News Update :
Powered by Blogger.

இலங்கையில் ஹெக் செய்யப்பட்ட 1200 பேஸ் புக் கணக்குகள்

Penulis : karthik on Thursday, 16 February 2012 | 20:27

Thursday, 16 February 2012

 

இலங்கையில் கடந்த வருடம் மட்டும் 1200 பேஸ்புக் கணக்குகள் ஹெக் செய்யப்பட்டமை குறித்த புகார்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளன என்றும் இந்த வருடத்தில் இரண்டு மாத காலப் பகுதிக்குள் மட்டும் இது தொடா்பான 200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் இலங்கை கணனி அவசரப்பிரிவு குழுவின்(CERT) சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஹண பல்லியகுருகே தெரிவித்துள்ளார். இவ்வாறான முறைப்பாடுகள் தொடா்ந்து அதிகாித்த வண்ணம் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். இது தவிர மின்னஞ்சல்கள், இணையத்தளங்கள் முடக்கப்பட்டமை குறித்தும் சுமார் 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

comments | | Read More...

தேவர் தொலைக்காட்சி நிறுவனருக்கு பிடிவாரன்ட்! பொய் வழக்கின் தொடர் சதி!


தேவர் தொலைக்காட்சி நிறுவனர் திரு அ.பூங்கதிர்வேல் அவர்களுக்கு 13.02.12 காரைக்குடி நீதிமன்றத்தால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக தேவர் தொலைக்காட்சி நிறுவனர் திரு அ.பூங்கதிர்வேல் அளித்த செய்தியில் "
தமிழீழ பிரச்சனையில் எங்களை முழுமையாக இணைத்துக்கொண்ட காலத்தில் எங்களின் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக பல்வேறு பொய் வழக்குகளையும், அடக்குமுறைகளையும், சித்ரவதைகளையும் அனுபவித்தோம். அதில் ஒன்றான பொய் வழக்கு 25.07.2009 அன்று பெண் உதவி ஆய்வாளரை கொலை முயற்சி செய்ததாக மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் துணைச் சிறையில் எங்கள் குழுவை சேர்ந்த மூவரை அடைத்தனர். தமிழ் தேசியம், தமிழ் ஈழ விடுதலைக்காக எங்களை ஒப்படைத்திருந்த போது எங்கள் வழக்கின் பின்னணியில் ஒரு சாதி வன்மம் இருந்ததை என்னால் வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது.
" காரைக்குடி வடக்கு காவல்நிலையம் அப்போது அதன் ஆய்வாளராக இருந்தவர் அண்ணாத்துரை. இவர் முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் கிராமத்தை சேர்ந்தவரும் பள்ளர் சமூகத்தை சார்ந்தவரும் ஆவார். இவர் தற்போது தேவகோட்டையில் பணியாற்றிவருகிறார். காரைக்குடி பகுதியில் தேவர் சமூக மக்கள் இவரால் பெரிதும் பாதித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த சாதியென்று விசாரித்த பின்னரே இவரது செயல் அரங்கேறும். இந்தச் சூழ்நிலையில்தான் எங்களது போராட்டத்தின் மீது அடக்கு முறையை பல வழிகளில் முடக்குவதில் தீவிரம்காட்டினார் அண்ணாத்துரை.
இந்த வழக்கு தொடரும் ஒரு நாளுக்கு முன்னர் ஈழத்தில் கொத்துக்குண்டு போட்டு ஒரே நாளில் மூவாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட செய்தியறிந்து அதனை எதிர்த்து காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தின் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது என்னுடன் தோளோடு தோளிருந்தவர் முதுகுளத்தூர் அருகே உள்ள பூசெரி கிராமத்தை சேர்ந்த திரு தமிழ்மணி, இவர் பள்ளர் சமூகத்தை சார்ந்தவர். எங்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரே நோக்கத்திற்காக போராடி வந்தோம். அதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் எங்கள் போராட்டம் பரவியது.எங்கள் குழுக்கள் பரவலாக சிவகங்கை , ராமநாதபுரம் மாவட்டங்களில் போராட்டங்களை வழிநடத்தி வந்தனர். நாங்கள் அப்போது காரைக்குடியில் தொழில் நிமிர்த்தமாக வசித்து வந்ததால் எங்களை அடக்கும் முழு வாய்ப்பையும் அண்ணாத்துரைக்கு வழங்கப்பட்டது.
25.07.2009 அன்று காரைக்குடியில் தமிழர் பண்பாட்டுக் கழகம் விடுத்த அழைப்பின் பேரில் அங்கு சென்று எங்கள் கருத்துக்களை பரிமாறிவிட்டு வந்து கொண்டிருந்த போது திட்டமிட்டே வரும் வழியில் காவலர்களை நிறுத்தி எங்களை நாகரிகமற்ற வார்த்தையில் பேசினார். வேண்டுமென்றே ஏதோ ஒரு வழக்கு பதிவை செய்து விட்டு அந்த வழக்கு ரசீதை அவர்களே கிழித்தனர். எங்களை கோபத்திற்கு ஆளாக்கும் செயல்களை செய்கிரார்களை என்பதை உணர்ந்த நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். அதைத்தொடர்ந்து காவல்துறை எங்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு தேவையான வேலைகளில் ஈடுபடுவதாக காவல் நிலையத்திலிருந்தே செய்திகள் வந்தது. உடனே அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு கிளம்பும் பொழுது காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது. காவல் நிலையம் வந்து செல்லும்படி கூறினார். அதன் பெயரில் நானும் , திரு தமிழ்மணியும் தினத்தந்தி அலுவலகம் சென்று எங்களின் நிலையை செய்தியாக எழுதிக் கொடுத்துவிட்டு காவல்நிலையம் சென்றோம்.. அவ்வளவுதான் அவர்கள் வேலையை ஆரம்பித்தார்கள் . தனது இருக்கையிலிருந்து எழுந்து வேகமாய் வந்த அண்ணாத்துரை " ஏன்டா தேவரா நீ? உனக்கு கொடுக்குற அடி உன் சாதிக்கே வலிக்கனும் என்றார். அதர்ந்து போனேன்! சாதியா? ஒரு நொடிப்பொழுதில் ஓராயிரம் கேள்விகள் மனதில் வந்து போயின.

போலிசுக்கு எதிராவே செய்தி கொடுத்துட்டு வாரியா !என்று என் கன்னத்தில் அரைந்தார். அருகில் இருந்த தமிழ்மணிக்கும் ஒரு அரை! அருகிலிருந்த மூன்று லத்தியை முறித்து சாதனை புரிந்த அண்ணாத்துரை இருக்கும் காவலர்களை எல்லாம் அழைத்து அவரவர் திறமையை காட்டச் சொல்லி மிரட்டினார். 15 காவலர்கள் ஒரு அறைக்குள் எங்கள் இருவரையும் இழுத்துச் சென்று தாக்க ஆரம்பித்தனர். இருவரும் கூட்டத்துக்கு நடுவே கிடக்கின்றோம், 30 பூட்ஸ் கால்கள் உடலெல்லாம் பதம்பார்த்துக் கொண்டிருந்தது. அடிச்சத்தத்தை தவிர அங்கே நாங்கள் எந்தக் குரலையும் எழுப்பவில்லை. "ஆதராவாக இருக்கும் நமக்கே இந்த நிலையென்றால் அங்கே போராடும் மக்களுக்கு? " என்ற கேள்வியே இருவர் மனதிலும். அந்த பதினைந்து பேர் அடித்து முடித்ததும் மீண்டும் அண்ணாத்துரை அறைக்குள் நுழைந்து சுவரோரமாய் உட்கார வைத்தார். கைகளை நான்கு காவலர்களை பிடிக்கச் சொல்லிவிட்டு கால்களை இரு கோணங்களில் இழுக்கச் சொன்னார் . இரண்டு காவலர்கள் அந்த கடமையை நிறைவேற்றினர். இரண்டு கால்களையும் இரு துருவங்களில் பிளந்தனர். அப்போது செங்கோணத்தில் விறைப்பாய் இருந்த விரல் பகுதிகளை அப்படியே மிதித்து ஒடிக்க முயற்சித்தனர். நானும் ஓடிந்ததாகவே அப்போது கருதினேன். பல்வேறு சித்ரவதைக் கலைகளை எங்கள் மீது பாய்ச்சினார் அண்ணாத்துரை!

ஒருவழியாக முக்கால் மணிநேரம் அவர்களது கடமையை நிறைவேற்றி சென்றனர். அறையிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டோம்.பெண் உதவி ஆய்வாளர் ஆல்பின் பிரிஜித் மேரி அவர்களை வரவழைத்தார் . நான் சொல்வதை எழுது என்றார். தயங்கினார் ஆல்பின் பிரிஜித் மேரி! "என்னமா? எழுது" என்று எங்களுக்கு எதிராக மனுவை வாங்கிக் கொண்டார். வழக்கு பதியப்பட்டது.
அடுத்து ? எங்களின் மனத்துள் இருந்த ஒரே கேள்வி. அண்ணாத்துரையின் ஜீப் டிரைவர் ஞானம் ! "என்னடா நல்லா வாங்கிருக்ரிங்க போல! இருங்க ட்ரைனிங் போலிஷ் இருக்காங்க அவுங்கள வர சொல்றேன் என்று ஆறு பயிற்சி காவலருக்கு எங்களை வைத்து சொல்லிக் கொடுத்த்தார். அவர்கள் அடிப்பார்கள் ... அப்படி அல்ல என்று டிரைவர் ஞானம் அடித்துக் காட்டுவார். இப்படியாக அன்று மூன்று மணி நேரமும் எங்களை மாற்றி மாற்றி அடித்து சித்ரவதை செய்தனர். அன்று மதிய உணவு கொடுத்தார்கள் நாங்கள் இருவரும் சற்று நேரம் பார்த்து சிரித்துக் கொண்டோம். எங்கள் அருகே ஒரு போலிஷ் " சாப்டுங்க தம்பி! உங்கள நினச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு! நான் இங்கே உங்களை அடிக்காதீர்கள் என்று சொல்ல முடியாது. என்னால் அடிக்காமல் இருக்கத்தான் முடியும்,சாப்பிடுங்க சாப்பிடுங்க "என்று அவர் கண்கள் கலங்கின. எங்களுடன் அவரும் ஒரு பார்சலை பிரித்தார். எங்களுக்கு வேண்டாம் என்று அமைதியாகிவிட்டோம். அவரும் மூடி வைத்துவிட்டார். அவர் எங்களுக்காக பட்டினி மட்டுமே கிடக்க முடிந்தது. சில விசயங்களை எங்களிடம் பரிமாறிக் கொண்டார். அந்த செய்தியே " நெற்றிக்கண்" பத்திரிகையில் வெளியானது. அந்த செய்தியின் தலைப்பு " எஸ்.எம்.எஸ் மூலம் செக்ஸ் டார்ச்சர் செய்யும் ஆய்வாளர் அண்ணாத்துரை" என்பதுவே!

எங்களை இரவு எட்டு முப்பது மணிக்கு பிடித்ததாகவும் , அதன் பின்னரே வழக்கு பதியப்பட்டதாகவும் குற்றப் பத்திரிகையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களை அடித்த கையேடு என் நண்பன் தமிழ்மணியை கையில் விளங்கோடு சுமார் மூன்று மணிக்கு நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்துப்போய் அறைகளை சோதனை செய்தனர். வீட்டில் வைக்கப்பட்டிருந்த முக்கியமான பொருட்களை சூறையாடினர். திரும்பக் கேட்டபோது அதே மிரட்டலை அனுபவித்தோம். அன்று காரைக்குடி பகுதியில் சில ஈழ ஆதரவுக் குழுக்கள் இருந்தும் அஞ்சி ஒதுங்கினர். எந்தவித ஆதரவும் எங்களுக்கு அப்போது கிடைக்கவில்லை. இப்போது கையை உயர்த்தி கோஷம்போடும் ஈழ ஆதரவுக் கட்சிகளை நாங்கள் முறையிட்ட போது எங்களை காவல்துறையின் கையாலேன்று கருதுவதாக நண்பர்களின் மூலம் அறிந்தோம்.

ஒரு வழியாக அன்று அரை நிர்வாணத்தோடு காவல் நிலைய சிறையில் தூங்கினோம். பலர் வியர்வையில் ஊறிய வெறுந்தரையில் தூங்க வைத்தார்கள். சற்று நேரத்தில் உடலெல்லாம் வியர்த்தது. அருகிலேயே சரிவர சுத்தம் செய்யப்படாத கழிப்பறை நாற்றம்! அந்த ஒருநாள் இரவு இன்னும் மனதிலிருந்து அகலவில்லை.

விடிந்தது! நீதிபதியிடம் அழைத்து சென்றனர். நீதிபதி கேட்பார் நடந்ததை சொல்லிவிடலாம் என முடிவு செய்தோம். நீதிபதி முன் நிறுத்தினர். நீதிபதி கேட்டார் " உங்களை அடித்தார்களா? எங்கள் பதில் ஆம்!" உங்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் என்னவென்று தெரியுமா? எங்கள் பதில் தெரியாது!" நீதிபதி அதன் பிறகு கையெழுத்திட்டார். காவலர்கள் " ஏன்டா இவ்வளவு போட்டும் இன்னும் அடங்கலை'ல " என்றபடி காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு கை விளங்கோடு அழைத்துச் சென்றனர். கூட்டமெல்லாம் எங்களை அவரவர் சிந்தனைக்கேற்ப உற்று கவனித்தவாறு இருந்தனர் . சார் இந்த விளங்கை கழற்றுங்கள் நாங்கள் எங்கும் ஓடிவிடமாட்டோம், அவமான படுத்தாதீர்கள் என்று முறையிட்ட போது " தீவிர வாதிகளை பின்ன எப்படி கூட்டிட்டு போகணும்? என்று என்னிடம் கேள்வி எழுப்பினார். பேருந்து வந்தது. ஏற்றினார்கள். திருப்பத்தூர் மருத்துவமனையில் நிறுத்தினர். அங்கே மருத்துவர் " என்ன இப்படி அடிசிருகிங்க? " என்று எங்கள் முன் கேள்விகேட்க தனியே அழைத்துபோய் காவலர் பேசினார்... அனைத்து படிவமும் பூர்த்தியாகியது. சிறைக்கு அழைத்து செல்லும்முன் சாப்பிட ஒரு உணவகத்தில் கை விளங்கை அவிழ்த்தனர். சாப்பிட்டோம். சிறைக்குள் அடைத்தனர். பதிமூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் காரைக்குடி வந்தோம். அதன் பிறகும் எங்கள் போராட்டம் தொடர்வதைக் கண்ட அண்ணாத்துரை எங்களின் வருமான வாய்ப்புகளை முடக்கும் வேலையினை கையிலெடுத்தார். எந்த நேரமும் அலுவலகம் முன் ஒரு காவலர் நின்று கொண்டு வருவோரை மிரட்டும் கேவலமான போக்கை கடைபிடித்தனர். ஒருவழியாக அலுவலகம் மூடும் நிலைக்கு கொண்டு வந்தார். என் தொடர்பான அலுவலகங்கள், பயிற்சி மையங்கள் கட்டிட உரிமையாளர் மிரட்டப்பட்டு காலி செய்ய வைத்தனர். இப்படியே எங்களுக்கும் அண்ணாத்துரை துறைக்குமான மோதல்கள் தொடர்ந்து வந்தன...

இந்த வழக்கு தொடர்பான சம்மன் எனக்கு வழங்கப்படாமலேயே நீ நேரில் வந்து வாங்கிக்கோ என்று காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது. நான் அப்போது சென்னையில் இருந்து வந்தேன். எனது முகவரிக்கு கொண்டு பொய் சேர்க்குமாறு கோரியும் அதை செய்ய மறுத்தனர். ஊர் வருவதற்கு அவர்களுக்கு என்ன அச்சமோ , கூச்சமோ தெரியவில்லை. அதற்கிடையே " நெற்றிக்கண் அண்ணாத்துரை செக்ஸ் டார்ச்சர் நியூஸ் " வேற புயலைக் கிளப்ப இதற்கு நானே காரணமென கருதி என்னை அலைபேசியில் மிரட்டினர். உன் சம்பந்தப்பட்டவர்களை நான் என்ன செய்கிறேன் பார் என்ற சவால்கள் குவிந்தன. அந்த மாதத்திலேயே முதல் வாயிதா போடப்பட்டது. என்னை காரைக்குடியிலே வைத்து பிடித்து வேறொரு வழக்கு போடுவதற்கு தேவையான வேலைகள் அரங்கேறி விட்டது... நீ வராதே என்று காவல் நிலையத்திலிருந்து செய்தி கிடைக்கவும் நான் அந்த வாயிதாவை புறக்கணித்தான். அதே போல் என் நண்பர்கள் நீதி மன்றம் செல்லும் போது வழிமறித்த ஏழு காவலர்கள் " எங்கேடா அவன்? எங்கேடா அவன்? என்று ஒரு பதட்டத்தை உருவாக்கியிருக்கின்றார்கள். எனக்கும் போன் செய்து " ஏனடா வரல ? என்று கோபப்பட்டவர்களின் மானத்தை வாங்கிய கையேடு அண்ணாத்துரைக்கே பேசினேன். அதை அவர் மறுத்தார். அங்கே வந்த ஆறு பேரும் காவல்களா இல்லை கூலிப் படையினரா என்று சந்தேகம் உள்ளதாக நண்பர்கள் தெரிவித்ததையும் இங்கே சொல்ல வேண்டி உள்ளது.

இங்கே நடந்த சூழலை முழுவதுமாக விளக்க முடியாத சூழலில் தற்போது நடக்கும் சதிகளை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். சென்ற 9 ம் தேதி நான் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் சென்று வந்த போதும் அடுத்த மூன்று நாளில் போடப்பட்ட வாயிதாவிற்கு ஆஜராகும் சூழல் இல்லாமல் போனது. அதை சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு அறிவித்த போதும் எந்த தொடர்பும் இல்லாதவர் போல தனது நிலையை நிருபித்துள்ளார். ஆகவே எந்த மனுவும் நீதிமன்றம் பெறப்படாததால் பிடி வாரென்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது. நான் தற்போது ஈடு பட்டுவரும் முக்கிய விளைவுகளை சீர்குலைக்கும் செயலில் காவல்துறையினர் முயல்வதும் அதற்கேற்றவாறு வழக்கறிஞர் நடந்து கொண்டமையும் அவர் மீது நம்பிக்கையின்மையை ஏற்ப்படுத்தி உள்ளது. மேற்கொண்டு இது தொடர்பாக வேண்டிய ஆவணங்கள் செய்துவருக்றோம்" என்று தெரிவித்தார்.
comments | | Read More...

புலம்புகிறார் தனுஷ்-ரஜினி மகளைக் கட்டிக்கிட்டதால் தன் அடையாளமே இழந்துவிட்டதாக

 

ரஜினி மகளைக் கட்டிக் கொண்டதால், என் சொந்த அடையாளத்தை இழந்துவிட்டேன் என்று புலம்ப ஆரம்பித்துள்ளார் ரஜினியின் மருமகன் என்ற அடையாளத்தோடு பல வாய்ப்புகளைப் பெற்றுள்ள தனுஷ்.சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விருது விழாவில், தனது 'கொலவெறிடி' பாடலை நடிகர் அமிதாப் பச்சனுக்கு சமர்ப்பிப்பதாகவும் ரஜினிக்கு தன்னால் இப்படி செய்ய முடியாது என்றும் அறிவித்தார் தனுஷ். அவரது இந்தப் பேச்சு, லேசாக முணுமுணுப்பை கிளப்பியது.

நிகழ்ச்சி முடிந்த பின்னர், இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் ரஜினி இருக்க, பிரபலமான ஒரு பாடலை அமிதாப்பச்சனுக்கு சமர்ப்பித்தது ஏன்? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தனுஷ், "குடும்பத்துக்குள் இப்படியெல்லாம் செய்துகொள்ளக் கூடாது. என் மாமனார் மீது எனக்கு மரியாதை உண்டு. அவரது தனிமையை மதிக்கிறேன்.

ஆனால் ரஜினியின் மருமகன் என்பது எனக்கு மிகப்பெரிய சுமையாகத் தெரிகிறது. 2004-ல் அவரது மகள் ஐஸ்வர்யாவை நான் திருமணம் செய்த போதே என் சுய அடையாளத்தை இழந்துவிட்டேன். அதற்கு முன் நான் சம்பாதித்த பேர் புகழ் அனைத்தையும் ரஜினி மருமகன் என்பது அடித்துச் சென்றுவிட்டது. எங்கே போனாலும் என்னை அவரது மருமகனாகத்தான் பார்க்கிறார்கள்.

எப்போது நான் பேட்டி கொடுத்தாலும், என்னிடம் கேட்கப்படும் முதல் கேள்வி, 'ரஜினியின் மருமகன் என்பதை எப்படி உணர்கிறீர்கள்' என்பதுதான். முன்பெல்லாம் இந்தக் கேள்வியைத்தான் எடுத்த எடுப்பில் கேட்பார்கள். கொலவெறி பாட்டுக்குப் பிறகு, இந்தக் கேள்வியை இடையில் கேட்கிறார்கள். இனி வரும் நாட்களில் இந்தக் கேள்வியே கேட்கப்படாது என நம்புகிறேன்!" என்றார்

தனுஷின் பேச்சு மிகவும் முரண்பாடானதாகவும், ஏதோ புதிய வெறுப்பில் பேசுவதாகவும் அமைந்துள்ளதாக ரஜினியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"இவ்வளவு பேசும் தனுஷ், சூப்பர் ஸ்டாரின் படிக்காதவன், பொல்லாதவன் தலைப்புகளை எதற்குப் பயன்படுத்தினார்? மாப்பிள்ளை படத்தை எந்த அடிப்படையில் ரீமேக் செய்தார்? என்னம்மா கண்ணு…, என்னோட ராசி நல்ல ராசி பாடல்களை ரீமிக்ஸ் செய்தது எதற்காக? இதையெல்லாம் அவர் ரஜினியின் மருமகனான பிறகே செய்தார்.

ரஜினியின் புகழ் தனக்கு வேண்டாம் என்று உண்மையிலேயே நினைப்பவராக இருந்தால், அவர் இதையெல்லாம் செய்திருக்க வேண்டாமே…

உண்மையில் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்யும் போது தனுஷ் ஒரு ஜீரோ. அவரது எந்தப் படமும் ஓடவில்லை. புதுக்கோட்டையிலிந்து சரவணன், சுள்ளான் என எல்லாம் குப்பைப் படங்கள். மேலும் கால்ஷீட் சொதப்பல் காரணமாக வரிசையாக வழக்குகளைச் சந்தித்து வந்த நேரம் அது.

ரஜினி மருமகன் என்ற அந்தஸ்தை வைத்துதான் இவர் பல சிக்கல்களிலிருந்து வெளியில் வந்தார்," என்கிறார் ஒரு ரசிகர்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு முக்கிய இயக்குநர் இதுபற்றி கூறுகையில், "ரஜினி ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டார். அவருக்கு முன் தனுஷ் ஒரு சுள்ளான் என்று கூட சொல்ல முடியாது. சினிமாவில் தான் சொந்த அடையாளத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக ரஜினி பெயரையே யாரும் சொல்லக் கூடாது என்று சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது தனுஷ்… கொலைவெறிடி என்ற பாட்டுக்காக இவரை பாலிவுட் கூப்பிடவில்லை. ரஜினி மருமகன் என்ற கூடுதல் தகுதி காரணமாகத்தான்," என்றார் கொதிப்புடன்.

comments | | Read More...

வின்னர் தோனி - குவிகிறது பாராட்டு

 

ஒருநாள் போட்டிகளில் பின் வரிசையில் களமிறங்கி, போட்டியை வென்று தரும் "மேட்ச் வின்னராக' உள்ளார் இந்தியாவின் தோனி. இதை இலங்கை, ஆஸ்திரேலிய அணி கேப்டன்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
 
ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி நாயகனாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. "ரன்ரேட்' அதிகமாக தேவைப்படும். பின்வரிசையில் வரும் போது, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. எப்போதும் ஒரு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும்.
 
இவை அனைத்தையும் மீறி இந்திய அணி கேப்டன் தோனி, சிறப்பாக செயல்படுகிறார் என்றால், முதல் காரணம் இவரது "கூல்' பாணி தான்.
 
தற்போதைய முத்தரப்பு தொடரில், கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக "சிக்சர்' அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதே போல இலங்கைக்கு எதிராக 3 ரன்கள் எடுத்து போட்டி "டை' ஆக காரணமாக இருந்தார்.
 
 
"சேஸ்' மன்னன்:
 
தோனியை பொறுத்தவரை இரண்டாவதாக "பேட்' செய்யும் போது அசத்துகிறார். "சேஸ்' செய்த போது 49 இன்னிங்சில் இவரது அபார ஆட்டம் வெற்றிக்கு கைகொடுத்தது. இதில் 2 சதம், 14 அரைசதம் உட்பட 1993 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 104.89 ரன்கள். இந்த 49 இன்னிங்சில் தோனி 30 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
 
200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், "சேஸ்' செய்த போது 50 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார். மொத்தம் இவர் எடுத்த 7 சதம், 44 அரைசதத்தில் பெரும்பாலானவை "சேஸ்' செய்த போது எடுத்தது தான்.
 
 
கடின பணி:
 
கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என்ற பணிகளுடன், போட்டியை வெற்றிகரமாக முடித்து தருவதிலும் தோனி கெட்டிக்காரராக உள்ளார்.
 
இதுகுறித்து இலங்கை அணி கேப்டன் ஜெயர்வர்தனா கூறுகையில்,"" அடிலெய்டு போட்டியில் ஒரு "இன்ச்' அளவில் போட்டியை எங்களிடம் இருந்து தோனி தட்டிப்பறித்தார். அமைதி மற்றும் நிதானமாக செயல்படும் குணம், இவரை வலிமையானவராக மாற்றியுள்ளது,'' என்றார்.
 
 
கிளார்க் பாராட்டு:
 
ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்÷ல் கிளார்க் கூறுகையில்,"" தோனி அசத்தலான வீரர். புள்ளிவிவரங்களை பார்த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம். மெக்கேயின் கடைசி ஓவரில் சிக்சர் அடித்தது மறக்க முடியாதது,'' என்றார்.

 
எல்லாமே சமம் தான்
 
நேற்று முன்தினம் இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் சம அளவில் ஸ்கோர் (236/9) எடுத்ததால் முடிவு "டை' ஆனது. இதில் ஸ்கோர் மட்டுமல்ல, பல சமமான ஒற்றுமைகள் அமைந்துள்ளது வியப்பாக உள்ளது.
 
 
இதன் விவரம்:
 
இரு அணிகள் எடுத்த ஸ்கோர்: 236
சந்தித்த ஓவர்கள்: 50
அடித்த பவுண்டரிகள்: 15
விழுந்த விக்கெட்டுகள்: 9
விட்டுக்கொடுத்த உதிரிகள்: 8
பவுலிங் செய்த பவுலர்கள்: 6
அடித்த சிக்சர்கள்: 2
மெய்டன் ஓவர்கள்: 2
"ஸ்டிரைக் ரேட்' 100க்கும் மேல் உள்ள வீரர்கள்: 2
(அஷ்வின், இர்பான் மற்றும் ஹெராத், சேனநாயகே)
comments | | Read More...

தனுஷ்ஷை விளம்பர மாடலாக்க பிரபல நிறுவனங்கள் போட்டி!


'ஒய் திஸ் கொலவெறி' புகழால் தனுஷ்ஷை விளம்பர மாடலாக்க பிரபல நிறுவனங்கள் போட்டாப்போட்டி!3 திரைப்படத்திற்காக 'ஒய் திஸ் கொலவெறி' பாடலைப்பாடி உலகப் புகழ் பெற்ற நடிகர் தனுஷை தங்கள் நிறுவனத் தயாரிப்புகளுக்காக விளம்பர மாடலாக்கும் திட்டட்துடன் பிரபல நிறுவனங்கள் போட்டியில் குதித்துள்ளன.இமாமி நிறுவனம் தனது பிரபல பிராண்டான நவரத்னா குளிர்ச்சி எண்ணெய்க்காக 3 திர்டைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெறும் காட்சியில் விளம்பரத்தை நுழைக்க ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகத் தெரிகிறது.

அதேபோல் மற்றொரு கேசப்பரமாரிப்பு தயாரிப்புகளை உற்பத்தி செய்து வரும் பாராசூட் புகழ் மாரிக்கோ நிறுவனமும் தங்களது அட்வான்ஸ்டு கூலிங் எண்ணெயை விளம்பரப்படுத்த தனுஷ்ஷை அணுகிவருவதாக மும்பையிலிருந்து வரும் வணிகச் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கேச எண்ணெய் சந்தையின் மதிப்பு சுமார். ரூ.3000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இச்சந்தையில் சுமார் 50% பங்குடன் இமாமியின் நவரத்னா எண்ணெய் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

comments | | Read More...

தனுஷ் புலம்ப வைத்த mrs.தனுஷ்

 
 
ரஜினி மகளைக் கட்டிக் கொண்டதால், என் சொந்த அடையாளத்தை இழந்துவிட்டேன் என்று புலம்ப ஆரம்பித்துள்ளார் ரஜினியின் மருமகன் என்ற அடையாளத்தோடு பல வாய்ப்புகளைப் பெற்றுள்ள தனுஷ்.

சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விருது விழாவில், தனது 'கொலவெறிடி' பாடலை நடிகர் அமிதாப் பச்சனுக்கு சமர்ப்பிப்பதாகவும் ரஜினிக்கு தன்னால் இப்படி செய்ய முடியாது என்றும் அறிவித்தார் தனுஷ். அவரது இந்தப் பேச்சு, லேசாக முணுமுணுப்பை கிளப்பியது.



நிகழ்ச்சி முடிந்த பின்னர், இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் ரஜினி இருக்க, பிரபலமான ஒரு பாடலை அமிதாப்பச்சனுக்கு சமர்ப்பித்தது ஏன்? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தனுஷ், "குடும்பத்துக்குள் இப்படியெல்லாம் செய்துகொள்ளக் கூடாது. என் மாமனார் மீது எனக்கு மரியாதை உண்டு. அவரது தனிமையை மதிக்கிறேன்.

ஆனால் ரஜினியின் மருமகன் என்பது எனக்கு மிகப்பெரிய சுமையாகத் தெரிகிறது. 2004-ல் அவரது மகள் ஐஸ்வர்யாவை நான் திருமணம் செய்த போதே என் சுய அடையாளத்தை இழந்துவிட்டேன். அதற்கு முன் நான் சம்பாதித்த பேர் புகழ் அனைத்தையும் ரஜினி மருமகன் என்பது அடித்துச் சென்றுவிட்டது. எங்கே போனாலும் என்னை அவரது மருமகனாகத்தான் பார்க்கிறார்கள்.

எப்போது நான் பேட்டி கொடுத்தாலும், என்னிடம் கேட்கப்படும் முதல் கேள்வி, 'ரஜினியின் மருமகன் என்பதை எப்படி உணர்கிறீர்கள்' என்பதுதான். முன்பெல்லாம் இந்தக் கேள்வியைத்தான் எடுத்த எடுப்பில் கேட்பார்கள். கொலவெறி பாட்டுக்குப் பிறகு, இந்தக் கேள்வியை இடையில் கேட்கிறார்கள். இனி வரும் நாட்களில் இந்தக் கேள்வியே கேட்கப்படாது என நம்புகிறேன்!" என்றார்

தனுஷின் பேச்சு மிகவும் முரண்பாடானதாகவும், ஏதோ புதிய வெறுப்பில் பேசுவதாகவும் அமைந்துள்ளதாக ரஜினியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"இவ்வளவு பேசும் தனுஷ், சூப்பர் ஸ்டாரின் படிக்காதவன், பொல்லாதவன் தலைப்புகளை எதற்குப் பயன்படுத்தினார்? மாப்பிள்ளை படத்தை எந்த அடிப்படையில் ரீமேக் செய்தார்? என்னம்மா கண்ணு…, என்னோட ராசி நல்ல ராசி பாடல்களை ரீமிக்ஸ் செய்தது எதற்காக? இதையெல்லாம் அவர் ரஜினியின் மருமகனான பிறகே செய்தார்.

ரஜினியின் புகழ் தனக்கு வேண்டாம் என்று உண்மையிலேயே நினைப்பவராக இருந்தால், அவர் இதையெல்லாம் செய்திருக்க வேண்டாமே...

உண்மையில் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்யும் போது தனுஷ் ஒரு ஜீரோ. அவரது எந்தப் படமும் ஓடவில்லை. புதுக்கோட்டையிலிந்து சரவணன், சுள்ளான் என எல்லாம் குப்பைப் படங்கள். மேலும் கால்ஷீட் சொதப்பல் காரணமாக வரிசையாக வழக்குகளைச் சந்தித்து வந்த நேரம் அது.

ரஜினி மருமகன் என்ற அந்தஸ்தை வைத்துதான் இவர் பல சிக்கல்களிலிருந்து வெளியில் வந்தார்," என்கிறார் ஒரு ரசிகர்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு முக்கிய இயக்குநர் இதுபற்றி கூறுகையில், "ரஜினி ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டார். அவருக்கு முன் தனுஷ் ஒரு சுள்ளான் என்று கூட சொல்ல முடியாது. சினிமாவில் தான் சொந்த அடையாளத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக ரஜினி பெயரையே யாரும் சொல்லக் கூடாது என்று சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது தனுஷ்... கொலைவெறிடி என்ற பாட்டுக்காக இவரை பாலிவுட் கூப்பிடவில்லை. ரஜினி மருமகன் என்ற கூடுதல் தகுதி காரணமாகத்தான்," என்றார் கொதிப்புடன்.

comments | | Read More...

பிரச்சனையை பிளைட்டில் ஏற்றி வரும் த்‌ரிஷா.

 
 
 
சில‌ரின் ராசி அப்படி. பிரச்சனைகளை தேடிப் போக வேண்டியதில்லை. பிரச்சனையே பிளைட் ஏறி தேடி வரும். சிறந்த உதாரணம் நமது த்‌ரிஷா.



வெற்றிமாறனின் வட சென்னையில் முதலில் நடிப்பதாகச் சொன்ன ராணா திடீரென விலகிக் கொண்டார். கால்ஷீட் பிரச்சனை, சிம்பு ஹீரோவாக நடிப்பதால் ஏற்பட்ட அசௌக‌ரியக் குறைவு என பல காரணங்களுடன் த்‌ரிஷாதான் ராணா விலகுவதற்கு காரணம் என கோடம்பாக்கம் கொஞ்சம் உரக்கவே கிசுகிசுக்கிறது.


த்‌ரிஷாவின் டாப் 3 நண்பர்களில் ராணாவும் ஒருவர். சிம்பு நடிக்கிற படத்தில் சின்ன வேடத்தில் நடிப்பதா என்று த்‌ரிஷாதான் தனது நண்பரை தடுத்தார் என்கிறார்கள். சொல்றவங்க எது வேணா சொல்லட்டம்... மேடம் இந்த விஷயம் உங்களுக்கு‌த் தெ‌ரியுமா?
comments | | Read More...

அனைவருடனும் நட்பாக இருக்க விரும்பும் அசின்

 


நடிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறேன் என்றார் அசின். இதுபற்றி அவர் கூறியதாவது:சினிமாவில் நடிகைகள் நட்புடன் இருக்கமாட்டார்கள் என்று சிலர் கூறுவதுண்டு. அது கட்டுக்கதை. நடிகைகளுக்குள் நட்புடன் இருக்கிறோம். ஷூட்டிங்கில் இருக்கும்போது சக தோழிகள் நிறைய விஷயங்களை மனம் விட்டு பகிர்ந்து கொள்வோம். நிறைய நடிகைகள் எனக்கு நண்பர்களாக இருக்கின்றனர். அவர்களில் சில பெயர்களை மட்டும் சொன்னால் சரியாக இருக்காது. நடிகைகள் மட்டுமல்ல நடிகர்களுடனும் நட்பாகவே பழகுவேன். அவர்கள் எல்லோருமே என் மனதில் நல்ல இடம் பிடித்தவர்கள். அவர்களுடன் இன்றும் தொடர்பில் இருக்கிறேன். 'தமிழில் நடிக்க மாட்டீர்களா?' என்கிறார்கள். சமீபத்தில் விஜய்யுடன் 'காவலன்' படத்தில் நடித்தேன். விரைவில் நல்ல கதை அம்சமுள்ள படத்தில் நடிப்பேன். 'காவலன்' படத்தில் நடிப்பது எனக்கும், விஜய்க்கும் சவாலாகவே இருந்தது. சவாலான வேடங்கள் வரும்போது நிச்சயம் தவறவிட மாட்டேன்.'கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடிக்கிறீர்களா?' என்கிறார்கள். இப்படத்திற்காக என்னை அணுகினார்களா என்பதற்கு ஆம், இல்லை என்று எந்த பதிலும் இப்போதைக்கு நான் சொல்ல முடியாது. ஒரு நடிகையாக ரஜினியுடன் நடிக்க எப்போதும் ஆசையாகவே இருக்கிறேன். திரையுலகில் அவர் மிகச் சிறந்த மனிதர். அவருடன் விரைவில் ஜோடியாக நடிப்பேன் என்று நம்புகிறேன். இவ்வாறு அசின் கூறினார்
comments | | Read More...

கன்னட படத்தில் நிர்வாணமாக நடித்த தமிழ் நடிகை

 


கன்னட படத்தில் நிர்வாணமாக நடித்தது பற்றி பூஜா காந்தி பரபரப்பான பதில் அளித்தார். கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. கன்னடத்தில் 'தண்டுபால்யா' என்ற படத்தில் நடிக்கிறார். ஸ்ரீனிவாஸ் ராஜு இயக்குகிறார். இதில் கொள்ளை கும்பல் தலைவியாக நடிக்கும் பூஜா, போலீசில் பிடிபட்டதும் அவரை நிர்வாணமாக்கி விசாரிக்கிறார்கள். இந்த காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இக்காட்சியில் நடித்தது பற்றி பூஜா காந்தி கூறியதாவது:

தலை முதல் கால் வரை ஒட்டுத்துணிகூட இல்லாமல் இருப்பதுதான் டிக்ஷ்னரிப்படி நிர்வாணம். நான் அப்படி நடிக்கவில்லை. சேலை போர்த்தி இருப்பேன். அதை போலீசார் வலுக்கட்டாயமாக நீக்க முயல்வார்கள். நான் போராடுவேன். இந்த சீனில் பின்புறம் முழுவதும் தெரியும்படி நடித்தேன். லட்சுமி என்ற மாஃபியா கும்பல் தலைவியிடம் போலீசார் நடத்திய நிஜ விசாரணை காட்சிகளின் வீடியோவை இயக்குனர் எனக்கு போட்டுக்காட்டினார். லட்சுமியின் கூட்டாளிகளையும் நிர்வாணமாக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என்றார். லட்சுமி கதாபாத்திரத்தைதான் பூஜா ஏற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
comments | | Read More...

அதை மட்டும் கொடுக்க மாட்டேன் - மறுக்கும் இலியானா

 


அது என்றால் எது என்று குழம்ப வேண்டாம். ஒரு அப்பாவி தயா‌ரிப்பாளர் தந்த நாற்பது லட்ச அட்வான்ஸ்தான் அது.

விக்ரமை வைத்து மோகன் நடராஜன் தெய்வத்திருமகள் படத்தை எடுத்தார் அல்லவா? அதற்கு முன்பு பூபதி பாண்டியன் இயக்கத்தில் விக்ரம், இலியானாவை வைத்து அவர் படம் தயா‌ரிப்பதாக இருந்தது. இதற்காக இலியானாவுக்கு 40 லட்சம் அட்வான்ஸ் தரப்பட்டது. திடீரென பூபதி பாண்டியன் செட்டாகாமல் போக விக்ரம் குமாருக்கு தாவினார். அவருடனும் சீயானுக்கு சிக்கல். கடைசியாக செட்டானவர்தான் விஜய்.

இந்த கோ கோ ஆட்டத்தில் அட்வான்சுடன் பாதியிலேயே கழண்டு கொண்டார் இலியானா. ச‌ரி, ஆள்தான் இல்லை, அட்வான்சாவது மிஞ்சுமா என்று தயா‌ரிப்பாளர் அலைந்ததுப் பார்த்தும் இலியானா இஞ்சி மொரப்பா பதில்தான் தந்து கொண்டிருக்கிறார். என்னுடைய கால்ஷீட்டை படம் எடுக்காமல் வீணடித்துவிட்டதால் நஷ்டஈடாக நாற்பது லட்சத்தை அட்ஜஸ்ட் செய்துக்கிறேன் என்று அதிர்ச்சி தந்திருக்கிறார்.

தயா‌ரிப்பாளர் சங்கத்தில் இலியான மீது புகார் தந்து நீதிக்காக காத்திருக்கிறார் மோகன் நடராஜன்.
comments | | Read More...

அரசியலில் குதிக்க இருக்கும் ஜெனிலியா

 


மாமனார் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் வெற்றிக்காக அவரது தொகுதியில் பிரச்சாரம் செய்யப்போகிறாராம்.

நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் நடிகை ஜெனிலியா.

மகாராஷ்ட்ராவின் முன்னாள் முதல்வர் விலாஸ் ராவ். இவர் இப்போது வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போகிறார்.

மாமனாரின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் குதிக்கிறார் ஜெனிலியா. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "நான் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் பரவியுள்ளன. அரசியலில் குதிப்பதில் என்ன தவறு இருக்கிறது. அது தப்பு இல்லையே. இப்போது என் குடும்பமே அரசியல் பாரம்பர்யம் மிக்கதாகிவிட்டது. அவர்களுக்காக அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக வருவேன். அதற்கு என் கணவர் அனுமதி வேண்டும். மாமனாரும் அங்கீகரிக்க வேண்டும். அரசியலுக்கு வர வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் வருவேன்.

என் மாமனார் தேர்தல் பிரசாரம் செய்யும்படி அழைத்தால் பிரசாரத்திலும் ஈடுபடுவேன். இப்போதைய சூழ்நிலையில் அரசியல்தான் வாழ்க்கை என்ற சூழ்நிலையில் நான் இல்லை. நிறைய படங்கள் கைவசம் உள்ளன. அவற்றை முடித்து கொடுக்க வேண்டி இருக்கிறது. என்னால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற நிலை வந்தால் அரசியலுக்கு வருவேன். பிரச்சாரமும் செய்வேன்,"
comments | | Read More...

எதற்கும் ரெடியாக இருக்கும் அனன்யா

 


தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்தும் அவருக்கு 2வது மனைவியாக அனன்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது பெற்றோர் எதிர்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை அன்னயாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு ஆஞ்சநேயனுக்கு கடந்த 2008ம் ஆண்டே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அன்னயாவின் தந்தை பெரும்பாவூர் போலீசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் ஆஞ்சநேயனின் 2வது மனைவியாக அனன்யா தயாராக இருப்பதாகக் கூறப்படுகின்றது.

மேலும் ஆஞ்சநேயன் தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது என்றும், முதல் மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அனன்யாவிடம் முன்பே கூறிவிட்டாராம். ஆனால் அனன்யா தனது பெற்றோரிடம் இந்த விவரத்தைத் தெரிவிக்காமல் மறைத்துவிட்டாராம்.

2வது மனைவியாக அவர் தயாராக இருந்தாலும் அவரது பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும், இதனால் அவரை வீட்டில் பூட்டி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
comments | | Read More...

” ரஜினியின் மருமகன் என்பது எனக்கு மிகப்பெரிய சுமையாகத் தெரிகிறது” - புலம்பும் தனுஷ்



ரஜினி மகளைக் கட்டிக் கொண்டதால், என் சொந்த அடையாளத்தை இழந்துவிட்டேன் என்று புலம்ப ஆரம்பித்துள்ளார் ரஜினியின் மருமகன் என்ற அடையாளத்தோடு பல வாய்ப்புகளைப் பெற்றுள்ள தனுஷ்.

சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விருது விழாவில், தனது 'கொலவெறிடி' பாடலை நடிகர் அமிதாப் பச்சனுக்கு சமர்ப்பிப்பதாகவும் ரஜினிக்கு தன்னால் இப்படி செய்ய முடியாது என்றும் அறிவித்தார் தனுஷ். அவரது இந்தப் பேச்சு, லேசாக முணுமுணுப்பை கிளப்பியது.

நிகழ்ச்சி முடிந்த பின்னர், இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் ரஜினி இருக்க, பிரபலமான ஒரு பாடலை அமிதாப்பச்சனுக்கு சமர்ப்பித்தது ஏன்? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தனுஷ், "குடும்பத்துக்குள் இப்படியெல்லாம் செய்துகொள்ளக் கூடாது. என் மாமனார் மீது எனக்கு மரியாதை உண்டு. அவரது தனிமையை மதிக்கிறேன்.

ஆனால் ரஜினியின் மருமகன் என்பது எனக்கு மிகப்பெரிய சுமையாகத் தெரிகிறது. 2004-ல் அவரது மகள் ஐஸ்வர்யாவை நான் திருமணம் செய்த போதே என் சுய அடையாளத்தை இழந்துவிட்டேன். அதற்கு முன் நான் சம்பாதித்த பேர் புகழ் அனைத்தையும் ரஜினி மருமகன் என்பது அடித்துச் சென்றுவிட்டது. எங்கே போனாலும் என்னை அவரது மருமகனாகத்தான் பார்க்கிறார்கள்.

எப்போது நான் பேட்டி கொடுத்தாலும், என்னிடம் கேட்கப்படும் முதல் கேள்வி, 'ரஜினியின் மருமகன் என்பதை எப்படி உணர்கிறீர்கள்' என்பதுதான். முன்பெல்லாம் இந்தக் கேள்வியைத்தான் எடுத்த எடுப்பில் கேட்பார்கள். கொலவெறி பாட்டுக்குப் பிறகு, இந்தக் கேள்வியை இடையில் கேட்கிறார்கள். இனி வரும் நாட்களில் இந்தக் கேள்வியே கேட்கப்படாது என நம்புகிறேன்!" என்றார்

தனுஷின் பேச்சு மிகவும் முரண்பாடானதாகவும், ஏதோ புதிய வெறுப்பில் பேசுவதாகவும் அமைந்துள்ளதாக ரஜினியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"இவ்வளவு பேசும் தனுஷ், சூப்பர் ஸ்டாரின் படிக்காதவன், பொல்லாதவன் தலைப்புகளை எதற்குப் பயன்படுத்தினார்? மாப்பிள்ளை படத்தை எந்த அடிப்படையில் ரீமேக் செய்தார்? என்னம்மா கண்ணு…, என்னோட ராசி நல்ல ராசி பாடல்களை ரீமிக்ஸ் செய்தது எதற்காக? இதையெல்லாம் அவர் ரஜினியின் மருமகனான பிறகே செய்தார்.

ரஜினியின் புகழ் தனக்கு வேண்டாம் என்று உண்மையிலேயே நினைப்பவராக இருந்தால், அவர் இதையெல்லாம் செய்திருக்க வேண்டாமே…

உண்மையில் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்யும் போது தனுஷ் ஒரு ஜீரோ. அவரது எந்தப் படமும் ஓடவில்லை. புதுக்கோட்டையிலிந்து சரவணன், சுள்ளான் என எல்லாம் குப்பைப் படங்கள். மேலும் கால்ஷீட் சொதப்பல் காரணமாக வரிசையாக வழக்குகளைச் சந்தித்து வந்த நேரம் அது.

ரஜினி மருமகன் என்ற அந்தஸ்தை வைத்துதான் இவர் பல சிக்கல்களிலிருந்து வெளியில் வந்தார்," என்கிறார் ஒரு ரசிகர்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு முக்கிய இயக்குநர் இதுபற்றி கூறுகையில், "ரஜினி ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டார். அவருக்கு முன் தனுஷ் ஒரு சுள்ளான் என்று கூட சொல்ல முடியாது. சினிமாவில் தான் சொந்த அடையாளத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக ரஜினி பெயரையே யாரும் சொல்லக் கூடாது என்று சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது தனுஷ்… கொலைவெறிடி என்ற பாட்டுக்காக இவரை பாலிவுட் கூப்பிடவில்லை. ரஜினி மருமகன் என்ற கூடுதல் தகுதி காரணமாகத்தான்," என்றார் கொதிப்புடன்.

விடுங்க பாஸ்… இந்த தனுஷ் எப்பவுமே இப்படித்தான்!
comments | | Read More...

படத்திலிரு​ந்து ​தேவையற்ற காட்சிகளை நீக்க புதிய ஐ போன் மென்பொருள்!

 

கமெரா போன்கள் பயன்படுத்துபவர்கள் அவர்களின் பயணங்களின் போது தென்படும் பிடித்தமான இடங்களில் இருந்து புகைப்படங்களை எடுத்து மகிழுவார்கள்.
எனினும் சில சந்தர்ப்பங்களில் அப்புகைப்படங்களில் அவர்கள் எதிர்பார்க்காத காட்சிகளும் அகப்பட வாய்ப்புண்டு. எனவே அக்காட்சிகளை நீக்குவதற்கு இதுவரை காலமும் மிகவும் சிரமப்படவேண்டி இருந்தது. ஆனால் தற்போது அதற்கான சிறந்த தீர்வொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.
அதாவது ஐ போன்களில் பயன்படுத்தக்கூடிய கமெரா மென்பொருள் ஒன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புகைப்படங்களில் அகப்படும் அநாவசியமான அல்லது விரும்பத்தகாத காட்சிகளை இலகுவாக அகற்ற முடியும்.
 
உதாரணமாக குறித்த காட்சியில் படமாக்கப்பட்ட சில மனிதர்களை நீக்க வேண்டுமாயின் இம்மென்பொருளை பயன்படுத்தி அவர்களை அப்புகைப்படத்திலிருந்து இலகுவாக நீக்கிவிட முடியும்.
ஆனால் இந்த மென்பொருளானது அன்ரோயிட் இயங்குத்தளத்தில் மட்டுமே செயற்படும் என்பது ஒரு குறையாக காணப்படுவதுடன் இம்மென்பொருளை பயனர்கள் பாவிக்கும் போது இடைமுகத்தில் சில குறைபாடுகள் அல்லது கடினத்தன்மை காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
CICK HERE TO SEE THE VIDEO
comments | | Read More...

பிரசன்னாவிடம் பிடித்தது எது ? - சினேகாவுடன் சிறப்பு நேர்காணல் (வீடியோ)

 

சினிமா ஊடகங்களில் அடிக்கடி அடி படும் ஜோடி பிரசன்னா-சிநேகா தான் , அந்தவகையில் இவர்கள் தொடர்பான பல சுவாரசிய செய்திகளை வெளியிட்ட குசும்பு இணையம் இம்முறை சிறப்பு நேர்காணலையும் வழங்குகிறது








CICK HERE TO SEE THE VIDEO





comments | | Read More...

புகைப்படங்களில் அகப்படும் விரும்பத்தகாத காட்சிகளை இலகுவாக அகற்ற புதிய ஐ போன் மென்பொருள்!

மென்பொருள்!
 

கமெரா போன்கள் பயன்படுத்துபவர்கள் அவர்களின் பயணங்களின் போது தென்படும் பிடித்தமான இடங்களில் இருந்து புகைப்படங்களை எடுத்து மகிழுவார்கள்.எனினும் சில சந்தர்ப்பங்களில் அப்புகைப்படங்களில் அவர்கள் எதிர்பார்க்காத காட்சிகளும் அகப்பட வாய்ப்புண்டு. எனவே அக்காட்சிகளை நீக்குவதற்கு இதுவரை காலமும் மிகவும் சிரமப்படவேண்டி இருந்தது. ஆனால் தற்போது அதற்கான சிறந்த தீர்வொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

அதாவது ஐ போன்களில் பயன்படுத்தக்கூடிய கமெரா மென்பொருள் ஒன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புகைப்படங்களில் அகப்படும் அநாவசியமான அல்லது விரும்பத்தகாத காட்சிகளை இலகுவாக அகற்ற முடியும்.

உதாரணமாக குறித்த காட்சியில் படமாக்கப்பட்ட சில மனிதர்களை நீக்க வேண்டுமாயின் இம்மென்பொருளை பயன்படுத்தி அவர்களை அப்புகைப்படத்திலிருந்து இலகுவாக நீக்கிவிட முடியும்.

ஆனால் இந்த மென்பொருளானது அன்ரோயிட் இயங்குத்தளத்தில் மட்டுமே செயற்படும் என்பது ஒரு குறையாக காணப்படுவதுடன் இம்மென்பொருளை பயனர்கள் பாவிக்கும் போது இடைமுகத்தில் சில குறைபாடுகள் அல்லது கடினத்தன்மை காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

Click here to view the embedded video.

comments | | Read More...

சிம்புவுடன் மீண்டும் இணைகிறார் நயன்தாரா?

 

கொலிவூட்டின் முன்னணி இயக்குநர் ஒருவர் சிம்புவுடன் இணைந்து நடிக்குமாறு நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோடம்பாக்கத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.பிரபுதேவாவுடனான காதல் முறிவடைந்ததால் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் நயன்தாரா. தற்போது இயக்குநர் விஷ்ணுவர்த்தன் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதைனையடுத்தே நயன்தாராவை சிம்புவுடன் சேர்ந்து நடிக்குமாறு முன்னணி இயக்குநர் ஒருவர் நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறப்படுறது.

ஒஸ்தி திரைப்படத்தில் நயன்தாராவை சிம்புவுடன் நடிக்க வைக்க எடுத்த முயற்சிகள் வீணாகிவிட்டன. ஆனால் தற்போது பிரபுதேவாவுடனான காதலை முடிவுக்குக் கொண்டுவந்துள்ள நயன்தாரா மீண்டும் சிம்புவுடன் நடிக்க வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக இயக்குநர் நம்பிக்கையுடன் உள்ளாராம்.

இயக்குநரின் நம்பிக்கை நியாயம் என்பது போல " நயன்தாராவோடு மீண்டும் இணைந்து நடிப்பீர்களா? " என்ற கேள்விக்கு அவரோடு நடிப்பதற்கு தனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்றும், கதைக்காகத் தேவைப்பட்டால் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார் நயன்தாரா.

comments | | Read More...

நடுக்கடலில் 2 மீனவர்கள் சுட்டுக்கொலை: குமரி. மீனவ கிராமங்களில் சோகம்: இத்தாலி கப்பல் மாலுமிகளிடம் விசாரணை!

 

நாகர்கோவில்::குமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமங்களான ராமன்துறை, இரயுமன் துறை, பூத்துறை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கேரள கடலில் மீன்பிடித் தொழில் செய்வது வழக்கம். இதுபோல பூத்துறையை சேர்ந்த பிரடி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த அஜீஸ் டிங்கு(20), கிலாரி, ஜான்சன், முத்தப்பன், அலெக் சாண்டர், பிரான்சிஸ், பிங்செரியன், மார்ட்டின், ஆன்டனி, குளச்சலை சேர்ந்த ஜெலஸ்டின் ஆகி யோரும் கேரளாவை சேர்ந்த சில மீனவர்களும் இணைந்து கொல்லம் கடலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்கச் சென்றனர்.

நேற்று காலை ஆழ்கடல் பகுதியில் இவர்கள் வலை வீசி மீன்களை பிடிக்க காத்திருந்த போது அந்த வழியாக ஆயில் டேங்கர் ஏற்றிய சரக்கு கப்பல் வந்தது. திடீரென கப்பலில் இருந்தவர்கள் விசைப்படகின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் படகின் மேல்தளத்தில் நின்று கொண்டிருந்த அஜீஸ் டிங்கு, ஜெலஸ்டின் ஆகியோர் மீது குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் படகு தளத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.

அஜீஸ் டிங்கு, ஜெலஸ்டின் ஆகியோரின் அலறலைக் கேட்டு படகின் கீழ்தளத்தில் இருந்தவர்கள் மேல்தளத்திற்கு ஓடி வந்தனர். அதற்குள் மீனவர்களை சுட்ட கப்பல் அங்கிருந்து வேகமாக சென்று விட்டது. இதுபற்றி படகில் இருந்தவர்கள் பூத்துறையில் உள்ள உறவினர்களுக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த தகவல் கொல்லம் மீன்பிடித்துறைமுக அதிகாரிகளுக்கு கூறப்பட்டது.

உடனே அதிகாரிகள் கடலோர காவல்படையினரின் உதவியுடன் தப்பிச் சென்ற கப்பலை விரட்டிச் சென்று மடக்கினர். நடுக்கடலில் பிடிபட்ட அந்த கப்பல் பின்னர் கொச்சி துறை முகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கப்பலின் மாலுமிகளிடம் துறைமுக அதிகாரிகள் விசாரித்தனர். இத்தாலி கப்பல் மாலுமிகள் கூறும்போது, விசைப்படகில் இருந்தவர்கள் கடற்கொள்ளையர்கள் என கருதி துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தனர்.

இருந்தாலும் மாலுமி கூறிய காரணத்தில் உண்மை இருக்கிறதா? என்பதை கண்டறிய அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே குண்டடிப்பட்டு இறந்து போன குமரி மீனவர்கள் அஜீஸ்டிங்கு, ஜெலஸ்டின் ஆகியோரின் உறவினர்கள் தகவலறிந்து அழுது புலம்பினர்.

தற்போது இருவரின் உடலும் கொச்சியில் இருந்து இன்று மாலை பூத்துறை கிராமத்திற்கு வந்து சேரும் என்று தெரிகிறது. அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பூத்துறை, இரயுமன்துறை மற்றும் குளச்சல் பகுதியில் இருந்து ஏராளமான மீனவர்கள் குடும்பத்துடன் பூத்துறை ஆலயம் முன்பு கூடினர். இதனால் மீனவ கிராமங்களே சோகத்தில் ஆழ்ந்தது. பெரும்பாலான மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.வீடுகள் முன்பு கறுப்புக் கொடி கட்டி துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.

துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட அஜீஸ் டிங்கு பெற்றோரை இழந்தவர். இவருக்கு அபினா சேவியர்(17), அபுனா சேவியர் (15) என்ற இரண்டு சகோதரிகள் மட்டுமே உள்ளனர். அஜீஸ் டிங்குக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சகோதரிகளை திருமணம் செய்து கொடுத்த பின்பு தான் அவர் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் கொலையுண்டதால் அவரது சகோதரிகள் இருவரும் வாழ்க்கையே இருண்டு போனதாக கூறி கதறி அழுதனர்.

அவர்களை கண்டு கிராமமே கண்ணீர் வடித்தது. இறந்து போன இன்னொரு மீனவரான ஜெலஸ்டின் குளச்சலை சேர்ந்தவர். தற்போது குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வந்தார். அவர் இறந்த தகவல் குளச்சலில் உள்ள அவரது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இறந்து போன மீனவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வரும் பணியிலும் அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை பெற்றுத் தரும் முயற்சியிலும் மீனவர் சங்க பிரதிநிதிகளும், வள்ளவிளை ஆலய பங்குதந்தை பிரடியும் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப் பின் பொதுச் செயலாளர் பாதிரியார் சர்ச்சில் கூறியதாவது:-

2 மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடல் தொழிலுக்கு சென்று இத்தாலி கப்பல் மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட குமரி மீனவர்கள் அஜீஸ் டிங்கு, ஜெலஸ்டின் ஆகியோரின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

அதோடு, மீனவர்களை ஈவு, இரக்கமின்றி சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் நிறுவனமும் நஷ்டஈடு தர வேண்டும். சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.50 லட்சம் நிவாரணநிதி அளிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

comments | | Read More...

துப்பாக்கி முனையில் 5 பேரால் பெண் கற்பழிப்பு:

 

கொல்கத்தாவில் பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குற்றவாளிகளை அடையாளம் காட்டியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர், தன்னுடைய நண்பர்களுடன் கடந்த 5.02.2012 அன்று இரவு கேளிக்கை விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் அறிமுகம் இல்லாத இளைஞர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது மயக்கத்தில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணிடம் பவ்யமாக பேசி, வீட்டில் இறக்கிவிடுதாக கூறி காரில் அழைத்துச் சென்றனர்.

அப்போது துப்பாக்கி முனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 10 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில்,

பிப்ரவரி 5ம் தேதி கேளிக்கை விடுதியில் இருந்து திரும்பி வரும்போது அந்த கேளிக்கை விடுதியில் நண்பர்களாகப் பழகிய 4 பேர் காரில் எனக்கு லிப்ட் கொடுத்தனர். நானும் அவர்களுடன் காரில் ஏறினேன். ஆனால் திடீரென அவர்களில் ஒருவர் துப்பாக்கி முனையில் என்னை பலாத்காரம் செய்தார். அவர்களை பேஸ்புக் உதவியுடன் அடையாளம் கண்டு அவர்களைப் பற்றி போலீசில் புகார் கூறினேன். ஆனால் போலீசார் அதை ஏற்காமல் என்னைக் கேலி செய்தனர்.

இந்த விவகாரத்தை தைரியத்துடன் வெளியுலகுக்கு கூறியுள்ளேன். விசாரணைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு தகவல்களைக் கூறுவேன். காரில் இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர் என்றார்.

இறுதியில் கடும் நெருக்கடிக்குப் பின்னர் போலீசார் எஃப்ஐஆர் பதிவுசெய்தனர். அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.

இதுகுறித்து கொல்கத்தா இணை போலீஸ் கமிஷனர் தமயந்தி சென் கூறுகையில், பிப்ரவரி 5 ம் தேதி அவர் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறுகிறார். ஆனால் பிப்ரவரி 9 ம் தேதிதான் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார் என்றார். அவரின் புகாரை போலீசார் வாங்க மறுத்தது குறித்து கேட்டபோது, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger