ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.36 லட்சம் மோசடி ஒருவர் கைது ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.36 லட்சம் மோசடி ஒருவர் கைது
காஞ்சீபுரம், செப்.29-
ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த இலுப்பை தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 47). இவர் அரக்கோணம் அம்மனூர் டெலிபோன் எக்சேஞ்சில் டெலிபோன் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை சேர்ந்த நெப்�® �ோலியன் என்பவரை அணுகி இந்திய ரெயில்வே துறையில் டீசல் என்ஜின் டிரைவர் பதவி மற்றும் கேட்மேன் பதவி வாங்கி தருவதாக கூறினார். மேலும் என்ஜின் டிரைவர் வேலைக்கு ரூ.6 லட்சமும், கேட்மேன் வேலைக்கு ரூ.4 லட்சமும் பணம் கொடுக்க வேண்டும் என்று குமரேசன் நிபந்தனை விதித்தார். இதை நம்பிய நெப்போலியன், அவரது மனைவி உள்பட 4 பேர் என்ஜின் டிரைவர் பதவிக்காக தலா ரூ.6 லட்சம் வீதம் ரூ.24 லட்சமும், க ேட்மேன் பதவிக்காக வேறு 3 பேர்கள் தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.12 லட்சமும் என்று மொத்தம் ரூ.36 லட்சத்தை குமரேசனிடம் கொடுத்தனர். பணத்தை பெற்றுக் கொண்ட அவர் பணி உத்தரவுகளை வழங்கினார். அதன் பின்னர் அந்த பணி உத்தரவு போலியானது என்பது தெரிய வந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மனோகரனிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின்பேரில், மாவட்ட குà ��்றப்பிரிவு துணை சூப்பிரண்டு ரமேஷ்பாபு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் என்.ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குமரேசன் ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் பணத்தை பலரிடம் பெற்று, அவர்களை மோசடி செய்து ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து குமரேசனை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து செங்கல்பட்டு குற்றவியலà � கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Post a Comment