கூகுள் தளங்களில் கிடைக்கும் ஆபாச, மத உணர்வைப் புண்படுத்துகிற,
பயங்கரவாதத்துக்கு துணை போகிற செய்திகள், படங்களை தங்களால் சென்சார்
செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"கூகுள், ட்விட்டர், பேஸ்புக், யாஹூ உள்ளிட்ட 21 இணையதள நிறுவனங்கள்
நடத்தும் அல்லது இவற்றின் துணையுடன் இயங்கும் பல லட்சம் இணையதளங்களில்
கணக்கற்ற ஆபாச தகவல்கள், படங்கள், தீவிரவாதத்துக்கு துணைபோகும்
விஷயங்கள், மத உணர்வை புண்படுத்தும் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.
இந்தியாவின் இணையவெளி தடையற்றதாக உள்ளதால், இளம் தலைமுறை ஆபாசம், வன்முறை
மற்றும் தீவிரவாதத்துக்கு துணைபோக இந்த இணையதளங்கள் துணைபோகின்றன.
இவற்றால் மதக் கலவரம் ஏற்படுகின்றன. எனவே இவற்றை சம்பந்தப்பட்ட
நிறுவனங்கள் அல்லது இந்த இணையதளங்களை வழங்கும் கூகுள் போன்ற நிறுவனங்கள்
சென்சார் செய்ய வேண்டும்", எனக்கோரி டெல்லியைச் சேர்ந்த வினய் ராய்
என்பவர் டெல்லி நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார்.
கூகுளின் ஆர்குட், யு ட்யூப் மற்றும் யாஹூ தளங்களில்தான் அதிக அளவு
மதவெறியைத் தூண்டும் வகையில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ கடவுள்களை
மிக மோசமாக சித்தரித்துள்ளதாக இந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார்
மனுதாரர்.
இந்த வழக்கு விசாரணையின்போது கூகுள் உள்ளிட்ட 21 நிறுவனங்களும்,
இணையவெளியில் தணிக்கை முறைகளை மேற்கொள்ள முடியுமா... மோசமான விஷயங்களை
தடை செய்ய முடியுமா என்பது குறித்து மார்ச் 13-ம் தேதிக்குள்
பதிலளிக்குமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த சம்மனுக்கு எதிராக கூகுள்,யாஹூ, பேஸ்புக் உள்ளிட்ட 21 நிறுவனங்களும்
சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்தன. அதில் இந்தியா சர்வாதிகார நாடல்ல,
ஜனநாயக நாடு. ஆபாசம் உள்ளிட்ட எந்த விஷயத்தையும் இங்கே சட்டப்படி தடை
செய்ய முடியாது என வாதிட்டன.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் பிப்ரவரி 2-ம் தேதி நடக்கவிருக்கிறது.
இந்த நிலையில் சுவிட்ஸர்லாந்துநாட்டின் டாவோஸ் நகரில் நடக்கும் உலக
பொருளாதார மாநாட்டில் இந்தியாவிலிருந்து 113 பேர் கொண்ட குழு
பங்கேற்றுள்ளது. கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த
மாநாட்டுக்கு வந்துள்ளனர்.
Read: In English
இதில் கூகுளின் இந்தியப் பிரிவுக்கான தலைமை விற்பனை அலுவலர் நிகிலேஷ்
அரோரா கூறுகையில், "இந்தியாவில் இணையவெளியை சென்சார் செய்வது இயலாத
காரியம். அப்படிச் செய்தால் உலகம் முழுவதும் உள்ள மக்களின் கருத்து
சுதந்திரத்தில் குறுக்கிடுவது போலாகிவிடும்," என்றார்.
மேலும் கூறுகையில்,"எல்லாவற்றையும் தணிக்கை செய்து, சுத்தமான விஷயமாகத்
தருவது அடிப்படையில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்குப் பாதகமாகப்
போய்விடும். மேலும் இந்தியாவின் இணையவெளியில் கூகுள் மூலம் வரும் ஆபாச-
மத வெறி விஷயங்களுக்கு இந்தியாவில் இயங்கும் அந்த நிறுவனக் கிளை
பொறுப்பாகாது," என்றார்.
மோசமான கருத்துக்களை சென்சார் செய்ய நாங்க ரெடி! - ட்விட்டர் அதிரடி
இந்தியாவில் எந்தவகை மோசமான, ஆபாசமான தகவல்களையும்
சென்சார்செய்யமாட்டோம் என்று கூகுளும் பேஸ்புக்கும் அடம்பிடித்து வரும்
நிலையில், இணைய தள உலகில் முக்கிய நிறுவனமாகத் திகழும் ட்விட்டர், சட்டம்
வலியுறுத்தினால் மோசமான கருத்துக்கள், செய்திகளை நீக்கத் தயார் என
அறிவித்துள்ளது.
இணையதளங்களை இந்தியாவில் சென்சார் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதன்
மூலம் புதிய பலம் கிடைத்துள்ளது.
இணையதளங்களை சென்சார் செய்வது குறித்து இந்தியாவில் இப்போதுதான் புதிய
விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இணையவெளியில் கோடிக்கணக்கான ஆபாச, வன்முறையைத் தூண்டும், மத உணர்வுகளைப்
புண்படுத்தும் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த தகவல்களைத் தாங்கி
வரும் தளங்களுக்கு கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள்
இடமளிக்கின்றன. இந்த நிறுவனங்களின் தேடியந்திரங்கள் (search engines)
எல்லா வகையான தகவல்களையும் கொண்டு வந்து கொட்டுகின்றன. இவற்றை பல நாடுகள்
தடை செய்வதில்லை. ஆனால்சில முக்கிய நாடுகளில் தடை அமலில் உள்ளது.
பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் ஆபாச இணையதளங்கள், மதரீதியான வக்கிரமான
கருத்துக்களைப் பரப்பும் தளங்களை தடை செய்துள்ளனர். இங்கெல்லாம் கூகுளைத்
தட்டினால் இந்த வகைத் தளங்களைப் பார்க்க முடியாது.
சீனாவில் 90 சதவீத சென்சார் அமலில் உள்ளது. இதனை கோல்டன் ஷீல்டு
புராஜக்ட் எனும் சட்டத்துக்கு உட்பட்டு சென்சார் விதிகளை கடைப்பிடித்து
செயல்படுகிறது கூகுள். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த கூகுள், இதற்கு
கட்டுப்படாவிட்டால் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிவிடுவோம் என சீன
அரசு எச்சரித்ததால் அடங்கிப் போனது.
அதேபோல, ஜெர்மனி மற்றும் பிரான்சில் நாஜி கருத்துகளைப் பரப்பும் இணைய
தளஙக்களை சென்சார் செய்ய கூகுள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுமே ஒப்புக்
கொண்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த நாடுகளின் சட்டங்கள் இதை
வலியுறுத்துவதால் அதை கடுமையாகபின்பற்றுகின்றன கூகுள் போன்றவை.
ஆனால் இந்தியாவில் இணைய வெளியைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட சட்டங்கள்
எதுவும்இல்லை என்பதைக் காரணம் காட்டி, அனைத்து வகை வக்கிர, அநாகரீகக்
கருத்துக்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உலகின் வக்கிர குப்பைகளைக் கொட்டும்
நாடாக இந்தியா மாறிவிட்டது என்றும், இதுவே சமூகக் குற்றங்கள், வரம்பு
மீறல்கள் மற்றும் மோசமான கலாச்சாரத்துக்கு வழி வகுத்துவிட்டதாகவும் சமூக
ஆர்வலர்கள் கருத்து தெரி்வித்து வருகின்றனர்.
இந்த நிலை அரசுக்கு கவலை அளித்துள்ளது. எனவே, இந்த தளங்கள் அனைத்தையும்
சென்சார் செய்ய வேண்டும், மோசமான content-ஐ தடை செய்ய வேண்டும் என
வழக்கும் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றங்களும் கூகுள் உள்ளிட்ட
நிறுவனங்களை, ஏன் இந்தகுப்பைகளை இந்தியாவில் தடுக்க முயற்சிக்கவில்லை என
கேள்வி எழுப்பி வருகின்றன.
இணையவெளியை கட்டுப்படுத்துவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது
என்றும், இந்தியா ஜனநாயக நாடு என்பதால் இங்கே அதைசெய்ய மாட்டோம் என்றும்,
அது இந்தியாவின் வளர்ச்சியை