News Update :
Powered by Blogger.

ராணுவ வீரரை கடத்தி அவரிடம் பலவந்தமாக உடலுறவில் ஈடுபட்ட 2 பெண்கள்

Penulis : Tamil on Wednesday, 1 May 2013 | 05:46

Wednesday, 1 May 2013

  ராணுவ வீரரை கடத்தி  அவரிடம்  பலவந்தமாக உடலுறவில்  ஈடுபட்ட 2 பெண்கள்  ஆண்  கற்பழிப்பு

ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 19ம்தேதி நள்ளிரவு மாணிக்காலாந்து மாகாணத்தில் உள்ள முடாரே நகரில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி லிப்ட் கேட்டார். காரினுள் இருந்த ஒரு ஆணும், 2 பெண்களும் அவரை ஏற்றிக்கொண்டனர்.

சற்றுதூரம் சென்றதும் கார் வேறு வழியாக செல்வதைக் கண்ட ராணுவ வீரர், தன்னை இறக்கிவிடும் படி கூறியபோது, காரை ஓட்டிய நபர் கத்தியைக் காட்டி மிரட்டினார்.

பெண்களில் ஒருத்தி அவரது கண்ணை துணியால் கட்டினாள். அடையாளம் தெரியாத இடத்தில் தனிமையான ஒரு வீட்டிற்கு ராணுவ வீரரை அவர்கள் கடத்திச் சென்றனர். அங்கு அவரது ஆடைகளை கழற்றி, நிர்வாணப்படுத்தி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்ட 2 பெண்களும் பலவந்தமாக அவருடன் உடலுறவில் ஈடுபட்டனர்.

2 பெண்களும் அவருடன் 4 நாட்கள் மாறி, மாறி பலமுறை கட்டாய உடலுறவில் ஈடுபட்ட பின்னர், கடந்த 23ம் தேதி மீண்டும் கண்ணைக் கட்டி காரில் அழைத்து வந்து முடாரே நகர் அருகில் உள்ள டங்கமுவாரா மலைப் பகுதியில் இறக்கி விட்டனர். மலையோரம் இருந்த பெரிய கல்லை எடுத்து அவரது இடது காலை காயப்படுத்தி விட்டு அவர்கள் காரில் தப்பிச் சென்றனர்.

ராணுவ வீரர் முடாரே நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த பெண்களையும், அவர்களுடன் இருந்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger