வந்தாள்.
இதற்கிடையே அவளது கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால்
அவள் 2 குழந்தைகளுடன் அமோகா கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு
திரும்பினாள்.
காதலி மீண்டும் ஊருக்கு வந்ததும் ஷியாம்லால் யாதவ் அவளை சந்தித்து பழைய
உறவை புதுப்பித்துக்கொள்ள முயன்றார். அதற்கு அவள் உடன்படவில்லை.
திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கிறேன். என்னை தொந்தரவு செய்யாதே என்றாள்.
ஆனால் யாதவ் அதை பொருட்படுத்தாமல் செக்ஸ் கொடுமையில் ஈடுபட்டார்.
சம்பவத்தன்று ஷியாம்லால் யாதவ்வயல் வெளியில் தனியாக இருந்த காதலியிடம்
மீண்டும் செக்ஸ் கொடுமையில் ஈடுபட்டார்.
ஆத்திரம் அடைந்த அவள் அரிவாளால் ஷியாம்லால் யாதவ் தலையை வெட்டி
துண்டித்தாள். பின்னர் ரத்தம் சொட்டச்சொட்ட துண்டித்த தலையுடன்
வயல்வெளியில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஊருக்குள் சென்றாள்.
தலைமுடியை பிடித்தவாறு தலையுடன் வருவதைப்பார்த்த ஊர் மக்கள்
திகைத்துப்போய் நின்றார்கள். அவர்களை பொருட்படுத்தாமல் அவள்ஊர் மத்தியில்
உள்ள சிவன் கோவிலுக்கு சென்றாள்.
தலையுடன் கோவிலுக்குள் நுழைய முயன்றபோது பொது மக்கள் அவளை தடுத்து
நிறுத்தினர். பின்னர் போலீசை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
comments | | Read More...

100 கோடியை நோக்கி !:நண்பன்

ஷங்கர் இயக்கத்தில் விஜய் , ஜீவா , ஸ்ரீகாந்த் , சத்யராஜ் , இலியானா ,
சத்யன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி இருக்கும் படம் ' நண்பன் '.
இந்தியில் வரவேற்பை பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் என்பதால்
படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அதனை பூர்த்தி
செய்யும் வகையில் 12ம் தேதியே படத்தினை வெளியிட்டார்கள்.
தமிழகத்தில் மட்டும் 625 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது நண்பன்.
முதல் வாரத்தில் சுமார் 40 கோடியை கல்லா கட்டியிருக்கிறதுநண்பன். படம்
வெளியான முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து திரையரங்குகளிலும் 95%
நிரம்பியதால் எதிர்ப்பார்த்தை விட நல்ல வசூலாம்.
' எந்திரன் ' படத்தினை அடுத்து அதிக திரையரங்குகள் , மக்களிடம்
கிடைத்திருக்கும் வரவேற்பு , கேரளா , வெளிநாட்டு உரிமை , தெலுங்கு
டப்பிங் உரிமை , இசை உரிமை , டிவி உரிமை என அனைத்தையும் கணக்கிட்டால் 100
கோடியை தாண்டுவது உறுதி என்கிறார்கள் தமிழ் திரையுலகில்.
இதுவரை எந்த ஒரு விஜய் படத்திற்கும் கொடுக்காத விலையைகொடுத்து ' நண்பன் '
படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கி இருக்கிறது விஜய் டிவி என்பது
குறிப்பிடத்தக்கது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger