News Update :
Powered by Blogger.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெயலலிதா!

Penulis : karthik on Wednesday, 11 January 2012 | 19:10

Wednesday, 11 January 2012

தமிழகத்தில் புதிய விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முதல்வர்
ஜெயலலிதா தொடங்கி வைத்தார். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தினால் 1.34
கோடி குடும்பங்கள் பயன்பெறுவார்கள். முதலமைச்சரின் விரிவான மருத்துவக்
காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளவும், மற்ற விவரங்களை அறியவும்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென்று தனியாக மையம்
அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திட்டத்தின் விவரங்கள் மற்றும் உதவி பெற
24 மணி நேர கட்டணம் இல்லா தொலைபேசி சேவையான18004253993 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு
திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வீதம், 4
ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1016 சிகிச்சைகள், 113
தொடர் சிகிச்சைகள் மற்றும் 23 நோய் அறிதல் கண்டுப்பிடிப்பு சிகிச்சைகள்
அனுமதிக்கப்படுகிறது. நோயாளிகளின் சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகள்,
காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். அறுவை சிகிச்சை
தேவைப்படாத பட்சத்தில் செலவழிக்கப்பட்டகட்டணத்தொகை வழங்க வழிவகை
செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டு தொகை தனியார் மருத்துவமனைகளுக்கு
வழங்குவது போலவே, அரசு மருத்துவமனைகளுக்கும் முழுமையாக வழங்கப்படும்.
இதன் மூலம், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும்
comments | | Read More...

நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி கைது

நடத்தையில் சந்தேகப்பட்டு தலைமுடியை அறுத்ததால் கணவரை செல்போன் சார்ஜரால்
கழுத்தை இறுக்கி, காதில் பூச்சி மருந்து ஊற்றி கொலை செய்த மனைவியிடம்
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி அருகே மூவாநல்லூரை சேர்ந்தவர் செல்வம்(35). வெளிநாட்டில்
வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சிவஜோதி (27). இவர்களுக்கு 2 வயதில்
பெண் குழந்தை உள்ளது. செல்வம் 15 தினங்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு
வந்தார்.
நேற்று முன்தினம் அவர் சேரன்குளத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு
சென்றார். அங்கு மனைவி சிவஜோதியும், அவரது குழந்தையும் மட்டும் தனியாக
இருந்தனர். மாமனார், மாமியார் தனது மூத்த மகளை பார்ப்பதற்காக சென்னை
சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று செல்வம் மாமனார் வீட்டில் மர்மமான
முறையில் சடலமாக கிடந்தார். அருகே மது பாட்டில்கள், ஒரு பூச்சி மருந்து
பாட்டில் கிடந்தது. கழுத்தில் இறுக்கிய தடம் காணப்பட்டது.
தகவலறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வத்தின்
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு
அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி சிவஜோதியிடம் போலீசார்
துருவிதுருவி விசாரணை நடத்தினர். அதில் அவர் கணவரை கொன்றதை
ஒப்புக்கொண்டார்.
போலீசாரிடம் அவர் கொடுத்த வாக்குமூலத்தில், "எனது நடத்தையில் கணவர்
சந்தேகப்பட்டார். இதனால் அடிக்கடி என்னிடம் தகராறு செய்வார்.
சம்பவத்தன்று இரவும் மதுகுடித்துவிட்டு வந்து தகராறு செய்தார். சண்டையில்
எனது தலைமுடியை அறுத்துவிட்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த நான்
அவருக்கு சாப்பாட்டில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்தேன். உடனே அவர்
தூங்கிவிட்டார். அதன்பின்னர் செல்போன் சார்ஜரால் அவரது கழுத்தை
இறுக்கினேன். ஆனாலும் அவர் இறந்திருப்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதனால், என்னை மிரட்டுவதற்காக அவரே வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை
எடுத்து அவரது காதில் ஊற்றி கொன்றேன்"
இவ்வாறு சிவஜோதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
comments | | Read More...

கள்ளக்காதலனுடன் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற கணவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45)
விவசாயி. இவரது மனைவி கல்யாணி (40). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவனை விட்டுப்
பிரிந்த கல்யாணி தனது மகன்களுடன் தனியே கெலமங்கலத்தில் உள்ள ஜீவா நகரில்
வசித்து வந்தார்.
அந்தப் பகுதியில் கல்யாணி மகளிர் குழு தலைவியாக இருந்தார். மேலும்
மாதாந்திர சீட்டும் நடத்தி வந்தார். கல்யாணிக்கும், தேன்கனிக்கோட்டை
அருகே உள்ள உச்சனப்பள்ளியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான வெங்கடேசன் (40)
என்வருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
வெங்கடேசன் பெங்களூரில் வாட்ச் கம்பெனி நடத்தி வந்தார். நேற்று முன்தினம்
இரவு வெங்கடேசன், கல்யாணியின் வீட்டிற்கு வந்தார். வீட்டின் மொட்டை
மாடியில் வெங்கடேசனும், கல்யாணியும் உல்லாசமாக இருந்தனர். அப்போது அங்கு
வந்த மர்ம நபர் அவர்கள் 2 பேரையும் வெட்டி படுகொலை செய்தார். இந்த இரட்டை
கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட கல்யாணிக்கு பலருடன் தொடர்பு இருப்பது
தெரியவந்தது. எனவே இந்த கொலை கள்ளத்தொடர்பு விவகாரத்தில் நடந்ததா? அல்லது
வெங்கடேசன் மீது ஏற்பட்ட தொழில்போட்டியில் யாராவது சமயம் பார்த்து
தீர்த்து கட்டினார்களா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
மேலும் கொலை செய்யப்பட்ட கல்யாணி, வெங்கடேசன் ஆகியோரின் உடலில் இருந்த
வெட்டு காயங்களின் அடிப்படையில் அவர்கள் செக்ஸ் தகராறில் கொலை
செய்யப்பட்டு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்த போலீசாரின்
கவனம் கல்யாணியின் கணவர் கிருஷ்ணமூர்த்தியின் மீது திரும்பியது. அவரை
பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கள்ளக்காதலனுடன் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி போலீசில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில்
கூறியிருப்பதாவது:-
எனது மனைவி கல்யாணி பணக்காரியாக, பகட்டான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டாள்.
சாதாரன விவசாயியான என்னால் அவளது ஆசையைபூர்த்தி செய்ய முடியவில்லை.
இதனால் என்னை பார்த்து கிண்டலாகபேசி சிரிப்பாள். இது ஆத்திரத்தை
ஏற்படுத்தி வந்தது. மேலும் கல்யாணி என்னை பார்த்து 'நீ ஒரு ஆம்பிளையா'
என்று கேட்பாள். இதனால் எனக்கு அவள் மீது வெறுப்பு ஏற்பட்டது. இதைத்
தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் நாங்கள் பிரிந்துவிட்டோம்.
இந்நிலையில் அவள் வேறு வீட்டிற்கு மகன்களுடன் தனியாக குடிபோனாள். அங்கு
மகளிர் சங்கம் ஆரம்பித்து தலைவியானாள்.மகளிர் குழு தலைவி என்பதால்
கல்யாணியை பார்க்க அடிக்கடி வீட்டிற்கு பல ஆண்கள் வந்து சென்றனர்.
அதேபோல் அ.தி.மு.க. பிரமுகரான வெங்கடேசனும் வந்து சென்றார். நாளடைவில்
அவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது.
பின்னர் வெங்கடேசன் கல்யாணியுடன் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தார். 2
மகன்களும் தூங்கிய பின்னர் இவர்கள் 2 பேரும் படுக்கையுடன் வீட்டின்
மொட்டை மாடிக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்தார்கள். கடந்த ஒரு
வாரமாக அவர்களைக் கண்கானித்தேன். அவர்கள் உல்லாசமாய் இருப்பதை நான்
நேரில் பார்த்தேன். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
எனவே அவர்களை கொலை செய்யவேண்டும் என்று திட்டம் போட்டேன். அதன்படி நேற்று
முன்தினம் இரவு வெங்கடேசன் கல்யாணியின் வீட்டிற்கு வந்தார். அவரை உள்ளே
அழைத்து சென்ற கல்யாணி அவருடன் மது குடித்தாள். 2 பேரும் மதுபோதையில்
மொட்டை மாடிக்கு சென்றதை கவனித்தேன். பின்னர் நானும் மொட்டை மாடிக்கு
நைசாக ஏறினேன்.
அங்கு அவர்கள் 2 பேரும் ஆடைகளை களைந்து உல்லாசம் அனுபவித்து கொண்டு
இருந்தனர். அந்த நேரத்தில் நான் திடீரென்று வீச்சரிவாளுடன் அங்கு
சென்றதும் அவர்கள் என்னை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆத்திரத்தில்
இருந்த நான் முதலில் வெங்கடேசனனை உடலின் பல இடங்களில் வெட்டினேன். என்
வெறி தீர வெட்டினேன். தொடர்ந்து கல்யாணியை வெட்ட முயன்றேன். அப்போது அவள்
2 கைகளாலும் என்னை தடுத்தாள். இதில் வெட்டுப்பட்டுஅவளது 2 கைகளும்
துண்டானது. பின்னர் ஆத்திரம் தீராத நான் அவளது கழுத்தை அறுத்து துடிக்க,
துடிக்க, கொலை செய்தேன்.
2 பேரும் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி இறந்ததை நேரில் கண்டு
சந்தோசம் அடைந்தேன். பின்னர் அதே பகுதியில் உள்ள ஒரு விறகு மண்டியில்
போய் படுத்து கொண்டேன். பின்னர் என்னை பிடித்து போலீசார் விசாரித்தபோது
உண்மையை ஒத்துக்கொண்டேன்.
கணவனை ஏமாற்றி விட்டு கல்யாணி போல் மற்ற ஆண்களுடன் உறவு வைக்கும்
பெண்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். கட்டிய கணவன் என்று கூட பாராமல்
என்னை மிகவும் அவமானப்படுத்தியவள் கல்யாணி என்று ஆவேசமாக கூறினார்.
இதையடுத்து போலீசார் கிருஷ்ணமூர்த்தியை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில்
நீதிபதி இன்ப கார்த்திக் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். அவரை நீதிபதி
15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து கிருஷ்ணமூர்த்தி சேலம்
சிறைக்கு கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டார்.
comments | | Read More...

3-ம் தேதி உலகெங்கும் 'கொலவெறி'புகழ் '3'

2011 மற்றும் 2012 ன் அதிரடி ஹிட் பாடலான ' ஒய் திஸ் கொலவெறிடி... '
இடம்பெற்ற தனுஷின் '3' படம் வரும் பிப்ரவர் 3- ம் தேதி உலகமெங்கும்
வெளியாகிறது.
பாமரன் தொடங்கி பிரதமர் வரை பாராட்டிய பாடல் இந்த கொலவெறி. அதே நேரம்
விமர்சனங்களுக்கும் குறைவில்லை.
இந்த நிலையில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ள '3' படம் வரும் பிப்ரவரி 3- ம்
தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா
இயக்க , தனுஷ் ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு பெரும்
எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளதால் , அதிக திரையரங்குகளில் வெளியிடத்
திட்டமிட்டுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த நிறுவனம் பெரும் விலைக்கு இந்தப் படத்தின் வெளியீட்டு
உரிமையை வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
படத்தில் பிரபு , ரேஹினி , மயக்கம் என்ன படத்தில் நடித்த சுந்தர் மற்றும்
சிவ கார்த்திகேயன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத்
இசையமைத்துள்ளார்.
' கொலைவெறி ' ஹிட்டுக்காக பார்ட்டி
இதற்கிடையே , கொலைவெறிப் பாடல் சூப்பர் ஹிட்டான சந்தோஷத்தை நண்பர்கள்
மற்றும் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர் தனுஷும் அவர் மனைவியும்
இயக்குநருமான ஐஸ்வர்யாவும்.
செவ்வாய்க்கிழமை மாலை ஜிஆர்டி ஹோட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில்
படத்தின் முக்கிய கலைஞர்களும் பங்கேற்றனர். கொலைவெறிப் பாடலுக்கு கிடைத்த
வெற்றி , படத்துக்கும் கிடைக்க வேண்டுமேஎன்ற பதட்டம் தனக்கு இருப்பதாக
ஐஸ்வர்யா தெரிவித்தார்.
இதுநாள்வரை மீசை , தாடியுடன் தோற்றமளித்த தனுஷ் இப்போது , மழுமழு
முகத்துடன் ' துள்ளுவதோ இளமை ' ஸ்டைலில் வந்திருந்தார்.
comments | | Read More...

கோச்சடையானில் ரஜினிக்கு ஜோடியாக வித்யா பாலன்?!

கோச்சடையான் படத்தில் ரஜினி ஹீரோ... சினேகா தங்கச்சி என்பதைத் தவிர வேறு
எந்த தகவலும் இன்னும் உறுதி செய்யப்படாததாகவே உள்ளது.
ஆரம்பத்தில் அனுஷ்காதான் ஹீரோயின் என்றார்கள். அப்படியே கத்ரினா கைஃப் ,
கரீனா கபூர் , தீபிகா படுகோன் என ஒரு ரவுண்ட் அடித்து மீண்டும் கத்ரினா
கைஃதான் ஹீரோயின் என்றார்கள்.
ஆனால் அவரோ வேறு படங்களில் பிஸியாக உள்ளாராம் சௌந்தர்யா கேட்கும் தேதிகளில்.
எனவே இப்போது வித்யா பாலன் நடிப்பார் என்கிறார்கள். ஏற்கெனவே ராணா
படத்தில் இவர் நடிப்பதாக இருந்து , பின்னர் விலகியவர் என்பதால் , ரஜினி
பட ஹீரோயின் என்ற வாய்ப்பை அவர் இந்த முறை பெற விரும்புவதாகத் தெரிகிறது.
தி டர்ட்டி பிக்சருக்குப் பின் வித்யாபாலனின் மார்க்கெட் பாலிவுட்டில்
வலுவாக உள்ளதால் அவரை சௌந்தர்யா ஓகே செய்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
இதற்கிடையே , கோச்சடையானுக்காக மோஷன் கேப்சரிங் பணிகள் நடந்து
வருவதாகவும் , இதில் ரஜினி பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.
comments | | Read More...

புகார் கொடுக்க வந்த மாணவிக்கு கமிஷனர் ஆபீசில் அடி, உதை

தன்னை விட 20 வயது மூத்தவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்முயல்வதாக
கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த கல்லூரி மாணவியையும், உடன்
வந்த வக்கீலையும் உறவினர்கள் தாக்கினர். இதனால் கமிஷனர் அலுவலகத்தில்
பரபரப்பு ஏற்பட்டது. புழுதிவாக்கம் செங்கழனி அம்மன் கோயில் தெருவை
சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகள் கவிதா (20). மேடவாக்கத்தில்உள்ள
கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படிக்கிறார். நேற்று காலை போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில் புகார் கொடுக்க வக்கீல் சண்முகராஜனுடன் வந்தார். கமிஷனர்
அலுவலக வரவேற்பு அறையில் கவிதாவும், வக்கீலும் பெயர் பதிவு செய்து
காத்திருந்தனர்.
அப்போது, கவிதாவின் தந்தை குப்புசாமி, தாய் மைதிலி மற்றும் உறவினர்கள் 3
பேர் கமிஷனர் அலுவலகம் வந்து கவிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திடீரென அவர்கள் வக்கீலை தாக்கினர். இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம்
கொட்டியது. கவிதாவின் தலைமுடியைபிடித்து இழுத்து சரமாரியாக தாக்கினர்.
இதனால் வரவேற்பு அறையில் இருந்த பெண் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வந்து அவர்களை தடுக்க முயன்றனர்.
ஆனாலும் கவிதாவின் உறவினர்கள் தொடர்ந்து தாக்கினர்.
பின்னர் மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் வந்து, அவர்களை ஜீப்பில் ஏற்றி
எழும்பூர் போலீஸ் நிலையம் அனுப்பி வைத்தார். காயம் அடைந்த வக்கீல்
சண்முகராஜன் ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விசாரணைக்காக
கவிதாவும் அழைத்து செல்லப்பட்டார்.
இதுபற்றி கவிதா போலீசாரிடம் கூறியதாவது: பத்தாம் வகுப்பு படிக்கும் போதே,
எனக்கு 52 வயதுள்ளவரை திருமணம் செய்ய பெற்றோர் முயற்சி செய்தனர். என்
வகுப்பு ஆசிரியர் தலையிட்டு தடுத்து மேலும் படிக்க ஏற்பாடு செய்தார்.
கல்லூரியில் படித்து வரும் நிலையில் என்னை விட 20 வயது மூத்தவருக்கு
திருமணம் செய்து வைக்க ரகசிய ஏற்பாடுகளை செய்கின்றனர்.
கல்லூரிக்கு செல்லவிடாமல் அறையில் அடைத்து வைத்து
கொடுமைப்படுத்துகின்றனர். வீட்டை விட்டு தப்பித்து மடிப்பாக்கம் போலீசில்
புகார் செய்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்
உறவினர்களை அழைத்து சமாதானம் செய்தனர். நான் போக மறுத்ததும் என் மீது
விபசார வழக்கு போட்டு சிறையில் அடைப்போம் என பெண் போலீசார் மிரட்டினர்.
அதன்பின் கடந்த 6ம் தேதி வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன்.
பாதுகாப்பு கருதி எனது கல்லூரி பேராசிரியை வீட்டில் தங்கி இருந்தேன்.
அப்போது என்னை காணவில்லை என கூறி பெற்றோர் மடிப்பாக்கம் போலீஸ்
நிலையத்தில் புகார் கொடுத்தனர்.அதனால் எனது வக்கீலுடன்
கமிஷனர்அலுவலகத்தில் புகார் மனு அளிக்கவந்தேன். போலீசார் எனக்கு தக்க
பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கவிதா அழுது கொண்டே கூறினார்.
கவிதாவின் தந்தை குப்புசாமி கூறுகையில், "எனது மகள் கூறுவது பொய். சிலரது
பேச்சை கேட்டுக் கொண்டு எங்கள் மீது பொய் புகார் கொடுக்கிறார். ஏற்கனவே
வேறு ஒருவருடன் அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. நான்
செக்யூரிட்டி வேலை பார்த்து தான் படிக்க வைக்கிறேன். பாசமாக வளர்த்த என்
மீதே இப்படி பொய் புகார் கொடுப்பதை நினைத்தால் நெஞ்சு வலிக்கிறது.
வயதானவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யவில்லை" என்று கண்ணீர் மல்க
கூறினார்.
கவிதாவின் தந்தை குப்புசாமி, தாய் மைதிலி, பெரியப்பா கஜேந்திரன்,
பெரியம்மா கஜலட்சுமி, அண்ணன் மணி ஆகியோர் நேற்று மாலை கைது
செய்யப்பட்டனர். பின்னர் 5 பேரையும் போலீசார் எழும்பூர் 14வது
மாஜிஸ்திரேட் கீதாராணி முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
தாக்கப்பட்ட வக்கீல் சண்முகராஜன் கூறுகையில், "எனது மனைவி தான்
கவிதாவுக்கு பேராசிரியை. சில நாட்களுக்கு முன்பு கவிதா என் மனைவியிடம்
வந்து வீட்டில் பெற்றோர், வயதானவருக்கு தன்னை திருமணம் செய்து வைக்க
முயற்சி செய்வதாக கூறினார். இதுபற்றி நானும் அறிந்தேன். எங்களிடம் கவிதா
அடைக்கலம் கேட்டார். அதனால்தான்கவிதாவுடன் புகார் கொடுக்க கமிஷனர்
அலுவலகம் வந்தேன். போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலேயே அவர்கள் தாக்குதல்
நடத்தியது கொடுமையான செயல். இதுபற்றி எழும்பூர் போலீஸ் நிலையத்தில்
புகார் செய்துள்ளேன்" என்றார்.
comments | | Read More...

