Friday, 9 August 2013
கனடாவில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இன்று ஆடவர் இரட்டையர் 2-ம் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 4-ம் தரநிலை ஜோடியான லியாண்டர் பயஸ்-ஸ்டெபானிக் ஜோடி, இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே-கோலின் பிளெமிங் ஜோடியை எதிர்கொண்டது.
இந்திய-செக் குடியரசு ஜோடியான பயஸ்-ஸ்டெபானிக் ஜோடி, 3-6, 3-6 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதன்மூலம் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
போபண்ணா-ஆண்ட்ரே பெக்மேன் ஜோடி ஏற்கனவே வெளியேறியது. சீனாவின் ஜீ ஜெங்குடன் இணைந்து விளையாடிய சானியா மிர்சா, 2-வது சுற்றில் தோல்வியடைந்தார்.