News Update :
Powered by Blogger.

இன்று வாக்கு எண்ணிக்கை: குடியரசுத் தலைவராக தேர்வாகிறார் பிரணாப் முகர்ஜி

Penulis : karthik on Saturday, 21 July 2012 | 21:36

Saturday, 21 July 2012





நாட்டின் 14-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று எண்ணப்படுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவார் � �ன்று எதிர்பார்க்கப்படுகிறது.
14-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.ஏ.சங்மாவும் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. நாட்டின் எம்.பி, எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். மொத்தம் 72 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
அனைத்து மாநில வாக்குப் பெட்டிகளும் சீல் வைக்கப்பட்டு விமானங்கள் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. நாடாளுமன்ற அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அ� ��ை அனைத்தும் இன்று திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன.
அனேகமாக பிற்பகலுக்குள் முடிவு அறிவிக்கப்பட்டுவிடும். பெரும்பான்மையான கட்சிகள் பிரணாப் முகர்ஜிக்கே ஆதரவாக இருப்பதால் அவரே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலின் பதவிக் காலம் வரும் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய குடியரசுத் தலைவர் 25-ந் தேதி பதவியேற்க உள்ளார். புதிய குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பதவியேற்பு செய்து வைப்பார். புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி நாடாளு� ��ன்ற வளாகத்தில் நடைபெற்றது.








comments | | Read More...

'ஜெயம்' ராஜா வழியில் பிரபுதேவா





இந்தி திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார் நம்ம ஊர் பிரபுதேவா.

விஜய் நடித்த 'போக்கிரி' படத்தினை இயக்கிய பிரபுதேவா அப்படத்தினை 'WANTED' என்ற பெயரில் சல்மான்கான் வைத்து இயக்கினார். படம் அதிரிபுதிரி ஹிட்.

அதனைத் தொடர்ந்து இந்தியில் பல்வேறு வாய்ப்புகள் பிரபுதேவா வீட்டி கதவை தட்டோ தட்டென்று தட்டின. அடுத்த படமும் தமிழில் வசூலை வாரி இறைத்த 'சிறுத்தை' படத்தின் இந்தி ரீமேக்கான் 'ROWDY RATHORE' படத்தினை அக்ஷய்குமாரை வைத்து இயக்கினார்.

அப்படமும் 100 கோடி வசூலை கடக்க, தற்போது மும்பை திரையுலகம் பிரபுதேவா வசமாகி இருக்கிறது. இந்தியின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் பிரபுதேவாவைத் தொடர்பு கொண்டு இரு� �்கின்றன.

தமிழில் 'போக்கிரி' படத்தினைத் தொடர்ந்து 'எங்கேயும் காதல்', 'வெடி' படங்கள் வரவேற்பைப் பெறவில்லை. இந்தியில் தொடர்ந்து தனது படங்கள் வசூல் மழையில் நனைவதால், தமிழில் படம் இயக்க இன்னும் பல மாதமாகும் என்கின்றனர். மேலும், அங்கு இவரது சம்பளம் இவரது பாக்கெட்டையும், பாராட்டுகள் இவர� �ு மனதையும்  நிரப்பி வழிகிறதாம்.

தமிழில் படங்களை இயக்கிய பிரபுதேவா, தான் இயக்குனராக அறிமுகமான Nuvvostanante Nenoddantana தெலுங ்கு படத்தினை இந்தியில் ரீமேக் செய்கிறார். இப்படம் தான் தமிழில் 'உனக்கும் எனக்கும்' என்ற பெயரில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்தது.

பிரபுதேவா இயக்கும் இந்தி படத்தில் தயாரிப்பாளர் குமார் தாருணீயின் மகன் க்ரிஷ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக ஸ்ருதிஹாசன்  ஒப்பந்தமாகி இருக்கிறார்.

'ஜெயம்' ராஜா ரீமேக் படங்களாலேயே தனக்கென இங்கு ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டது போல, இந்தியில் பிரபுதேவா மார்கெட் பிடித்துவிட்டார்.







comments | | Read More...

தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படமான ‘மூகமூடி’ ஆகஸ்ட் 31-ல் வெளியீடு





யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழில் முதல் சூப்பர் ஹீரோ படமான 'முகமூடி' திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மிஸ்கின், இசையமைப்பாளர் கே, நடிகர்கள் ஜீவா, விஜய், நரேன்கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இப்படத்தின் ஆடியோ சிடியை விஜய்யும், புனித் ராஜ்குமாரும் வெளியிட்டனர்.

'முகமூடி' படத்தை இயக்குனர் மிஷ்கின் எழுதி இயக்கியுள்ளார். இதில் சூப்பர் ஹீரோவாக ஜீவா நடித்துள்ளார். அவருடன் நரேன், பூஜா ஹெக்டே, நாசர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யா ஒளிப்பதிவு செய்கிறார். மதன் கார்க்கி வரிகளுக்கு கே இசையமைக்கிறார். இந்த ஆல்பத்தில் இனிமையான 3 மாஸ் பாடல்களும், 6 தீம் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

இது ஆக்ஷன் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படம் என்பதோடு குழந்தைகளைக் கவர்வதாகவும், குடும்பத்துடன் இணைந்து பார்க்கும் படமாகவும் அமைந்துள்ளது.

இப்படத்தின் பெரும்பகுதி சென்னையிலும், ஐரோப்பாவிலும் படமாக்கப்பட்டுள்ளது. ஜீவாவும், நர� �னும் இந்த படத்திற்காக குங்ஃபூ பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவே ஹாங்காங்கைச் சேர்ந்த நிபுணர்கள் சென்னை வந்து இவர்களுக்கு பயிற்சி கொடுத்தனர்.

மேலும் ஹாங்காங்கை சேர்ந்த ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஜீவாவுக்கு சூப்பர் ஹீரோ காஸ்டியூம்-ஐ வடிவமைப்பு செய்துள்ளனர்.

மிஷ்கின், ஜீவா ஆகிய இருவரும் இணையும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் இப்படத்தை ஆகஸ்ட் 31-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.







comments | | Read More...

சரத்பவாரை சமாதானப்படுத்த சோனியா முன் வைக்கும் புது 'நம்பர் -2' பார்முலா!





ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இப்பொழுது குடைச்சல் கொடுக்கத் தொடங்கியிருக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார� �� சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சி பார்முலா ஒன்றை உருவாக்கியுள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் நம்பர் 2- என்ற இடத்தில் இருந்தவர் பிரணாப் முகர்ஜி. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நம்பர் 3- ஆக இருந்த சரத்பவார் தமக்கு நம்பர் 2- தகுதி கிடைக்கும் என கனவு கண்டு கொண்டிருந்த� �ர். ஆனால் காங்கிரஸோ காலை வாரிவிட்டது. 4-வது இடத்தில் இருந்த ஏ.கே. அந்தோணிக்கு நம்பர் 2 இடம் கொடுக்க ஆத்திரப்பட்டார் சரத்பவார். இதன் உச்சமாக சரத்பவாரும் அவரது கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பிரபுல் பட்டேலும் நேற்று மன்மோகன்சிங்கிடம் தங்களது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர்.

இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சரத்பவார் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது சரத்பவாரை சமாதானப்படுத்தும் விதமாக சோனியா காந்தி பார்முலா ஒன்றைக் கூறியுள்ளார்.

அதாவது பிரதமர் மன்மோகன்சிங் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அமைச்சரவைக் குழுதான் அரசாங்கத்தை நடத்தும். தற்போதைய நிலையில் நம்பர் 2-ஆக இருக்கும் ஏ.கே. அந்தோணி, சரத் பவார் மற்றும் மக்களவை தலைவர் ஆகியோர் அடங்கிய குழு அரசாங்கத்தை நடத்தட்டும் என்று சோனியா காந்தி கூறியிருக்கிறார்.

அதாவது நிச்சயம் உங்களுக்கு நம்பர் 2 இடம் கிடையாது... அதனால எப்பவாவது பிரதமர் வெளிநாடு போனால் அரசாங்கத்தை நடத்தும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சோனியா கூறியிருக்கிறார்.
ஆனால் தேசியவாத காங்கிரஸைப் பொறுத்தவரையில் நம்பர் 2- என்ற இடத்தை மிரட்டியாவது பெற்றுக் கொள்வது என்பதில் உறுதியாக இருக்கிறது. இதனால் காங்கிரஸ் முன்வைக்கும் ஒப்பந்தத்தை ஏற்க வேண்டுமெனில் பாதுகாப்பு அமைச்சர் பதவியை கொடுக்குமாறு நிர்பந்திப்பது என்ற நிலைப்பாட்டில் தேசியவாத காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறத� �. மேலும் நம்பர் 2 இடத்தை அந்தோணியுடன் பகிர்ந்து கொள்ள வலியுறுத்துவது என்றும் தேசியவாத காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது.

இதேபோல் தமது ஜூனியரான சுஷில்குமார் ஷிண்டேவை அவை முன்னவராக பிரணாப் முகர்ஜி வகித்த பதவிக்கு நியமிப்பதிலும் சரத்பவார் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.







comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger