News Update :
Powered by Blogger.

3 Ways to Last Longer In Bed

Penulis : karthik on Tuesday, 18 September 2012 | 05:16

Tuesday, 18 September 2012



3 Ways to Last Longer In Bed 3 Ways to Last Longer In Bed
3 Ways Last Longer Bed

நிறைய பேருக்கு இந்தக் கவலை இருக்கும். படுக்கை அறையில் என்னால் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க முடியவில்லை, மனைவியை நீண்ட நேரம் திருப்திப்படுத்த முடியவில்லை, என்னால் முடியவில்லையே என்று பலரும் வருந்திக் கொள்வார்கள் - உள்ளுக்குள். கவலைய விடுங்க, உங்க கிட்டேயே இ�® �ற்கான வைத்தியம் இருக்கு. அதைப் பார்ப்போம் வாருங்கள்...

உச்சகட்டம் எனப்படும் கிளைமேக்ஸை அடைவதற்கு முன்பே சில தந்திரங்களை நாம் பயன்படுத்தினால் நீடித்த இன்பத்தை எளிதில் அடைய முடியும். இதற்காக மருத்துவர்களிடமோ, வயகாரா போன்ற மருந்துகளிடமோ நாம் தஞ்சம் புகத் தேவையில்லை.

நிறுத்துங்கள் - தொடருங்கள் - நிறுத்துங்கள்

இது ஒரு டெக்னிக். அதாவது உறவை ஆரம்பித்து மும ்முரமாக போய்க் கொண்டிருக்கும்போது விந்தனு வெளியேறப் போவது போல தோன்றும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். சில விநாடிகள் ஓய்வெடுங்கள். அதாவது 5 முதல் 10 விநாடிகள் வரை. இப்போது சற்று வேகம் குறைந்திருக்கும். பிறகு மீண்டும் உறவைத் தொடருங்கள். இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இதன் மூலம் உங்களுக்கும் நீண்ட நேரம் உறவில் இருந்தது போல இருக்கும். உங்களது தà ��ணைக்கும் தேவையான இன்பம் கிடைக்கும்.

ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட்டம் வர நேரமாகும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத்தான் நிறைய இன்பம் கிடைக்கும்.

பிசைந்து கொடுங்கள்...

அடுத்து இன்னொரு டெக்னிக் இருக்கு. அதாவது உறவின்போது உச்சகட்டம் வரும் போல தெரியும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். பின்னர் ஆண்குà ��ியின் பின்னால் உள்ள டியூப் போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பிசைந்து கொடுங்கள். அப்படிச் செய்யும்போது உணர்வு மட்டுப்படும், விந்தனு வெளியேறுவதை சற்றே தடுத்து நிறுத்தலாம். உணர்வு வெகுவாக குறைந்ததும் மறுபடியும் உறவைத் தொடருங்கள்.

உணர்ச்சிகளைத் தூண்டாத ஆணுறை...

இதேபோல இன்னும் ஒரு எளிமையான விஷயம், ஆணுறை. அதாவது சில ஆணுறைகள் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் �® �ூண்டுவதில்லை. அப்படிப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.

இந்த வகை ஆணுறைகளில் பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டாலும் கூட உணர்வுகள் உச்சகட்டத்தை அடைய சற்று அவகாசம் பிடிக்கும். நீண்ட நேர இன்பத்தை விரும்புவோருக்கு இந்த வகை ஆணுறைகள்தான் சரிப்பட்டு வரும்.

அதேசமயம், இப்படிப்பட்ட ஆணுறைகளை அணிவதற்கு முன்பு தலைகீழாக மாற்றி போட்டு விடாதீர்கள். பிறகு தவறாகப் போய், நீடித்த இன்பத்திற்குப் பதில், சுருக்கமாக முடிந்து போய் கசப்பாகி விடக் கூடும்.

இதுபோல நிறைய இருக்கிறது... அனுபவத்தின் மூலம் அறிந்து இன்பத்தை நுகருங்கள்...!


comments | | Read More...

