திரிஷாவிற்கு சச்சினின் பரிசு!
தனது தாய்லாந்து டூர் முடித்துக்கொண்டு வீடு திரும்பிய த்ரிஷா, அடுத்ததாக வழக்கம்போல் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள தயாரானார். சமர், பூலோகம் என தமிழிலும் தெலுங்கிலும் இந்த வருடம் முழுவதும் பிஸி ஷெடியூலுடன் இருந்தார் த்ரிஷா. ஆனால் எதிர்பாராத விதமாக மறுபடியும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார் நடிகை த்ரிஷா.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் த்ரிஷாவின் நண்பர்கள் அவர் நல்லபடியாக குணமாகி திரும்பவேண்டும் என வேண்டிக்கொண்டிருக்க்கும் சமயத்தில் த்ரிஷா ஆச்சர்யப்படும் அளவிற்கு த்ரிஷா வீட்டிற்கு வந்து சேர்ந்தது சச்சின் கையெசுத்து போட்ட பேட்.
த்ரிஷாவின் பிறந்தநாள் வாழ்த்தாகவும், த்ரிஷாவின் மனதிற்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் த்ரிஷாவின் ரசிகர்கள் அளித்துள்ள பரிசு தான் சச்சின் கையெழுத்து போட்ட அந்த அவி� �ா பேட்.
இந்த பரிசை கண்டு மகிழ்ந்த த்ரிஷா அந்த பேட்டைவிட்டு ஒரு நிமிடம் கூட பிரிவதில்லையாம். அந்த பேட்டை வித விதமாக ஃபோட்டோ எடுத்துக்கொண்டு வீட்டிலேயே அடைந்துகிடக்கிறாராம் த்ரிஷா.
வசந்த் - சேரன் - விமல் இணையும் மூன்று பேர் மூன்று காதல்!
கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் வசந்த் தொடங்கியுள்ள புதிய படம் மூன்றுபேர் மூன்று காதல்!
இதில் அர்ஜுன், சேரன், விமல் ஆகிய மூவரும் நாயகர்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக � �ானு நடிக்கிறார்.
இவருடன் ஸ்ருதி, சுர்வீனின் ஆகிய இரண்டு மும்பை மாடல்கள் நாயகிகளாக அறிமுகமாகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பே சத்தமின்றி இந்தப் படத்தை ஆரம்பித்துவிட்ட வசந்த், இப்போது முக்கால்வாசி படத்தை முடித்துவிட்டாராம்.
மூன்று ஜோடிகளின் காதல் கதைதான் படம் என்றாலும் மூன்றையும் மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறாராம் வசந்த்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் விசேஷம், தேசிய விருது பெற்ற நான்கு கலைஞர்கள் ஒன்றிணைவதுதான். வசந்த், சேரன், தம்பி ராமையா மற்றும் அப்புக்குட்டி ஆகியோர்தான் அந்த நான்கு விருது பெற்ற கலைஞர்கள்.
பெண்களுக்கான ஃபேஸ்புக்
ஃபேஸ்புக், டிவிட்டருக்கு அடுத்தபடியாக அதிகமானோர் வருகை தரும் சமூக வலைப்பின்னல் தளமாக பின்ட்ரெஸ்ட் வளர்ச்சி பெற்றுள்ளது.
'பின்ட்ரெஸ்ட்' செய்திகளில் அடிபடும் வேகத்தைப் பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கிறது. இணையத்தில் எங்கு பார்த்தாலும் இப்போது பின்ட்ரெஸ்ட் பற்றி தான் பேச்சாக இருக்கிறது.
பின்ட்ரெஸ்ட்டை பயன்படுத்தும் விதம், பின்ட்ரெஸ்ட்டின் செல்வாக்கு,பின்ட்ரெஸ்ட்டின் மார்க்கெட்டிங் தாக்கம் என்று பின்ட்ரெஸ்ட் பற்றி பலவிதமாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
ஒரு விஷயம் உறுதி; பின்ட்ரெஸ்ட் இன்டர்நெட்டின் புதிய சென்சேஷனாக உருவாகியிருக்கிறது.
பின்ட்ரெஸ்ட்டில் அமெரிக்க அதிபரும் உறுப்பினராகி இருக்கிறார், சாமான்யர்களும் பின்ட்ரெஸ்ட்டை நோக்கி படையெடுக்கின்றனர். குறிப்பாக பெண்கள் அலை அலையாக உறுப்பினர்களாகி வருகின்றனர். சொல்லப்போனால் பின்ட்ரெஸ்ட் மகளிர் ராஜ்யம் தான். அதில் பெண்களே அதிக அளவில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் அதனை 'பெண்களின் பேஸ்புக்' என்றும் சொல்லலாம்.
பின்ட்ரெஸ்ட்டை காப்பி அடித்து உருவாக்கப்பட்ட தளங்களும் அதிகரித்திருப்பதோடு, போட்டி தளங்களும் உதயமாக துவங்கியிருக்கின்றன. அது சரி, பின்ட்ரெஸ்ட்ட்டில் அப்படி என்ன தான் இருக்கிறது?
பின்ட்ரெஸ்ட்டைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன், இணையத்தின் சமீபத்திய போக்கை கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது நீங்கள் வாங்க விரும்பும் பொருட்களை பகிர்ந்து கொள்வதற்கான இணையதளங்கள் இருப்பது போல், வாங்கிய பொருட்களின் தரம் குறித்து பகிர்ந்து கொள்ளவும் இணையதளங்கள் இருக்கின்றன!
இவ்வாறு செய்வதன் நோக்கமும் பயனும் என்னவென்றால் வாங்க நினைக்கும் பொருளின் தரம் மற்றும் சிறப்பம்சங்கள் அல்லது குறைகள் போன்றவற்றை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அதே போல மற்றவர்கள் வாங்கிய பொருட்களின் குறை நிறைகளையும் அவர்களின் பகிர்வு மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த வகை இணையதளங்கள் தான் இப்போ� �ு இணையத்தின் போக்காக இருக்கின்றன. இவை சுய வெளிப்பாடு தளங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. அதாவது இணையவாசிகள் தங்கள் ரசனைகளையும் விருப்பங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி கொள்ள வழி செய்யும் தளங்கள்.
வெளிப்படுத்தி கொள்வது என்றால் டிவிட்டர் குறும்பதிவுகள் போலவோ ஃபேஸ்புக் அப்டேட்கள் போலவோ அல்ல!பேஸ்புக்கும், டிவிட்டரும் பக்கம் பக்கமாக வசனம் பேசும் அந்த கால சினிமா போல. இந்த தளங்களில் எல்லாம் மணிரத்னம் படம் போல வசனங்களுக்கு அதிக வேலை இல்லை. சொல்லப்போனால் எதையும் விவரிக்கவே வேண்டாம். வார்த்தைகளே � �ல்லாமல் விருப்பங்களை பகிர்ந்து கொள்ளலாம். பின்ட்ரெஸ்ட் இதை தான் செய்கிறது.
அதெப்படி எதையுமே சொல்லாமல் பகிர்ந்து கொள்ள முடியும் என வியப்பு ஏற்படலாம். இதன் முழு ஆச்சர்யத்தை உணர வேண்டும் என்றால் பின்ட்ரெஸ்ட் இணையதளத்தை பயன்படுத்தி பார்க்க வேண்டும்.
பின்ட்ரெஸ்ட் தளம் இணைய குறிப்பு பலகை என்று அழைத்து கொள்கிறது. அதாவது இணையத்தில் குத்தி வைத்து குறித்து வைக்கும் பலகை.
பள்ளி கல்லூரி போன்ற இடங்களில் அறிவிப்பு பலகை இருக்கும் அல்லவா? அதில் அறிவிப்புகளையும் புகைப்படங்களையும் இதர செய்திகளையும் 'பின்'னால் குத்தி வைப்பார்கள். அதே போல இந்த தளத்தில் இணையவாசிகள் தாங்கள் இணையத்தில் பார்க்கும் சங்கதிளை குத்தி வைத்து கொள்ளலாம். இதற்காக என்று அறிவிப்பு பலகைகளை சுலபமாக உருவாக்கி கொள்ளலாம். எத்தனை பலகைகளை வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம்.
இணையத்தில் பார்ப்பவை என்றால் அழகான புகைப்படங்களில் துவங்கி ஆடை வடிவமைப்பு, பூ வேலைப்பாடு, சமையல் குறிப்பு, இணையதளம், கேக் மாதிரிகள், புத்தகங்கள் என்று என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வீடியோ, செயலிகள் போன்றவற்றையும் பகிர்ந்து.. மன்னிக்கவும்.. குத்தி கொள்ளலாம்.
வெளியே அலைந்து திரிவதைவிட இப்போது இணையத்தில் அலைவது தான் அதிகமாகிவிட்டது. தினமும் பல தளங்களுக்கு செல்கிறோம். தேடியந்திரம் அல்லது ஃபேஸ்புக் நண்பர்கள் காட்டிய வழியில் பல தளங்களை பார்க்கிறோம். இவற்றில் சிலவற்றை குறித்து வைக்க நினைப்போம். ஆனால் அதன் பிறகு மறந்து விடுவோம். தளங்கள் என்றால் புக்மார்க் செய்து கொள்ளலாம். ஆனால� � அழகான ஆடையின் வடிவமைப்பையோ அல்லது புதிய மேஜை விரிப்பு அலங்காரத்தையோ பார்த்து ரசித்தால் எப்படி அதனை சேமித்து வைப்பது. புகைப்படம் எனில் அப்படியே டெஸ்க்டாப்பில் சேமித்து கொள்ளலாம். ஆனால் அவற்றை வகைப்படுத்துவதோ பின்னர் எடுத்து பார்ப்பதோ கொஞ்சம் கஷ்டம் தான்.
பின்ட்ரெஸ்ட்டில் இந்த தொல்லை எல்லாம் கிடையாது. இணையதளத்தில் ஒரு விஷயம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறதா, அதை உடனே 'பின்' அதாவது குத்தி கொண்டு விடலாம். குத்துவது என்றால் அந்த படம் அழகாக நமக்கான பலகையில் சேமிக்கப்பட்டுவிடும். பின்னர் எளிதாக அடையாளம் காண ும் வகையில் இவற்றுக்கு பொருத்தமான தலைப்பு கொடுத்து வகைப்படுத்தி வைக்கலாம்.
உதாரணத்திற்கு, 'ஆடைகள்' என்னும் தலைப்பில் ஒரு பலகையை உருவாக்கி உங்களுக்கு பிடித்தமான ஆடை வடிவமைப்பு படங்களை ஒரே இடத்தில் சேமித்து வைக்கலாம். 'கல்யாண நகைகள்' என்னும் தலைப்பில் அழகிய வேலைப்பாடு கொண்ட நகைகளின் புகைப்படங்களை சேமித்த� �� வைக்கலாம். இப்படி சேமிப்பது அல்லது குத்துவது மிகவும் சுலபம். பின்ரெஸ்ட்டில் உறுப்பினராகி அதில் உள்ள பிரவுசர் நீட்டிப்பு பட்டையை நாம் பார்த்து கொண்டிருக்கும் இணையபக்கத்தில் கிளிக் செய்தால் போதும். " 'பின்' செய்யவா தலைவா?" என கேட்கும் பட்டன் எட்டிப்பார்க்கும். அதை கிளிக் செய்தால் போதும். அந்த காட ்சி சேமிக்கப்பட்டுவிடும்.
பின்னர் தேவைப்படும் போது அந்த படத்தை பார்த்து, எந்த தளத்தில் அதனை கண்டோம் என எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த சேமிப்பை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இதே போல மற்ற உறுப்பினர்கள் சேமித்து வைத்துள்ளவற்றை பார்வையிடலாம். அதில் உள்ள விஷயம் பிடித்திருக்கிறது எனில், அதனை 'லைக்' செய்வதோடு நமது பலகையிலும் சேமித்து வைக்கலாம். ரீடிவீட் போல இது ரீபின். டிவிட்டர் ப� �ல எந்த உறுப்பினரையும் பின் தொடரலாம். அவர்கள் சேமிப்பதை உடனுக்குடன் பார்த்து தெரிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு விஷயம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். இதுமட்டுமல்லாது இன்னும் ஏகப்பட்ட சமூக வலைப்பின்னல் பாணி வசதிகள் உள்ளன.
இந்த தளத்தில் நுழைந்தால் அதன் முகப்பு பக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விஷயங்களின் வகைகளையும் அவற்றின் பரந்துவிரிந்த தன்மையையும் பார்த்து ரசிக்கலாம். கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கும். அந்த அளவுக்கு பகிர்வுகள் பலவகையில் இருக்கும்.
இந்த அறிவிப்பு பலகை வசதியை பலவிதங்களில் பயன்படுத்தலாம். ஃபேஷன் பிரியர்கள் தங்களுக்கு பிடித்த வடிவமைப்புகளுக்கான டைரியாக பயன்படுத்தலாம். புதிய ஃபேஷன் போக்குகளை தெரிந்து கொள்ளவும் இது கைகொடுக்கும்.
திருமணம் போன்ற வைபவங்களுக்கு ஆடை வாங்கும் போது நாம் பார்த்த டிசைன்களை இங்கே குறிப்பிட்டும் உறவினர்கள் நண்பர்களை அழைத்து ஆலோசனை கேட்கலாம். அவர்கள் பரிந்துரைக்க விரும்புவதை 'பின்' செய்வதன் மூலமோ சுட்டிக்காட்டலாம். கருத்துக்கள் வழியே யோசனை கூறலாம்.
வீட்டிற்கான உள் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தால் நாம் தேர்வு செய்த மாதிரிகளை இங்கே பகிர்ந்து கொண்டு அவை பற்றிய கருத்துக்களை கேட்கலாம்.
மனதுக்கு ஊக்கம் அளிக்க கூடிய விஷயங்களை, சமையல் குறிப்புகளை, வீடியோ காட்சிகளை என எவற்றை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.
அமெரிக்க பெண்மணி இந்த தளத்தில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் மூலமாக அவரது கணவர் இப்பெண்மணியின் ரசனை பற்றி அதிகம் தெரிந்து கொண்டு அவர் தன் பங்கிற்கு சிலவற்றை பரிந்துரை செய்து வியப்பளித்துள்ளார். இதனால் நெகிழ்ந்து போன அந்த பெண்மணி 'என் கணவருக்கு பிடித்தவை' என்னும் தலைப்பில் � �ரு பலகையை உருவாக்கி அவருக்கு பிடித்த விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இப்படி பல அற்புதங்களும் சாத்தியமாகலாம்.
ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் போரடித்திருந்தால் 'பின்ட்ரெஸ்ட்டை' பயன்படுத்தி பாருங்கள். அதன் பின், உங்கள் மனம் பின்ட்ரெஸ்ட்டில் பின் செய்யப்பட்டிருக்கும்!
தென் ஆப்ரிக்காவில் தனுஷ் நடிக்கும் மரியான் - படப்பிடிப்பு தொடங்கியது!
3 படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படம் குறித்து பல்வேறு செய்திகள் வந்தன. அவர் இந்திப் படத்தில் நட� ��ப்பார் என்று கூறப்பட்டது. வெற்றிமாறன் படம்தான் அடுத்து என செய்திகள் வந்தன.
இந்த நிலையில், சத்தமின்றி அவரது அடுத்த படம் தொடங்கிவிட்டது. இந்தப் படத்துக்கு மரியான் என்று தலைப்பிட்டுள்ளனர்.
பரத்பாலா இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தனுஷ் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை தருவது இது முதல்முறை. ஏற்கெனவே இரண்டு பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டாராம் ரஹ்மான்.
தென் ஆப்ரிக்காவில் இதுவரை எந்த தமிழ்ப் படமும் படமாக்கப்படாத இடங்களில் மரியான் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.
கோடை விடுமுறை என்பதால்படப்பிடிப்புக்கு தன்னுடன் மனைவி ஐஸ்வர்யா, மகன்கள் யாத்ரா, லிங்காவையும் அழைத்துச் சென்றுள்ளார் தனுஷ்.
இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்த பிறகு, இந்தியில் 3 படத்தை வெளியிடவிருக்கிறார் தனுஷ்!
துபாயில் நமீதா பங்கேற்கும் நம்பிக்கை ஸ்வரங்கள் 2012
அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் நம்பிக்கை ஸ்வரங்கள் 2012 வரும் 24ம் தேதி துபாயில் நடக்கிறது.
அமீரகத் தமிழ் சங்கம் கடந்த 2010ல் இருந்து ஆண்டு தோறும் மாற்றுத்திறனாளிகளுக்காக நம்பிக்கை ஸ்வரங்கள் என்ற கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி வரும் மே மாதம் 24ம் தேதி மாலை 7 மணிக்கு துபாயில் உள்ள இந்தியனை ஹை ஸ்கூலில் உள்ள ஷேக் ராஷித் அரங்கில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கோலிவுட் நடிகை நமீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மாற்றுத்திறனாளிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் சூப்பர் சிங்கர்ஸ் அஜேஷ், சந்தோஷ், சத்ய பிரகாஷ், பூஜா, பிரசன்னா, பார்வையற்ற திருமதி சுசீலா ஆகியோர் இன்னிசை நிகழ்ச்சியும், மானாட மயிலாட கோகுல்நாத்தின் வெரைட்டி நிகழ்ச்சியும் நடக்கிறது.
நிகழ்ச்சிகளை இப்படிக்கு ரோஸ் தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் வரும் 17,18 ஆகிய தேதிகள் வழங்கப்படும். நுழைவுச் சீட்டுக்கு http://www.uaetamilsangam.com/upcomingevent.asp என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.
ஐபிஎல்: 'நோ பால்' போட ரூ.10 லட்சம் கேட்ட ஸ்ரீவாஸ்தவ்?
ஐபிஎல் போட்டியின்போது தான் நோ பால் போட பணம் கேட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பொய் என்றும், தான் குற்றமற்றவன் என்றும் கிங்ஸ் XI பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஷாலப் ஸ்ரீவாஸ்தவ் தெரிவித்துள்ளார்.
கிங்ஸ் XI பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஷாலப் ஸ்ரீவாஸ்தவ் ஐபிஎல் போட்டி ஒன்றில் நோ பால் போட ரூ.10 லட்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை ஒரு தொலைக்காட்சி சேனல் ஒ� ��ிபரப்பியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில்,
ஸ்பாட் பிக்சிங் பற்றி என்ன கூறினார்கள் என்பது எனக்கு புரியவில்லை. அந்த தொலைக்காட்சி சேனல் நான் ஸ்பாட் பிக்சிங் செய்தேன் என்று கூறும் காட்சிகளை ஒளிபரப்புகிறதே. நான் நோ பால் போட ரூ.10 லட்சம் கேட்ட காட்சியையும் ஒளிபரப்ப வேண்டியது தானே. டெலிபோன் பேச்சில் வரும் � �ுரல் என்னுடையது அல்ல. போலியாக யாரோ பேசி வேறொருவரை மாட்டிவிடுவது சுலபம்.
இந்த விவகாரம் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்கள் ஸ்போர்ட்ஸ் மேனேஜர்கள் என்று கூறி என்னை சந்தித்தனர். எனக்கு நல்ல வாய்ப்புகள் வாங்கித் தருவதாகக் கூறினார்கள். அவர்கள் ஸ்போர்ட்ஸ் மேனேஜர்கள் என்று கூறியதால் நான் அவர்களை 7 முதல் 8 தடவை சந்தித்துள்ளேன். அவ ர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் 50 வீரர்களை சந்தித்தனர். குறைந்தது 15 கிரிக்கெட் வீரர்களிடமாவது நான் அவர்களைப் பற்றி பேசியுள்ளேன்.
ஆனால் அனைவருக்குமே அவர்கள் மீது சந்தேகம் இருந்தது. காரணம் அவர்கள் எப்பொழுது பார்த்தாலும் பிக்சிங் மற்றும் அணி உரிமையாளர்கள் வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் என்பதைப் பற்றியே கேட்டுள்ளனர். ஸ்போர்ட்ஸ் மேனேஜர்கள் என்று கூறிக்கொண்டு சர்ச்சைக்கு� �ிய விஷயங்களைப் பற்றியே அவர்கள் பேசினார்கள்.
அந்த தொலைக்காட்சி சேனல் மீது நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். ஸ்போர்ட்ஸ் மேனேஜர்கள் என்று கூறியவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வேன் என்றார்.
டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்கு விளையாடும் டிபி சுதீந்திரா உள்ளூர் போட்டியில் லஞ்சம் வாங்கியது கேமராவில் பதிவாகியுள்ளது. அவர் ஐபிஎல் போட்டியின்போது லஞ்சம் வாங்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் இந்தூர் டி20 லீக் மேட்சில் நோ பால் போட அவர் ரூ.40,000 கேட்டது கேமராவில� � பதிவாகியுள்ளது.
இந்த பிரச்சனைகளை அடுத்து ஐபிஎல் நிர்வாகக் குழு இன்று அவசரமாகக் கூடுகிறது. பிசிசிஐ இந்த விவகாரத்தை சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளது. மேலும் குற்றம் சாட்டப்படும் வீடியோவை விசாரணைக்கு கேட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களில் சிலர் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுபடுவதாக சில தொலைக்காட்சி சேனல்கள் தெரிவித்துள்ளன. ஊழல் மற்றும் முறைகேடுகளை பிசிசிஐ ஒரு நாளும் சகித்துக்கொள்ளாது என்று பிசிசிஐ செயலாளர் சஞ்சய் ஜக்தலே தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரங்களை வெளியே கொண்டு வந்துள்ள அந்த வீடியோக்கள் பரிசோதிக்கப்படும். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம்: தேசிய மனித உரிமை கமிஷனிடம் புகார்
முன்னாள் தலைமை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அஜீத் பிரகாஷ் சிங், கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராடுபவர்கள் மீது தேச விரோத வழக்குகள் போடுவது குறித்து தேசிய மனித உரிமை கமிஷனிடம் புகார் செய்ய முயற்சி மேற்கொள்ளபோவதாக தெரிவித்தார்.
மாநில மனித உரிமை கமிஷன் ஏன் இதை கண்டுகொள்ளவில்லை என தன் கவலையை தெரிவித்த அவர், இப்பிரச்சினையை தேசிய மனித உரிமை கமிஷன் பார்வைக்கு எடுத்து செல்லப்போவதாகவும் தெரிவித்த� �ர்.
மேலும், திருநெல்வேலியில் சுமார் 70,000 அணுஉலையை எதிர்த்து போராடுபவர்கள் கூடி போ� �ாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அதில் தான் கலந்து கொண்டு உரையாற்ற விருப்பதாகவும் தெரிவித்தார்.
விஜய்யுடன் இணையும் சுப்ரீம் ஸ்டார் சரத் குமார்
துப்பாக்கி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சுப்ரீம் ஸ்டார் சரத் குமார் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், நடிகருமான சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
நடிகர் சரத் குமார் பல ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை உருவாக்கி வருகிறார். மலையாளம் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்த பழசி ராஜா, ராகவா லாரன்ஸின் காஞ்சனா, கன்னடா படமான மைனா, ரஜினிகாந்தின் கோச்சடையான் ஆகிய படங்களில் சரத்குமாரும் முக்கிய பங்கு வகிக்கிறார். இந்நிலையில் விஜயின் துப்பாக்கி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
துப்பாக்கி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமாரை அணுகியபோது அவர் கதையைக் கேட்டு விட்டு சந்தோஷமாக ஒப்புக் கொண்டார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
விஜய் கேட்டுக் கொண்டதால் துப்பாக்கி படத்தில் ஒரு சின்ன ரோலில் இயக்குனர் முருகதாஸ் நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆ.ராசாவுக்கு ஜாமீன் கிடைக்குமா?: இன்று தீர்ப்பு
2ஜி ஊழல் வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வெளியாகும் என்� ��ு தெரிகிறது.
2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இநத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டனர். அவ ர்களில் 12 பேர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளனர்.
இந்த வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஜாமீன் கோரி கடந்த டிசம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார� �. அவரது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 9ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
பெகுராவுக்கு ஜாமீ்ன் கிடைத்ததையடுத்து தனக்கும் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ராசா மனு தாக்கல் செய்தார். தனது மனுவில், நான் நிரபராதி, என் மீது பொய்யான வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டதால் , என்னையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ராஜா.< /o:p>
இந்த மனு இன்று நீதிபதி ஓ.பி.சைனி முன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராசாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறி சிபிஐ பதில் மனு தாக்கல் செய்தது.
ராசா தரப்பில் வழக்கறிஞர் ரமேஷ் குப்தாவும், சி.பி.ஐ. தரப்பில் வழக்கறிஞர் பி.பி.சிங்கும் வாதிட்டனர். ராசா தரப்பில் வாதாடிய குப்தா கூறுகையில், பெகுரா மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதே பிரிவுகளின் கீழ் தான் ராசா மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்கில் பெகுராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், ராசாவுக்கும் ஜாமீன் வ� ��ங்க வேண்டும். மேலும் வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக் காலம் முழுவதும் ஒருவர் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
ஆனால் ராசா முதல் குற்றவாளி என்று சுட்டிக்காட்டி சி.பி.ஐ. ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும் சிபிஐ வழக்கறிஞர் சிங் வாதாடுகையில், 2ஜி விவகாரத்தில் ராசாவுக்கும� � அவர் சார்ந்தவர்களுக்கும் சுமார் ரூ. 200 கோடி வரை லஞ்சம் தரப்பட்டுள்ளது. மொரீசியஸ் நாட்டில் உள்ள டெல்பி இன்வஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்தில் ராசாவுக்காக ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் தனது பங்குகளை மாற்றித் தந்துள்ளது. இந் நிலையில் ராசாவை விடுதலை செய்தால் அவர் சாட்சிகளை குலைத்துவிடுவார் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை 15ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார். இந் நிலையில் இன்று நீதிபதி சைனி தனது தீர்ப்பை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாள விமான விபத்தில் 'ரஸ்னா' விளம்பரக் குழந்தை நட்சத்திரம் பலி
நேபாளில் நேற்று காலை நடந்த விமான விபத்தில் அமிதாபின் 'பா' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் பலியானார்.
ரஸ்னா விளம்பரம் உள்பட 50 விளம்பரப் படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ்(14). அமிதாப் பச்சன் நடித்த 'பா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தருணி பிரித்விராஜ் மற்றும் பிரியாமணியுடன் வெள்ளிநட்சத்திரம் மற்றும் சத்யம் ஆகிய மலையாளப் படங்களில் நடி� ��்துள்ளார். இது தவிர ஷாருக்கானின் ரியாலிட்டி வினாடிவினா நிகழ்ச்சியிலும் தோன்றியுள்ளார். அவரும், அவரது தாயும் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பிரபல சுற்றுலாத்தளமான ஜோம்சோமுக்கு சிறிய ரக விமானத்தில் சென்றனர். அந்த விமானத்தில் 16 இந்தியர்கள் உள்பட 21 பேர் இருந்தனர்.
நேற்று காலை 9.45 மணிக்கு ஜோம்சோம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது அந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அதில் பயணம் செய்த 15 பேர் பலியாகினர். பலியானவர்களில் 13 பேர் இந்தியர்கள். இந்த கோர விபத்தில் தருணி மற்றும் அவரது தாயும் பலியாகினர்.
இந்த விபத்தில் விமானம் நொருங்கிப் போனது ஆனால் தீப்பிடிக்கவில்லை. விமானிகள் பிரபு ஷரண் பதக் மற்றும் ஜே.டி. மகாராஜன் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்தவர்களின் முகங்கள் படுமோசமாக சேதமைடந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)
Followers
Popular Posts
-
போக்குவரத்து, இல்லாத மலைகள் சூழ்ந்த கிராமங்களில் உள்ள பொம்பிள பிள்ளைங்க நான்கைந்து மைல்கள் நடந்து போய் படிப்பது என்பது அவ்வளவாக கடைப்பிடி...
-
இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் வீரரான ...
-
தட்டார்மடம் அருகே திருமணமான 35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்தாக நாடகமாடியது அம்பலமானத...
-
ராணுவ வீரரை கடத்தி அவரிடம் பலவந்தமாக உடலுறவில் ஈடுபட்ட 2 பெண்கள் ஆண் கற்பழிப்பு ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 1...
-
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியே பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுடன்...
-
நடிகை வித்யாபாலனின் கவர்ச்சி வீடியோ ஒன்று You Tube இல் வெளியாகியுள்ளது. இவரைப் புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்கள் இவரை எவ்வாறு...
-
சென்னை மாநகரில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் சென்னை...
-
தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம் சென்னையில் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் வந்தாலும் வந்தது எடுப்பார் கை ப...
-
சமீப கால தமிழ் திரைப்படங்களில் மோசமான காம வெறிக்காட்சிகள் இடம்பெறுகின்றன. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி படமான மகதீரா இங்கு ...
-
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஸ்ரீராமலு நகரை சேர்ந்தவர் லட்சுமி (40). இவரது கணவர் தேவேந்திரன். ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவர்களுக்கு திவ...