நாகர்கோவில்: பிரபல ரவுடி பார் ஊழியரை கொன்றது கூலிப்படை நாகர்கோவில்: பிரபல ரவுடி பார் ஊழியரை கொன்றது கூலிப்படை
என்.ஜி.ஓ. காலனி, செப். 28-
நாகர்கோவில் பணிக்கன் குடியிருப்பை சேர்ந்தவர் பிரபல ரவுடி சந்திரமோகன் (வயது 44). இவர் கடந்த ஓராண்டாக தெங்கம்புதூரில் டாஸ்மாக் பார் எடுத்து நடத்தி வந்தார். நேற்று இரவு 7.30 மணிக்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் பாருக்குள் அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்த சந்திரமோகனிடம் நீதானே சந்திரமோகன்? என கேட்ட அந்த கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தலை, மார்பு என உடல் முழுவதும் பல இடங்களில் சரமாரியாக வெட்டியது. இதை பார்த்த பார் ஊழியர்களான ராமர், மது ஆகியோர் கும்பலை தடுக்க முயன்றனர். இதில் ராமருக்கு தலையில் 4 அரிவாள் வெட்டு விழுந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். மதுவுக்கு கையில் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்திரமோகனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்à ��ட்ட சந்திரமோகன் வழியிலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். கொலையாளிகளை பிடிக்க கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சந்திரமோகன் 1992-ம் ஆண்டு சென்னையில் நடந்த குமரியை சேர்ந்த மற்றொரு பிரபல ரவுடியான தங்கபாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். இதையடுத்து 1993-ம் ஆண்டு சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் 94-ம் ஆண்டு தென்தாமரைகுளத்தில் நடந்த இரட்டைக்கொலை, 96-ல் குமரியை கலக்கிய பிரபல ரவுடி லிங்கம் கொலை, 2001-ல் சொத்தவிளை பீச்சில் வைத்து ப�® �னிசாமி என்பவர் கொலை ஆகிய வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதில் பழனிசாமி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார்.
இதுதவிர சென்னை, ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி வழக்கு உள்பட மொத்தம் 14 வழக்குகள் சந்திரமோகன் மீது பதிவு செய்யப்பட்டது. அனைத்து வழக்குகளும் முடிந்த பின் சமீப காலமாக ஒதுங்கியிருந்த சந்திரமோகன் கடந்த ஓராண்டாக குளத்தில் மீன் பிடிக்க குத்தகைக்கு எடுத்தும் மற்றும் டாஸ்மாக் பார் ஏலம் எடுத்தும் நடத்தி வந்தார். இதற்கிடையே, கடந்த உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவி கிருபாவதியை காங்கிரஸ் கட்சி சார்பில் புத்தளம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு நிறுத்தினார். எனினும் கிருபாவதி தோல்வியடைந்தார். தற்போது, பழிக்குப்பழியாக சந்திரமோகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் சந்திரமோகனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து போலீசார் பட்டியல் எடுத்து விசாரித்தனர். இதில் சந்திரமோகனால் கொலை செய்யப்பட்ட ஒருவரின் மகன் சமீபகாலமாக அடிக்கடி சுசீந்திரம் பகுதிக்கு வந்து சென்றது தெரியவந்துள்ளது. அவர் எதற்காக இங்கு வந்து சென்றார்? பழிக ்குப்பழி வாங்கும் நோக்கில் கூலிப்படையை ஏவி சந்திரமோகனை கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் சந்திரமோகனால் பாதிக்கப்பட்ட மற்ற ரவுடிகள் தற்போது எங்கு இருக்கிறார்கள்? அவர்கள் தான் இந்த கொலையை செய்தார்களா? அல்லது உள்ளாட்சி தேர்தல் விரோதத்தில் இந்த கொலை நடந்ததா? என்ற ரீதியிலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரமோகன் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் ரோட்டோரத்தில் அமர்ந்து மது அருந்திய ஒருவரை அடித்து உதைத்ததாக கூறப்படு�® �ிறது. காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோதும், இது தொடர்பாக போலீசில் புகார் செய்யாமல் இருந்துள்ளார். இந்த தகராறில் சந்திரமோகன் கொலை செய்யப்பட்டாரா? எனவும் விசாரணை நடக்கிறது.
கும்பல் வெட்டியதில் காயமடைந்த பணிக்கன்குடியிருப்பை சேர்ந்து மது (44) ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொலையாளி களை கண்டால் அடையாளம் தெரியும் என கூறியதாக தெரிகிறது. எனவே அவர் கொடுக்கும் தகவல்களை வைத்து கொலையாளிகளின் படங்களை வரைந்து, அதை வைத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Post a Comment