துணை ஜனாதிபதி பதவியை கிறிஸ்தவருக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக யாரை நி றுத்தலாம் என்பதில் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் குழப்பம் நிலவுகிறது.
இதற்கிடையே ஜனாதிபதியாக முஸ்லிம் நியமிக்கப்பட்டால் துணை ஜனாதிபதியாக கிறிஸ்தவரை நிறுத்த வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள், பிஷப்புகள், கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் 'கிறிஸ்டியன் ஒருங்கிணைந்த அமைப்பு' உருவாக்கப்பட� ��டு அதன் தலைவராக ஜான் டயஸ் செயல்பட்டு வருகிறார்.
இவர் ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி பதவிக்கு கிறிஸ்தவரை நிறுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்து இ-மெயில் அனுப்பி உள்ளார்.
அதில், 'வருங்காலத்தில் அரசியலில் எங்களின் பங்களிப்பு இல்லாமல் இருக்க முடியாது, எனவே எங்களுக்கு இந்த முறை துணை ஜனாதிபதி கேட்காமல் இருக்க முடியவில்லை. துணை ஜனாதிபதி பதவிக்கு நாங்கள் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. தகுதியான வேட்பாளர்கள் நிறைய பேர் உள்ளனர். அரசியல் கட்சிகள் விரும்பினால் தகுதியானவர்கள் பட்டியலை கொடுப்பதில் மகிழ்ச்சி அடைவோம்.
தகுதியானவர்கள் பலர் இருந்தும் இதுவரை கிறிஸ்தவர் யாரும் இந்தியாவின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டது இல்லை. அரசியல் சட்டப்படி இதில் மத சாயம் பூச முடியாது. ஆனால் தங்களை புறக்கணிப்பதாக கிறிஸ்தவர்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காக இந்த உயர்ந்த பதவி தாருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
நமது நாட்டில் 70 ஆண்டுகளில் மத, சாதி அடிப்படையில் பல ஜனாதிபதிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். உதாரணமாக கே.ஆர்.நாராயணன் பிறப்படுத்தப்பட்ட தலித் என்ற வகையிலும ், பிரதீபா பட்டீல் முதலாவது பெண்மணி என்ற வகையிலும், மத அடிப்படையில் பக்ருதீன் அலி அகமத், ஜாகீர் உ� ��ைன், ஜெயில்சிங், அப்துல்கலாம் ஆகியோர் ஜனாதிபதி பதவி வகித்துள்ளனர்.
இந்த முறை கிறிஸ்தவருக்கு உயர்ந்த பதவி வழங்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். முதல் முறையாக துணை ஜனாதிபதி பதவியாவது கொடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த இ.மெயில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பெயருக்கும் மற்ற அனைத்து அரசியல் கட்சிக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கிடை� �ே சென்னையைச் சேர்ந்த கிறிஸ்தவ கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அதன் அமைப்பாளர் எம்.ஜி.தேவசகாயம், அரசியல் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், 'சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸை ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். அரசியல் சட்ட நிபுணரான அவர் எந்த கட்சியையும் சாராத பொதுவானவர், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். 1996 முதல் 2002 வரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்துள்ளார். 2007-ல் பத்மபூஷன் பட்டம் பெற்றவர். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மற்றும் ஐகோர்ட்டு � �லைமை நீதி பதிகளை தேர்வு செய்யும் 5 பேர் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு உயர் அதிகார குழுவில் இடம் பெற்றவர். எனவே கே.டி.தாமஸ் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் என்று தேவசகாயம் குறிப்பிட்டுள்ளார்.