புதுவையில் பலத்த மழை: மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன புதுவையில் பலத்த மழை: மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன
புதுச்சேரி, செப்.28-
புதுவை மாநிலத்தில் நேற்று காலை லேசாக வெயில் அடித்தது. பின்னர் மாலையில் வானம் மேகம் மூட்டமாக காணப்பட்டது. அதைத்தொடர்டந்து மாலை 4 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் இரவு 7 மணி வரை இந்த மழை நீடித்தது.
பாகூரில் நேற்று மாலை 4.30 மணியில் இருந்து இரவு 7 மணி வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்தது. பலத்த காற்று வீசியதால் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இந்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
வில்லியனூரில் திடீரென்று நேற்று மாலை 3 மணியில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. சுமார் 6 மணி வரை இந்த மழை நீடித்தது. அப்போது மின்னலுடன் பயங்கர இடி இடித்தது. இதனால் பல இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் கீழே விழுந்து விட்டன.
இதே போல் ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம், மங்கலம், அரியூர் உள்பட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் புகுந்தது. மேலும் குடிசைகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். பலத்த காற்று வீசியதால் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டு இருந்தது.
நெட்டப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. கரிக்கலாம்பாக்கம் மெயின் ரோட்டில் ஒரு மரம் ரோட்டின் நடுவே விழுந்தது. அப்போது அந்த மரத்தின் கீழ் மழைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் மீது அந்த மரம் விழுந்ததால் அந்த மோட்டார் சைக்கிள் பலத்த சேதம் அடைந்தது.
ரோட்டில் நடுவே மரம் விழுந்ததால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அப்பகுதி மக்கள் ரோட்டில் நடுவே விழுந்து இருந்த அந்த மரத்தை அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
மேலும் கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி எதிரே மின்சார கம்பம் ஒன்று அடியோடு சரிந்து ரோட்டில் விழுந்தது. அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உடனடியாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.
திருக்கனூர், திருபுவனை திருக்கனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலையில் மழை பெய்தது. ரோடுகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது.
இதே போல் திருபுவனையில் நேற்று மாலை திடீரென்று மழை பெய்தது. மேலும் திருவாண்டார் கோவில், மதகடிப்பட்டு, சன்னியாசிகுப்பம், நல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மழை பெய்தது.

Post a Comment