ஜெயலலிதாவின் ஜனாதிபதி வேட்பாளரை சொந்த கட்சியே ஆதரிக்கவில்லை
சமாஜ்வாடி கட்சி பி.ஏ. சங்மாவை அவரது சொந்த கட்சியே ஆதரிக்கவில்லை என்றும் அவரை குடியரசுத்தலைவர் பதவிக்கு வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என முல� ��யம் சிங் யாதவ் இன்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மக்களவையின் முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மா தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவை 15.5.2012 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் குடியரசுத் தல� �வர் தேர்தலில் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ள தன்னை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் இதுவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியை வகித்ததில்லை என்பதைக் கரு� ��்தில் கொண்டு, அவரை ஆதரிப்பதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.ஓடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கும் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
மேலும் இவரை ஆதரிக்குமாறு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் தமிழ� �� முதல்வர் ஜெயலலிதா 18.5.2012 அன்று வேண்டுகோள் விடுத்தார். சங்மாவுக்கு ஆதரவு திரட்டும் தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஏ.பி. பரதன், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி கட்சியின ் தலைவர் முலாயம் சிங் யாதவ், சிரோன்மணி அகாலிதள் கட்சியின் தலைவரும், பஞ்சாப் மாநில முதலமைச்சருமான பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது மக்களவை முன்னாள் தலைவரும், வடகிழக்கு � �ந்தியாவைச் சேர்ந்தவரும், ஜனாதிபதி ஆவதற்கு முழுமையான தகுதிகளை பெற்றவரும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவருமான பி.ஏ. சங்மாவை நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிக்குமாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தார்த், தனுசுடன் இணைத்து பேசுவதா?: ஸ்ருதிஹாசன் ஆவேசம்
சித்தார்த், தனுசுடன் ஸ்ருதி ஹாசனை � ��ணைத்து கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன. சித்தார்த்தும் ஸ்ருதியும் தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டதாகவும், பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் செய்தி வெளியானது. '3' படத்தில் நடித்தபோது தனுசுடன் இணைத்து வதந்தி பரவியது.
இதற்கு பதில் அளித்து ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-
சித்தார்த், தனுசுடன் என்னை தொடர்புபடுத்தி வதந்தி பரப்புவது முட்டாள் தனமானது. இருவருடனும் நான் இணைந்து நடித்துள்ளேன். எங்களுக்குள் தொழில் ரீதியான தொடர்பு மட்டுமே உள் ளது. இதற்கெல்லாம் நான் முக்கியத்துவம் அளிப்பது இல்லை.
எனது முழு கவனமும் சினிமாவில்தான் உள்ளது. எனக்கு எல்லாமே சினிமாதான். தனுஷ் திறமையான நடிகர். அவர் மனைவி இயக்கிய படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். இசை ஆல்பம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். அதுதான் எனக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது.
கறுப்பு பணம் பற்றிய வெள்ளை அறிக்கை: பிரணாப்முகர்ஜி தாக்கல் செய்தார்
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட லோக்பால் மசோதா இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த நிலையில், பா. ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று கறுப்பு பணம் பற்றிய 100 பக்க வெள்ளை அறிக்கையை மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்தார்.
இதில் கறுப்பு பணத்தை ஒழிப்பது&nb sp; தொடர்பான பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பா. ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று கறுப்பு பணம் பற்றிய 100 பக்க வெள்ளை அறிக்கையை மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்தார்.
இதில் கறுப்பு பணத்தை ஒழிப்பது&nb sp; தொடர்பான பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளது.
ஸ்ருதியால் தனுஷ் - ஐஸ்வர்யா சண்டை உண்மைத்தான்: கஸ்தூரிராஜா
தனுஷ் - ஸ்ருதி விவகாரம் இன்னும் ஓய்ந்த மாதிரி தெரியவில்லை. இருவருக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள், தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியிருப்பதாகவும், இதனால் தனுஷ் தனியாக ஒரு வீட்டில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் தனுஷ் தென் ஆப்ரிக்காவுக்குப் போயிருப்பதாக அவர் தரப்பிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது.
தனுஷ் - ஐஸ்வர்யா - ஸ்ருதி விவகாரம் குறித்து, தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா கூறுகையில், " தனுஷ் - ஐஸ்வர்யா இடையே சண்டை இருப்பது உண்மைதான். ஆனால் அது சாதாரணமாக கணவன் - மனைவி போட்டுக் கொள்ளும் சண்டையே. எந்த வீட்டுலதான் சண்டை இல்லாம இருக்கு.
தனுஷ் - ஐஸ்வர்யா சண்டைக்கு ஸ்ருதியைக் காரணம் காட்டுவது சரியல்ல. ஸ்ருதியுடன் தனுஷ் ரொம்ப நெருக்கமாக நடிப்பதைப் பார்த்து மருமகள் கடும் கோபமடைந்தது உண்மைதான். எந்தப் பெண்தான் இது சரி என்று சொல்வார்? ஒரு டைரக்டரா அந்த சீன் சரியா வந்தாலும், மனைவியா அவங்க நெருக்கத்தைப் பார்த்து ஐஸ்வர்யா ரொம்ப கோபமானது உண்மைதான். காரணம், ஐஸ்வர்யாவோட அன்பு அப்படி. மருமகளுக்� �ும் மகனுக்கும் அப்பப்போ இப்படி சின்னச்சின்ன சண்டை வரும். ஆனா அவங்க பிரிஞ்சு வாழறாங்கன்னு சொல்றது தப்பு.
தனுஷ் இருக்கும் வீட்டில் அவரோடு ஐஸ் வர்யாவும் அவர்களது குழந்தைகள் யாத்ரா, லிங்கா... எல்லோரும் இருக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் அன்பான குடும்பமா இருக்கோம். இதை எவனாலு� �் உடைக்க முடியாது!", என்றார்.
அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றது உண்மைதான்-ஐபிஎல் வீரர் ஒப்புதல்
அமெரிக்கப் பெண் ஜோஹல் ஹமீதிடம் தவறாக நடந்து கொண்டது உண்மைதான். அப்போது நான் குடிபோதையில் இருந்ததும் உண்மைதான� �� என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் லூக் போமர்ஸ்பேக் ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக போலீஸாரிடம் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த தினத்தன்று தான் குடிபோதையில் இருந்ததாகவும், ஜோஹல் ஹமீத ின் அறைக்குத் தேவையில்லாமல் சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும் அவர் கூறியுள்ளார். தான் தவறு செய்தது உண்மைதான் என்றும் போமர்ஸ்பேக் ஒப்புக் கொண்டுள்ளாராம்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஐபிஎல் போட்டி முடி்வடைந்த பின்னர் நடந்த மது பார்ட்டியின்போதுதான் போமர்ஸ்பேக் இப்படி தவறாக நடந்து கொண்ட சம்பவம் இடம் பெற்றது. இதுதொடர்பாக ஜ ோஹல் ஹமீது போலீஸில் புகார் கொடுத்தார். அதில், தன்னை கிரிக்கெட் வீரர் போமர்ஸ்பேக் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும், தன்னைக் காப்பாற்ற முயன்ற காதலர் ஷஹீல் பீர்ஸாதாவை தாக்கி காயப்படுத்தியதாகவும் கூறியிருந்தார் ஜோஹல் ஹமீத்.
இதையடுத்து போமர்ஸ்பேக் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Subscribe to:
Posts (Atom)
Followers
Popular Posts
-
போக்குவரத்து, இல்லாத மலைகள் சூழ்ந்த கிராமங்களில் உள்ள பொம்பிள பிள்ளைங்க நான்கைந்து மைல்கள் நடந்து போய் படிப்பது என்பது அவ்வளவாக கடைப்பிடி...
-
இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் வீரரான ...
-
தட்டார்மடம் அருகே திருமணமான 35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்தாக நாடகமாடியது அம்பலமானத...
-
ராணுவ வீரரை கடத்தி அவரிடம் பலவந்தமாக உடலுறவில் ஈடுபட்ட 2 பெண்கள் ஆண் கற்பழிப்பு ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 1...
-
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியே பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுடன்...
-
நடிகை வித்யாபாலனின் கவர்ச்சி வீடியோ ஒன்று You Tube இல் வெளியாகியுள்ளது. இவரைப் புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்கள் இவரை எவ்வாறு...
-
சென்னை மாநகரில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் சென்னை...
-
தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம் சென்னையில் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் வந்தாலும் வந்தது எடுப்பார் கை ப...
-
சமீப கால தமிழ் திரைப்படங்களில் மோசமான காம வெறிக்காட்சிகள் இடம்பெறுகின்றன. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி படமான மகதீரா இங்கு ...
-
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஸ்ரீராமலு நகரை சேர்ந்தவர் லட்சுமி (40). இவரது கணவர் தேவேந்திரன். ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவர்களுக்கு திவ...