2020 ம் ஆண்டுக்குள் அணுமின் நிலையங்கள் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி: மத்திய மந்திரி நாராயணசாமி



2020 ம் ஆண்டுக்குள் அணுமின் நிலையங்கள் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி: மத்திய மந்திரி நாராயணசாமி 2020 ம் ஆண்டுக்குள் அணுமின் நிலையங்கள் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி: மத்திய மந்திரி நாராயணசாமி

கோவை, செப். 18-

கோவையை அடுத்த பாலத்துறையில் உள்ள கலைவாணி தொழில் நுட்ப கல்லூரியில் இந்தியாவில் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி செயலாளர் குமாரசாமி தலைமை தாங்கினார். தாளாளர் சி.கே.சுந்தரம் முன்னிலை வகித்தார். தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டு வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-

நாட்டின் எரிசக்தி தேவை 2.45 லட்சம் மெகாவாட்டாக உள்ளது. நிலக்கரி மூலமாக 45 சதவீதம் அளவுக்கு மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் சுற்று சூழல் முறைகேடு, அதிக செலவீனம் போன்றவை நிலக்கரி மின் உற்பத்தி சவாலாக உள்ளன. தூய்மையான, குறைந்த செலவுள்ளதாக அணுமின் உற்பத்தி உள்ளது. அணுமின் உற்பத்திக்கென அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், தென்கொரியா நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

வருகிற 2020-ம் ஆண்டுக்குள் அணுமின் நிலையங்கள் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் 300 கிலோ யுரேனியத்தை அணு உலையில் நிரப்புவதன் மூலமாக ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை பெற முடியும். 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் 70 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

comments | | Read More...

திருச்சியில் கைதான பாக். உளவாளி அன்சாரியின் சதி திட்டம் அம்பலம்: தீவிரவாதிகள் ஊடுருவ கடலோர பகுதிகளை படம் பிடித்தான்



திருச்சியில் கைதான பாக். உளவாளி அன்சாரியின் சதி திட்டம் அம்பலம்: தீவிரவாதிகள் ஊடுருவ கடலோர பகுதிகளை படம் பிடித்தான் திருச்சியில் கைதான பாக். உளவாளி அன்சாரியின் சதி திட்டம் அம்பலம்: தீவிரவாதிகள் ஊடுருவ கடலோர பகுதிகளை படம் பிடித்தான்

சென்னை, செப். 18-

தஞ்சை  மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல்ரஹ்மான் என்பவரின் மகன் தமீம் அன்சாரி (வயது35). தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அழகம்மாள் நகர், தாஜ் ரெசிடென்சி என்ற முகவரியில் வசித்து வந்த தமீம் அன்சாரி வெங்காய வியாபாரி என்ற போர்வையில் பாகிஸ்தான் உளவாளியாக செயல்படுவதை உளவுத்துறை கண்டுபிடித்து எச்சரித்தது.

தமிழக கியூ பிரிவுப் போலீசார் கடந்த சில தினங்களாக தமீம் அன்சாரியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்தனர். அவர் தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளைப் படம் பிடித்து சி.டி.யாக தயாரித்து வைத்திருப்பதை அறிந்தனர். அந்த சி.டி.க்களுடன் நேற்று அவர் இலங்கை புறப்பட்டு செல்வது கியூ பிரிவு போலீசாருக்கு தெரிய வந்தது.

திருச்சி விமான நிலையத்துக்கு தமீன் அன்சாரி வந்து கொண்டிருந்தபோது திருச்சி கியூ பிரிவு போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரது உடமைகளை சோதித்துப் பார்த்தபோது அவற்றில் சி.டி.க்கள், புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் தஞ்சை, அதிராம்பட்டினத்தில் உள்ள 'லபீர் எக்ஸ் போர்ட்ஸ்' என்ற தமீம் அன்சாரியின் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அந்த ஆவணங்கள் அனைத்தும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும், தமீம் அன்சாரிக்கும் ரகசிய தொடர்பு இருப்பதை உறுதிபடுத்தின.

இதையடுத்து இந்திய உளவு அமைப்பின் மூத்த அதிகாரிகள் தமீம் அன்சாரியிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

தமீம் அன்சாரி தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை நடத்தி வந்தார். முதலில் அந்த நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்கியது.

கடந்த சில மாதங்களாக தமீம் அன்சாரி தொழிலில் வீழ்ச்சி ஏற்பட்டு நஷ்டம் உண்டானது. மிகக்குறுகிய காலத்தில் நிறைய பணம் சம்பாதித்து கோடீசுவரனாகி விடவேண்டும் என்ற கனவில் இருந்த அன்சாரியால், தொழில் நஷ்டத்தை தாங்கிக் கொள்ள இயலவில்லை.

இந்த சமயத்தில் தமீம் அன்சாரிக்கு, இலங்கை வாழ் தமிழரான ஹாஜி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் கை நிறைய பணம் கிடைக்க வழி காட்டுவதாக கூறி கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு அழைத்து சென்றார்.

அந்த தூதரகத்தில் மூத்த அதிகாரியாக அமீர் ஜுபைர் சித்திக் என்பவர் உள்ளார். இவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யில் ஒரு உறுப்பினர் என்று கூறப்படுகிறது. இவர் தமீம் அன்சாரியிடம், தமிழ்நாட்டு கடலோரப்  பகுதிகளை ஆய்வு செய்து படம் பிடித்து தந்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக கூறினார்.

பணத்துக்கு ஆசைப்பட்ட தமீம் அன்சாரி நாட்டை காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலுக்கு சம்மதித்தார். தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை படம் பிடித்து, அவற்றை சி.டி.யில் பதிவு செய்து, அந்த சி.டி.க்களை கொழும்பு தூதரகத்தில் உள்ள இளநிலை அதிகாரி சாஜியிடம் கொடுத்தால் போதும் என்று தமீம் அன் சாரியிடம் கூறப்பட்டது.

அதன்படி கடந்த சில மாதங்களாக தமீம் அன்சாரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகை, காரைக்கால், மல்லிப்பட்டினம் பகுதிகளை படம் பிடித்து சி.டி.யாக தயாரித்தார். தமிழ்நாட்டு கடலோர பகுதிகளில் எங்கெங்கு ராணுவ நிலைகள் உள்ளன? எங்கெங்கு மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது? எந்த பகுதியில் இறங்கினால் விரைவில் ஊருக்குள் செல்ல முடியும் என்பன போன்ற தகவல்களை அறியும் வகையில் அந்த சி.டி.க்களில் காட்சிகள் இருந்தன.

தமீன் அன்சாரியிடம் இருந்த ஆவணங்களில் 2 டி.வி.டி.க்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதில் ஒரு டி.வி.டி. யில், நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ மையம், நாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் தென்மாவட்ட கடலோர பகுதிகள் படம் பிடிக்கப்பட்டிருந்தன.

மற்றொரு டி.வி.டி.யில் இந்திய ராணுவ வீரர்கள் பாரா-கிளைடிங் பயிற்சி காட்சிகள், ராணுவ வீரர்களின் அணிவகுப்பு இடம் பெற்றிருந்தன. வெலிங்டன் ராணுவ மையத்தின் முழு விவரமும் அந்த டி.வி.டி.யில் பதிவாகி  இருப்பதைக் கண்டு மத்திய உளவுத்துறை மூத்த அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக மும்பை நகருக்குள் ஊடுருவிய 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல்கள் நடத்தி 166 பேரை கொன்று குவித்தனர். அதே பாணியில் கடல் வழியாக தமிழ்நாட்டுக்குள் ஊடுருவுவதற்காக, தமீம் அன்சாரி மூலம்  பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தகவல்களை திரட்டி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளில், எந்த பகுதியில் தீவிரவாதிகள் வந்து இறங்க முடியும் என்பதை தமீம் அன்சாரி வீடியோ படம் எடுத்து டி.வி.டி.யாக தயாரித்து இருப்பதன் மூலம் ஐ.எஸ்.ஐ. சதி திட்டம் அம்பலமாகி உள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பிறகு தீவிரவாதிகள் எந்தெந்த வழிகளில் தப்பிச் செல்ல முடியும் என்பதற்கான பகுதிகளையும் தமீம் அன்சாரி படம் பிடித்து டி.வி.டி.யில் பதிவு செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழக கடலோர துறைமுகங்களை தாக்கி அழித்து விட்டு,  தீவிரவாதிகள் தப்பிச் செல்வதற்கான வழிகளை தமீம் அன்சாரி தன் டி.வி.டி.யில் பதிவு செய்து இருப்பதை கண்டு மத்திய அரசு அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டதாக பெயர் வெளியிட விரும்பாத கியூ பிரிவு போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளை படம் பிடித்துவிட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக விசாகப்பட்டினம் துறைமுகத்தின் சில பகுதிகளையும், விசாகப்பட்டினத்தில் நீர்மூழ்கி கப்பல் உள்ள பகுதிகளையும் படம் பிடிக்குமாறு தமீம் அன்சாரிக்கு கொழும்பு தூதரக அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதற்காக தமீம் அன்சாரி அடுத்த வாரம் விசாகப்பட்டினம் செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தை படம் எடுத்த பிறகு கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்தை வீடியோவில் முழுமையாக பதிவு செய்து தர தமீம் அன்சாரியிடம் ஐ.எஸ்.ஐ. தரப்பில் கூறப்பட்டிருந்ததாக தெரிகிறது.

இதன் மூலம் தென் இந்தியாவில் உள்ள எல்லா ராணுவ நிலைகள் மீதும் பாகிஸ்தான் குறி வைத்திருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட மாணவர் அமைப்பு செயலாளராக இருந்த தமீம் அன்சாரி சில மாதங்கள் மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவாகவும் பணியாற்றினார்.

இலங்கைக்கு வெங்காய ஏற்றுமதி தொழிலை தொடங்கிய பிறகே இவருக்கு ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. வங்கியில் இவர் வைத்திருந்த டெபிட் கார்டு கணக்கு எண்ணுக்கு சமீபகாலமாக இலங்கையில் இருந்து லட்சம், லட்சமாக பணம் போடப்பட்டது.

வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்ட மதிப்பைவிட அதிக அளவில் பல லட்சம் பணம் போடப்பட்டதால் மத்திய உளவுத் துறை சந்தேகத்துடன் தமீம் அன்சாரியை பார்த்தது. அவருக்குத் தெரியாமல் உளவுத்துறை அதிகாரிகள் பின் தொடர்ந்தபோதுதான் தமீம் அன்சாரி நாட்டுக்கு துரோகம் செய்வதை கண்டுபிடித்தனர். அந்த வகையில் தமீன் அன்சாரியின் டெபிட் கார்டே அவரைக் காட்டிக் கொடுத்து விட்டது.

தமீம் அன்சாரி பற்றி உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், நமது நாட்டின் அணு நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வர்ஷா நிலை கொண்டுள்ள விசாகப்பட்டினம் துறைமுக பகுதியை படம் பிடிக்க இருந்தனர். அதை பார்க்கும் போது தமீம் அன்சாரி எந்த அளவுக்கு ஆபத்தானவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அமெரிக்காவில் பிடிபட்ட டேவிட் ஹெட்லியும், நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தை படம் பிடித்து வைத்திருந்தான். அவனுக்கும், தமீம் அன்சாரிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இவன் மூலம் மிகப்பெரிய நாசவேலை சதி திட்டம் தீட்டப்பட்டிருந்தது என்றார்.

ரகசிய உளவாளியான தமீம் அன்சாரி சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மாணவர் பிரிவில் பொறுப்பாளராக இருந்தார். திருமணமாகி விட்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார். தமீம் அன்சாரி  கைது செய்யப்பட்டது  பற்றி அவர் குடும்பத்தினர் எந்த கருத்தும் தெரிவிக்க மறுத்து விட்டனர். தங்களது வக்கீல் பிரியா சுவாமிநாதன் எல்லா தகவல்களையும் தெரிவிப்பார் என்றனர்.

வக்கீல் பிரியா சுவாமிநாதன் கூறியதாவது:-

அன்சாரி சினிமா படம் தயாரிக்க விரும்பினார். அதற்காகவே அவர் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மற்றும் பயிற்சி பெறும் காட்சிகளை இணையத்தளங்களில் இருந்து டவுன் லோடு செய்து சி.டி.யாக தயாரித்து வைத்திருந்தார். அந்த காட்சிகளை திருச்சியில் உள்ள ஒரு படத் தயாரிப்பாளரிடம் காட்ட முடிவு செய்திருந்தார்.

'பேராண்மை' படத்தில் வருவது போன்று காட்சிகளை படமாக்கப் போவதாக  என்னிடம் விளக்கி கூறினார். தமீம் அன்சாரி ரோட்டரி கிளப்பில் உறுப்பினராக உள்ளார். ரோட்டரி நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். மூளை வளர்ச்சி அடையாத குழந்தைகள் பலருக்கு உதவி செய்துள்ளார். அவர் ஐ.எஸ்.ஐ.க்கு உதவி செய்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன். அதன்பிறகு அவரை ஜாமீனில் எடுக்க மனுதாக்கல் செய்வேன்.

இவ்வாறு வக்கீல் பிரியா சுவாமிநாதன் கூறினார்.

தமீம் அன்சாரி கைது செய்யப்பட்டிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தஞ்சை நிர்வாகிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைமை குழு உறுப்பினர்  சீனிவாசன் கூறுகையில், தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது போன்று அவர் தன்னை  வெளிகாட்டிக் கொண்டதே  இல்லை. அவரது  பெற்றோர்கள் மிகவும் நல்லவர்கள். கட்சி மீது மிகுந்த பற்றுதலும் மரியாதையும் உடையவர�¯ �கள் என்றார்.

தமீம்அன்சாரியின் தந்தை வெளிநாட்டில் உள்ளார். அவர் பல தடவை அன்சாரியை தம்முடன் வந்து விடுமாறு அழைத்தார். ஆனால் அன்சாரி அதை ஏற்கவில்லை. அன்சாரி அடிக்கடி சிங்கப்பூர், மாலத்தீவு, இலங்கைக்கு சென்று வந்தது தெரிய வந்துள்ளது. எனவே இவர் பின்னணியில் பெரிய நெட்வொர்க் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன தமீம் அன்சாரி தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தஞ்சை நகரில் கடைகள், வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலையும் செய்து வந்துள்ளார். அவருக்கு மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் உதவி செய்தது தெரிய வந்துள்ளது.  அவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

தென்இந்தியாவில் மிக நேர்த்தியான தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ. தமீம் அன்சாரி உதவியுடன் சதித்திட்டம் தீட்டி வந்தது. அந்த திட்டம் சரியான நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது. அடுத்து, உளவுத்துறையினரும், விசாரணைக் குழுவினரும் கொழும்பு சென்று விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

கைதான தமீம் அன்சாரி மீது அரசாங்க ரகசியங்களை கடத்தியதாக 3, 4 மற்றும் 9 ஆகிய 1923 ஆம் ஆண்டு சட்டப்பிரிவின் கீழும், வெளிநாட்டுக்காக சதி செய்தல் 120 பி ஆகிய இந்திய தண்டனை சட்டப்பிரிவின் கீழும் வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2 ல் ஆஜர்படுத்தப்பட்ட தமீம் அன்சாரியை வருகிற 1-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.

கியூ பிரிவு போலீசார் தமீம் அன்சாரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அப்போது  அவருக்கு உதவிய முன்னாள் ராணுவ அதிகாரி பற்றிய தகவல் வெளிவரும்.

comments | | Read More...

பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வருமா?: முலாயம் சிங், மாயாவதி தீவிரம்


பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வருமா?: முலாயம் சிங், மாயாவதி தீவிரம் பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வருமா?: முலாயம் சிங், மாயாவதி தீவிரம்

புதுடெல்லி, செப். 18- பிரதமர் மன்மோகன்சிங்கின் 5 ஆண்டு பதவிக்காலம் 2014-ம் ஆண்டு முடிவடைகிறது. பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷனுக்கு இன்னும் 17 மாதங்கள் கால அவகாசம் உள்ளது. இந்த நிலையில் சமீப காலமாக மத்திய அரசு, பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு ஊழல்கள் மத்திய அரசு மீது மக்களிடம் கடும் அதிருப்�® �ியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கும் கூட்டணி கட்சிகள் தங்கள் நிலையை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி வருகிறார்கள். ஆனால் தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம் என்ற சூழ்நிலை உருவாகத் தொடங்கியுள்ளது. மக் கள் மத்தியில் கடும் வெறுப்பை சம்பாதித்துள்ள காங்கிரஸ், முன்கூட்டியே தேர்தலை நடத்த விரும்பவில்லை. ஆனால், முன்கூட்டியே தேர்தலை நடத்தினால்தான், அது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பாரதீய ஜனதா தலைமையில் உள்ள எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கும் சில கட்சிகளும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று விரும்புகின்றன. குறிப்பாக �® �ாங்கிரசுக்கு பக்கபலமாக உள்ள முலாயம்சிங் யாதவும், மாயாவதியும் முன்கூட்டியே தேர்தல் வரும் பட்சத்தில் அதை எதிர் கொள்வதற்கு வசதியாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். இதனால் வட மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் பற்றிய பேச்சு தீவிரமாகியுள்ளது. பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரா, மராட்டியம், கர்நாடகா போன்ற பெரிய மாநிலங்களில் எந்த கட்சிக்கு அதிக இடம் கிடைக்கிறதோ, அந்த கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வலுவாக்கிக் கொள்ள முடியும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதி வெற்றி-தோல்வி மத்திய அரசு அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். எனவே அந்த 80 தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் வெற்றி கனியைப் பறிக்க வேண்டும் என்பதில் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும், மாயாவதியின் பகுஜன் �® �மாஜ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முலாயம்சிங் யாதவ், மாயாவதி இருவரும் 80 தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர். தற்போது அந்த மனுக்களை அவர்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது பற்றி முலாயம்சிங் யாதவ் அடிமட்ட தொண்டர்கள் வரை கருத்துக்கள் கேட்டு ஆலோசனையை முடித்துவிட்டார். அதன் அடிப்படையில் அவர் வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டார். இன்னும் சில தினங்களில் அவர் பாராளுமன்றத் தேர்தல் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பணியை தொடங்கி பிரசாரத்தைத் தீவிரப்படுத்த முலாயம் சிங் தன் கட்சித் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அடுத்த பிரதமர் பதவியை பி டிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் முலாயம்சிங் யாதவ் திட்டமிட்டு உத்தரபிரதேசத்தில் தேர்தல் பணியை தொடங்கி இருப்பது மற்ற கட்சித் தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முலாயம்சிங் யாதவுக்கு போட்டியாளராகத் திகழும் மாயாவதியும் முதல் கட்டமாக 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார். விரைவில் அவரும் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநில கட்சிகள் தேர்தலுக்கு தாயராகி வருவதை அறிந்த பாரதீய ஜனதா தலைவர் நிதின்கட்காரி பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும்படி தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மத்திய மந்திரி சபை மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்றம் செய்து விட்டு தேர்தல் பணியைத் தொடங்க காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

comments | | Read More...

திண்டிவனத்தில் கருணாநிதிக்கு வரவேற்பு: கடவுள் வேடத்தில் நடனம் நடவடிக்கை எடுக்க புகார்



திண்டிவனத்தில் கருணாநிதிக்கு வரவேற்பு: கடவுள் வேடத்தில் நடனம் நடவடிக்கை எடுக்க புகார் திண்டிவனத்தில் கருணாநிதிக்கு வரவேற்பு: கடவுள் வேடத்தில் நடனம் நடவடிக்கை எடுக்க புகார்

சென்னை, செப். 18- விழுப்புரத்தில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழா மாநாட்டையொட்டி திண்டிவனத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மாநாட்டுக்கு வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை வரவேற்க இந்து கடவுள்கள் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் வேடமணிந்து நடன கலைஞர்கள் ஆடினார்கள். இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தமிழ்நாடு இந்து மகா சபா தலைவர ் ஸ்ரீகண்டன் போலீஸ் டி.ஜி.பி.யை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- இந்துக்களை இழிவு படுத்தி வரும் நாத்திகவாதிகளை வரவேற்க இந்து கடவுள்கள் வேடமணிந்து கூத்தாட வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. மத உணர்வுகளை புண்படுத்திய விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுà ��ில் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்துக்களின் உணர்வுகளை சீண்டி பார்க்கிறார்கள். இந்துக்களை எதிர்த்து எந்த இயக்கமும் அரசியல் நடத்த முடியாது என்ற நிலையை உருவாக்குவோம். என்று கூறியுள்ளார். பா.ஜனதா தலைவர் இல.கணேசன் இதுகுறித்து கூறியதாவது:- கடவுள் வேடம் அணிந்தவர்களின் வரவேற்பை ஏற்று மகிழ்ந்ததன் மூலம் நாத்திகக் கொள்கை தோற்றுவிட்டது எà ��்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தி.மு.க.வுக்கும் அதன் சுயமரியாதை கருத்துக்களுக்கும், நாத்திக கொள்கைகளுக்கும் ஏற்பட்ட பெருத்த அவமானம்.  இவ்வாறு அவர் கூறினார்.

comments | | Read More...

பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்: திருப்பதியில் 22 ந் தேதி கருட சேவை


பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்: திருப்பதியில் 22 ந் தேதி கருட சேவை பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்: திருப்பதியில் 22 ந் தேதி கருட சேவை

திருமலை, செப். 18-
 திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் வருகிற 22-ந் தேதி கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழா நடக்கிறது. முதல் பிரம்மோற்சவ விழா இன்று (செவ்வாய் கிழமை) தொடங்குகிறது. மாலை 5.40 மணிக்கு தங்க கொடி மரத்தில் அர்ச்சகர்கள் கொடி ஏற்றுகிறார்கள். இ ரவு பெரிய சேஷவாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் மாட வீதிகளில் வலம் வருகிறார். ஆந்திர முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி இன்று இரவு திருமலைக்கு வருகிறார். ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து வந்து ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துகிறார். வருகிற 26-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் ஏழுமலைà ��ான் வீதி உலா வருகிறார். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை வருகிற 22-ந் தேதி நடக்கிறது. 25-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது, 26-ந் தேதி சக்கரஸ்நானம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவை யொட்டி பக்தர்களுக்கு வழங்க 4 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் உள்ளன. பிரம்மோற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு வேண்டிய வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் �® �ெய்து வருகின்றனர். பக்தர்களுக்கு 24 மணி நேரமும் இலவச சாப்பாடு, குடிநீர் வழங்கப்படுகிறது. திருமலையில் 4 மாட வீதிகளில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger