News Update :
Powered by Blogger.

கணவனை வெட்டி கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூடமாக மாற்றிய மனைவி

Penulis : karthik on Tuesday, 31 July 2012 | 23:48

Tuesday, 31 July 2012





வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பசுமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்டர் (60), கூலி வேலை செய்து வந்தார். கொசவன் புதூரை சேர்ந்த ராசி என்பவரை முதலாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 

விக்டர் உமா (50), என்பவரை 2-வது திருமணம் செய்து பசுமாத்தூரில் வசித ்து வந்தார். உமாவுக்கு சந்திரன் என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். 

விக்டருக்கு உமாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 25-ந் தேதி முதல் விக்டர் மாயமானார். அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். 

இந்தத நிலையில் விக்டரை அவரது மனைவி உமா கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் உமாவிடம் விசாரணை நடத்தினார். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. 

சம்பவத்தன்று விக்டர் உமா இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விக்டர் கத்தியால் உமாவை வெட்ட பாய்ந்தார். சுதாரித்து க� �ண்ட உமா கத்தியை அவரிடம் இருந்து பறித்து விக்டரை வெட்டி சாய்த்தார். 

ரத்த வெள்ளத்தில் விழுந்த விக்டர் துடிதுடித்து இறந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் நடந்த இந்த கோர சம்பவத்தை மூடி மறைக்க உமா திட்டமிட்டார். வீட்டின் அருகில் இரவோடு இரவாக குழிதோண்டினார். அதில் விக்டரின் பிணத்தை தூக்கி போட்டு புதைத்தார். 

காலையில் எதுவும் நடக்காததுபோல வழக்கமான வேலைகளை செய்துள்ளார். பிணம் புதைக்கப்பட்ட இடத்தை யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க கட்டுக்கல் வைத்து அடுப்பு அமைத்தார். அதில் சமையல் வேலைகளை செய்து சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார். 

இந்த தகவலை பெற்றுக்கொண்ட போலீசார் விக்டர் கொலை தொடர்பாக உமாவின் மகன் சந்திரனிடம் விசாரணையை தொடங்கி உள்ள� ��ர். 

கணவனை மனைவியே புதைத்த இடத்தில் சமையல் கூடம் அமைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








comments | | Read More...

கோஹ்லி 128, ரெய்னா 58 விளாசல் தொடரை வென்றது இந்தியா





இலங்கையுடனான 4வது ஒருநாள் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3,1 என முன்னிலை பெற்றதுடன் தொடரை கைப்பற்றி அசத்தியது. அபாரமாக விளையாடிய கோஹ்லி 128 ரன் விளாசினார். கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று பகல்/ இரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக தில்ஷன், தரங்கா கள மிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்தனர். தில்ஷன் 42, தரங்கா 51 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். திரிமன்னே , சண்டிமால் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தது. சண்டிமால் 28, கேப்டன் ஜெயவர்தனே 3, மேத்யூஸ் 14, ஜீவன் மெண்டிஸ் 17 ரன்எடுத்து மனோஜ் திவாரி சுழலில் வெளியேறினர்.

பெரேரா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய திரிமன்னே 47 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்� ��ுக்கு 251 ரன் எடுத்தது. ஹெராத் 17, மலிங்கா 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் மனோஜ் திவாரி 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அஷ்வின் 2, சேவக், டிண்டா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 50 ஓவரில் 252 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. முதல் ஓவரிலேயே கம்பீர் டக் அவுட் ஆகி வெளியேற, இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. � �ேவக் 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் 4, திவாரி 21 ரன்னில் வெளியேறினர்.

இதை தொடர்ந்து கோஹ்லி , ரெய்னா ஜோடி 5வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி ரன் சேர்த்தது. கோஹ்லி 128 ரன் (13வது சதம்), ரெய்னா 58 ரன் விளாசினர். இந்தியா 42.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்து வென்றது. கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 3,1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், சம்பிரதாயமான கடைசி போட்டி 4ம் தேதி நடக்கிறது.







comments | | Read More...

மதுரையில் மயக்க ஊசி போட்டு மாணவியை கற்பழிக்க முயன்ற டாக்டர் கைது





மதுரையை அடுத்த கரிசல்பட்டியை சேர்ந்தவர் மேரி (வயது 16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிளஸ்-2 மாணவியான இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையட ுத்து அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோர் மேரியை மதுரை, சொக்கலிங்கம் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு கடந்த 2 நாட்களாக மேரிக்கு ஊசி மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டன.
 
இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சைக்கு வந்த மேரிக்கு அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் சங்கரநாராயணன் ஊசி போட்டார். இதனால் மயக்கம் ஏற்படும் என்பதால் அங்குள்ள ஒரு அறையில் சிறிது நேரம் தங்கிவிட்டு செல்லும்படி டாக்டர் கூறினாராம். அதன்படி மேரியை ஒரு அறை கட்டிலில் ஓய்வெடுக்கும்படி கூறிவிட்டு அவரது சகோதரியும், மாமாவும் பழங்கள் வாங்க வெளியே சென்றனர்.  
 
அப்போது மேரி இருந்த அறைக்கு வந்த டாக்டர் சங்கரநாராயணன் அவரை கற்பழிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கூச்சல் போட்ட மேரி அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். கடைக்கு சென்ற அவரது சகோதரியும், மாமாவும் திரும்பி வந்த நிலையில் நட� �்த சம்பவம் குறித்து அறிந்த அவர்களும் ஆத்திரம் அடைந்து சத்தம் போட்டனர். இதனால் ஏராளமான பொதுமக்கள் ஆஸ்பத்திரி முன் கூடினர். அவர்கள் தன்னை தாக்குவார்கள் என்று பயந்த டாக்டர் சங்கர நாராயணன் ஒரு அறைக்குள் சென்று கதவினை பூட்டிக் கொண்டார்.  
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு, உதவி கமிஷனர் கணேசன் மற்றும் எஸ்.எஸ்.காலனி போலீசார் உடனடியாக அங்கு வந்தனர். அறைக்குள் இருந்து வெளியே வரும்படி அழைத்தனர். ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து கதவை உடைத்து திறந்து டாக்டரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.







comments | | Read More...

யம்ம்ம்மா.... 'மாற்றான்' ! வாய் பிளக்கும் கோடாம்பாக்கம்






சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் வெளிவரும் படம் என்றாலே அப்படத்தின் பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பில் இருந்து 'மாற்ற� ��ன்' படமும் தப்பவில்லை.

'அயன்' வெற்றிக் கூட்டணியின் அடுத்த படம் 'மாற்றான்'. இந்த மெகா பட்ஜெட் படத்தினை தயாரித்து இருக்கிறார் கல்பாத்தி S. அகோரம்.

இப்படம் ஆரம்பித்த உடனேயே விநியோகஸ்தர்கள் மத்தியில் படத்தினை யார் வாங்குவது என்று பெரும் போட்டி நிலவியது.

இப்படத்தின் மொத்த உரிமையையும் EROS நிறுவனம் 84 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு உரிமையை பேலம்கொண்டா சுரேஷ் 17 கோடி கொடுத்து வாங்கி இருப்பதாகவும், வெளிநாட்டு உரிமை 12 கோடிக்கு விலை பேசி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படத்தின் இசையை சோனி நிறுவனம் 1.2 கோடிக்கு வாங்க இருக்கிறது. இது தான் தற்போதைய ஆடியோ உரிமையில் பெரும் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா - கே.வி.ஆனந்த் - ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் கூட்டணியில் 'அயன்' பாடல்கள் வெற்றி என்பதால் தான் 'மாற்றான்' படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு.

இப்படத்தின் இசையை ஆகஸ்ட் 9ம் தேதி சிங்கப்பூரில் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். ஆகஸ்ட் 9ம் தேதி NATIONAL DAY OF SINGAPORE என்பதால் சிங்கப்பூரில் அரசு விடுமுறை. ஆகவே அன்று அங்கே பிரம்மாண்டமாக இவ்விழாவை நடத்த தீர்மானித்து இருக்கிறார்கள்.









comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger