Thursday, 12 September 2013
சென்னையில் போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் 1850 விநாயகர் சிலைகள்: நாளை முதல் 4 நாட்கள் ஊர்வலம் police security ring 1850 Vinayagar statues tomorrow start 4 days
Tamil NewsToday
சென்னை, செப். 13–நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 9–ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி 1705 இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த ஆண்டும் அதே இடங்களில் மட்டுமே சிலைகளை வைப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் போலீஸ் எதிர்ப்பையும் மீறி இந்த ஆண்டு சுமார் 150 இடங்களில் கூடுதலாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1850 இடங்களில் பெரிய சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.இதுதவிர சென்னை மாநகர் முழுவதிலும் சிறிய அளவிலான களிமண் சிலைகளை வீடுகளில் வாங்கி வைத்து பொதுமக்கள் பூஜித்து வருகிறார்கள். இப்படி வீடுகளில் வைக்கப்படும் சிலைகளை 3 நாட்கள் கழித்து நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதன்படி நேற்று முதல் சிறிய விநாயகர் சிலைகளை பொதுமக்கள் எடுத்துச் சென்று கடலில் கரைத்து வருகிறார்கள்.நாளை முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது. சிவசேனா சார்பில் நாளை ஊர்வலம் நடத்தப்படுகிறது.நாளை மறுநாள் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் பங்கேற்கும் பிரமாண்டமான விநாயகர் சிலை ஊர்வலம் நடை பெறுகிறது. இதில் ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். இதற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகிறார்கள். 16, 18–ந்தேதிகளிலும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது.சென்னையில் இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு நல சங்கங்கள் சார்பில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் ஷிப்டு முறையில் அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் போலீசார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.சிலைகளை வைத்துள்ள விழா கமிட்டியினருக்கு போலீசார் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். மத உணர்வுகளை தூண்டும் வகையில் கோஷங்கள் எழுப்பக் கூடாது, ஓலையால் கொட்டகை அமைக்கக்கூடாது, எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை சிலைகளின் அருகில் வைக்கக் கூடாது, என்பது போன்ற கட்டுப்பாடுகளுடன், ஊர்வல பாதையில் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் வகுத்து கொடுத்துள்ளனர்.மாட்டு வண்டிகளில் சிலைகளை எடுத்துச் செல்வதற்கு கடந்த சில ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டும் அதனை கடைபிடிக்க விழா கமிட்டியினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இதனை மீறுவோர் கைது செய்யயப்படுவார்கள் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ...
Show commentsOpen link