News Update :
Powered by Blogger.

ரஜினிக்குப் பின் அஜீத்... சத்தமில்லாமல் ஒரு சாதனை!

Penulis : karthik on Saturday, 24 December 2011 | 18:44

Saturday, 24 December 2011

 
 
 
 
 
 
ஒழுங்காக ஒரு வெற்றிப்படம் கூட தரமுடியாத நடிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் நானாக்கும் என்று விரலாட்டிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் ஒரு சாதனை செய்துவிட்டு அமைதி காக்கிறார் அஜீத்.
 
இவரும் கூட ஒரு காலத்தில் நானே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னவர்தான். ஆனால் பின்னாளில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைய எத்தனை பாடுகள் படவேண்டும், எத்தனை வெற்றிகள் தரவேண்டும், அந்த வெற்றிகளின் பிரமாண்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது புரிந்து அமைதியாகிவிட்டார் (இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஒரு படத்திலாவது அடிவாங்கினால் போதும் என்கிறார்!)
 
அஜீத் நடிக்க மங்காத்தா படம் மொத்தம் ரூ 130 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு அடுத்து அதிக வசூல் தரும் நாயகன் என்ற அந்தஸ்து அஜீத்துக்கு கிடைத்துள்ளது.
 
இந்த வெற்றி மற்றும் வசூல் காரணமாக, அஜீத்தின் அடுத்த படத்துக்கான வர்த்தகம் எகிறிவிட்டது. சன் பிக்சர்ஸ் ஒரு பக்கம், வேறு போட்டி நிறுவனங்கள் மறுபக்கம் என அந்தப் படத்தை வாங்கப் போட்டி போடுகின்றன!



comments | | Read More...

நன்கொடை கொடுங்க! - 'வசூலில்' இறங்கிய ஹஸாரே

 
 
 
மும்பையில் உண்ணாவிரதமிருக்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்துக்கு வாடகை செலுத்த தேவையான தொகையை நன்கொடையாக தருமாறு மக்களைக் கேட்டுள்ளார் அன்னா ஹஸாரே.
 
ஊழலுக்கு எதிராக அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் சட்டத்தை ஹஸாரே ஏற்காமல் அடம்பிடித்து 27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
 
முன்பு அவர் உண்ணாவிரதமிருந்தபோது ஆதரித்தவர்கள் கூட, இந்த முறை எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.
 
இருந்தாலும் மும்பை எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அந்த மைதானத்துக்கான வாடகையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி அன்னா ஹசாரே குழுவை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
 
அந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. மேலும், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் குறித்தும் கடுமையாகத் திட்டி தீர்ப்பளித்தனர் நீதிபதிகள். உண்ணாவிரதம் என்ற பெயரில் மக்களுக்கு அவர் தொல்லை கொடுப்பதாகவும், நாடாளுமன்றத்தை மதிக்காமல் செயல்படுவதாகவும் குட்டு வைத்தனர்.
 
ஆனால் அதை கண்டுகொள்ளவில்லை ஹஸாரே. மைதானத்துக்கான வாடகையை நன்கொடை மூலமாக வசூலித்து கொடுப்பதாக அன்னா ஹசாரே நேற்று அறிவித்தார்.
 
தெரியாமல் வழக்கு போட்டுவிட்டார்கள்!
 
இதுகுறித்து அவர் கூறுகையில், "உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கான வாடகையை ரத்து செய்யுமாறு வழக்கு தொடர்ந்தவர்கள், புதியவர்கள். தவறான முடிவை எடுத்து விட்டனர். என்னிடம் கேட்டிருந்தால் நீதிமன்றத்துக்குச் செல்வதை அனுமதித்திருக்க மாட்டேன். ஆசாத் மைதானம் போதுமானதாக இருக்காது என்பதால் எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தை அணுகி வாடகையை குறைக்குமாறு கேட்டோம். அதற்கு, அங்கீகாரம் பெற்ற அமைப்பாக இருந்தால் வாடகையை குறைக்கலாம் என எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதான நிர்வாகம் தெரிவித்தது.
 
எனவே, சில சலுகைகளுக்கு பிறகு மைதானத்தின் வாடகை ரூ.7 லட்சம் வரை ஆகும் என தெரிகிறது. ஏற்கனவே, ரூ.2 லட்சம் வரை மக்கள் நன்கொடை அளித்துள்ளனர். மேலும், நன்கொடை வசூல் செய்து மைதான வாடகையை கொடுப்போம். காசோலை அல்லது வரைவோலை மூலமாக மட்டுமே நன்கொடையை ஏற்போம். நன்கொடை பற்றிய கணக்குகளும் முறையாக பராமரிக்கப்பட்டு வெளியிடப்படும்.
 
கிரண்பெடி, கெஜ்ரிவால்
 
வலிமையான லோக்பால் சட்டத்தை அமல்படுத்த கோரி, மும்பையில் நான் மேற்கொள்ளும் உண்ணாவிரத போராட்டத்தில் என்னுடன் அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பெடி ஆகியோர் பங்கேற்கின்றனர். இதுபோல, டெல்லியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் மற்றொரு சமூக ஆர்வலர்கள் குழுவினர் கலந்து கொள்வார்கள்.
 
வலுவான லோக்பால் சட்டத்தை பல்வேறு அரசியல் தலைவர்கள் விரும்பவில்லை. இந்திய மக்களின் முழு சம்மதத்துடன் மட்டுமே புதிய சட்டத்தை அமல் படுத்த வேண்டும். லோக்பால் வரம்புக்குள் சி.பி.ஐ. அமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்," என்றார்.
 
மும்பைக்கு இடமாற்றம் ஏன்?
 
இதற்கிடையே, டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு 27-ந் தேதி முதல் 5 நாட்களுக்கு டெல்லி போலீசார் அனுமதி அளித்துள்ளனர். கூடுதலாக சில நாட்களுக்கு இந்த அனுமதி நீட்டிக்கப்படும். இந்த தகவலை, அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த கிரண்பெடி தெரிவித்தார்.
 
மேலும், அவர் கூறுகையில், 'டெல்லியில் கடுங்குளிர் நிலவுவதால் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருப்பதற்கு அது சரியான இடமாக இருக்காது. இரவு முழுவதும் மைதானத்தில் அமர்ந்திருக்க வேண்டும். எனவே, அவருடைய வயது மற்றும் குளிரை கருத்தில் கொண்டு இடமாற்றம் செய்துள்ளோம். அவருடன் ஏராளமான மக்களும் அந்த குளிருக்குள் உண்ணாவிரதம் இருப்பார்கள். இதுவும், இட மாற்றத்துக்கான காரணம் ஆகும்' என்றார்.




comments | | Read More...

'காட்டிக் கொடுத்த' கருணா கோஷ்டியின் புத்தாண்டு விழாவில் சங்கீதா, ஜீவா, கிரிஷ்!

 
 
'காட்டிக் கொடுத்த' கருணா கோஷ்டியின் புத்தாண்டு விழாவில் சங்கீதா, ஜீவா, கிரிஷ்!
 
ஈழப் போரில் சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்து அரசியல் ஆதாயம் பெற்றவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள கருணா கோஷ்டி நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா, நடிகர் ஜீவா, பாடகர் கிரிஷ் பங்கேற்பதாக செய்தி வெளியாகியுள்ளதால், அவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
 
நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, பின்னணி பாடகர் கிரிஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக ஒரிரு தினங்களில்அந்நாட்டுக்கு புறப்பட தயாராகி வந்தனர். இந்த நிலையில் அந்த புத்தாண்டு விழாவில் மூவரும் கலந்து கொள்வதற்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
 
காரணம், இந்த விழாவை நடத்துவது, ஈழப் போரில் தமிழ்ப் போராளிகள் வீழ்ச்சிக்கு வழிவகுத்து கருணாவும் அவர் கோஷ்டியினரும் என்பதுதான்.
 
 
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த வருடம் விடுதலைப் புலிகளுக்கு துரோகம் செய்து விட்டு ராஜபக்சேவுடன் கைகோர்த்த கருணா கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் புத்தாண்டும் புதுவாழ்வும் என்ற தலைப்பில் நியூசிலாந்தில் புத்தாண்ட விழாவை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார்கள்.
 
கருணா கோஷ்டியினர் நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, பின்னணி பாடகர் கிரிஷ் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக அந்த நாட்டில் போஸ்டர்கள் ஒட்டி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மூவரும் அந்த விழாவுக்கு செல்லக்கூடாது.
 
இலங்கையில் தமிழர்களின் இன அழிப்புக்கு கருணா முக்கிய காரணமாக இருக்கிறார். அவரை உலக தமிழர்கள் மன்னிக்கவே மாட்டார்கள். கருணா கோஷ்டியினர் நடத்தும் புத்தாண்டு விழாவுக்கு சென்றால் கடுமையான எதிர்ப்பை தெரிவிப்போம்," என்று குறிப்பிட்டுள்ளது.
 
 
மேலும், ஈழத் தமிழர் அமைப்புகள் பலவும் இந்த விழாவில் தமிழ் நடிகர் நடிகைகள் பங்கேற்பதை கடுமையாக கண்டித்துள்ளன.
 
 
கனடா, ஸ்விஸ், நார்வே போன்ற நாடுகளைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளும் இந்த மூன்று நடிகர்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



comments | | Read More...

7-ஆம் அறிவு கதையை திருடிய முருகதாஸ் அதிர்ச்சி தகவல்

 
 
 
கடந்த தீபாவளிக்கு ஜெயன்ட் நிறுவன தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா நடித்து வெளிவந்து, தமிழினத்திற்கே பெருமை சேர்த்து இருக்கும் ஏழாம் ஆம் அறிவு படத்தின் கதை முருக இயக்குனரின் அறிவில் உதித்த கதையில்லையாம்.
 
இந்தக் கதை கோலிவுட்டில் வறுமையில் வாடி இன்னமும் பொறுமை காக்கும் ஒரு உதவி இயக்குனரின் கதையாம்! இது பற்றிய தகவல்கள் தான் இப்போது கோலிவுட்டை குலுக்கியும் கலக்கியும் வருகிறது.
 
கதை திருடப்பட்டது எப்படி? தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரிடம் ஒரு கதை சொல்லி பட வாய்ப்பு பெற போயிருகு்கிறார் தங்கர்பச்சானின் உதவியாளர் கோபி., அவரிடம் கதை கேட்ட தயாரிப்பாளர் சுந்தர், இந்தக் கதையை ஜெகனிடம் சொல்லுங்கள் என்றிருக்கிறார், மரிக்கொழுந்து படத்தை இயக்கிய ஜெகன் அப்பொழுது விஸ்வா சுந்தரின் கதை கேட்பாளர். ( தற்போது முருக இயக்குனரின் கதை கேட்பாளர் கம் உதவி இயக்குனர்). உடனடியாக ஜெகனிடம் அந்த கதையைச் சொன்ன கோபியிடம் வேறு ஏதும் கதை இருக்கிறதா என விளையாட்டாக ஜெகன் கேட்க., கோபியும் பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணுவதென்றால் தன் வசம் இருந்த புத்த துறவி பற்றிய கதையை பிரமாண்டமாக எடுப்பதென்றால் எடுக்கலாம் எனக்கூறி டைட்டிலுடன் சொல்லி இருக்கிறார். கதையை ஊம்... கொட்டி கேட்ட ஜெகன் சரி தகவல் சொல்லி அனுப்புகிறேன் எனக்கூறி கோபியை அனுப்பி வைத்துள்ளார்.
 
இது நடந்த சில மாதங்களில், விஸ்வாஸ்சுந்தரின் படத்திட்டம் ஒரு சில காரணங்களால் அப்பொழுது கைவிடப்பட அங்கிருந்து வெளிவந்த ஜெகன் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் என்பதால், முருக இயக்குனரின் ஆஸ்தான கம்பெனி கதை கேட்பாளர் ஆகிவிட்டார். ஜெகன் ஒருநாள் பேச்சுவாக்கில் முருக இயக்கனரிடம் அந்தத் துறவி கதையைச் சொல்ல, அந்த இயக்குனர் அதிகாலை 4 மணிக்கு கோபியிடம மொத்த கதையையும் கேட்டுவிட்டு அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் படமாக்கிவிட்டார்.
 
தனக்கு "பாக்ஸ் ஆபீஸ்-ல்" இருந்து படம் கிடைக்கும் என காத்திருந்த கோபி ஏமாந்துவிட்டார். இதை எல்லாம் காட்டிக்கொள்ளாமல் துறவி பற்றிய அந்தக் கதையை தானே கண்டுபிடித்தது போல பத்து கோடி சம்பளத்தில் படமாக்கி கோபிக்கு பட்டை நாமம் சாத்தி விட்டாராம் பாவம்!
 
திருட்டுக்கதை பற்றிய விஷயம் சூர்யாவுக்கும், ஜெயன்ட் தயாரிப்பாளருக்கும் தெரியுமா?!
தற்போது விஜயை வைத்து 'துப்பாக்கி' என்ற படத்தை இயக்கி வரும் முருகதாஸ் 'துப்பாக்கி'யும் சுட்ட கதை என்பதால் தான் 'துப்பாக்கி' என்று பெயர் வைத்தாரோ என்னவோ....!!!

 


comments | | Read More...

முருகதாஸின் கதை திருட்டு: உஷார் உதவி இயக்குனர்களே!

 
 
தங்கர்பச்சானின் உதவியாளர் கோபியிடம் இருந்து டைட்டிலையும், கதையையும் முருகதாஸ் இயக்குனர் திருட காரணகர்த்தாவாக இருந்த மரிக்கொழுந்து பட இயக்குனர் தற்போது முருகதாசின் வலதுகரமாகவும், ஆஸ்தான கதை கேட்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
 
முருகதாசின் அசிஸ்டென்டுகளில் ஒருவர் எடுத்த "எங்கேயும் எப்போதும்" படத்தில் நடித்த சர்வா எனும் சர்வானந்தத்துக்கும் மேனஜராக இவர் பணியாற்றி வருகிறாராம். சர்வாவுக்காக கதை தேடி அலையும் ஜெகன் சதா சர்வ காலமும் இளம் இயக்குனர்கள் பலரிடம் கதை கேட்டு வருகிறார். ஆகையால், கோலிவுட் உதவி இயக்குனர்களே உஷார்!
 
ஜெகனிடம் கதையை இழந்த கோபியோ தற்போது "கறுப்பர் நகரம்" என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறாராம். அதனால் ஜெகன், முருகதாஸ் மீது போலீசில் புகார் அளிக்காமல் இருப்பதாக கூறுகிறது விவரமறிந்த வட்டாரங்கள்!
 
இதை சாதகமாக்கிக் கொண்டு முருகதாஸ் அண்ட் கோவினர் தொடர்ந்து அடுத்தவர் கதையைத் திருடக் கூடாது என்பதற்காகவே இந்த ஃபாலோ அப் நியூஸ்!



comments | | Read More...

விஜய்,அஜித்தை இயக்கிய இயக்குனரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

 
 
 
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் சிவகார்த்திகேயன், தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பே இரண்டாவது படத்தின் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார். இது அதிகம் பேருக்கு வாய்க்காத ஒன்று என்றாலும், விஜய், அஜீத் என்று பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து இயக்கிய ஒரு இயக்குநரின் படத்தில் தனது இரண்டாவது வாய்ப்பை பெற்றிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு சனிபெயர்ச்சி நன்றாகவே வேலை செய்கிறதுபோல.
 
துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி உள்ளிட்ட மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்த எழில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'மனம் கொத்திப் பறவை' என்ற படத்தை இயக்குகிறார். இதில்தான் சிவகார்த்திகேயன் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இயக்கம் மட்டும் இன்றி இப்படத்தில் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கும் எழிலிடம், ஏன் தயாரிப்பாளர் ஆனீர்கள்? என்று கேட்டால், கதையை நம்பித்தான் என்று பணிவுடன் கூறும் எழில், "சர்வர் சுந்தரம், பலே பாண்டியா போன்றப் படங்களைப் போல இப்படமும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நகைச்சுவைப் படமாகவும், அதே சமயம் ஒரு காதல் படமாகவும் இருக்கும். இப்படத்தின் கதையில் உள்ள நம்பிக்கையால்தான் படத்தில் பெரும்பாலான புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறேன்." என்றார்.
 
இதில் ஹீரோவாக நடிக்கும் சிவகார்த்திகேயனின் விஜய் டிவியின் நகைச்சுவை நாயகன் என்பது அனைவருக்கும் தெரியும். அதே வேலையை படப்பிடிப்பு தளத்திலும் செய்துகொண்டிருக்கிறாராம். எந்த ஒரு டென்ஷனான நேரத்திலும் தனது ஜோக்குகளின் மூலம் குபீரென்று சிரிக்க வைத்துவிடும் இவர், இப்படத்தில் வில்லனாக நடிக்கும் ரவி மரியாவையும் அவ்வப்போது தனது ஜோக்குகள் சிரிக்க வைத்து கூல் படுத்திக் கொண்டிருக்கிறாராம்.



comments | | Read More...

விஜய் போட்ட கண்டிஷனும் ; கணக்கும்!

 
 
 
 
 
இதுநாள் வரை எந்த ஒரு தமிழ்ப்படத்தின் இசை வெளியீடும் சென்னையில் தான் எனும் நிலையை "வேலாயுதம்" படத்தின் ஆடியோ வெளியீட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்தி காட்டினார் விஜய்.
 
தற்போது ஷங்கரின் இயக்கத்தில் தான் நடித்திருக்கும் "நண்பன்" படத்தின் ஆடியோ வெளியீட்டை கோவையில் இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நாளை (டிசம்பர் 23ம்) தேதி, மாலை 5 மணிக்கு மேலும் பிரமாண்டமாக நடத்தி கோலோச்ச இருக்கிறார்!
 
ஷங்கரின் இயக்கத்தில் "நண்பன்" திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதுமே இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை கோவையில் நடத்த வேண்டும் என்பது தான் விஜய் போட்ட ஒரே கண்டிஷனாம்!
 
மதுரை, கோவை, அடுத்து திருச்சி, திருநெல்வேலி அப்புறம் இளையதளபதியின் அரசியல் பிரவேசம் தான் என குஷியில் இருக்கிறது விஜய் ரசிகர்கள் வட்டாரம்!
 
ஆடியோ ரிலீஸ் மூலம் அரசியல் பிரவேசம் கணக்குப் போடும் நடிகர் இவராகத்தான் இருக்கமுடியும் என சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறதாம்!! வெல்டன் விஜய்!!!



comments | | Read More...

திருநெல்வேலிக்கே அல்வா: சுப்பிரமணிய சாமிக்கு கைது வாரண்டு

 
 
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு எதிராக வி.என்.நாராயணன் என்பவர் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், கடந்த 1986-ம் ஆண்டு சுப்பிரமணிய சாமி தலைவராக இருந்த ஒரு கம்பெனியில், 3 ஆண்டு டெபாசிட் திட்டத்தில், ரூ.10 ஆயிரம் முதலீடு செய்ததாகவும், ஆனால் அப்பணத்தை சுப்பிரமணியசாமி திருப்பித்தரவில்லை என்றும் அவர் கூறி இருந்தார்.
 
இதை விசாரித்த நுகர்வோர் ஆணைய தலைவர் பத்மினி சதீஷ், ரூ.10 ஆயிரத்தை 9 சதவீத வட்டியுடன் திருப்பி தருமாறு சுப்பிரமணிய சாமிக்கு ஏற்கனவே உத்தரவிட்டார்.
 
ஆனால், பணத்தை சுப்பிரமணிய சாமி தரவில்லை என்று நாராயணன் மீண்டும் புகார் கூறினார். இதனால், சுப்பிரமணிய சாமிக்கு எதிராக ஜாமீனில் விடக்கூடிய கைது வாரண்டை நுகர்வோர் ஆணையம் பிறப்பித்துள்ளது. அவரை கைது செய்து, ஏப்ரல் 2-ந் தேதிக்கு முன்பு, நுகர்வோர் ஆணையத்தில் ஆஜர்படுத்துமாறு டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.



comments | | Read More...

தனுஷின் குடிவெறி ஆட்டம் வீடியோ

 
 




comments | | Read More...

உலகிலேயே மிகப்பெரிய ஆஞ்சநேயர் கோயில் கட்டும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்!!

 
 
 
28 அடிய உயர ஆஞ்சநேயர் சிலையுடன் உலகிலேயே மிகப் பெரிய ஆஞ்சநேயர் கோயிலைக் கட்டி வருகிறார் நடிகர் அர்ஜுன்.
 
சென்னை அருகே கெருகம்பாக்கம் என்ற இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன் இந்த ஆஞ்சநேயர் கோயில் கட்டும் பணியை அர்ஜுன் தொடங்கியது நினைவிருக்கலாம்.
 
20 ஏக்கர் பரப்பளவு உள்ள அவரது சொந்த தோட்டத்தில், இந்தக் கோயிலைக் கட்டி வருகிறார்.
 
பெங்களூர் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், 200 டன் உள்ள ஒரே கல்லில், ஆஞ்சநேயர் சிலை உருவானது. 28 அடி உயரம், 17 அடி அகலம், 9 அடி கனத்தில், ஆஞ்சநேயர் உட்கார்ந்திருப்பது போல் அந்த சிலை உருவாக்கப்பட்டது.
 
22 சக்கரங்களை கொண்ட ராட்சத டிரக் மூலம் ஆஞ்சநேயர் சிலை பெங்களூரில் இருந்து கெருகம்பாக்கத்துக்கு எடுத்து வரப்பட்டது.
 
ஜனவரி முதல் வாரத்தில், அந்த சிலை பிரமாண்ட கிரேன் மூலம் சாமி பீடத்தில் அமர்த்தப்படுகிறது. இதற்கான விசேஷ பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளார் அர்ஜுன்.
 
இந்தக் கோயில் குறித்து நடிகர் அர்ஜுன் கூறுகையில், "உலகிலேயே மிகப்பெரிய ஆஞ்சநேயர் கோவிலாக இதுதான். கோவிலின் உள் பிரகாரம், வெளிபிரகாரம் கட்டும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பணி முடியும்," என்றார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger