கார் பஞ்சராகி போக்குவரத்து நெரிசல்: பயணிகள் முற்றுகையால் ஸ்ரேயா தவிப்பு கார் பஞ்சராகி போக்குவரத்து நெரிசல்: பயணிகள் முற்றுகையால் ஸ்ரேயா தவிப்பு
ஸ்ரேயாவின் சந்திரா படம் தமிழ், கன்னடத்தில் தயாராகிறது. தெலுங்கு, இந்திப்படங்களிலும் நடிக்கிறார். இதற்காக மும்பையிலேயே அதிக நாட்கள் தங்கி இருக்கிறார். அங்கு கார் பஞ்சராகி பயணிகள் முற்றுகையில் சிக்கி போலீசார் வந்து ஸ்ரேயாவை மீட்ட சம்பவம் நடந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்த தோழிகளை அழைத்து வருவதற்காக ஸ்ரேயா மும்பை விமான நிலையத்துக்கு சென்ற ார். அவரே காரை ஓட்டிப்போனார். தோழிகளை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு திரும்பியபோது முக்கிய சாலையில் கார் பஞ்சராகி நின்றது.
இதனால் கார் பின்னால் வாகனங்கள் நகர முடியாமல் நின்றன. தவித்து போன ஸ்ரேயா உடனடியாக அவரது தந்தைக்கு செல்போனில் தகவல் சொன்னார். அவர் வருவதற்கு முன்னால் நெரிசலில் சிக்கிய வாகனங்களில் இருந்த பயணிகள் இறங்கி வந்து ஸ்ரேயாவை முற்றுகையிட்டனர். à ��ிலர் ஆட்டோகிராப் கேட்டனர். இன்னும் சிலர் ஆவேசமாக திட்டி தீர்த்தனர்.
அப்போது தந்தை போலீசாரை அழைத்துக் கொண்டு அங்கே வந்தார். ஸ்ரேயாவை கூட்டத்தினர் மத்தியில் இருந்து போலீசார் மீட்டனர். என் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் இது என்று வேதனைப்பட்டார் ஸ்ரேயா.
Post a Comment