Thursday, 10 October 2013
சோனியாவும் பிரதமரும் என் அரசியல் குரு: ராகுல் காந்தி Sonia Gandhi and Prime Minister of my political guru Rahul Gandhi
Tamil NewsToday, 23:35
சண்டிகர், அக். 10-
பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, இன்று பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது:-
தண்டனை பெறும் எம்.பி. எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தற்கு சரியான நேரத்தில்தான் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். உணமையைப் பேசுவதற்கு நேரம் காலம் எல்லாம் பார்க்க முடியாது.
பெண்களுக்கு அதிகாரம் தருவது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமாகும். உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின பங்களிப்பு தேவை.
சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் எனக்கு அரசியல் குருவாக உள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பெரும் பங்காற்றியுள்ளார்.
போதைப் பழக்கத்தால் பஞ்சாப் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
...
Show commentsOpen link