News Update :
Powered by Blogger.

உ.பி. கோட்டையில் தங்க வேட்டை: மத்திய மந்திரி மீது ஐக்கிய ஜனதா தளம் போலீசில் புகார் JDU complaint against Union Min over gold hunt in UP

Penulis : Tamil on Wednesday, 23 October 2013 | 08:58

Wednesday, 23 October 2013

உ.பி. கோட்டையில் தங்க வேட்டை: மத்திய மந்திரி மீது ஐக்கிய ஜனதா தளம் போலீசில் புகார் JDU complaint against Union Min over gold hunt in UP

புதுடெல்லி, அக். 23-

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 19-ம் நூற்றாண்டை சேர்ந்த ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங் கோட்டை உள்ளது. இந்த கோட்டையில் 1000 டன் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி சாமியார் ஷோபம் சர்க்கார் கனவு கண்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மற்றும் சோனியாவிற்கும் அவர் கடிதம் எழுதினார்.

இதையடுத்து மத்திய தொல்லியல் துறை அந்த கோட்டையின் சுற்றுப்புறப்பகுதியில் தோண்டி தங்க வேட்டை நடத்தி வருகிறது. இதை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தங்க வேட்டையை தொல்லியல் துறை நடத்த மத்திய விவசாய மற்றும் உணவுத்துறை இணை அமைச்சர் சரன் தாஸ் நடவடிக்கை எடுத்ததாக ஐக்கிய ஜனதா தளம் இன்று போலீசில் புகார் அளித்துள்ளது.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

தங்கக்குவியல் இருப்பதாக ஒரு சாமியார் கண்ட கனவின் மீது மத்திய அமைச்சர் மகந்தா, தனது அதிகாரத்தை பயன்படுத்தி தொல்லியல் துறையை தேடுதல் வேட்டை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளார். அடிப்படையற்ற ஒரு கோரிக்கையை மத்திய அமைச்சர் நிராகரித்து இருக்க வேண்டும். அதைவிட்டு பொதுமக்களின் பணத்தை வீணடித்து தொல்லியல் துறை தேட நடவடிக்கை எடுத்துள்ளார். இவரது இந்த நடவடிக்கை நாட்டில் மேலும் மூடநம்பிக்கையை பரப்புவதாக உள்ளது. எனவே அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய மகந்த் ஒரு குற்றவாளி.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி மகந்தா மற்றும் சாமியார் சர்க்கார் சார்பாக பேசி வரும் பாபா ஓம் ஆவாஸ்தி ஆகியோர் மீது குற்றவழக்கு பதியவேண்டும் என்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

...

shared via

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger