News Update :
Powered by Blogger.

ஓட்டு போட்டதும் வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு Vote up to the voters must provide slip Supreme court action

Penulis : Tamil on Tuesday, 8 October 2013 | 23:54

Tuesday, 8 October 2013

ஓட்டு போட்டதும் வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு Vote up to the voters must provide slip Supreme court action

Tamil NewsYesterday,

புதுடெல்லி, அக்.9-

மின்னணு வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் சந்தேகம் இருந்து வந்தது. இது தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கில் அவர், "ஒரு வாக்காளர் தான் விரும்பிய வேட்பாளருக்குத்தான் தனது ஓட்டு மிகச்சரியாக பதிவு ஆகி உள்ளது என்பதை அறிந்து உறுதி செய்து கொள்ளும் வசதியாக வி.வி.பி.ஏ.டி. என்னும் ஒப்புகைச்சீட்டு வழங்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறி இருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் ககோய் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. விசாரணையின்போது, ஏற்கனவே வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையை நாகலாந்து மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது அமல்படுத்தியதாகவும், அது வெற்றிகரமாகவும், திருப்திகரமாகவும் அமைந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

நிர்வாக காரணங்களையும், நிதி ஒதுக்கீடு காரணங்களையும் சுட்டிக்காட்டிய தேர்தல் கமிஷன், இந்த ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையினை படிப்படியாக அறிமுகம் செய்யலாம் என கூறியது. நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கு 13 லட்சம் வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் தேவைப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின்போது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்கு எந்திரத்துடன் வி.வி.பி.ஏ.டி. சாதனத்தை பொருத்துவதற்கு உத்தேசமாக ரூ.1,500 கோடி செலவாகும் என தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டில் கூறியது. 13 லட்சம் எந்திரங்களை தயாரித்து அளிக்கிற தகுதி பாரத மின்னணு நிறுவனம் (பிஇஎல்) மற்றும் இந்திய மின்னணு கழகத்துக்கு (இசிஐஎல்) உண்டு என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் ககோய் ஆகியோர் தங்களது தீர்ப்பினை வழங்கினர். தீர்ப்பில், அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் பயன்படுத்துவதற்கு வசதியாக ஓட்டு போட்டதும் வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையினை (ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்ததும் வருவது போன்று) படிப்படியாக அறிமுகம் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் பொருத்துவதற்கு தேவையான நிதி உதவியை தேர்தல் கமிஷனுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். இந்த முறையை அமல்படுத்துவதின்மூலம், சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை உறுதிப்படுத்த முடியும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒவ்வொரு வாக்காளரும் மின்னணு வாக்கு எந்திரத்தில் ஓட்டுப்பதிவு செய்த சில வினாடி களில், அத்துடன் பொருத்தப்படுகிற வி.வி.பி.ஏ.டி. எந்திரம் மூலம் ஒப்புகைச்சீட்டு கிடைத்துவிடும்.

அதைப் பார்த்து அவர் தான் விரும்பிய வேட்பாளருக்குத்தான் தனது ஓட்டு பதிவாகி உள்ளது என உறுதி செய்துகொள்ள முடியும் என்பதோடு, மின்னணு வாக்கு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சிகள் குறை கூறுவதற்கும் வழியில்லாமல் போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டுப்பதிவு செய்த வாக்காளர் இந்த ஒப்புகைச்சீட்டை கையில் எடுத்துக்கொண்டு வர முடியாது, வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்படுகிற பெட்டியில் போட்டு விட்டு வந்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link

comments | | Read More...

தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: பொதுநல வழக்கு Sri Lankan Tamil refugees Should provide Indian citizenship living in Tamil Nadu

தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: பொதுநல வழக்கு Sri Lankan Tamil refugees Should provide Indian citizenship living in Tamil Nadu

Tamil NewsYesterday, 05:30

சென்னை, அக்.9-

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பி.அருள்மொழிமாறன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்திய பாராளுமன்றத்தில், 1983-ம் ஆண்டு சட்டவிரோத குடியேற்ற சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சட்டம் முழுவதும் சட்டவிரோதமானது. எனவே அந்த சட்டத்தை ரத்து செய்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு 12-7-2005 அன்று தீர்ப்பளித்துள்ளது.

பூடான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு குடியேறிய 'சக்காஷ்' என்ற இனத்தை சேர்ந்த 65 ஆயிரம் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சக்காஷ் இன மக்களுக்கு குடியுரிமை வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு லட்சம் இலங்கை தமிழ் அகதிகள் வாழ்கின்றனர். அதில் 70 ஆயிரம் பேர் 115 அகதிகள் முகாம்களிலும், 35 ஆயிரம் பேர் வெளியிலும் வசிக்கின்றனர். இவர்களும், சக்காஷ் இன மக்களை போல், 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் வாழ்கின்றனர்.

ஓரு மனிதனின் ஆயுள்காலம் சுமார் 60 அல்லது 70 ஆண்டுகள் ஆகும். அதில், 30 ஆண்டுகளுக்கு மேல் குடியுரிமை இல்லாமல் வாழ்வது என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மனித தன்மைக்கு எதிரானது.

தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
...
Show commentsOpen link

comments | | Read More...

2013 ம் ஆண்டிற்கான இயற்பியல் துறை நோபல் பரிசு: பிரிட்டன், பெல்ஜியம் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது Peter Higgs Francois Englert win 2013 Nobel physics prize

2013 ம் ஆண்டிற்கான இயற்பியல் துறை நோபல் பரிசு: பிரிட்டன், பெல்ஜியம் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது Peter Higgs Francois Englert win 2013 Nobel physics prize

Tamil NewsYesterday,

ஸ்டாக்ஹோம், அக். 8-

உலகின் மிகப்பெரிய பரிசான நோபல் பரிசு சமூக, அறிவியல் சேவைகளில் ஈடுபட்டோருக்காக ஆண்டுதோறும் நார்வே, சுவீடன் நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசுக்கு நேற்று அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் ராத்மேன், ராண்டி ஷேக்மேன் மற்றும் ஜெர்மனியின் தாமஸ் சுடாப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது.

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டன. இதில் பெல்ஜியத்தின் இயற்பியல் விஞ்ஞானி பிராங்காய்ஸ் எங்லெர்டும், பிரிட்டன் விஞ்ஞானி பீட்டர் ஹிக்சும் இப்பரிசை கூட்டாக பெறுகின்றனர் என்று ராயல் சுவீடிஸ் அறிவியல் அகாடமி அறிவித்துள்ளது.

இந்த இரு விஞ்ஞானிகளும்  இணை அணுத் துகள்கள் நிறையின் தோற்றம் குறித்த தத்துவார்த்த கண்டுபிடிப்புகளுகாக இது வழங்கப்படுகிறது.

...
Show commentsOpen link

comments | | Read More...

ஷங்கரின் முதல்வன் படத்தில் ரஜினிகாந்த் muthalvan Part 2 with rajinikanth

ஷங்கரின் முதல்வன் படத்தில் ரஜினிகாந்த்

by admin
TamilSpyToday,

ஷங்கரின் முதல்வன் படத்தில் ரஜினிகாந்த் அல்லது விஜய் நடித்திருக்க வேண்டியது என்று இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் முதல்வன்.

அந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கே.வி. ஆனந்த். ஒளிப்பதிவாளரான அவர் தற்போது இயக்குனராக உள்ளார்.

கனா கண்டேன் படத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்த அவர் தற்போது தனுஷை வைத்து அனேகன் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அவர் முதல்வன் படம் குறித்து ட்விட்டரில் சுவாரய்ஸமான தகவலை அளித்துள்ளார்.

சன் டிவியில் முதல்வன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த படத்தின் படப்பிடிப்புக்கு செல்லும்போது எல்லாம் போருக்கு செல்வது போன்று இருந்தது.

மவுண்ட் ரோட்டில், பேருந்து மேல் இருந்து, மக்கள் கூட்டத்தில் ஷூட்டிங் எடுத்தோம் என்று கே. வி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.

அழகான ராட்சசி முதல்வன் படத்தில் ஷங்கர், சுஜாதா, ஏ.ஆர். ரஹ்மான், வி.டி. விஜயன், தோட்டா தரணி, கனல் கண்ணன் என்று ஒரு பிராமதமான டீம் இருந்தை மறக்கவே முடியாது.

அழகான ராட்சசியே பாடலை 15 நாட்களிலும், முதல்வனே பாடலை 6 நாட்களிலும் படமாக்கினோம் என்றார் ஆனந்த்.

அனைத்து உதவி இயக்குனர்கள் மற்றும் எனது உதவியாளர்களுக்கு ஹேட்ஸ் ஆஃப் என்று தெரிவித்துள்ளார் ஆனந்த்.

ரஜினி, விஜய் அர்ஜுன் கதாபாத்திரத்தில் ரஜினி சார் அல்லது விஜய் நடித்திருக்க வேண்டியது.

ஆனால் அவர்கள் ஏனோ சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Show commentsOpen link

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger