News Update :
Powered by Blogger.

கொடிகட்டிப் பறக்கும் சதை வியாபாரம்!

Penulis : karthik on Thursday, 19 July 2012 | 22:56

Thursday, 19 July 2012





இறந்த பின்னர் மனித உடலுக்கு மதிப்பில்லை எல்லாம் ஒரு பிடி சாம்பலில் முடிந்து விடும் என்று சித்தர்களும், ஞானிகளும் சொல்லி வந்தனர். இப்பொழுது அந்த வார்த்தையை அப்படியே மறந்து விட வேண்டியதுதான். மனித உடல் பல கோடி ரூபாய் பெறுமானமுடையதாக இருக்கிறது.

இறந்த பின்னர் மனிதனின், தோலும், எலும்புகளும் களவாடப்படுகின்றனவாம். எலும்புக� �ையும், தோலினையும் வைத்து உறுப்பு மாற்று சிகிச்சை செய்யவும், பற்களுக்கும் பயன்படுத்துகின்றனராம். அதற்கு அந்த நோயாளியின் அனுமதியை பெறுவதில்லை என்று அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினை கண்டறி� ��்து வெளியிட்டுள்ளனர் ஐசிஐஜெ எனப்படும் (International Consortium of Investigative Journalists) சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள். இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் அபாய மணியை ஒலிக்கவிட்டிருக்கிறது

உலகம் முழுவதும் மனித உடல் உறுப்புக்களை திருடி கள்ளச்சந்தையில் விற்று பணம் பார்க்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. எட்டு மாதங்களாக 11 நாடுகளுக்கு பயணம் செய்த புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் மனித உறுப்புக்களை திருடும் கும்பலைப்பற்றியும், அதை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்களைப் பற்றியும் எழுதியுள்ளனர்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இதுபோன்ற இறந்த மனிதர்களின் தசை, எலும்புகளை புதிதாக பயன்படுத்துவதன் மூலம் ஆபத்து அதிகம் இருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், ஹெச் ஐ வி மற்றும் உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் தோலும், எலும்பும் திருடப்பட்டு உயிரோடு இருப்பவர்களுக்கு பயன்படுத்தும் போது அதுவே ஆபத்தாகிவிடும் என்கின்றனர்.

இறந்துபோன மனித உடலில் இருந்து தசைகளையும், தோலினையும் எடுப்பது அவர்களின் உறவினர்களிடையே கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகிவிடுகிறது. இதுபோன்ற மனித உறுப்புகளை திருடி வ� ��ற்பனை செய்யும் கும்பல் பற்றி ஸ்கார்ட் கார்னி என்னும் எழுத்தாளர் 'ரெட் மார்க்கெட்' என்னும் நூலில் ஆய்வு செய்து எழுதியுள்ளார்.

உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் இதயம் இல்லா பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது தி ரெட் மார்க்கெட். (The Red Market).

உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு.

ஒவ்வொரு நாட்டின் காகிதச் சட்டமும் இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி, பாதுகாப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் தானம் செய்ய மக்களை அனுமதிக்கின்றது. ஆனால் ஸ்கார்ட் கார்னி இந்தப் புத்தகத்தினூடே பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்தந்த நாடுகளில் உடல் உறுப்பு சம்பந்தமான திருட்டு, விற்பனை, அதில் கொள்ளை இலாபம் பார்க்கும் ஏஜெண்டுகள், கண்டுகொள்ளாமல் விடும் அரசுகள் என சகலத்தையும் போட்டு உடைக்கிறார்.

உலகம் முழுவதும் பல பணக்கார நாடுகளின் உடற் தேவைகளை அதாவது ரத்தம் முதல் எலும்பு, தசை, கிட்னி, கண், பெண்ணின் கரு முட்டை, தலைமுடி வரை தேவைப்படும் அனைத்தையும் ஈடு செய்வது மூன்றாம் � �லக நாடுகளின் மக்கள் தான், குறிப்பாக இந்தியா. அதோடு இலவசச் சேவையாக பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சோதனை எலிகளாகவும் இருக்கிறார்கள் இந்திய மக்கள்.

'தேவைப்படுபவர் வாங்குகிறார், இருப்பவர் விற்கிறார்' என்ற சராசரி சந்தைப் பொரு� �ாக நம் உடல் உறுப்புக்களைப் பார்க்க முடியாது. உயிருக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு உடல் உறுப்புகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. பணத்தின் முன் ஒரு ஏழையின் உடல் என்பது ரத்தமும் தசையுமான விற்பனைப் பண்டம்.

அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயிலத் தேவைப்படும் மனித எலும்பு மாதிரிகள் முழுக்கவும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றனவாம். சுடுகாடுகளில், புதைக்க� ��்படும், எரிக்கப்படும் பிணங்களை திருடி பிணத்திலிருந்து பதப்படுத்தி எலும்புகளை மட்டும் எடுப்பார்கள். அந்த பதப்படுத்தும் முறை கொடூரமாக இருக்கும். பின்பு எலும்புகளை சுத்தமாக பாலிஷ் செய்து பேக்கிங் செய்து விடுவார்கள்.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடுமையான சட்டங்கள் வந்து விட்டன. அமெரிக்காவில் தான் இந்தச் சட்டம் கடுமையானது, அதே அமெரிக்க அரசு இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனித உறுப்புகளைக் கண்டுகொள்வதில்லை. இந்த எலும்புத் தொழிற்சாலைகள் நேர்த்தியான கார்ப்பரேட்டுகளாக இயங்குகின்றன.

"மூன்றாம் உலக நாடுகளின் உயிர்கள் எப்பொழுதும் மலிவானவை. இதுதான் காலனியச் சிந்தனை". அதை நிரூபிக்கும் அனைத்து ஆதாரங்களையும் தன் புத்தகத்தில் அனைவருக்கும் எளிதாகப் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார். இதற்காக நாடு நாடாக, பல ஊர்கள் சுற்றி உடல் உறுப்புகள் பற்றிய சந்தையைப் பற்றி தகவல்கள் திரட்டி நெற்றிப்பொட்டில் அடிப்பது போல் முன்வைக்கிறார் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னி

உடல் விற்பனை என்பது, குழந்தைகள் கடத்தல், பெண்கள் விற்பனை, பெண்களின் கரு முட்டை விற்பனை, இரத்தம், கிட்னி, இதயம் உள்ளிட்ட இதர உடல் உறுப்புக்கள், இறந்தவர்களின் தோல், எலும்பு, வாடகைத் தா� �் முதல் திருப்பதியில் இருந்து ஏற்றுமதி ஆகும் தலை முடி வரை அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் கோடி ரூபாய் பெறுமானமுள்ளவர்கள்தான். இனிமேல் யாரையாவது திட்டும்போது பைசா பெறாதவனே என்று திட்டாதீர்கள் புரிகிறதா?








comments | | Read More...

லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?





லண்டன் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவில் இ� ��ுந்து 58 வீரர்களும், 23 வீராங்கனைகளும் உட்பட மொத்தம் 81 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் இந்தியாவில் இருந்து 13 விளையாட்டு போட்டிகளில் 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 58 வீரர்கள் � �ற்றும் 23 வீராங்கனைகள்.

அவர்களுடன் 54 உதவி பணியாளர்கள், 10 அரசு விளம்பர அதிகாரிகள், 7 ராணுவ அதிகாரிகள் மற்றும் 12 விளையாட்டு வாரிய அதிகாரிகள் உட்பட மொத்தம் 164 பேர் ஒலிம்பிக் போட்டிக்காக லண்டன் புறப்பட்ட� � செல்ல உள்ளனர். லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய அணி ராணுவ வீரர் அஜீத் பால் சிங்கின் தலைமையில் லண்டன் செல்கிறது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள வீரர்கள்,

வீராங்கனைகள் விபரம் வருமாறு:

தடகளம்:

பெண்களுக்கான வட்டு ஏறிதல் - சீமா அந்தில்
பெண்களுக்கான வட்டு ஏறிதல் - கிருஷ்ண பூனியா
ஆண்களுக்கான வட்டு ஏறிதல் - விகாஸ் கவுடா
பெண்களுக்கான ஓட்டபந்தயம்(800 மீ்ட்டர்) - டின்டு லுகா
மாரத்தான் ஓட்டம்- ராம் சிங் யாதவ்
பெண்களுக்கான தத்தி தாண்டுதல் - மையோகா ஜானி
ஆண்களுக்கான தத்தி தாவுதல் - ரஞ்சித் மகேஸ்வரி
ஆண்களுக்கான குண்டெறிதல் - ஓம் பிரகாஷ் கர்ஹனா
ஆண்களுக்கான நடை (20 கி.மீ) - பாபுபாய் பானோச்சா
ஆண்களுக்கான நடை (20 கி.மீ) - கிர்மீத் சிங்

வில்வித்தை:

பெண்களுக்கான ரிகர்வ் - லைஷ்ராம் பம்பாய்ல தேவி
பெண்களுக்கான ரிகர்வ் - தீபிகா குமாரி
பெண்களுக்கான ரிகர்வ் - சிக்ரோவோலு ஸ்ரோ
ஆண்களுக்காக ரிகர்வ் - ஜெயந்தா தாலுக்தார்
ஆண்களுக்காக ரிகர்வ் - ராகுல் பானர்ஜி
ஆண்களுக்காக ரிகர்வ் - திருந்தீப் ராய்

குத்துச்சண்டை:

ஆண்கள்:

49 கிலோ பிரிவு - தேவிந்திரோ சிங்
56 கிலோ பிரிவு - சிவ தபா
60 கிலோ பிரிவு - ஜெய் பகவான்
64 கிலோ பிரிவு - மனோஜ் குமார்
69 கிலோ பிரிவு - விகாஸ் கிருஷ்ணன்
75 கிலோ பிரிவு - விரேந்தர் சிங்
81 கிலோ பிரிவு - சுமித் சங்வன்

பெண்கள்:

51 கிலோ பிரிவு - மேரி காம்

பாட்மிண்டன்:

பெண்கள் ஒற்றையர் பிரிவு - சாய்னா நேவால்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு - பருபள்ளி கஸ்யப்
கலப்பு இரட்டையர் பிரிவு - ஜூவாலா குட்டா மற்றும் வி.டிஜூ
பெண்கள் இரட்டையர் பிரிவு - ஜூவாலா குட்டா மற்றும் அஸ்வினி பொன்னப்பா

ஜூடோ:

பெண்களுக்கான 63 கிலோ பிரிவு - கிரிமா செளத்ரி

துப்பாக்கி சுடுதல்:

ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபில் - அபினவ் பிந்த்ரா
ஆண்க� �ுக்கான 10 மற்றும் 50 மீ் ஏர் ரைபில் (3 நிலைகள்) - ககன் நாரங்
டபுல் டிராப் - ரோஜன் சிங் சோதி
ஆண்களுக்கான டிராப் - மனவ்ஜித் சிங் சாது
ஆண்களுக்கான 25 மீ்ட்டர் ரேபிட் பையர் பிஸ்டல் வினய் குமார்
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபில் (3 நிலைகள்) - சஞ்சீவ் ராஜ்புட்
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபில் பிரோன் - ஜாய்தீப் கர்மகர்
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் - ஹீனா சித்து
பெண்களுக்கான 10 மீ் ஏர் பிஸ்டல், 25 மீ ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் - அனு ராஜ் சிங்
பெண்களுக்கான டிராப் - ஷாகன் செளத்ரி
25 மீ்ட்டர் பிஸ்டல் - ரஹி சர்னோபத்

நீச்சல்:

ஆண்களுக்கான 1,500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் - உலால்மத் ககன்

டென்னிஸ்:

ஆண்களுக்கான ஒற்றையர் - சோம்தேவ் தேவ்வர்மன்
ஆண்களுக்கான இரட்டையர் - மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா
ஆண்களுக்கான இரட்டையர் - லியாண்டர் பயஸ், விஷ்ணுவர்தன்
பெண்களுக்கான இரட்டையர் - ருஸ்மி சக்ரவர்த்தி, சானியா மிர்ஸா
கலப்பு இரட்டையர் - லியாண்டர் பயஸ், சானியா மிர்சா

டெபிள் டென்னிஸ்:

ஆண்கள் ஒற்றையர் -: செளமியாஜித் கோஷ்
பெண்கள் ஒற்றையர் -: அங்கிதா தாஸ்

படகுப் போட்டி:

ஒற்றை துடுப்பு - ஸ்வான் சிங் விரிக்
எடை குறைந்த இரட்டை துடுப்பு - சந்தீப் குமார், மனஜீத் சிங்

மல்யுத்தம்:

ஆண்கள்:

60 கிலோ பிரிவு - யோகேஷ்வர் தத்
60 கிலோ பிரிவு - அமித் குமார்
66 கிலோ பிரிவு - சுசில் குமார்

பெண்கள்:

55 கிலோ பிரிவு - கீதா குமார் போகத்
74 கிலோ பிரிவு - நார்சிங் யாதவ்

பளு தூக்குதல்:

பெண்களுக்கான 48 கிலோ பிரிவு - சோனியா சானு
ஆண்களுக்க ான 69 கிலோ பிரிவு - ரவி குமார்

ஹாக்கி:

ஆண்கள் அணி: பாரத் செட்ரி (கேப்டன் மற்றும் கோல் கீப்பர்), சர்தார் சிங்(துணை கே� ��்டன்), ஸ்ரீஜிஸ் (கோல் கீப்பர்), சந்தீப் சிங், ரகுநாத், இக்னஸ் டிர்கி, மன்பிரீத் சிங், பிரிந்த்ரா லக்ரா, குர ்பாஜ் சிங், சோமர்பேட் சுனில், டானீஷ் முஜ்தபா, சிவிந்தர சிங், துஷார் காந்த்கர், குர்வீந்தர் சிங் சந்தி, தரும்வீர் சிங், உத்தப்பா, சர்வன்ஜித் சிங்(ரிசர்வ்), கோதஜித் சிங்(ரிசர்வ்)







comments | | Read More...

ஜனாதிபதி தேர்தல் இன்று வாக்குப்பதிவு




தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரதீபா பட்டீலின் பதவி காலம் முடிவடைய இருப்பதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க இன்று (வியாழக்கிழமை) தேர் தல் நடைபெறுகிறது. இது 14-வது ஜனாதிபதி தேர்தல் ஆகும். 

இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில், முன்னாள் மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். முலாயம் சிங்கின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் பா� �தீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட பல கட்சிகள் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. 

அவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். அவருக்கு அ.தி.� �ு.க., பிஜு ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளிக்கின்றன. இந்த தேர்தலில் பாராளுமன்ற இரு சபைகளின் உறுப்பினர்களான எம்.பி.க்கள் 776 பேர் மற்றும் மாநில சட்டசபைகளின் உறுப்பினர்களான 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிக்க இருக்கிறார்கள். இவர்கள் போடும் ஓட்டுகளின் மொத்த மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரம் ஆகும். 

பாராளுமன்ற இரு சபைகளின் உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் உள்ள 63-வது அறையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு அளிப்பார்கள். எம்.எல்.ஏ.க்கள் அந்தந்த மாநில சட்டசபைகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்போடுவார்கள். எம்.பி.க்கள் விரும்பினால், தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதி பெற்று சொந்த மாநிலத்திலேயே ஓட்டுப்போடலாம்.&nb sp;

டெல்லி மேல்-சபை பொதுச் செயலாளரும், ஜனாதிபதி தேர்தல் அதிகாரியுமான வி.கே.அக்னிஹோத்ரி நேற்று டெல்லியில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்: 

ஜனாதிபத� �� தேர்தலில் வாக்களிக்க இருக்கும் அனைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், ஓட்டுப்போட வரும்போது அவர்கள் அந்த கடிதத்தை கொண்டு வரவேண்டும் என்றும், ஒட்டுப்போடுவதற்கு முன்பு அவர்கள் தங்கள் அடையாள அட்டையையோ அல்லது அந்த கடிதத்தையோ காட்ட வேண்டும் என்றும் கூறினார். 

பல்வ� ��று மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட 77 எம்.பி.க்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இதேபோல் 7 மாநிலங்களைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களுக்கு பாராளுமன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை கோட்டையில் நடைபெறுகிறது.  ;

இதற்காக சட்டசபை குழு கூட்ட அரங்கில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருக்கிறது. 234 எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஓட்டுப்பெட்டி டெல்லியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தது. வாக்குச்சீட்டுகளும் தயார் நிலையி ல் உள்ளன. அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோட்டையில் பத்திரமாக வைக்கப்பட்டு இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது என்பது குறித்த விளக்க குறிப்புகள் கடந்த சனிக்கிழமை மாலை அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பப்பட்டன. 

ஜனாதிபதி தேர்தலை நடத்த செய்யப்பட்டுள்ள ஏற்� ��ாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பொதுத்துறை செயலாளர் குமார் ஜெயந்த், பொதுப்பணித்துறை செயலாளர் எம்.சாய்குமார் ஆகியோருடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக மத்திய தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் தமிழகத்திற்கு மத்திய அரசின் ஜவுளித்துறை இண ைச்செயலாளர் சுஜித் குலாட்டி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

நேற்று மாலை சென்னை வந்த அவர் கோட்டையில், ஜனாதிபதி தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சட்டசபை குழு கூட்ட அரங� �கில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியின் முன்பும், வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டு உள்ள அறையின் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை உணவு இடைவேளை இன்றி வாக்குப்பதிவு நடைபெறும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் உள்பட 234 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப்போடுகிறார்கள். 

இவர்கள் தவிர, சென்னையில் ஓட்டுப்போட தேர்தல் ஆணையத்திடம் முன்அனுமதி பெற்றுள்ள 10 பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களும், 5 டெல்லி மேல்-சபை உறுப்பினர்களும் ஆக மொத்தம் 15 எம்.பி.க்களும் கோட்டை வாக்குச்சாவடியிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்கிறார்கள். வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. வ� �க்குச்சாவடியின் உள்ளே செல்போன், கார்டுலெஸ் போன், வயர்லெஸ் கொண்டு செல்ல அனுமதி இல்லை. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பத்திரிகை போட்டோகிராபர்கள் மற்றும் டி.வி. கேமராமேன்கள் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வாக்குச்சாவடி பகுதியை படம் பிடிக்க பகுதி பகுதியாக அனுமதிக்கப்படுவார்கள். 

வாக்குப்பதிவு தொடங்கிய பின்னர் அவர்கள் யாரும் வாக்குச்சாவடியின் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஓட்டுப்பெட்டி கோட்டையிலேயே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்படும். நாளை (வெள்ளிக்கிழமை) ஓட்டுப்பெட்டியை தம� �ழக சட்டசபை செயலாளரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஏ.எம்.பி.ஜமாலுதீன், மற்றொரு உதவி தேர்தல் அதிகாரி கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் விமானத்தில் பாதுகாப்புடன் எடுத்துச்சென்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள். 

ஓட்டு எண்ணிக்கை 22-ந் தேதி நடைபெறுக ிறது. இதேபோல், மற்ற மாநிலங்களில் பதிவாகும் வாக்குகளும் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்படும். ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை எண்ணப்படும். அன்று மாலைக்குள் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும். இந்த தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு அதிக ஆத� �வு இருப்பதால், அவருக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.









comments | | Read More...

பிரதமர் பொறுப்பை ஏற்க தயார்: ராகுல்காந்தி அறிவிப்பு




விலைவாசி உயர்வு, ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. இந்த ந� ��லையில் உலகின் பல நாட்டு பத்திரிகைகள் பிரதமர் மன்மோகன்சிங்கை கேலி செய்து கட்டுரைகள் வெளியிட்டப்படி உள்ளன. 

இதனால் கட்சியிலும், ஆட்சியிலும் பெரிய அளவில் சீரமைப்பு செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக் வ ிஜய்சிங், சல்மான் குர்ஷித் இருவரும் ராகுல் காந்தி விரைவில் முக்கிய பதவி ஏற்பார் என்று கடந்த சில தினங்களாக கூறி வருகிறார்கள். 

அடுத்த பிரதமர் மன்மோகன் சிங் இல்லை. ராகுல்தான் என்றும் அவர்கள் சூசகமாக தெரிவித்தனர். ராகுல் தீவிரமாக கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்று பல்வேறு தர� ��்பிலும் வலியுறுத்தப்பட்டது. எனவே ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இதுபற்றி சோனியா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ராகுல்காந்தி பெரிய பொறுப்புக்கு வருவது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அவர் சார்பில் வேறு யாரும் அதை தீர்மானிக்க முடியாது என்றார். 

இந்த நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராகுல்காந்தி கட்சியிலும் ஆட்சியிலும் பெரிய பொறுப்பை ஏற்க தயார் என்று சூசகமாக தெரிவித்தார். இது தொடர்பாக மவுனத்தை கலைத்த அவர் கூறுகையில், பெரிய பொறுப்பை ஏற்பது பற்றி முடிவு எடுத்து வி ட்டேன். ஆனால் அந்த பொறுப்பில் எப்போது இருந்து செயல்பட தொடங்க வேண்டும் என்ற நேரத்தை மேலிட தலைவர்கள்தான் தீர்மானித்து சொல்ல வேண்டும் என்றார். 

இதன் மூலம் காங்கிரஸ் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு ராகுல்காந்தி வரப்போவது இன்று உறுதியாகி விட்டது. இன்னும் ஓரிரு மாதங்களில் ராகுல் காந்தி பெரிய பொறுப்புக்கு வருவார் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

ராகுலுக்காக செய்யப்படும் மாற்றங்கள் காங்கிரஸ் கட்சியில் மட்டுமின்றி இந்திய அரசியல் களத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.









comments | | Read More...

அஜித் பாராட்டிய ஈ !






இப்போதெல்லாம்  'நான் ஈ' படத்தின் இயக்குனர் ராஜமெளலியை போனில் யாராவது அழைத்தால், பல நேரங்களில் அவரது எண் பிஸியாக இருக்கிறது.

காரணம் ஒட்டுமொத்த தென்னந்திய திரையுலகமும் படத்தினை பார்த்து விட்டு அவரது எண்ணை தொடர்பு கொண்டு அழைத்து புகழ்ந்து தள்ளுகிறார்களாம்.

பிரபாஸ், மகேஷ், ரவிதேஜா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, சித்தார்த், ராணா, விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், ரஜினி, இயக்குனர்கள் ராம் கோபால் வர்மா, விநாயக், பூரி ஜெகந்நாத், ஹரிஸ் சங்கர், க்ரிஷ், பிரகாஷ் ராஜ், நந்தினி, லிங்குசாமிஷங்கர் � ��ார் என அனைவருமே படம் பார்த்துவிட்டு ராஜமெளலியை தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறார்கள்.

தற்போது அந்த வரிசையில் இன்னொரு ஸ்டாரும் சேர்ந்திருக்கிறார். அவர் அஜீத். தமிழ்நாட்டில் ' நான் ஈ ' படம் பட்டிதொட்டியும் எங்கும் ஹிட்டடித்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், அஜீத்தின் பாராட்டு ராஜமௌலிக்கு மேலும் தெம்பூட்டியிருக்கிறதாம்.

'நான் ஈ' படத்தினை பார்த்த அஜீத், இயக்குனர் ராஜமெளலியை தொடர்பு கொண்டு புகழ்ந்து தள்ளி விட்டாராம்.

தமிழில் இந்த கிராஃபிக்ஸ் ஈ வரவேற்பைப் பெற்றிருப்பதால், அடுத்த படம், அநேகமாக நேரடித் தமிழ் படமாக இருக்கலாம் என்கிறது கோலிவுட் தகவல். படத்தின் நாயகன்? 'நான் ஈஇசையை வெளியிட்டாரே அவர் தானாம்.!







comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger