News Update :
Powered by Blogger.

சுவர் ஏறி குதித்து வேட்புமனுவை வாபஸ் பெற முயன்ற தேமுதிக வேட்பாளர்

Penulis : karthik on Monday, 3 October 2011 | 18:53

Monday, 3 October 2011

 
 
உசிலம்பட்டி அருகே கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மற்றொரு வேட்பாளருக்கு ஆதரவாக வேட்புமனுவை வாபஸ் பெற சென்றபோது, தேமுதிகவினரே அவரை தடுத்து தாக்கி நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள அல்லிக்குண்டம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தேமுதிக சார்பில், போட்டியிடுபவர் கண்ணன். இவர் அதே பகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தெரிவித்து, வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கு உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.
 
 
அப்போது பணம் பெற்றுக்கொண்டு மனுவை திரும்பப் பெற வந்துள்ளதாக கூறி, தேமுதிகவினர் கண்ணனை தடுத்து நிறுத்தினர். இதை மீறி சுவர் ஏறி குதித்து வேட்புமனுவை வாபஸ் பெற முயன்றார் கண்ணன். அப்போது கண்ணனை தேமுதிகவினர் சுற்றி நின்றுக்கொண்டு தாக்கியதால் பரபரப்பு நிலவியது.
 
 
அதையும் மீறி கண்ணன் வேட்பு மனுவை வாபஸ் வாங்குவதாக அதிகாரிகளிடம் சென்று தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான நேரம் முடிந்துவிட்டதால், இனி வேட்பு மனுவை வாபஸ் பெற முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 
உள்ளாட்சி தேர்தலில் தேர்வாகும் தேமுதிகவினர் ஊழலில் ஈடுபட்டால் தாமே முன்வந்து நடவடிக்கை எடுக்கப்போவதாக அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஊர் ஊராக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் உசிலம்பட்டி தேமுதிக வேட்பாளர் தேர்தலுக்கு முன்பாகவே பணம் பெற்றுக்கொண்டு வேட்பு மனுவை வாபஸ் பெற முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

Jaathi Malli Songs Free Download

 

Jaathi Malli
Artists: Mukesh, Kushboo, Yuvarani
Director: K Balachander
Music Director: Maragathamani
Year: 1992


Kamban Engu கம்பன் எங்கு போனான்
http://www.megaupload.com/?d=8PCW9MX0

comments | | Read More...

சு.சாமி மீது டெல்லி போலீஸ் வழக்கு



சில மாதங்களுக்கு முன் சு.சாமி எழுதிய கட்டுரைக்கு இப்போது அவர் மீது வழக்கு போட்டிருக்கிறது டெல்லி போலீஸ்
அந்த கட்டுரை இங்கே http://www.dnaindia.com/analysis/comment_analysis-how-to-wipe-out-islamic-terror_1566203-all
comments | | Read More...

Anbe Vaa Songs Download


Anbe Vaa (1960)
Music: MS. Viswanathan
CAST: MGR, Sarojadevi, Nagesh

Naan Paarthathilae
Artist(s): TM. Sounderarajan, Susheela
Lyricist: Vaali
http://www.megaupload.com/?d=NV5D6XMT


Raajavin Parvai
Artist(s): TM. Sounderarajan, Susheela
Lyricist: Vaali
http://www.megaupload.com/?d=QD9FD0CW


Puthiya Vaanam
Artist(s): TM. Sounderarajan, Susheela
Lyricist: Vaali
http://www.megaupload.com/?d=02UEDU1P


Love Birds
Artist(s): Susheela
Lyricist: Vaali
http://www.megaupload.com/?d=EY4AOVBZ


Anbe Vaa
Artist(s): TM. Sounderarajan
Lyricist: Vaali
http://www.megaupload.com/?d=1MDYC757


Anbe Vaa 2
http://www.megaupload.com/?d=JE42A107


Vetkamillai
Artist(s): Susheela
Lyricist: Vaali
http://www.megaupload.com/?d=D4Z9GDZ2

comments | | Read More...

ஏ.டி.எம் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு?

