சென்னை மாநகரில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் ஆணையாளர் அபய் குமார்சிங், விபசார தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் கிங்ஸ்லின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சாண்டி யாகோவுக்கு சினிமா படப் பிடிப்பு இல்லாத நாட்களில் துணை நடிகைகளை ஆசை வார்த்தை கூறி விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக தகவல் கிடைத்தது.
ஒரு பெண்ணிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். வாடிக்கையாளர் போல் பேசினர். மறுமுனையில் பேசிய பெண் தன்னிடம் அழகான இளம் துணை நடிகைள் இருவர் இருப்பதாகவும் துணை நடிகைக்கு ரூ. 25 ஆயிரம், அவரது தங்கைக்கு ரூ. 15 ஆயிரம் என ரூ. 40 ஆயிரம் பணத்துடன் குறிப்பிட இடத்திற்கு வந்தால் அழகான துணை நடிகைகளை அழைத்து சென்று உல்லாசமாக இருக்கலாம் என கூறினார்.
இதற்கு சம்மதம் தெரிவித்து வாடிக்கையாளர் போல் பேசிய விபசார தடுப்பு பிரிவு போலீசாரை கிண்டி ரெயில் நிலையம் அருகில் பணத்துடன் வருமாறு கூறி வரவழைத்தார்.
மாறு வேடத்தில் இருந்த போலீசாரிடம் மாடர்ன் உடையில் இருந்த பெண்களை காட்டி பணம் வாங்க முற்பட்டபோது அப்பெண் விபசாரம் செய்வதை உறுதி செய்த விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அப் பெண்ணை கைது செய்து அங்கு அவருடன் விபசாரத்தில் ஈடுபட வைத்திருந்த 2 இளம்பெண்களை மீட்டனர்.
விசாரணையில் விபசாரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சோபனா (46) என்றும் இவர் சில திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாகவும் தற்போது வெளிவர இருக்கும் ஒரு சினிமாவில் நடித்திருப்பதாகவும் மறைந்த பழம் பெரும் நடிகர் ராமதாசின் நெருங்கிய உறவினர் என்பதையும் தெரிவித்தார்.
மேலும் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்த சகோதரிகள் இருவரை வைத்து படப்பிடிப்பு இல்லாத நாட்களில் விபசார தொழில் செய்து வந்தது தெரிய வந்தது.மீட்கப்பட்ட அப்பெண்கள் சில படங்களில் துணை நடிகைகளாக நடித்து இருக்கிறார்கள்.
இதே போன்று சென்னை சூளைமேடு பகுதியில் சினிமா துறையில் வாய்ப்பு தருவதாக கூறி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஜெயராஜ், மோசஸ் என்பவரையும், சாந்தி என்ற பெண்ணையும் கைது செய்தனர். அவர்களுடன் 4 இளம்பெண்களையும் போலீசார் மீட்டனர். சாந்தி சில திரைப்படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருப்பது விசாரணையில் தெரிந்தது.
Post a Comment