வாஷிங்டன்,செப்.29-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நவம்பர் 6-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவும், எதிர்க்கட்சி சார்பில் மிட் ரோம்னியும் இருக்கிறார்கள். இதுவரையில் நடைபெற்ற முந்தைய கருத்து கணிப்புகளில் ஒபாமாவுக்கு கூடுதல் ஆதரவு இருந்தது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 40 நாட்களே இருக்கின்றன.
இந்நிலையில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று இணையதளம் மூலம் புதிய கருத்து கணிப்பை நடத்தி அதன் முடிவை நேற்று வெளியிட்டது. மொத்தம் 1,194 பேர் கலந்து கொண்டு ஓட்டளித்தனர். அதில் ஒபாமாவுக்கு 49 சதவீதம் ஓட்டுகளும், மிட் ரோம்னிக்கு 42 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.
Post a Comment