 
 
 
இந்த ஏ.டி.எம் மெஷின் வராமல்இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.ரொம்பவசதியான ஒன்றுதான்.2005 ஆம் ஆண்டில் கார்டு வாங்கி விட்டேன்.இந்தியன் வங்கி கார்டு.அப்போதுஅரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் பணம் தருவது முறையில் இல்லை.பின்னர்தான்ஆரம்பித்தார்கள்.
இந்தியன் வங்கிகார்டாக இருந்தாலும் பக்கத்தில் இருந்த்து ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்தான்.பெரும்பாலும் காலியாக இருக்கும்.இவ்வளவு கூட்டமில்லை.வேல் வசந்தன் என்றுநண்பருக்கு ஒரு பழக்கம்.100 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க மாட்டார்.தீர்ந்து போனால்மீண்டும் எடுப்பது.நான் அவ்வளவு மோசமில்லை,200 ரூபாய் எடுப்பேன்.ஒரு மாத்த்தில்பலமுறை எடுப்போம்.
எங்களை மாதிரிநிறைய இருந்திருப்பார்களோ என்னவோ வேறு வங்கியில் பணமெடுக்க கமிஷன் பிடிக்கஆரம்பித்து விட்டார்கள்.இப்போது 5 முறை கமிஷன் இல்லாமல் எடுக்கலாம்.நாங்களும்கொஞ்சம் மாற்றிக்கொண்டு ஆயிரங்களாக எடுக்க ஆரம்பித்தோம்.
ஒரு முறை பணம்எடுக்க போனேன்.வெளியே பத்து பேர் வரிசையில் நின்றிருந்தார்கள்.வெகு நேரம்உள்ளேயிருந்து யாரும் வரவேயில்லை.எனக்கு பேருந்தை பிடிக்கும் அவசரம்.உள்ளே கதவுதிறந்து பார்த்தேன்.கணவன்,மனைவி,இரண்டு குழந்தைகள்.பெரிய பையன் "அப்பா,தம்பி''என்றான்.தம்பியை பட்டன் அழுத்தச்சொல்லுங்கள் என்று அர்த்தம்.
வெளியே பத்துபேர் நின்று கொண்டிருக்க குழந்தைகளை மெஷினை இயக்கச்சொல்லி ரசித்துக்கொண்டிருந்தார்கள்.நான் உள்ளே நுழைந்து முறைத்தவுடன் அவரது மனைவி கணவனின் முதுகைதட்டினார்.அவரும் புரிந்து கொண்டு அவசரமாக பணம் எடுத்துக்கொண்டு திரும்ப,பையன்கத்த ஆரம்பித்து விட்டான்.இன்னும் கொஞ்ச நேரம் விளையாட வேண்டுமாம்.பையனைஅழவைத்துக்கொண்டே ஒரு வழியாக வெளியேறினார்கள்.
இன்னொரு நாள்நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு ஏ.டி.எம் காலியாக இருப்பதைபார்த்தேன்.நல்லது,பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று போனேன்.உள்ளே ஒரு பாட்டிஇருந்தார்.ரொம்ப நேர்மாகியும் வெளியே வரவில்லை.உள்ளே போய் பார்த்தால் ஏதேதோபட்டன்களை மாற்றி மாற்றிஅழுத்திக் கொண்டிருந்தார்.பார்த்தால் ஏ.டி.எம்.பணிசெய்யவில்லை." பாட்டிஏ.டி.எம். ரிப்பேர் என்றேன்."போனவாரம் எடுத்தேனே என்றார் பதிலுக்கு!
வேறொரு நாள்திருவண்ணாமலையில் சாப்பிட போனேன்.ஸ்டார் ஹோட்டல் என்று அசைவத்துக்குபிரபலம்.சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதே ஒரு போன்.எனக்கு பார்சல் வாங்கி வர முடியுமா?பணம் குறைவாக இருந்த்து.பக்கத்தில்தானே இந்தியன் வங்கி ஏ.டி.எம். பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று பார்சல் வாங்கி விட்டேன்.
பணம்எடுக்கப்போனால் திரையில் அறிவிப்பு வந்து விட்ட்து.மெஷின் வேலை செய்யவில்லை.ஸ்டேட்வங்கி போய் பார்த்தால் unable to process என்றுவருகிறது.பக்கத்தில் ICICI ,அங்கும் இதே பதில்.பேருந்துக்குபணமில்லை.நண்பர் ஒருவருக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல,அவர் வந்து உதவினார்.அப்போதுமுடிவு செய்தேன்.முழுக்க செலவு செய்துவிட்டு ஏ.டி.எம் இல் எடுக்கலாம் என்றுஇருப்பது முட்டாள்தனம்.
படிக்காத பாமர மக்களுக்கும் ஏ.டி.எம்கார்டு கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்.யாரையாவது எதிர்பார்த்து காத்திருக்கவேண்டும்.இல்லாவிட்டால் உள்ளே விளையாடுகிறார்கள்.சில வங்கி ஏ.டி.எம் களுக்குபாதுகாவலர் யாரும் இருப்பதில்லை.ஒவ்வொரு ஏ.டி.எம் க்கும் செக்யூரிட்டிநியமிப்பதுடன்,தெரியாதவர்களுக்கு உதவியும் செய்தால் புண்ணியமாக இருக்கும்.
comments | | Read More...

தொட்டால் சிலிர்க்கும் பெண்கள்!

 

செக்ஸ் உறவை விட முன்விளையாட்டுக்களும், உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விஷயங்களும் மிக முக்கியமானவை. பெண்களின் அங்கங்களில் பல பகுதிகள் உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விசேஷங்களை தன்னகத்தேக் கொண்டுள்ளன. அதுகுறித்த ஒரு பார்வை…

ஆண்களை விட பெண்கள் உணர்ச்சிகரமானவர்கள். அதேசமயம், அந்த உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய வித்தையை தெரிந்த ஆண்கள் மிகவும் குறைவுதான். எடுத்த எடுப்பிலேயே 'டாப் கியருக்குப்' போகத்தான் தெரிகிறது பல ஆண்களுக்கு. ஆனால் முழுமையான இன்பத்தைப் பெறக் கூடிய லாவகம் பலருக்கு இருப்பதில்லை.

பல ஆண்கள் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் பெண்களின் மார்பகங்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளிலும் மட்டுமே அதிக கவனம் செலுத்துவது. ஆனால் பெண்களிடம் உள்ள வேறு சில உணர்ச்சிகரமான பகுதிகளை அவர்கள் பெரும்பாலும் கவனிப்பதில்லை அல்லது தெரிந்து கொள்வதில்லை.

உண்மையில் இந்தப் பகுதிகளில்தான் உணர்ச்சிகரமான விஷயங்கள் எக்கச்சக்கமாக உள்ளன.

தலைமுடியைக் கோதும் கலை பலருக்கும் பிடிபடுவதில்லை. ஆனால் பெண்களுக்கு தங்களது தலைமுடியைக் கோதி விடும் ஆண்களை நிறையவே பிடிக்கும். தலைக்கு மசாஜ் செய்வது போல நிதானமாக, மென்மையாக தலை முடிக்குள் கையை வைத்து கோதி விடுவதும் மென்மையாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதும் பெண்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது, உணர்ச்சிவசப்பட வைக்கிறது.

பின் கழுத்தில் ஆரம்பித்து தலை முழுவதும் கேசத்தை மெதுவாக கோதிக் கொடுப்பதன் மூலம் பெண்கள் உணர்வுகள் மெதுவாக தூண்டப்படுகின்றனவாம்.

அதேபோல கழுத்தின் பின்பக்கமும் பெண்களை தூண்டுவிக்கும் ஒரு அருமையான இடமாகும். மிக மென்மையாக கழுத்தின் பின்பக்கத்தை தடவிக் கொடுப்பதன் மூலம் உங்களை நோக்கி வேகமாக பெண்கள் மயங்கி வருவார்களாம். மென்மையாக வருடிக் கொடுப்பது, நிதானமாக முத்தமிடுவது, தோள்பட்டையில் இதமான முத்தம் தருவது என பெண்களை வசியப்படுத்தலாம்.

அதேபோல பெண்களின் 'காலர் போன்' பகுதியும் உணர்ச்சிப் பெருக்கு நிறைந்த இடம்தான். அங்கு இதமாக முத்தமிடுவதன் மூலம் உங்கள் இணையை உங்கள் வசம் வேகமாக ஈர்க்க முடியும்.

முதுகின் கீழ்ப் பகுதியும் கூட அதேபோல உணர்ச்சிகரமான ஒரு இடம்தான். இந்த இடத்தை நிதானமாக வருடிக் கொடுப்பது, முத்தமிடுவது ஆகியவை மூலம் பெண்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதோடு, அவருக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வையும் பெண்களுக்கு ஏற்படுத்துகிறதாம்.

முழங்காலின் பின்பகுதிக்குப் போனால் இன்னும் விசேஷம் அதிகம். உணர்ச்சிகளை சட்டென தூண்டும் நரம்புகள் இங்கு அதிகம் உள்ளது. ஆண்களுக்கே கூட இந்த இடம் உணர்ச்சிகரமான ஒரு ஏரியாவாகும். முழங்காலின் பின்பகுதியை மென்மையாக முத்தமிடுவது, வருடிக் கொடுப்பது ஆகியவற்றின் மூலம் பெண்களை வேகமாக உணர்ச்சிவசப்படுத்த முடியும்.

உள்ளங்கையிலும் நிறைய விசேஷங்கள் காத்திருக்கின்றன. உங்களது மனைவி அல்லது காதலியின் உள்ளங்கையை மென்மையாக கிள்ளிக் கொடுப்பது, தடவிக் கொடுப்பது, முத்தமிடுவது ஆகியவற்றின் மூலம் அவர்களை நீங்கள் வெகுவாக ஈர்க்க முடியும். மூடில் இல்லாதவர்களும் கூட இந்த உள்ளங்கை 'மருத்துவத்திற்கு' ஒத்து வருவார்கள்.

அதேபோல காது மடல்களை வருடிக் கொடுப்பது, லேசாக முத்தமிடுவது, லேசாக வலிக்காமல் கடிப்பது ஆகியவையும் கூட 'இன்ஸ்டன்ட்' இன்பத்திற்கு உதவும். காது மடல் 'காதல் மடலாகவும்' விளங்குகிறது என்பதால், செக்ஸ் உணர்வுகள் வேகமாக தூண்டப்படுகிறது.

அடுத்து காலைப் பிடித்து காரியம் 'சாதிப்பது'. பெண்களின் காலை மெதுவாக பிடித்து மசாஜ் செய்வது, உள்ளங்காலில் லேசான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வது, விரல்களை நீவி விடுவது, சொடுக்கு எடுத்து விடுவது, மசாஜ் எண்ணெய் உள்ளிட்டவற்றை வைத்து இதமாக மசாஜ் செய்வது கூடுதல் இன்பத்தைத் தூண்ட உதவும்.

இப்படி நேரடி செக்ஸின்போது கிடைக்கும் இன்பத்தை விட அதிக அளவிலான கிளர்ச்சியூட்டும் விஷயங்கள் நிறையவே பெண்களிடம் உள்ளன. அதை அறிந்து, தெளிந்து செயல்படுவதன் மூலம் முழுமையான இன்பத்தை ஆண்களும் பெறலாம், பெண்களுக்கும் தரலாம்.

நன்றி-ஒன்இந்தியா


comments | | Read More...

ப‌ரிசுக‌ள் கொடு‌ப்ப‌தி‌ல் பல வகையானவ‌ர்க‌ள்

 

ப‌ரிசுக‌ள் கொடு‌ப்ப‌தி‌ல் பல வகையானவ‌ர்க‌ள்

காதல‌ர்க‌ள் காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கியது‌ம் செ‌ய்யு‌ம் முத‌ல் வேலை, கட‌ற்கரை, பூ‌ங்கா, ‌‌திரையர‌ங்கு போ‌ன்று பொழுதுபோ‌க்கு இட‌ங்க‌ளி‌ல் ச‌ந்‌தி‌ப்பதுதா‌ன். இதுதா‌ன் எ‌ல்லோரு‌க்குமே‌த் தெ‌ரியு‌ம் எ‌‌ன்று சொ‌ல்லா‌தீ‌ர்க‌ள்.

அடு‌த்ததாக செ‌ய்வது எ‌ன்ன‌த் தெ‌ரியுமா? ப‌ரிசு‌ப் பொரு‌ட்க‌ள் கொடு‌ப்பது… இ‌ந்த ப‌‌ரிசு‌ப் பொரு‌ட்களை‌க் கொடு‌ப்ப‌தி‌ல் பல வகை உ‌ண்டு. ஏதாவது மு‌க்‌கியமான ‌நாள‌ன்று, தனது துணையை ம‌கி‌ழ்‌வி‌ப்பத‌ற்காக ப‌ரிசு கொடு‌ப்பது ஒரு வகை. இவ‌ர்க‌ள் இய‌ல்பானவ‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த ‌பிர‌ச்‌சினையு‌ம் எழாது.

அதாவது ‌பிற‌ந்த நா‌ள், முத‌ன் முதலாக ச‌ந்‌தி‌த்த நா‌ள், முத‌ல் மாத ச‌ம்பள‌ம், ச‌ம்பள உய‌ர்வு, பு‌த்தா‌ண்டு, காதல‌ர் ‌தின‌ம் போ‌ன்ற மு‌க்‌கிய நா‌ட்க‌ளில‌் காதல‌ன் காத‌லி‌க்கோ, காத‌லி காத‌லி‌க்கோ ப‌ரிசுக‌ள் அ‌‌ளி‌க்கலா‌ம். அ‌தி‌ல் தவ‌றி‌ல்லை. ஆனா‌ல் இ‌ந்த நா‌ட்க‌ளி‌ல் ப‌ரிசு‌ப் பொரு‌ட்க‌ள் கொடு‌த்து‌வி‌ட்டீ‌ர்களானா‌ல், இ‌ந்த நா‌ட்களை எ‌ந்த ஆ‌ண்டு‌ம் மற‌க்காம‌ல் அதனை‌ச் செ‌ய்ய வே‌ண்டியது அவ‌சிய‌ம் எ‌ன்பதை மற‌க்க‌க் கூடாது.

ஏதாவது ஒரு நா‌ள் மற‌ந்து‌வி‌ட்டா‌ல்.. அ‌வ்வளவுதா‌ன்.. ‌உ‌ங்க எ‌ண்ண‌த்‌தி‌ல் நா‌ன் இரு‌ந்தாதானே ஞாபக‌ம் வரு‌ம் எ‌ன்று புல‌ம்ப ஆர‌ம்‌பி‌த்து‌விடுவா‌ர்க‌ள்.

அடு‌த்தது, ‌மிக ‌விலை உய‌ர்‌ந்த ப‌ரிசு‌ப் பொரு‌ட்களை, த‌ங்களது ப‌ந்தா‌வி‌ற்காக ப‌ரிசாக வழ‌ங்குவது இர‌ண்டாவது ரக‌ம். தா‌ன் பெ‌ரிய பண‌க்கார‌ன் எ‌ன்று ‌நினை‌த்து‌த்தான‌் இ‌ந்த பெ‌ண்/ஆ‌ண் த‌ன்னை காத‌லி‌க்‌கிறா‌ர் எ‌ன்று ‌நினை‌‌ப்பவ‌ர்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் ‌விலை உய‌ர்‌ந்த ப‌ரிசு‌ப் பொரு‌ட்களை வா‌ங்‌கி‌க் கொடு‌த்து த‌ங்களது பண‌க்கார‌த்தன‌த்தை‌ வெ‌ளி‌க்கா‌ட்டி‌க் கொ‌ள்வா‌ர்க‌ள்.

ஆனா‌ல் இ‌ந்த ப‌ரிசு‌ப் பொரு‌ள் அ‌ன்பா‌ல் வா‌‌ங்க‌ப்ப‌ட்டிரு‌க்காது. மேலு‌ம், இ‌ப்படி ‌விலை உய‌‌ர்‌ந்த ப‌ரிசுப‌் பொருளை காத‌லி‌க்கு‌க் கொடு‌க்கு‌ம் போது பல ‌பிர‌ச்‌சினைக‌ள் எழு‌ம். அதாவது, அ‌ந்த பெ‌ண், இ‌வ்வளவு ‌விலை உய‌ர்‌ந்த ப‌ரிசு‌ப் பொருளை‌ப் பா‌ர்‌த்தது‌ம், இத‌ற்கு ஈடாக த‌ன்னா‌ல் எதுவு‌ம் கொடு‌க்க முடிய‌வி‌ல்லையே எ‌ன்று வரு‌ந்துவது‌ம், இத‌ற்கு தா‌ன் ஏ‌ற்புடையவளா எ‌ன்று ச‌ந்தே‌கி‌ப்பது‌ம், அதனை ‌‌வீ‌ட்டி‌ற்கு‌க் கொ‌ண்டு செ‌ல்ல முடியாத ‌நிலை‌யிலு‌ம் இரு‌ப்பா‌ள்.

ஒரு வேளை அ‌ந்த‌ப் ப‌ரிசு‌ப் பொருளை மே‌ற்கூ‌றிய ஏதாவது ஒரு காரண‌த்தா‌ல் அவ‌ள் மறு‌க்க நே‌ர்‌ந்தா‌ல் அ‌ங்கு காதல‌ர்களு‌க்கு இடையே ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படலா‌ம்.

வேறு ‌சில ஆ‌ண்க‌ள் உ‌ள்ளன‌ர். ஏதாவது ப‌ரிசு‌ப் பொரு‌ள் வா‌ங்‌கி‌க் கொடு‌த்து அத‌ற்கு ப‌திலாக ம‌ற்றொரு‌ப் ப‌ரிசை‌க் கே‌ட்பது. அதாவது மு‌த்த‌ம், தொடுத‌ல் போ‌ன்றவ‌ற்றை‌க் கூறலா‌ம். இ‌ப்படியான ‌விஷய‌ம் நட‌க்கு‌ம் இட‌த்‌தி‌ல் பெ‌ண் ஒரு போக‌ப் பொருளாக‌ப் பா‌ர்‌க்க‌ப் படு‌கிறா‌ள் எ‌ன்று காத‌லி ‌நினை‌ப்பா‌ள். ஒரு புடவை வா‌ங்‌கி‌க் கொடு‌த்து மு‌த்த‌ம் கே‌ட்கு‌ம் இவ‌ன், நாளை ஒரு த‌ங்க‌க் க‌ம்ம‌ல் வா‌‌ங்‌கி‌க் கொடு‌த்தா‌ல் எ‌ன்னுட‌ன் வரு‌கிறாயா எ‌ன்று கே‌ட்க மா‌ட்டானா எ‌ன்று‌த் தோ‌ன்று‌ம்.

எனவே ப‌ரிசுக‌ள் கொடு‌க்கு‌ம் போது கவனமாக இரு‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம். சாதாரணமாக ப‌ரிசு கொடு‌க்க ‌நினை‌ப்ப‌வ‌ர்க‌‌ள், அவ‌ர்களையு‌ம் உட‌ன் அழை‌த்து‌க் கொ‌ண்டு வேறு ஒருவரு‌க்கு எ‌ன்று ப‌ரிசை தே‌ர்‌ந்தெடு‌க்க‌ச் சொ‌ல்லா‌ம். ஏ‌ன் எ‌ன்றா‌ல் இதை ஏ‌ன் வா‌ங்‌கி‌‌னீ‌ர்க‌ள் எ‌ன்று ‌‌தி‌ட்டு வா‌ங்க வே‌ண்டா‌ம்.

comments | | Read More...

'வாங்கிக்குங்க', மனுவை வாபஸ் வாங்கிக்குங்க!-அதிருப்திகளிடம் கெஞ்சும் வேட்பாளர்கள்!!

 
 
 
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவர்கள் இன்றைக்குள் மனுக்களைத் திரும்பப் பெறலாம். இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
 
இதையடுத்து தங்களை எதிர்த்துப் போட்டியில் நிற்கும் அதிருப்தி வேட்பாளர்கள், போட்டி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்ளிட்டோரை விலை பேசும் பணியில் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் படு ஜரூராக உள்ளனராம்.
 
வரலாறு காணாத வகையில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 14 பேர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும் ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட முடியும். மேயர் பதவிக்குப் போட்டியிடுபவர் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட முடியாது. எனவே பலர் இன்று மனுக்களைத் திரும்பப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இன்று மாலை 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். மேலும் வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும்.
 
இறுதிப் பட்டியல் வெளியாகி, சின்னங்களும் ஒதுக்கப்பட்ட பின்னர் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சின்னம் பிரச்சினை இல்லை என்பதால் அவர்கள் ஏற்கனவே பிரசாரத்தைத் தொடங்கி விட்டனர். சின்னத்திற்காக காத்திருப்போர் மட்டுமே இன்னும் தொடங்காமல் உள்ளனர்.
 
இதற்கிடையே, பல்வேறு முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள், பணத்தைக் காட்டி பிற வேட்பாளர்களை வளைக்கும் வேலையில் படு தீவிரமாக இறங்கியுள்ளனர். தங்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ள போட்டி வேட்பாளர்கள், அதிருப்தி வேட்பாளர்கள், பலம் வாய்ந்த சுயேச்சைகளை பணத்தைக் காட்டி அவர்கள் பேரம் பேசி விலை பேசி வருகின்றனராம்.
 
பணத்தை வாங்கிக்குங், ஜெயித்து வந்ததும் நிறைய கவனிக்கிறேன், எனக்கு ஆதரவாக செயல்படுங்கள், மனுவை வாபஸ் பெறுங்கள் என்று அவர்களிடம் பேரம் பேசி வருகிறார்களாம். தமிழகம் முழுக்க இந்த பண பேரம் படு ஜரூராக நடந்து வருகிறதாம்.
 
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் அத்தனை கட்சிகளுமே தனித் தனியாக போட்டியிடுகின்றன. தேமுதிக மற்றும் பாஜக மட்டுமே கூட்டணிகளை அமைத்துள்ளன.
 
தனித்துப் போட்டியிடும் திமுக, அதிமுக, காங்கிரஸ் என எல்லாக் கட்சிகளிலும் போட்டி வேட்பாளர்கள் நீக்கமற நிறைந்துள்ளனர். இவர்கள் வாபஸ் பெற்று கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுமாறு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்தே தற்போது போட்டி வேட்பாளர்களை வாபஸ் பெற வைக்கும் முயற்சிகளில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பணபலம் உள்ளிட்டவற்றைக் காட்டி பேரம் பேசி வருகின்றனராம்.
 
இன்று மாலை 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும் என்பதால் பேரம் பேசும் வேலைகள் படு துரிதமாக நடந்து வருகின்றன.



comments | | Read More...

தேமுதிகவுடனான கூட்டணி 'டமார்': சிபிஐ தனித்துப் போட்டி!

 
 
 
அதிமுகவிடம் கடைசி வரை கெஞ்சிப் பார்த்தும் எதுவும் கிடைக்காததால் கோபித்துக் கொண்டு தேமுதிகவிடம் வந்து சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அங்கும் தனது விருப்பத்திற்கேற்ப இடம் கிடைக்காததால் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
 
அதிமுகவிடம் கேட்ட இடங்கள் கிடைக்காது என்று உறுதியாகத் தெரிந்தவுடன் சட்டென முடிவெடுத்து தேமுதிகவிடம் வந்து விட்டது சிபிஎம். சட்டுப் புட்டென்று பேசி இடப் பங்கீட்டையும் முடித்துக் கொண்டது.
 
சிபிஎம்முக்கும், தேமுதிகவுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி கோவை மேயர் பதவியில் சிபிஎம் போட்டியிடுவது எனவும், 19 வார்டுகளில் அக்கட்சி போட்டியிடுவது எனவும் தீர்மானமானது. மற்ற இடங்களில் தேமுதிக போட்டியிடுவது என உடன்பாடு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் கடைசியாக வந்து சேர்ந்த சிபிஐக்கு எதைத் தருவது என்பதில் குழப்பமாகிவிட்டது. தங்களுக்குக் கிடைத்த வார்டுகளை விட்டுத் தர சிபிஎம் மறுத்து விட்டது. சிபிஐ திருப்பூர், நெல்லை மாநகராட்சி மேயர் பதவிகளுக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்தது. அதற்கு தேமுதிக நிர்வாகிகளும் சம்மதம் தெரிவித்த நிலையில் சம்பந்தப்பட்ட பகுதி நிர்வாகிகள் ஒப்புக்கொள்ளவில்லை.
 
இதையடுத்து உங்க சங்காத்தமே வேண்டாம் என்று வட சென்னையில் தனித்துப் போட்டியிடுகிறது சிபிஐ. இது தவிர திருப்பூர் மாநகராட்சியின் 35 வார்டுகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
 
கூட்டணி டமார் ஆனதால் திருப்பூர், நெல்லை மேயர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தவர்கள் அவற்றை வாபஸ் பெற்றனர். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தனி்தது களமிறங்குகிறது. பிரச்சார விவரங்களையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.
 
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் வரும் 7-ம் தேதி திருவாரூரில் பிரச்சாரத்தை துவங்குகிறார். அதையடுத்து புதுக்கோட்டை (9-ம் தேதி), நெல்லை (10-ம் தேதி), சிவகங்கை (11-ம் தேதி), கிருஷ்ணகிரி (12-ம் தேதி), தர்மபுரி (13-ம் தேதி), சென்னை (14-ம் தேதி), மதுரை (15-ம் தேதி), விருதுநகர் (16-ம் தேதி) ஆகிய இடங்களில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
 
இதே போன்று ஆர். நல்லக்கண்ணு, சி. மகேந்திரன், பழனிச்சாமி, கோபி, தியாகராஜன் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் மாநிலம் முழுவதும் சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.



comments | | Read More...

ஆமா, நான் கோபக்காரன்தான்: விஜயகாந்த்

 
 
 
தவறு நடப்பதைப் பார்த்தால் கோபப்படுகிறேன். அதற்காக என்னை கோபக்காரன் என்கிறார்கள். கோபம் இருக்கும் இடத்தில் தானே குணம் இருக்கும் என்று தேமுதிக தலைவரும், எதிரிகட்சித் தலைவருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தனது கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசியதாவது,
 
மக்களி்ன் தேவைகளை அறிந்து செயல்படும் கட்சி தேமுதிக. என்னை கோபக்காரன் என்கிறார்கள். அது உண்மை தான். தவறு நடப்பதைப் பார்த்தால் நான் கோபப்படுவேன். கோபம் இருக்கும் இடத்தில் தானே குணம் இருக்கும் என்பது மக்களுக்கு தெரியும்.
 
உங்களுக்கு நன்மை செய்ய தேமுதிக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள். நாட்டில் நல்லவை நடக்க, உள்ளாட்சி நல்லவிதமாக நடக்க தேமுதிகவுக்கு வாக்களியுங்கள். உங்களுக்கு நல்லது செய்ய எங்களுக்கு வாய்ப்பளியுங்கள்.
 
ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன். ஓடி, ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும் என்ற நோக்த்தோடு தான் நாங்கள் செயல்படுகிறோம்.
 
தமிழகத்தி்ல தொடர்ச்சியாக 1 மணி நேரம் மழை பெய்தால் தெருவில் நடக்க முடியவில்லை. குண்டும், குழியுமாக உள்ளது. எங்களுக்கு வாக்களித்துப் பாருங்கள். வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள். இன்று எங்களைப் பார்த்து பலருக்கும் பயம் வந்துள்ளது. என் கட்சிக்காரனே தவறு செய்தால் கூட நான் சும்மாவிட மாட்டேன்.
 
எதிர்கட்சியினர் ஜாதி, மதப் பிரச்சனையை தூண்டிவிடுகின்றனர். இங்கு இவ்வளவு பேர் நிற்கிறீ்ர்களே நீங்கள் விடும் மூச்சில் ஜாதி, மதம் தெரிகிறதா? இல்லையே. மனிதன் இறந்தால் வெறும் 6-க்கு 3 குழி தான்.
 
அப்படி இருக்கையில் ஊழல் செய்து என்ன வாழப்போகிறீர்கள். தமிழகத்தில் ஊழல் செய்தவர்கள் மருத்துவமனையில் படுத்திருக்கிறார்கள். மத்தியில் ஊழல் செய்தவர்களுக்கு ஞாபகமறதி நோய் வந்துள்ளது.
 
ஒரு நாள் தேமுதிக தமிழகத்தின் நம்பர் 1 கட்சியாகும். 1 எம்.எல்.ஏ.வுடன் துவங்கப்பட்ட எங்கள் கட்சிக்கு இன்று 29 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இனியும் நாங்கள் வளர்வோம்.
 
மீனவர்கள் பிரச்சனைக்காக ராமோஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினேன். ஆனால் இன்னமும் மீனவர்கள் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இலங்கை கடற்படையின் அட்டூழியம் நீடிக்கத் தான் செய்கிறது. அதைப் பார்த்தும் மத்திய-மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
மகாத்மா காந்தியடிகள் ரத்தம் சிந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். ஆனால் இன்று எங்கு பார்த்தாலும் ஊழல் தான் உள்ளது. மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க மக்களே கூடி உருவாக்குவது தான் உள்ளாட்சி.
 
படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. ஏழைத் தாயாமார்களிடம் தாங்கும் சக்தி மட்டுமே உள்ளது. லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகளுக்குத் தான் வாங்கும் சக்தி உள்ளது என்றார்.



comments | | Read More...

நவராத்ரி வாழ்த்துகள் !





படிப் படியாக முன்னேறுகிறது - இந்தியா.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger