News Update :
Powered by Blogger.

ஷிண்டேயின் உத்தரவை குப்பை தொட்டியில் வீசுங்கள்: பா.ஜ.க. முதல் மந்திரிகளுக்கு வெங்கையா வேண்டுகோள் Throw Shindes directive in dustbin BJP tells its CMs

Penulis : Tamil on Monday, 7 October 2013 | 21:53

Monday, 7 October 2013

ஷிண்டேயின் உத்தரவை குப்பை தொட்டியில் வீசுங்கள்: பா.ஜ.க. முதல் மந்திரிகளுக்கு வெங்கையா வேண்டுகோள் Throw Shindes directive in dustbin BJP tells its CMs

Tamil NewsYesterday,

பெங்களூரு, அக். 7-

தீவிரவாதம் என்கிற பெயரில் உரிமைகளை மீறி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது சட்ட அமலாக்க பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் மத்திய அரசுக்கு வந்துகொண்டிருக்கின்றன. அதையடுத்து முஸ்லிம் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநில முதலமைச்சர்களுக்கு உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே சமீபத்தில் கடிதம் எழுதினார்.

அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் ஷிண்டே இந்த கடிதத்தை எழுதியுள்ளார் என்று எதிர்கட்சிகள் கூறின. இதுகுறித்து பாரதிய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீங்கள் ஒரு நாட்டுக்கு உள்துறை மந்திரியாக இருக்கிறீர்களா? அல்லது ஒரு சமுதாயத்துக்கு உள்துறை மந்திரியாக இருக்கிறீர்களா?. இது பொறுப்பற்றதாகும். இது இந்திய அரசின் முட்டாள்தனமான செயலாகும்.

ஷிண்டேயின் இந்த உத்தரவானது அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரானது. இந்த உத்தரவானது எந்த ஒரு அப்பாவியும் கைது செய்யப்படக்கூடாது என்று தான் இருந்து இருக்க வேண்டும்.

ஒரு சாரரை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கையை ஷிண்டே எடுத்திருப்பது வெட்கக்கேடானது. அவரின் இந்த உத்தரவை குப்பை தொட்டியில் வீசியெறிய பாரதிய ஜனதா முதல் மந்திரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 
...
Show commentsOpen link

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger