பிரபல இந்தி நடிகை லைலாகான் மும்பையில் ஒஷிவாராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர், அவரது தாய் சலீனாபடேல், சகோதரி அஸ்மினாபடேல், இரட்டையர்களான ஜாரா, இம்ரோன் மற்றும் உறவினர் ரேஷ்மா க� �ன் ஆகிய 6 பேர் திடீரென மாயமாகி விட்டனர்.
லைலாகானின் தந்தை நாதிர்படேல் இதுதொடர்பாக மும்பை போலீசில் புகார் செய்தார். அவர் தன் மனுவில், என் மனைவி, மகள் உள்பட 6 பேரை 2 பேர் மிரட்டி கடத்திச் சென்று விட்டனர் என்று கூறியிருந்தார் மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தியும், நடிகை லைலாகானை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் லைலாகானின் கதி என்ன ஆனது என்று கடந்த 15 மாதங்களாக மர்மம் நீடித்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 21-ந்தேதி காஷ்மீர் மாநிலம் கிஷ்த்துவாரில் சந்தேகத்தின் அடிப்படையில் பர்வேஸ் இக்பால்தக் என்பவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். இவன் லஷ்கர்-இ- தொய்பா இயக்கத்தை சேர்ந்தவன் என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்தியபோது மும்பையில் அவன் நடிகை லை� �ாகான் வீட்டில் தங்கி இருந்தது தெரியவந்தது.
லைலாகான் 15 மாதங்களாக மாயமாகி உள்ள தகவல் பற்றி போலீசார் அவனிடம் கேட்ட போது, லைலாகானும், அவரது குடும்பத்தினரும் போலி பாஸ்போர்ட்டில் துபாய் சென்று விட்டனர். அங்கு ரகசியமாக வாழ்ந்து வருகின்றனர் என்று கூறினான்.
நடிகை லைலாகான் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந� ��ததால் காஷ்மீர் போலீசார் பர்வேஸ் இக்பால் தக்கை மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோதுதான், நடிகை லைலாகானையும், அவரது குடும்பத்தினரையும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே சுட்டுக் கொன்று விட்டதாக தக் கூறினான்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மும்பை, காஷ்மீர் போலீசார் தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வ� �ுகிறார்கள். இந்த நிலையில் நடிகை லைலாகானின் தந்தை நாதிர்படேல் மும்பை போலீசில் நேற்று முன்தினம் புதிய புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் அவர், எனது மகள் லைலா மற்றும் குடும்பத்தினரை கடத்திச் சென்றது பர்வேஸ் இக்பால் தக் மற்றும் அவனது கூட்டாளியான ஆசிப்ஷேக் இருவரும்தான். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதையடுத்து பர்வேஸ் இக்பால் தக்கிடம் போலீசார் மீண்டும் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது தக் கூறுகையில், லைலாகான் மற்றும் 5 பேரை மும்பையில் இருந்து 120 மைல் தொலைவில் உள்ள காட்டுக்குள் கடத்திச் சென்றதாகவும், அங்கு அவர்களை சுட்டுக் கொலை செய்து உடல்களை புதைத்து விட்டதாகவும் கூறினான். அவன் கொடுத்த இந்த தகவல் உண்மையானதுதானா � ��ன்பதை அறிய போலீசார் அந்த காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். தக் கூறிய இடத்தில் தோண்டி பார்க்க முடிவு செய்துள்ளனர். அங்கு நடிகை லைலாகான் உடல் கிடைத்தால்தான் கொலை பற்றிய ஒரு முடிவுக்கு வர முடியும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
இதற்கிடையே நடிகை லைலாகானின் கோடிக் கணக்கான சொத்துக்களை பறிக்கவே அவரையும், அவரது குடும்ப� �்தினரையும் தக் தன் கூட்டாளி ஷேக்குடன் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
நடிகை லைலாகானுக்கு மும்பையில் ஒஷிவராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு தவிர மீரா ரோட்டில் சொகுசு பங்களா உள்ளது. இவை தவிர நாசிக்கிலும் லைலாகானுக்கு பிரமாண்ட பங்களா உள்ளது. மேலும் லைலாகான் கோடிக்கணக்கி ல் நகைகள், பணம் வைத்திருந்தார். இதை தெரிந்து கொண்ட பர்வேஸ் இக்பால் தக் திட்டமிட்டு லைலாவை குடும்பத்துடன் தீர்த்துக் கட்டியுள்ளதாக கருதப்படுகிறது.
நடிகை லைலாகான் கடத்தப்பட்டபோது ரூ.2 கோடி நகைகள் மற்றும் பணம் வைத்திருந்தாராம். அவற்றை தக் பறித்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது. லைலாகானின் காரும் தக்கிடம் இருந்து பறி முதல் செய்யப்பட்டுள்ளது. பர்வேஸ் இக்பாலிடம் முதல் கட்ட விசாரணைதான் முடிந்துள்ளது. நேற்று அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்திய மும்பை போலீசார் விசாரணை நடத்துவதற்காக மேலும் 7 நாள் காவலில் எடுத்துள்ளனர். எனவே அடுத்தடுத்த விசாரணைகளில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லைலாகான� ��ன் தாய் சலீனாவை தீவிரவாதி பர்வேஸ் இக்பால் தக் மற்றும் கூட்டாளி ஆசிப்ஷேக் இருவரும் சேர்ந்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த கள்ளத் தொடர்பால் தான் லைலாகானும், அவரது குடும்பத்தினரும் கூண்டோடு பலியாக காரணமாகி விட்டது.