ஆந்திர விபசார அழகி கொலை

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி நகரை சேர்ந்தவர் புவனாரெட்டி (வயது 25). இவர்
சென்னை முகப்பேர் கிழக்கு, கலெக்டர் நகரில், ஒரு அடுக்குமாடி
குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் புவனாரெட்டி கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த போலீஸ்
இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் பிரேமானந்த்சின்கா ஆகியோரின் உத்தரவின்
பேரில் உதவி கமிஷனர் கலி தீர்த்தான் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்
சுரேந்திரன் மற்றும் போலீசார் கொலை சம்பந்தமாக தீவிர விசாரனை
நடத்தினார்கள்.
கொலையுண்ட புவனாரெட்டியின் தோழி சபிதாபானுவிடம் போலீசார் துருவி துருவி
விசாரித்தனர். அவர் கூறிய தகவலின்படி, புவனாவை 3 வருடமாக கீழ்ப்பாக்கம்
நேரு பார்க் ஹவுசிங் போர்டில் வசிக்கும் சுரேஷ் (29) என்பவர் காதலித்து
வந்தது தெரியவந்தது.
எனவே இந்த கொலையை காதலன் சுரேஷ் செய்திருக்க கூடும் என அவர் மீது
சந்தேகப்பட்ட போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். அவரின் செல்போன்
நெம்பர் முகவரியை கண்டுபிடித்து, அதன் அடிப்படையில் தேடிய போலீசார்
நேற்று இரவு வாலிபர் சுரேசை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போது போலீசாரிடம் அவர்
வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். புரசைவாக்கத்தில் உள்ள ஒரு
கம்பெனியில் அலுமினிய டிசைனராக வேலை செய்து வந்தேன். அப்போது
புவனாரெட்டியுடன் அறிமுகம் ஆனேன். பின்னர் அடிக்கடி சந்தித்து பேசினேன்.
புவனா பணத்திற்காக வீட்டிலே விபசாரம் செய்து வந்தார். அந்த வகையில்
நானும் அவரின் அழகில் மயங்கி பணம் கொடுத்து அவருடன் உல்லாசமாக இருந்தேன்.
அடிக்கடி சென்று வந்ததால் நான் அவரின் முக்கிய வாடிக்கையாளராகி விட்டேன்.
பின்னர் புவனா பிடித்து போகவே அவரை 3 வருடமாக காதலித்து வந்தேன்.
கடந்த டிசம்பர் மாதம் 30-ந் தேதி முதல் ஜனவரி 4-ந் தேதி வரை இருவரும்
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள புவனாரெட்டியின் வீட்டில்
இருந்தோம். அவரின் தந்தை பெயர் பாஸ்கரரெட்டி. 3 தம்பிகள்
உண்டு.அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி, என்னையே திருமணம் செய்யப்
போவதாக புவனாரெட்டி அவர்களிடம் கூறினார். மீண்டும் சென்னை திரும்பினோம்.
கடந்த வெள்ளிக்கிழமை புவனா எனக்கு போன் செய்து என்னை வீட்டிற்கு வர
சொன்னார். நான் போகவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு புவனாவை தேடி சென்றேன்.
அப்போது அவர் என்னிடம் ஏன் கூப்பிட்ட போது வரவில்லை என்று தகராறு
செய்தார்.
மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி நச்சரித்தார்.
`நான் ஏற்கனவே திருமணம் ஆனவன். அவர்களுக்கு என்ன சொல்வது? என்ற
நினைப்பால் புவனாவின் வற்புறுத்தல் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் சமையல் கட்டில் இருந்த கத்தியை எடுத்து புவனாரெட்டியின் கழுத்தில்
குத்தினேன். அதில் அவர் இறந்ததை அறிந்து கத்தியை அங்கேயே போட்டுவிட்டு
அன்று இரவே தப்பிவிட்டேன்.
இவ்வாறு சுரேஷ் கூறினார்.
comments | | Read More...

அந்தமான் பழங்குடியின பெண்களை கட்டாயப்படுத்தி அரைநிர்வாண நடனம் ஆடவைத்த போலீசார் - வீடியோ

இந்தியாவில், அந்தமான் தீவில் உள்ள ஜராவா பழங்குடியின மக்களுக்கு உணவு
கொடுத்து அவர்களை கட்டாயப்படுத்தி அரை நிர்வாண நடனம் ஆட வைத்த தகவல்
வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு அந்தமானில் ஜராவா பழங்குடியினத்தைச் சேர்ந்த 403பேர்
வாழ்கின்றனர். அவர்களை சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து காக்க வேண்டிய
போலீசாரே அவர்களைகட்டாயப்படுத்தி அரை நிர்வாண நடனம் ஆட வைத்துள்ளனர்.
இந்த வீடியோவை தி அப்சர்வர் என்ற இங்கிலாந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் ஒரு போலீஸ்காரர் நான் தான் உங்களுக்கு உணவு கொடுத்தேனே.
இப்பொழுது நடனம் ஆடுங்கள் என்கிறார். குட்டைப் பாவாடை மட்டும் அணிந்த அரை
நிர்வாண பழங்குடியினப் பெண்கள் வெட்கப்பட்டு சிரிக்கின்றனர். ம் ஆடுங்கள்
என்று அந்த போலீஸ்காரர் கூறுகிறார். உடனே அவர்களும் மெதுவாக
ஆடுகின்றனர்.இதை அங்கு நின்று கொண்டிருக்கும் சுற்றுலாப் பயணிகள்
பார்த்து ரசிக்கின்றனர்.
அந்த சுற்றுலாப் பயணிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் போலீசார்
இவ்வாறு செய்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இன்னும் 24 மணிநேரத்திற்குள்
அறிக்கை சமர்பிக்குமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அநத வீடியோ கடந்த 2002-ம் ஆண்டு எடுத்தது. அதை எடுத்தவர்கள் விதிமுறைகளை
மீறியுள்ளனர். எனவேஅவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று
அந்தமான் டிஜிபி எஸ்பி தியோல் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த வீடியோ அண்மையில் எடுக்கப்பட்டதாக தி அப்சர்வர் செய்தியாளர்
கெதின் சாம்பர்லைன் தெரிவித்துள்ளார். வெறும் ரூ.15,000த்தை போலீசாருக்கு
லஞ்சமாக கொடுத்து தான் பழங்குடியினப் பெண்களை நடனம் ஆடச் செய்துள்ளனர்
என்று அவர் தெரிவித்துள்ளார்.
comments | | Read More...

பசுபதி பாண்டியன் கொலைக்கான காரணம்?-பரபரப்பு தகவல்கள்

பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்னஎன்பது குறித்து
பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பசுபதி பாண்டியனுக்கும் மூலக்கரை பண்ணையார் குடும்பத்தினருக்கும் பழிக்கு
பழியாக நடந்த மோதல்களில் பலர் உயிர் இழந்துள்ளனர். அந்த முன்விரோதமே
இப்போது பசுபதி பண்டியனின் மரணத்திற்கும் காரணமாகியுள்ளதாக கூறப்படுகிறு.
கொலை வழக்கில் பிரபலம்
தூத்துக்குடி மேலஅலங்காரதட்டையைச் சேர்ந்த சிதம்பரம் மகன் பசுபதி
பாண்டியன். 1990ம் ஆண்டில் அந்த பகுதியில் இரு பிரினரிடையே அடிக்கடி
தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக 31-8-90ல் சிலுவைபட்டி மிக்கெல்
என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதன் முதலாக பசுபதி
பாண்டியன் சேர்க்கப்பட்டார்.
25-12-90ல் தூத்துக்குடி அருகேகிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த அந்தோணிசாமி
என்ற வாலிபர் கொலை வழக்கிலும் பசுபதி பாண்டியன் பெயர் சேர்க்கப்பட்டது.
அதன்பின்னர் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களிடையே பசுபதி பாண்டியன்
பெயர் பிரபலமானது.
மூன்று முறை குண்டர்சட்டம்
நெல்லை , தூத்துக்குடி மாவட்டங்களில் பசுபதி பாண்டியன் மீது 18 வழக்குகள்
பதிவாகின. இதில் 9 கொலை வழக்குகள் ஆகும். பசுபதி பாண்டியன் கடந்த 97ம்
ஆண்டு தூத்துக்குடி பின்னிங் மில் தொழிற்சங்க தலைவர் பால்ராஜை கொலை செய்த
வழக்கிலும் தொடர்புடையவர். மேலும் 3 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில்
இவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மூலக்கரை பண்ணையார்
1990 களில் பழைய காயல் அருகே புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர்களும் ,
மூலக்கரை பண்ணையார் சிவசுப்பிரமணிய நாடார் என்பவருக்கும் உப்பளத்திற்கு
தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு நடந்து வந்தது. இதில்
பசுபதிபாண்டியனின் புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக
செயல்பட்டார்.
மேலும் பசுபதி பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் 24-1-93ல்
சிவசுப்பிரமணிய நாடார் மகன் அசுபதி பண்ணையாரை கொலை செய்தனர். இவர் சுபாஷ்
பண்ணையாரின் தந்தையும் , வெங்கடேஷ பண்ணையாரின் சித்தாப்பாவும் ஆவார்.
பலமுறை உயிர்தப்பியவர்
இதற்கு பழி வாங்கும் நோக்கில் 21-4-93ல் தூத்துக்குடி சுப்பையா
முதலியார்புரத்தில் பசுபதி பாண்டியனை கொலை செய்ய முயற்சி நடந்தது.
இதில் அவரது நண்பர் பொன்இசக்கி பலியானார். படுகாயங்களுடன் பசுபதி
பாண்டியன் உயிர் தப்பினார். 8-7-93ல் சிவசுப்பிரமணிய நாடாரை
பசுபதிபாண்டியன் மற்றும் அவரதுகூட்டாளிகள் கொலை செய்தனர். மீண்டும் இரு
தரப்பினருக்கும் இடையே அடுத்தடுத்து மோதல்கள் நடந்தன. இதில் இரு
தரப்பிலும் பலர் உயிர் இழந்தனர்.
கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மனைவியுடன் தூத்துக்குடிக்கு
வந்து கொண்டுஇருந்த போது , எப்போதும் வென்றான் அருகே வெடிகுண்டு வீசியும்
, அரிவாளால் வெட்டப்பட்டதில் ஜெசிந்தா பாண்டியன் இறந்தார். இந்த நிலையில்
5 ஆண்டுகளுக்குப்பின்னர் பழிக்குப் பழியாக பசுபதி பாண்டியன் வெட்டிக்கொலை
செய்யப்பட்டுள்ளார்.
தற்போது பசுபதி பாண்டியனைக் கொன்றது பண்ணையார் ஆதரவாளர்களாஅல்லது வேறு
குரூப்பா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger