Tuesday, 1 May 2012
திருச்சியில் நடந்த ஐ.என்.டி.யூ.சி மாநில மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள� �� கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இலங்கை தமிழர் பிரச்சினைக்கு 'தமிழ் ஈழம்' ஒன்றே தீர்வு என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறி இருக்கிறார். மேலும் டெசோ அமைப்பை கருணாநிதி மீண்டும் தொடங்கி இருப்பதால் தி.மு.க-காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்படுமா?
பதில்:- இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை மத்திய அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இலங்கை தமிழர்களின் மறு வாழ்வையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் தான் நாங்கள் கவனம� ��க பார்த்து வருகிறோம். அதனால் தான் ஐ.நா. மன்றத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.
மேலும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க் கள் குழுவை இலங்கைக்கு அனுப்பியது. அந்த குழுவினர் அதிபர் ராஜபக்சேயை சந்தித்து தமிழர்களுக்கான மறுவாழ்வுகள் தொடர்பான திட்டங்களை கொடுத்து விட்டு வந்து இருக்கிறார்கள்.
கேள்வி:- புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துமா?
பதில்:- தமிழகத்தை பொறுத்தவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க அங்கம் வகிக்கிறது. எனவே தமிழக காங்கிரஸ் தலைவர் இதுபற்றி கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளருக்கு அறிக்கை அனுப்புவார். அதன் பின்னர் தான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை அகில இந்த ிய பொதுச்செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
கேள்வி:- காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே?
பதில்:- ஒரு மாநிலத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. காங்கிரஸ் அரசு, கூட்டணி கட்சி ஆளும் அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் அரசு என்றெல்லாம் நாங்கள் பாகுபாடு பார்ப்பது இல்லை. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதும் இல்லை.
கேள்வி:- நெய்வேலி அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?
பதில்:- என்.எல்.சி சுரங்கத் தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறி இருக்கிறார். எனவே இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின்(ஐ.என்.டி.யூ.சி) 25-வது மாநில மாநாடு நேற்று திருச்சி தேவர் ஹாலில் நடந்தது. மாநாட்டுக்கு ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் ஜி. காளன் தலைமை தாங்கினார்.
மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் கல்யாணராமன் வரவேற்று பேசினார். மாநாட்டை மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே. வாசன் தொடங்கி வைத்து பேசினார்.
மாநாட்டில் அகில இந்திய ஐ.என்.டி.யூ.சி. தலைவர் சஞ்சீவரெட்டி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஷானிமோள் உஸ்மான், கேரளமாநில ஐ.என்.டி.யூ.சி தலைவர் சந்திரசேகரன் ஆகியோரும் பேசினார்கள்.