News Update :
Powered by Blogger.

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: ஆறு பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர்

Penulis : karthik on Sunday, 13 May 2012 | 22:23

Sunday, 13 May 2012




நேற்று இரவு சத்தீஸ்கர் மாநிலம் த ண்டேவாடா மாவட்டத்தில் நடைபெற்ற நக்சலைட்டுகள் தாக்குதலில் ஆறு தேசிய தொழிற்சாலை பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்.) உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
 
நேற்று இரவு கிரந்துல் பகுதியில் அமைந்துள்ள தேசிய கனிம மேம்பாட்டு கழக பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு சுமார் 9.30 மணியளவில் ஆயுதங்களுடன் நக்சல்கள் பாது� �ாப்பு படையினரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.
 
இத்தாக்குதலில் ஆறு பாதுகாப்பு படையினர் மற்றும் ஒரு வாகன ஓட்டியும் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்துள்ளதாகவும், பாதுகாப்பு படையினரிடமிருந்து நக்சலைட்டுகள் ஆயுதங்களை கொள்ளையடித்து சென்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
கூடுதல் ப� �துகாப்பு படை அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் மீட்புப்பணி நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு படை அதிகாரி ராம் நிவாஸ் தெரிவித்தார்.
 
கிரந்துல் - மற்றும் பச்சேளி கனிம சுரங்க பகுதியில்   நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கக் கூடாது: நீதிபதி கட்ஜூ




இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது தரக் கூடாது என்று இந்திய பிரஸ் கவுன்சி ல் தலைவரான நீதிபதி கட்ஜூ கருத்துத் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் கவிஞர் நஸ்ரூல் இஸ்லாமின் மருமகள் கல்யாணி காஸிக்கு காளிதாஸ் காலிப் சம்மான் விருதை வழங்கி அவர் பேசியதாவது:

திரை உலக நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவது நமது கலாசாரத்தின் தன்மையை குறைத்� ��ுக் காட்டுகிறது.

பாரதியார், சரத் சந்திர சட்டோபாத்யாய போன்றவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும். அதைவிடுத்து சச்சினுக்கு கொடுங்கள்..கங்குலிக்கு கொடுங்கள் என்று கூறக் கூடாது. அம� �பேத்கருக்கு அவர் மறைவுக்குப் பிறகுதான் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது. ஆனால் கவிஞர் காஸி நஸ்ரூல் இஸ்லாமுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்படவில்லை.

இந்தியாவின் சிறப்பம்சங்களை நஸ்ரூல் இஸ்லாமின் கவிதைகள் பிரதிபலிக்கின்றன. அவர் நிறைய உருது கவிஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது கவிதைகளை இந்தியில் மொழி பெயர்க்காதது வருத்தமளிக்கிறது. மேற்கு வங்கத்திற்கு வெளியே உள்ள மக்களால் அதை எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும். அதை மொழிபெயர்க்க உதவுமாறு முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கேட்டுள்ளேன் என்றார்.



comments | | Read More...

வி.கே.சிங் எங்கள் குழுவில் இடம்பெற விரும்புகிறோம்: அன்னா ஹசாரே




ஓய்வுக்குப் பின்னர் ரா� �ுவத் தளபதி ஜெனரல் வி.கே.சிங் எங்கள் குழுவில் இணைந்து ஊழலுக்கு எதிராகப் போராட விரும்பினால் அவரை வரவேற்று மகிழ்ச்சியுடன் சேர்த்துக் கொள்வோம். ஏனெனில் ஒத்த மனதுடையவர்கள்தான் நமது குழுவுக்கு தேவை. எனவே தான் அவர் எங்களுடன் இணைவதை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் ஊழலுக்கு எதிராகப் போராடும்படி நான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன்' என ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்க தலைவ� �் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
 
மேலும், 'நான் ராணுவத்தில் பணியாற்றியபோது பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடனான போர்களில் பங்கு கொண்டேன். தற்போது நமக்குள் இருக்கும் எதிரிகளை எதிர்த்துப் போராட வேண்டும்' எனவும் அன்னா கேட்டுக்கொண்டார்.
 
தங்கள் இயக்கத்தில் சேரும்படி வி.கே.சிங்குக்கு, அன்னா மறைமுக அழைப்ப� �� விடுத்துள்ளது பற்றி, அன்னா குழு உறுப்பினர்களில் ஒருவரான கிரண்பெடி கூறுகையில், 'முன்னாள் ராணுவத்தினர் எங்கள் இயக்கத்தில் சேரும்போது, இயக்கம் மேலும் வலுப்பெறும்' என்றார்.
 
இம்மாதம் 31-ம் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெற உள்ள  ராணுவத் தளபதி ஜெனரல் வி.கே.சிங், ஓய்வுபெற்ற பின்னர் அன்னா ஹசாரே குழுவில் இணைவது பற்றி முடிவெடுப்பார் எனத� �� தெரிகிறது.



comments | | Read More...

போலீஸ் மீது செருப்பு வீசி நித்தியானந்தா ஆதரவாளர் தாக்குதல்!




மதுரை ஆதீன மடத்திற்குப் பாதுகாப்புக்காக நின்ற போலீஸார் மீது நித்தியானந்தாவின் ஆதரவாளர் செருப்பை எடுத்து வீச ித் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.


மதுரை ஆதீனம் மடத்திற்குள் குண்டர்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக பரபரபரப்புத் தகவலும் வெளியாகியுள்ளதால் ஆதீன மடம் அமைந்துள்ள பகுதி பெரும் பரபரப்புடனும், பதட்டத� ��துடனும் காணப்படுகிறது. பொதுமக்களும் ஆங்காங்கே திரண்டு நிற்பதால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்படுகிறது.

மதுரை ஆதீன மீட்புக் குழுவினர் இன்று காலை மாநாடு நடத்தினர். இதையடுத்து அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இன்று மாலை ஆதீன மடத்திற்குள் சென்று திருஞானசம்பந்தரைப் போற்றிப் பாடி வழிபாடு நடத்தச் சென்றனர். ஆனால் ஆதீன மட வாயில்களை நித்தியானந்தாவ ின் ஆதரவாளர்கள் மூடி விட்டனர்.

மேலும் மடத்திற்கு வந்த மதுரை ஆதீன மீட்புக் குழுவினரை அவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டனர். இதனால் அவர்களுக்கும் மீட்புக் குழுவினருக்கும் இடையே மோதல் மூளும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார், மீட்புக் குவுவினரைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இந்த நிலையில் நித்தியானந்தாவின் ஆதரவாளர் ஒருவர் மடத்திற்கு வெளியே பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் மீது காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து வீசினார். இது ஒரு சப் இன்ஸ்பெக்டர் மீது பட்டது. இதனால் அவர் வெகுண்டார். போலீஸாரும் கொந்தளித்து விட்டனர். இதைய டுத்து அங்கு கூடிய நித்தியானந்தா ஆதரவாளர்கள் போலீஸாரை வேகமாக கீழே தள்ளி விட்டனர். பின்னர் செருப்பை வீசிய தங்களது ஆளை, வேகமாக உள்ளே இழுத்துக் கதவைப் பூட்டிக் கொண்டனர்.

இதையடுத்து மதுரை போலீஸ் கமிஷனருக்கு தகவல் பறந்தது. இதையடுத்து தற்போது ஆதீன மடத்தைச் சுற்றிலும் போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர். கூடுதல் போலீஸாரும் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த மீட்புக் குழுவினர் கூறுகையில், மடத்துக்குள் நித்தியானந்தா ஆதரவாளர்கள் என்ற போர்வையில் குண்டர்கள் குவித்து வைக்கப்பட்டிருப்ப� �ாக கூறியிருந்தனர். இதனால் மதுரை ஆதீன மட வளாகத்திற்கு வெளியே பெரும் பரபரப்பு காணப்படுகிறது. பொதுமக்களும் திரண்டு வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் போலீஸார் வெகுண்டுள்ளனர். எனவே உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்தால், ஆதீன மடத்திற்குள் புகுந் து தாக்குதல் நடத்தியவரைப் போலீஸார் கைது செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.




comments | | Read More...

மதுரையில் பரபரப்பு- ஆதீன மடத்திற்குள் நுழைய முயன்ற ஆதீன மீட்புக் குழுவினர் கைது




நித்தியானந்தா மதுரை ஆதீன மடத்திற்குள் இருக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைந்து வழிபாடு நடத்த முயன்ற ஆதீன மீட்புக் குழுவினரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

மதுரை ஆதீன மடம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மதுரை ஆதீனம் எடுத்த முடிவால் இந்து அமைப்புகள் கொந்தளித்துள்ளன. மதுரை ஆதீனத்தை மீட்கக் கோரி ஒரு மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை கண்ணன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் இன்று மதுரையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தில் மாநாடு நடத்தினர். அதன் பின்னர் நித்தியானந்தாவை மதுரை ஆதீன மடத்திலிருந்து வெளியேற்றக் கோரி மதுரை மேலமாசி வீதியில் ஆதின மீட்புக்குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன் பின்னர் ஆதினத்தின் உள்ளே நுழைந்து வழிபாடு நடத்த வர்கள் சென்றனர். இதையடுத்து ஆதீன மடத்தின் முன்புறம் மற்றும் பின்பக்க கதவுகள் மீடப்பட்டன.

நித்தியானந்தாவின் ஆதரவாளர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். பதட்டமான சூழ்நிலை நிலவியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நெல்லை கண்ணன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், தேவர� � தேசிய பேரவை தலைவர் திருமாறன் தலைமையில் பெரும் திராளனோர் மதுரை ஆதீன மடத்திற்கு வந்தனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று நித்தியானந்தாவின் ஆட்கள் கூறி விட்டனர்.

இதையடுத்து மடத்துக்கு வெளியே குழுமியபடி அனைவரும் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்தப் போராட்டம் காரணமாக மதுரை ஆதீனம் மடம் அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.



comments | | Read More...

தலித் முஸ்லிம்களுக்காக போராட்டம் நடத்துவேன்: பாபாராம்தேவ்




யோகா குரு பாபா ராம்தேவ் புதுடெல்லியில் அகில இந்திய ஐக்கிய முஸ்லிம் மோர்ச்சா அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
 
தலித் வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதைத் தடுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 341-ல் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஆதர ிக்கிறேன்.
 
இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் 341-வது பிரிவின் கீழ் தலித் கிறிஸ்தவர்களும், தலித் முஸ்லிம்களும் வரவில்லை என்பது எனக்கு இப்போதுதான் தெரியும். இது நியாயமற்றது.  
 
ஒரு தலித் எந்த மதத்தை சேர்ந்தவராயிருந்தாலும் தலித்துதான், எனவே அனைத்து தலித்துகளும் சம உரிமை பெறவேண்டும். இதற்கு நாம் அனைவரும் போராட வேண்டும். என்னுடைய ஆசிரமத்தில் 3 ஆயிரம் முஸ்லிம்களுக்கும் மேல் உள்ளனர். அங்கு மதப் பாகுபாடுகள் கிடையாது. நாங்கள் அனைவரும் ஒன்றுதான்.  
 
வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரக்கோரி ஜூன் 3-ந்தேதியிலும், ஆகஸ்டடு மாதத்திலும் போராட்டம் நடத்தவுள்ளேன். சாதாரண மனிதனைப் பற்றி எந்தக் கட்சிக்கு ம் அக்கறை இல்லை. அரசியல்வாதிகள் ஊழலின் மூலம் நாட்டைக் கொள்ளையடிக்கிறார்கள்
 
இவ்வாறு ராம்தேவ் பேசினார்.



comments | | Read More...

ஆப்கன் அமைதிக் குழு மூத்த தலைவர் சுட்டுக் கொலை




ஆப்கானிஸ்தான் அமைதிக் குழுவின் மூத்த தலைவராகவும், அதிபர் ஹமீத் கர்சாயின் நெருங்கிய ஆலோசகராகவும் விளங்கி வந்தவர் அர்சலா ரஹ்மானி. இன்று காலை வீட்டிலிருந்து அர்சலா வெளியே வந்தபோது, காரில் வந்த மர்ம நபர்கள் யாரோ அவரை நோக்கி துப்பாகியால் சுட்டனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார். ரஹ்மானியின் இடது கையில் தாக்கிய குண்டு, கை வழியாக பாய்ந்து இதயத்தைத் துளைத்ததாக அவரது பேரன் தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில் கடந்த 1996 முதல் 2001 வரை நடைபெற்ற தலிபான் ஆட்சியில், ரஹ்மானி உயர்கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். தலிபான்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதிபர் கர்ச ாயின் கட்சியில் சேர்ந்த ரஹ்மானி, தற்போதைய அரசில் அங்கம் வகித்து வந்தார். 

சமீபத்தில் தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரஹ்மானி விரிவுபடுத்தினார். இந்நிலையில் ரஹ்மானி கொல்லப்பட்டிருப்பது, அமெரிக்கா ஆதரவுடன் ஆப்கனில் கர்சாய் மேற்கொண்டுள்ள சமாதான நடவடிக்கைகளுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. 

ஆப்கன் அமைதிக்குழுவின் தலைவரும், முன்னாள் அதிபருமான புர்கானுதீன் ரப்பானி, க� �ந்த செப்டம்பர் மாதம் தற்கொலைப் படை தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

தலாய்லாமாவுக்கு விஷம் கொடுத்து கொல்ல சீனா முயற்சி?




சீனாவின் ஆக்கிரமிப்புக்கு பிறகு திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா (76) இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தற்போது அவ� ��் இமாசல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் பலத்த பாதுகாப்புடன் தங்கியுள்ளார். இருந்தும், தன்னை கொல்ல சீனா சதி செய்வதாக தனது அச்சத்தை தெரிவித்துள்ளார்.

திபெத் பெண்கள் சிலரை சீனா தனது ஏஜெண்டுகளாக நியமித்து பயிற்சி அளித்து வருகிறது. தலைமுடி மற்றும் தலையில் அணியும் ஸ்கார்ப் ஆகியவற்றில் விஷத்தை தடவி அவர்களை தன்னிடம் ஆசி பெற அனுப்ப திட்டமிட்டுள்ளது. அவர்களின் தலையை தொட்டு நான் ஆசி வழங்கும்போது எனது கைகளில் அ� ��்த விஷம் ஒட்டிக் கொள்ளும் அதன் மூலம் உடலுக்குள் விஷம் பரவி என்னை கொல்ல சதி செய்துள்ளனர்.

இதற்கு சீன அரசுடன் புத்த மதத்தை சேர்ந்தவர்களும் உடந்தையாக உள்ளனர். இது குறித்த ரகசிய தகவல் திபெத்தில் இருந்து எனக்கு கிடைத்துள்ளது. ஆனால் எனது பாதுகாவலர்களுக்கு இந்த தகவல் சரிவர கிடைக்கவில்லை. எனவே, எனக்கு மேலும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.



comments | | Read More...

ஜெயலலிதாவை சந்திக்கப் போகிறோம்... மதுரை ஆதீனம் மற்றும் நித்தியானந்தா!




முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மதுரை ஆதீனம் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து விளக்கம் அளிக்கப் போகிறோம் என்று மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் கூ றியுள்ளனர்.

இதுகுறித்து இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் மதுரை ஆதீனம் பேசுகையில்,

மதுரை ஆதீனம் மீட்புக் குழு என்ற ஓர் அமைப்பு, ஆதீனத்துக்குள் நுழைந்து வழிபாடு நடத்தப் போவதாகக் கூறியுள்ளது. ஆதீனத்தின் அனுமதியில்லாமல் யாரும் உள்ளே நுழைய முடியாது. சட்டம், ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கில் அத்தகைய முயற்சியை எடுக்கின்றனர். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால்< /span>, தருமபுரம் ஆதீனமும், திருப்பனந்தாள் மடமும்தான் பொறுப்பு.

ஆதீனம் எதிர்நோக்கியிருக்கும் பிரச்னைகள் குறித்து விளக்கம் அளிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க அனுமதி கோரியுள்ளோம். 1980 முதல் எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டில் நடந்த பேரவைத் தேர்தலின்போது பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அளிக் க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தமிழகத்தில் உள்ள ஆதீனங்களில் பழமையானது மதுரை ஆதீனம். ஆனால், பிற ஆதீனங்கள் மனரீதியாக அளித்துவரும் இடையூறுகளால் எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிட்டது என்றார்.

அடுத்து நித்தியானந்தா பேசுகையில்,

மதுரை ஆதீனத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், வழிபாடு நடத்தப் போவதாக ஒரு குழு அறிவித்திருக்கிறது. அவர்களை அனுமதிக்கக் கூடாது என காவல் துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதையும் மீறி மதுரை ஆதீனத்துக்குள் நுழைந்து பிரச்னை ஏற்படுத்த நினைத்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.

எனது தியான பீட பக்தர்கள், மீட்புக் குழுவின் போராட்டத்தை அறிவித்த நெல்லை கண்ணனின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். பிற ஆதீன மடங்களின் தலைவர்கள், ஆன்மிக ரீதியாகவும், இறைசக்தி ரீதியாகவும் என்னோடு போட்டியிட வேண்டும். அதைத் தவிர்� �்து எனது குணநலன்களைப் பற்றி தவறாக அவதூறு பரப்பக் கூடாது என்றார்.

பேட்டியின்போது மதுரை உதவி போலீஸ் கமிஷனர் துரைசாமி மீதும் இருவரும் குற்றம் சாட்டினர். அவர், குண்டர்களை வைத்து மிரட்டுவதாக இருவரும் கூறினர்



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger