News Update :
Powered by Blogger.

தமிழ்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்

Penulis : karthik on Wednesday, 21 December 2011 | 22:58

Wednesday, 21 December 2011



தென் மாவட்ட ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்கும் திட்டம் இல்லை - தெற்கு ரெயில்வே அறிவிப்பு தென் மாவட்ட ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்கும் திட்டம் இல்லை - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தென் மாவட்ட ரெயில்கள் இப்போதைக்கு தொடர்ந்து சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து
முல்லைப் பெரியாறு பிரச்னை: புதிய குழு அறிவிப்புக்கு ஜெயலலிதா கண்டனம் முல்லைப் பெரியாறு பிரச்னை: புதிய குழு அறிவிப்புக்கு ஜெயலலிதா கண்டனம்
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் நிர்பந்தத்தின் பேரில் நிபுணர் குழு அமைத்திருப்பதற்கு முதல்வர்
பைக்கில் சென்ற போது மாரடைப்பு - எல்ஐசி ஏஜென்ட் மரணம் பைக்கில் சென்ற போது மாரடைப்பு - எல்ஐசி ஏஜென்ட் மரணம்
சேப்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம் அருகில் விக்டோரியா சாலையில் நேற்று மாலை 3.30
சாத்தூர் ராமச்சந்திரன் மீது சொத்து குவிப்பு வழக்கு சாத்தூர் ராமச்சந்திரன் மீது சொத்து குவிப்பு வழக்கு
தி.மு.க. முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு
சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகடமி விருது Debutant novelist Su. Venkatesan wins Sahitya Akademi Award சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகடமி விருது
எழுத்தாளர் சு.வெங்கடேசன் (39) எழுதிய "காவல் கோட்டம்" என்ற தமிழ் நாவலுக்கு இந்த
கேரள எல்லைகளில் முற்றுகை போராட்டம் விவசாயிகள் மீது தடியடி Farmers' protest turns violent கேரள எல்லைகளில் முற்றுகை போராட்டம் விவசாயிகள் மீது தடியடி
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள எல்லைகளை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது.
சென்னை விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது போல் சென்றதால் பரபரப்பு  சென்னை விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதுவது போல் சென்றதால் பரபரப்பு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கோவை
மம்முட்டி- ஜெயலலிதா திடீர் சந்திப்பு மம்முட்டி- ஜெயலலிதா திடீர் சந்திப்பு
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நடிகர் மம்முட்டி நேற்று மதியம் சந்தித்தார். சுமார்
முன்னாள் அமைச்சர் சுக்ராமுக்கு ஜெயில் தண்டனையை உறுதி செய்தது டெல்லி ஐகோர்ட்டு
ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை மந்திரி சுக்ராமுக்கு விதிக்கப்பட்ட 3
சி.பி.ஐ. லோக்பால் வரம்புக்குள் வந்தால் ப.சிதம்பரம் ஜெயிலில் இருப்பார் - அன்னா ஹசாரே
ஊழல் அரசியல்வாதிகளை பாதுகாக்கவே புதிய லோக்பால் மசோதா கொண்டு வரப்படுவதாக, மத்திய அரசு
அமெரிக்க விமான விபத்தில் இந்தியர் உள்பட 5 பேர் பலி
அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் குட்டி விமானம் விழுந்து நொறுங்கியதில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் உள்பட
சரத் பொன்சேகாவின் விடுதலை என்கையில் உள்ளது- ராஜபக்சே
இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதியும், எம்.பி.யுமான சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு
தங்கம் பவுனுக்கு ரூ.208 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கம் நேற்றுமுன்தினம் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.2 ஆயிரத்து
உலக செஸ்: இந்தியா வெற்றி
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின், மூன்றாவது சுற்றில் இந்திய அணி 4 -
கொலவெறி பாடலை பாட ரூ.25 லட்சம் கேட்கும் தனுஷ்!
நடிகர் தனுஷ், எழுதி பாடியிருக்கும் `ஒய் இஸ் திஸ் கொலவெறி' பாடல் உலகம்
மும்பை ரெயில் நிலையத்தில் ரசிகர்கள் மத்தியில் `ஒய் இஸ் திஸ் கொல வெறி' பாட்டை தனுஷ் பாடினார்
பிரபல தமிழ் நடிகர் தனுஷ் நடித்து வெளி வர உள்ள படம் `3'.
பிரதியூஷா கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கு: சிக்குவாரா சித்தார்த் ரெட்டி
பிரபல தெலுங்கு நடிகை பிரதியூஷா இவர் தமிழில் முரளி ஜோடியாக மனுநீதி, கடல்
நடிகை அமலாபாலுக்கு வீடு வாங்கி கொடுத்தேனா? - டைரக்டர் விஜய் மறுப்பு
நடிகை அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் காதலிப்பதாக கிசுகிசு பரவியுள்ளது. விஜய் "மதராச பட்டணம்"
'கோடீஸ்வரன்' நிகழ்ச்சியை தமிழில் நடத்துகிறார் நடிகர் சூர்யா
விஜய் டிவியில் கோடிஸ்வரன் நிகழ்ச்சி விரைவில் துவங்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகரான






comments | | Read More...

போலியோ வைரஸை பரப்பும் பாகிஸ்தான்!

 
 
 
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போலியோ வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் அதை தடு்கக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேற்கு வங்க சுகாதாரத் துறை அமைச்சர் சுதிப் பந்தோபத்யாய ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
 
இந்த ஆண்டு பாகிஸ்தானில் 173 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு மாறாக இந்தியாவில் ஒரே ஒருவருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போலியோ வைரஸ் பரவும் அபாயம் உள்ளதா என்று ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பப்பட்டது.
 
அதற்கு பதில் அளித்த மேற்கு வங்க சுகாதாரத் துறை அமைச்சர் சுதிப் பந்தோபத்யாய கூறியதாவது,
 
பாகிஸ்தான் போலியோ வைரஸை பரப்பி வருவதை உலக சுகாதார அமைப்பு உறுதிபடுத்தியுள்ளது. இந்த ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட போலியோ வைரஸ் தற்போது பாகிஸ்தானில் பரவி வரும் வைரஸ் வகையைச் சேர்ந்ததாகும். பாகிஸ்தானையொட்டியுள்ள அம்ரித்சர், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்றும் குஜராத்தில் உள்ள சுகாதார மையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்திய எல்லைக்குள் வரும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது என்றார்.
 
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் 134 பேரை போலியோ தாக்கியது. இந்தியாவில் 41 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டது. போலியோ இல்லா இந்தியா என்ற இலக்கை அடைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தானில் இருந்து போலியோ வைரஸை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



comments | | Read More...

பெண்களுடன் ஆபாசமாக நடனம்: ஷாருக் மீது கேரள போலீஸ் வழக்கு

 
 
 
கேரளாவில் நகைக்கடையை திறப்பு விழாவிற்கு சென்ற போது துணை நடிகைகளுடன் ஆபாச நடனம் ஆடியதாக இந்தி நடிகர் ஷாருக்கான் மீது கேரளா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
கேரளாமாநிலம் கொச்சியில் டிசம்பர் 4ம் தேதி ஜவுளிக்கடை திறப்புவிழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் வெளியான ரா ஒன் பாடல் ஒன்றுக்கு துணை நடிகைகளுடன் இணைந்து ஆடினார். அந்த நடனம் ஆபசமாக இருந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து கேரள போலீசார் ஆபாச நடனம் ஆடிய ஷாருக்கான் மீதும், அந்த ஜவுளிக்கடையின் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



comments | | Read More...

சசியின் அண்ணியை மட்டும் ஜெ. விட்டு வைத்தது ஏன்?

 
 
 
 
 
சசிகலா குடும்பத்தையே விரட்டி விட்ட முதல்வர் ஜெயலலிதா அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பேரை மட்டும் விட்டு வைத்துள்ளார். அவர்கள் சசிகலாவின் அண்ணி இளவரசி மற்றும் இளவரசியின் சம்பந்தியான கலியபெருமாள் ஆகியோர்தான்.
 
ஜெயலலிதாவின் இந்த விதிவிலக்கு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இதிலும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறதாம்.
 
இளவரசிக்கும், சசிகலாவுக்கும் இடையே அவ்வளவாக நெருக்கம் இல்லையாம். அதாவது வழக்கமாக தமிழக குடும்பங்களில் காணப்படும் நாத்தனார் சண்டைதான்.
 
போயஸ்கார்டனில்தான் இளவரசி தொடர்ந்து வசித்து வருகிறார். இவரது பெயரில்தான் சிறுதாவூர் பங்களா உள்ளிட்ட பல சொத்துக்கள் உள்ளதாம். இதுகுறித்து அவருக்கும் சசிகலாவுக்கும் இடையே அவ்வப்போது புகைச்சல் வெடிக்குமாம். மேலும் ஜெயலலிதா இளவரசி மீது தனிப் பிரியம் வைத்திருப்பாராம். இதும் கூட சசிக்குப் பிடிக்காதாம்.
 
சமீபத்தில் கூட பெங்களூர் கோர்ட்டுக்கு சசிகலாவும், இளவரசியும் போனபோது இருவரும் பேசிக் கொள்ளவில்லையாம். இத்தனைக்கும் இருவரும் ஒரேகாரில்தான் போனார்களாம். அதேசமயம், கோர்ட்டுக்கு வந்திருந்த சுதாகரனிடம் மட்டும் சசிகலா நன்றாகப் பேசினாராம்.
 
சசிகலாவை இளவரசிக்குப் பிடிக்காது என்ற ஒரே அம்சம் ஜெயலலிதாவுக்குப் பிடித்துப் போய் விட்டதாம். இதனால்தான் எதிரியின் எதிரியாயிற்றே என்ற ஒரே காரணத்திற்காக இளவரசியை தன்னுடனேயே வைத்துள்ளாராம். அதேபோல இளவரசியின் சம்பந்தியான கலியபெருமாள் மீதும் ஜெயலலிதா நல்ல மதிப்பு வைத்துள்ளார்.
 
காவிரி டெல்டா மாவட்டங்களில் பல முக்கிய கட்சி நிர்வாகிகளை நியமிப்பதில் கலியபெருமாள் ஜெயலலிதாவுக்கு பெருமளவில் உதவியுள்ளாராம். இவருக்கு சசிகலாவைப் பிடிக்காதாம். சசிகலாவின் ஆதிக்கத்தையும் மீறி செயல்பட்டு வந்தவர் என்பதால் இவருக்கும் ஜெயலலிதாவிடமிருந்து விதி விலக்குக் கிடைத்துள்ளதாம்.
 
அதேபோல தினகரின் மனைவியான அனுராதா மீதும் இதுவரை நடவடிக்கை எதுவும் பாயவில்லை. இவர்தான் ஜெயா டிவியின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். இவர் மீது ஏன் நடவடிக்கை பாயவில்லை என்று தெரியவில்லை.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger