Friday, 13 July 2012
'வாகை சூடவா' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் இனியா. தற்போது தங்கர்பச்சான் இயக்கும் 'அம்மாவின் கைபேசி' படத்தி ல் சாந்தனு ஜோடியாக நடித்து வருகிறார். இதில் இனியா கவர்ச்சியாக நடிக்கிறாராம்.
காதல் காட்சிகளில் தாவணியின்றி நாயகனுடன் நெருக்கமாக நடித்துள்ளாராம். இதில் முத்தக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. சாந்தனுக்கு தயக்கமின்றி முத்தம் கொடுத்து படப்பிடிப்பு குழுவினரை அதிர வைத்தாராம்.
'வாகை சூடவா' படத்துக ்குப்பின் எனக்கு குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்கவே வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல நடிகைகள் கவர்ச்சியாக நடிக்கின்றனர். அவர்களைபோல் கவர்ச்சியாக நடிக்க எனக்கு ஆசை இருக்கிறது. எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.